Published:Updated:

மகாராஷ்டிரா ஸ்பெஷல்

மகாராஷ்டிரா ஸ்பெஷல்
பிரீமியம் ஸ்டோரி
மகாராஷ்டிரா ஸ்பெஷல்

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: பிரியா ஐயர்

மகாராஷ்டிரா ஸ்பெஷல்

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: பிரியா ஐயர்

Published:Updated:
மகாராஷ்டிரா ஸ்பெஷல்
பிரீமியம் ஸ்டோரி
மகாராஷ்டிரா ஸ்பெஷல்

காராஷ்டிராவின் மாரத்திச் சமையலுக்குக் குறிப்பிடத்தக்க பாரம்பர்யம் உண்டு. பண்டிகைக் கொண்டாட்டங்களின்போது மகாராஷ்டிரா உணவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு விசேஷத்துக்கும் அதற்கே உரிய சிறப்பு உணவுகளைப் படைப்பது வழக்கம். இது மட்டுமல்ல... தெருக்கடை உணவுகளுக்கும் புகழ்பெற்று விளங்குகிறது மகாராஷ்டிரா.

மகாராஷ்டிரா ஸ்பெஷல்

இப்போது, பெங்களூரில் வசிக்கும் தமிழ்ப் பெண் பிரியா ஐயர், குஜராத்தின் அகமதாபாத் நகரில் பிறந்து வளர்ந்தவர்.

thephotowali.wordpress.com என்ற வலைப்பூவை நிர்வகிக்கிறார். தான் கற்றுக்கொண்ட பாரம்பர்ய மகாராஷ்டிரா ரெசிப்பிகளை அவள் விகடன் கிச்சன் வாசகர்களுக்காக வழங்குகிறார். இவை சத்தும் சுவையும் நிறைந்தவை என்பதில் ஐயமே இல்லை. ஸ்டெப் பை ஸ்டெப் முறையில் இருப்பதால், செய்வதற்கும் மிக எளிதானவை.

என்ஜாய் மராத்தி குக்கிங்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 1

ஆம் ரஸ்

தேவையானவை:

 • பழுத்த பெரிய மாம்பழம் - 2

 • பச்சை ஏலக்காய் - 2

 • சர்க்கரை - கால் கப்

 • பால் - ஒரு கப்

அலங்கரிக்க:

கிளேஸ்டு செர்ரிப் பழங்கள் (சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்ட செர்ரிப் பழங்கள்) - தேவையான அளவு (விருப்பப்பட்டால்)

மகாராஷ்டிரா ஸ்பெஷல்

மாம்பழங்களின் தோலை நீக்கி, கொட்டையை எடுத்துவிட்டு சதைப்பகுதியை துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஏலக்காயை உரித்து உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்

மகாராஷ்டிரா ஸ்பெஷல்

ஒரு மிக்ஸர் ஜாரில் மாம்பழத் துண்டுகள் மற்றும் ஏலக்காயின் உள்ளே இருக்கும் விதைகள் பால், சர்க்கரை சேர்த்து மையாக அரைக்கவும். பின்னர் இதை ஒரு பரிமாறும் கிண்ணத்துக்கு மாற்றவும். தேவையெனில் இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பின்னர் இதை ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து எடுக்கவும். விருப்பப்பட்டால், நறுக்கிய செர்ரிப் பழங்களால் அலங்கரித்துப் பரிமாறவும்.

ஆம் ரஸ்
ஆம் ரஸ்

உலக விளைச்சலில் பாதிக்கு மேலான மாம்பழங்கள் இந்தியாவில்தான் விளைகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 2

அம்தி

தேவையானவை:

 • துவரம்பருப்பு – அரை கப்

 • புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

 • இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)

 • பச்சை மிளகாய் - 3 அல்லது 4 (நீளவாக்கில் கீறவும்)

 • நடுத்தர அளவிலான தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)

 • கடுகு, சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3

 • வெந்தயம் - ஒரு சிட்டிகை

 • பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • கோடா மசாலா - ஒரு டேபிள்ஸ்பூன் (டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும்)

 • பொடித்த வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப

 • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

 • தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

மகாராஷ்டிரா ஸ்பெஷல்

துவரம்பருப்பை பாத்திரத்தில் போட்டு இருமுறை நன்றாகக் கழுவி, மூழ்கும் அளவுக்குத் தண்ணீர்விட்டு குக்கரில் 6 - 7 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் வெந்த பருப்பை நன்கு மசித்து வைக்கவும். புளியை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் புளி நன்கு மென்மையானதும், இன்னும் கொஞ்சம் தண்ணீர்விட்டுக் கரைத்து, வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ளவும்.

மகாராஷ்டிரா ஸ்பெஷல்

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து சில விநாடிகள் வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு தக்காளி நன்கு மசியும் வரை வேகவிடவும். பிறகு, புளிக்கரைசலைச் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து ஒரு நிமிடம் அப்படியேவிடவும். பிறகு, கோடா மசாலா, பொடித்த வெல்லம், தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து அதிகமான தீயில் 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின்னர் அடுப்பை அணைத்து, வெந்த கலவையில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

அம்தி
அம்தி

புரதச்சத்து நிறைந்து காணப்படும் துவரை ஆசியாவில்தான் முதலில் பயிரிடப் பட்டிருக்கிறது.

