Published:Updated:

சில்லென பிரியாணி லஸ்ஸி, சூடாக ஆலு டிக்கி... `சாட்' வகைகளில் அசத்தும் `மட்கா சாட் கபே!'

மட்கா சாட் கபே
மட்கா சாட் கபே

சாட் வகைகளில் பல வித்தியாச வெரைட்டிகளைக் கொடுத்து சென்னையை அசத்திக்கொண்டிருக்கும் `மட்கா சாட் கபே'க்கு ஒரு விசிட் அடித்தோம்.

`சாட்' உணவுகள் பலருக்கும் ஃபேவரைட். பானி பூரி, சுக்கா பூரி, சேவ் பூரி, தயிர் பூரி, மசாலா பூரி, பாவ் பாஜி என ஏராளமான சாட் வகைகள் தமிழ்நாட்டில் உலா வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் `செஸ்வான் சுக்காபூரி', `பிரியாணி லஸ்ஸி', `சீஸ் மஞ்சூரியன் பராத்தா' என சாட் வகைகளில் பல வித்தியாச வெரைட்டிகளைக் கொடுத்து சென்னையை அசத்திக்கொண்டிருக்கும் `மட்கா சாட் கபே'க்கு ஒரு விசிட் அடித்தோம்.

Aloo tikki
Aloo tikki

மைலாப்பூரிலுள்ள இந்த வித்தியாச கபேவை சென்றடைந்ததும், சில்லென பிரியாணி லஸ்ஸியை ஆர்டர் செய்துவிட்டு, கடையின் உரிமையாளர் சத்பானோடு உரையாடினோம்.

உங்களுடைய இன்ஸ்பிரேஷன் யார்?

"1990-ம் ஆண்டு, என் அப்பா வட இந்தியாவிலிருந்து சென்னைக்கு வந்தார். இங்கு பானி பூரி பிசினஸ் ஆரம்பித்தார். படிப்படியாக இந்த பிசினஸில் நல்ல வளர்ச்சியைப் பார்த்தார். அப்பாவுக்குக் கீழே நிறைய ஊழியர்கள் வேலைபார்த்தார்கள். அந்தக் காலத்தில் தள்ளு வண்டி எல்லாம் இல்லை. சாதாரண ஸ்டாண்டில் வைத்துத்தான் பானி பூரி விற்றார்கள். 2010-ம் ஆண்டில் சுமார் 350 தொழிலாளர்களைக் கொண்டிருந்தார். ஒருநாள் திடீரென, `நான் ஓய்வெடுக்கப் போகிறேன்' என்று சொல்லி பிசினஸை மூட வேண்டும் என்று கூறினார். அந்த நேரத்தில் நானும் என் அண்ணனும் அடுத்து என்ன பண்ணலாம் என யோசிக்கும்போது பிறந்ததுதான் இந்த `மட்கா சாட் கபே'.

பானி பூரி மட்டுமல்லாமல் ஏராளமான அயிட்டங்களை மெனுவுடன் சேர்த்து, வித்தியாச ரெசிப்பிக்களை ட்ரை பண்ணினோம். பானி பூரிதானே என்று சாதாரணமாக நினைக்காமல் இதில் என்னவெல்லாம் வெரைட்டி காட்டலாம் என ஏகப்பட்ட உணவு வகைகளை முயன்று பார்த்தோம். இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது ஐந்தாவது மெனு. இந்த வெரைட்டியை நிச்சயம் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருப்போம்" என்று சத்பான் சொல்ல, இந்த கபேயின் ஸ்பெஷல் உணவு வகைகளை சுவைத்தபடியே, அதன் வரலாற்றை அவர் தொடர்ந்து சொல்லக் கேட்டோம்.

பிரியாணி லஸ்ஸி:

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது சமைக்கக் கற்றுக்கொண்டேன். முதன்முதலில் நான் செய்த உணவு, பிரியாணி. அப்போதுதான் நல்ல பிரியாணி பொடி செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன். `மட்கா' மெனுவில் லஸ்ஸியை இணைக்க வேண்டும் என்று நினைத்தபோது, எனக்கு பிரியாணி பொடியை வைத்து ஏன் லஸ்ஸி தயாரிக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. இப்படித்தான் பிரியாணி லஸ்ஸி உருவானது!

ஆலு டிக்கி:

தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆலு டிக்கி சாப்பிட்டிருக்கிறேன். ஆனால், அதன் ஒரிஜினல் சுவை எங்கேயும் கிடைக்கவில்லை. பாரம்பர்ய தன்மை மாறாமல் உண்மையான ஆலு டிக்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மெனுவில் சேர்த்தோம். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

புதுக்கோட்டை முட்டை மாஸ், தஞ்சாவூர் மட்டன் கேசரி.. தமிழகத்தின் சில சிக்னேச்சர் உணவு வகைகள்!

சீஸ் மஞ்சூரியன் பராத்தா:

பொதுவாகவே உருளைக்கிழங்கில்தான் ஸ்டஃப்டு பராத்தா செய்வார்கள். ஆனால், சற்று வித்தியாசமாக முயன்று பார்க்கலாமே என்று ட்ரை செய்ததுதான் இந்த சீஸ் பராத்தா.

Pani Poori
Pani Poori

இந்த வகை மஞ்சூரியனை நிச்சயம் வேறெங்கும் நீங்கள் சுவைத்திருக்க மாட்டீர்கள். சீஸ் ஸ்டஃப் பண்ணுவது மிகவும் கடினம். இதை எப்படிச் செய்யலாம் என ப்ளான் செய்து செயல்படுத்துவதற்கு ஒரு மாதம் ஆனது.

உங்கள் கடையின் ஸ்பெஷாலிட்டி என்ன?

மிளகாய்ப் பொடி தூவி, காரமா ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?! #ChilliGuavaIcecream

"ஆரம்பிக்கும்போதே சுற்றுச்சூழலை எந்த விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்றுதான் ஆரம்பித்தோம். அதனால், இங்கு பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை. உணவுக்குக் காய்ந்த இலை தட்டுகள், நீராகாரத்திற்குச் சிறிய மண்குவளைகள் போன்றவற்றைத்தான் பயன்படுத்துகிறோம்" என்றவர் மண்குவளையில் மசாலா டீயை சூடாகப் பரிமாறினார். வித்தியாச சூழலில் பானி பூரிகளை சுவைத்துமுடித்து விடைபெற்றோம்.

ஆஹா என்ன ருசி!

அடுத்த கட்டுரைக்கு