Published:Updated:

`அவர்கள் பார்ப்பதே எனக்கு உற்சாகம்தான்'- சாப்பிட்டுச் சாப்பிட்டு யூடியூபில் டிரெண்ட் ஆன இளம்பெண்!

ஒரு கடி, ஒரு குடி, சிக்கன் ஃபிங்கரின் ஒவ்வொரு கடிக்கும் ஒரு வாவ் சொல்லியபடியே சாப்பிடுகிறார் அந்த இளம்பெண். அவர் கடிக்கிற நாச்சோஸின் கறுமுறு சத்தமே நமக்கும் நாவூறச் செய்துவிடுகிறது.

இளம்பெண் ஃபேபியோ மட்டீஸன்
இளம்பெண் ஃபேபியோ மட்டீஸன்

அந்த 28 வயது இளம்பெண், வீடியோவுக்கு முன்னால் அமர்கிறார். அவருக்கு முன்னால் ஒரு தட்டு நிறைய சிக்கன் ஃபிங்கரும் சாஸும். பக்கத்தில் ஒரு பெரிய ஜக் நிறைய தண்ணீர். இன்னொரு வீடியோவில், தட்டு நிறைய பீஃப் சில்லி நாச்சோஸ். பக்கத்தில் ஐஸ் டீ. காரம் எடுக்கும்போது கொஞ்சம் யோகர்ட்டை ஊற்றிக்கொள்கிறார்.

Fabio Mattison
Fabio Mattison

ஒரு கடி, ஒரு குடி, சிக்கன் ஃபிங்கரின் ஒவ்வொரு கடிக்கும் ஒரு வாவ் சொல்லியபடியே சாப்பிடுகிறார் அந்தப் பெண். அவர் கடிக்கிற நாச்சோஸின் கறுமுறு சத்தமே நமக்கும் நாவூறச் செய்துவிடுகிறது.

அந்த இளம்பெண்ணின் பெயர் ஃபேபியோ மட்டீஸன்(Fabio Mattison). இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தப் பெண், ஒரு யூடியூபர். கேமராவுக்கு முன்னால் விதவிதமான ஜங்க் ஃபுட்களைப் பற்றி, வீடியோவைப் பார்ப்பவர்களிடம் பேசியபடியே சாப்பிடுவார். இதை, 'முக்பேங் கிரேஸ் (Mukbang craze)' என்பார்கள். 2010ல் தென் கொரியாவில் இந்த வகை வீடியோக்கள் ரொம்பவே பாப்புலர்.

சாப்பிடுவதில் அதிக பிரியம்கொண்ட ஃபேபியோ, தானும் முக்பேங் வீடியோ செய்யலாம் என்று முடிவெடுத்து, சொந்தமாக யூடியூப் சேனல் ஆரம்பித்திருக்கிறார். 2018-ல் தன்னுடைய முதல் வீடியோவை அப்லோடு செய்த ஃபேபியோ, யூடியூப் சேனல் ஆரம்பித்த புதுதில் பலபேர் முன்னால் சாப்பிடுவதற்குப் பயிற்சி, சிகிச்சையெல்லாம் எடுத்திருக்கிறார்.

''என்னுடைய 10 வயதிலிருந்தே சாப்பிடுகிற விஷயத்தில் எனக்குப் பிரச்னை இருந்தது. கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாலும் வெயிட் போட்டுவிடுவேனோ என்ற பயத்திலேயே வாழ்ந்தேன். நான் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். முக்பேங் வீடியோ எடுக்க ஆரம்பித்ததிலிருந்து, இந்தப் பயமெல்லாம் என்னைவிட்டுப் போய்விட்டது. நான் சாப்பிடுவதை ஆயிரக்கணக்கானோர் ஆன்லைன் வழியாகப் பார்க்கும்போது, எனக்கு உற்சாகமாக இருக்கிறது'' என்கிற ஃபேபியோ, இதுவரை 200 வீடியோக்களை அப்லோடு செய்திருக்கிறார்.

Fabio Mattison
Fabio Mattison

''என் வீடியோவைப் பார்ப்பவர்கள், தங்கள் மனக்கவலைகளை எல்லாம் சற்று நேரம் மறந்துபோகின்றனர், என் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது'' என்கிறார், ஃபேபியோ உற்சாகமாக.