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 3

காலா சன்னா உசல்

தேவையானவை:

 • கறுப்புக் கொண்டைக்கடலை - அரை கப்

 • இஞ்சி - ஒரு இன்ச் துண்டு

 • பூண்டு - 4 அல்லது 5 பல்

 • சின்ன வெங்காயம் - ஒன்று

 • பெரிய வெங்காயம் - ஒன்று

 • பெரிய தக்காளி - 2 (நறுக்கவும்)

 • தேங்காய்த் துருவல் - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • கோடா மசாலா - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப)

 • மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப

 • பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்

 • எலுமிச்சைச்சாறு - பாதி பழத்தின் சாறு (அல்லது தேவைக்கேற்ப)

 • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

மகாராஷ்டிரா ஸ்பெஷல்

கொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு 8 - 10 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து மறுபடியும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 5 விசில் வரும் வரை அல்லது நன்கு வேகும் வரை வேகவிடவும். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகிய மூன்றையும் தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் தக்காளி, தேங்காய்த் துருவலைச் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். பெரிய வெங்காயத்தை நறுக்கி தயாராக வைக்கவும்.

மகாராஷ்டிரா ஸ்பெஷல்

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி சீரகம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் நறுக்கிவைத்துள்ள பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வேகவிடவும். பின்னர் மிதமான தீயில் அடுப்பை வைத்து, உப்பு, மஞ்சள்தூள், கோடா மசாலா, மிளகாய்த்தூள், பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறவும். இதனுடன் வேகவைத்த கறுப்புக் கொண்டைக்கடலையையும் சேர்த்து நன்கு கலந்து கிரேவி சற்று திக்காக மாறும்வரை கொதிக்கவிடவும். பின்னர் அடுப்பை அணைத்து, எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையால் அலங்கரித்துப் பரிமாறவும்.

காலா சன்னா உசல்
காலா சன்னா உசல்

கறுப்புக் கொண்டைக்கடலை தென்கிழக்கு துருக்கியிலிருந்தே இந்தியாவுக்கு வந்தது.

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 4

பொட்னிச்சா பாத்

தேவையானவை:

 • அரிசி - ஒரு கப்

 • வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்

 • கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

 • காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3

 • பூண்டு - 4 அல்லது 5 பல்

 • பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது விருப்பத்துக்கேற்ப)

 • மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப

 • கோடா மசாலா - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது விருப்பத்துக்கேற்ப)

 • எலுமிச்சைச்சாறு - பாதி பழத்தின் சாறு (அல்லது தேவைக்கேற்ப)

 • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

மகாராஷ்டிரா ஸ்பெஷல்

அரிசியை நன்கு கழுவி, இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் மூன்று விசில் வரும்வரை அல்லது உதிர் உதிராக வரும்வரை வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் சாதத்தை நன்கு ஆறவைத்து மென்மையாகக் கிளறி தயாராக வைக்கவும். வேர்க்கடலையை வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்துக்கொள்ளவும். பூண்டுப் பற்களைத் தோலுரித்து ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளவும்.

மகாராஷ்டிரா ஸ்பெஷல்

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். பின்னர் இதனுடன் சீரகம், காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, வறுத்த வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். தீயை அதிகமாக வைத்து வெங்காயம் நிறம்மாறும்வரை வதக்கவும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேகவைத்த சாதத்தை சேர்க்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பொடித்த வெல்லம், கோடா மசாலா சேர்த்து மென்மையாகக் கலக்கவும். 2 - 3 நிமிடங்கள் அல்லது கலவை ஒன்றோடு ஒன்று நன்கு சேரும் வரை வேகவிடவும். பின்னர் அடுப்பை அணைத்து எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலவையைக் கிளறிவிடவும். தயிர் அல்லது ராய்த்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

பொட்னிச்சா பாத்
பொட்னிச்சா பாத்

உலகில் முதன்முதலாக ஆசிய நெல், ஆப்பிரிக்க நெல் என இரு நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன.

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங் - 5

பட்டாடச்சி பாஜி

தேவையானவை:

 • நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கு - 8

 • கடுகு - ஒரு டீஸ்பூன்

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3 (ஒவ்வொன்றையும் இரண்டாகக் கிள்ளவும்)

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது விருப்பத்துக்கேற்ப)

 • எலுமிச்சைச்சாறு - தேவைக்கேற்ப (விருப்பப்பட்டால்)

 • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கேற்ப

பட்டாடச்சி பாஜி
பட்டாடச்சி பாஜி

உருளைக்கிழங்கை நன்கு கழுவி பாதிப் பாதியாக நறுக்கி, குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவைக்கவும். பின்னர் ஆறவைத்து, தோலுரித்து பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

மகாராஷ்டிரா ஸ்பெஷல்

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு தாளிக்கவும். இதனுடன் சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து சில விநாடிகள் புரட்டவும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து மென்மையாகக் கிளறவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பொடித்த வெல்லம், மிளகாய்த்தூள் சேர்த்து மென்மையாகக் கிளறவும். குறைந்த தீயில் கலவையை 4 - 5 நிமிடங்களுக்கு வேகவைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து விருப்பப்பட்டால் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லித்தழை தூவி ரொட்டி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

மகாராஷ்டிரா ஸ்பெஷல்

இன்றைய `பெரு’ நாட்டுப் பகுதியே உருளைக்கிழங்கின் தாயகம் என்றழைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism