Published:Updated:

சிமிலி, இளநீர் அல்வா, கம்பு லட்டு... களைகட்டும் மதராசபட்டினம் விருந்து! #Video

கானப்ரியா
கிராபியென் ப்ளாக்
fransis

இந்தத் திருவிழாவில், இலவச மருத்துவ முகாம் மற்றும் பாரம்பர்யக் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

Simili
Simili ( Graphiyen Black )

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் `மதராசபட்டினம் விருந்து' எனும் பாரம்பர்ய உணவுத் திருவிழா சென்னைத் தீவுத்திடலில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

`மதராசப்பட்டினம் விருந்து' உணவுத் திருவிழா’ வீடியோ : கிராபியென் ப்ளாக் / சந்திப்பு : கானப்ரியா

Posted by Vikatan EMagazine on Friday, September 13, 2019

இந்நிகழ்வினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். செப்டம்பர் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்தத் திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய உணவுக் கடைகளுடன் பல கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன.

அமைச்சர்கள் வேலுமணி, சரோஜா, ஜெயக்குமார், தங்கமணி, விஜய பாஸ்கர், சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பலர் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர். சிமிலி, இளநீர் இட்லி, பொள்ளாச்சி இளநீர் அல்வா, கம்பு லட்டு, அத்தி முந்திரி கேக், ஹைதராபாத் இராணி தேநீர், குஜராத் காக்கடா உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களின் பாரம்பர்ய உணவுகள் இந்தத் திருவிழாவில் இடம்பெற்றிருந்தன.

Thattu and Ilaneer Idly
Thattu and Ilaneer Idly
Graphiyen Black

மேலும், இலவச மருத்துவ முகாம் மற்றும் பாரம்பர்யக் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன

"ஜிம்முக்கு அனுப்புங்க; தம்மு, தண்ணியை விட்ருவாங்க!"- மிஸ்டர் வேர்ல்டு போட்டிக்குத் தேர்வான மேஸ்திரி

கடந்த புதன்கிழமை, இந்நிகழ்ச்சிக்கான பிராண்ட் லோகோவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் பீலா.ராஜேஷ், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் பாரிஜாதம், பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.ராமகிருஷ்ணன் உட்பட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உயர் அலுவலர்கள் பலரும் இந்த லோகோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.