Published:Updated:

`லில்லிபுட்' குலோப் ஜாமூன்...இது தீபாவளி ஸ்பெஷல்! #DiwaliSweets

தீபாவளிக்கு, 'குட்டி' பிரெட் குலோப் ஜாமூனை விகடன் வாசகர்களுக்குச் செய்து காட்டியிருக்கிறார்கள் 'தி டைனி ஃபுட்ஸ்' யூடியூப் சமையல் சேனலின் வளர்மதி மற்றும் ராம் தம்பதியர்.

தீபாவளி ஸ்பெஷல்
தீபாவளி ஸ்பெஷல் ( Pixabay )

தீபாவளி பண்டிகை நேரத்தில் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினரகள், நண்பர்கள் என அனைவருக்கும் சேர்த்துப் பலகாரங்கள் தயாரிப்போம். அந்த நிலை கொஞ்சம் மாறி எல்லோருக்கும் கடையில் வாங்கிக் கொடுத்துவிடுகிறோம்.

பிரெட்
பிரெட்
Pixabay

செய்து கொடுத்தாலும் சரி...வாங்கிப் பரிசளித்தாலும் சரி, அதிக எண்ணிக்கையில்தான் செய்வோம். அந்த அலைவரிசையிலிருந்து கொஞ்சம் மாறி, ஜோனத்தான் ஸ்விப்ட்டின் 'கலிவர்ஸ் டிராவல்ஸ்' புத்தகத்தின் லில்லிபுட் தீவுக்குச் சென்றால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

வெறும் 6 இன்ச் உயரத்தில் மனிதர்கள் வாழும் ஊர் அது. மனிதர்கள் மட்டுமல்ல அவர்கள் பயன்படுத்தும் பொருள்களிலிருந்து ஆடு, மாடு, குதிரைகள்வரை அனைத்தும் குட்டிக்குட்டியாகத்தான் இருக்கும். அவர்கள் சாப்பிடும் உணவு, குடிக்கும் பானங்கள் அனைத்துமே நம்மைப் பொறுத்தவரை ஒரு சுண்டைக்காய் அளவுக்குத்தான் இருக்கும்.

Valarmathi
Valarmathi

அந்தத் தீவுக்குச் சென்ற அனுபவத்தை அளிக்கும்வகையில் இந்தத் தீபாவளிக்கு, 'குட்டி' பிரெட் குலோப் ஜாமூனை விகடன் வாசகர்களுக்குச் செய்து காட்டியிருக்கிறார்கள் 'தி டைனி ஃபுட்ஸ்' யூடியூப் சமையல் சேனலின் வளர்மதி மற்றும் ராம் தம்பதியர்.

தேவையான பொருள்கள்

bread
bread
  • சர்க்கரை

  • தண்ணீர்

  • ஏலக்காய்

  • குங்குமப்பூ

  • பிரெட் துண்டுகள்

  • காய்ச்சிய பால்

  • எண்ணெய் அல்லது நெய்

குலோப் ஜாமூனுக்குத் தேவையான பொருள்களின் பட்டியலில் அவற்றின் அளவையும் குறிப்பிட வேண்டியது அவசியம். ஆனால் குட்டி குலோப் ஜாமூனுக்குத் தேவையான பொருள்களின் அளவை லில்லிபுட் தீவு வாசிகளிடம்தான் போய் கேட்டு வர வேண்டும்.

செய்முறை:

முதலில் குலோப்ஜாமூனுக்கான ஜீராவைத் தயாரிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் நசுக்கிய ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கெட்டியாகி, பிசுபிசுப்பு பதம் வந்ததும் இறக்கிவிடவும்.

தேவையான அளவு வெள்ளை பிரெட் துண்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிடவும். வெள்ளையாக இருக்கும் பகுதியை மட்டும் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

லில்லிபுட்' குலோப் ஜாமூன்! #DiwaliSweets யூடியூப்பில் பிரபல சமையல் சேனல் 'தி டைனி ஃபுட்ஸ்'ஸின் சார்பில் விகடன்...

Posted by Vikatan EMagazine on Friday, October 25, 2019
குலோப்ஜாமூன்
குலோப்ஜாமூன்
Pixabay

வெட்டிய பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக்கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் காய்ச்சிய பாலைச் சேர்த்து பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகள் பிரௌன் நிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். ஏற்கெனவே தயாரித்து வைத்த ஜீராவை மீண்டும் அடுப்பில் வைத்து சூடுபடுத்தி அதில் பொரித்த உருண்டைகளைப் போடவும். ஜீராவில் போட்ட சில நிமிடங்களில் ஜீரா முழுவதும் உருண்டைக்குள் இறங்கிவிடும். அதன்பிறகு வேறு பாத்திரத்தில் உருண்டைகளை மட்டும் மாற்றி குங்குமப்பூ தூவிப் பரிமாறலாம். சூடாக சாப்பிடப் பிடிக்காதவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்து டிரை ஜாமூனாகச் சாப்பிடலாம்.