Published:Updated:

கத்திரிக்காய் சீனாவுக்குச் சொந்தம்... பெரிய வெங்காயம் தென் அமெரிக்காவுக்குச் சொந்தம்...

மிளகு, சீரகம், லவங்கம், ஏலக்காய், பட்டை
பிரீமியம் ஸ்டோரி
மிளகு, சீரகம், லவங்கம், ஏலக்காய், பட்டை

-ஆச்சர்யம் பகிர்கிறார் மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.

கத்திரிக்காய் சீனாவுக்குச் சொந்தம்... பெரிய வெங்காயம் தென் அமெரிக்காவுக்குச் சொந்தம்...

-ஆச்சர்யம் பகிர்கிறார் மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.

Published:Updated:
மிளகு, சீரகம், லவங்கம், ஏலக்காய், பட்டை
பிரீமியம் ஸ்டோரி
மிளகு, சீரகம், லவங்கம், ஏலக்காய், பட்டை

உணவு

“தக்காளி, வெங்காயம் இல்லாத சமையலை இன்று நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்தளவுக்கு தாக்காளியும் வெங்காயமும் நம் சமையலில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. அதனால்தான் அவற்றின் விலை ஏறும்போது பெரியளவில் பிரச்னை வெடிக்கிறது.

இன்று இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ள தக்காளியும் வெங்காயமும் 200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கிடையாது என்றால் இன்றைய தலைமுறையினர் நம்புவார்களா? தாக்காளி, வெங்காயம் மட்டுமல்ல; இன்று நாம் பிரதான மாகப் பயன்படுத்திவரும் பெரும்பாலான காய்கறிகள் நம்முடையதே கிடையாது. அவை இல்லாமல்தான் நம் முன்னோர்களின் சமையல் இருந்தது” ஆச்சர்யம் பொங்கப் பேசுகிறார் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையரான மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.

மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.
மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.

வேளாண்துறை ஆணையர், சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள மு.ராஜேந்திரன் நம் உணவுகள் குறித்து ஆய்வு செய்து, அதுகுறித்து பேசியும் எழுதியும் வருகிறார். நம் உணவுகள் குறித்து அறிந்துகொள்ள அவரை சந்தித்தோம். “இன்று தக்காளி, வெங்காயம் இல்லையென்றால் சமையலே இல்லை. சுமார் 200 வருங்களுக்கு முன்பு இறந்தவர்கள் இப்போது உயிர்த்தெழுந்து நம் காய்கறிச் சந்தைக்குள் வலம் வந்தார்களென்றால் தலைசுற்றிப் போய்விடுவார்கள்” என்றபடி காய்கறிகளின் பூர்வீகம் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

“இன்று தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக இருக்கும் தக்காளி, தென் அமெரிக்க நாடான பெருவிலிருந்து வந்தது. கத்திரிக்காய் சீனாவிலிருந்து வந்தது. கத்திரிக்காய்க்கு சீனாவில் ‘கதே’ என்று பெயர். பெரிய வெங்காயம் தென் அமெரிக்காவிலிருந்து வந்தது. 150 வருடங்களுக்கு முன்பு மக்காச் சோளம் என்பதே இங்கு யாருக்கும் தெரியாது. மெக்சிகோ நாட்டிலிருந்து வந்த மக்காச்சோளம்தான் இன்று இங்கு அதிகளவு சாகுபடி செய்யப்படும் பயிர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. ஆங்கிலத்தில் பைனாப்பிள் என்றழைக்கப்படுகிற அன்னாசிப் பழம் ஆப்பிரிக்காவில் களைச்செடியாக இருந்தது என்றால் நம்புவீர்களா? இன்று கேரளாவிலும் தமிழகத்தின் கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களிலும் அன்னாசிப்பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், குடை மிளகாய், பீன்ஸ், கேரட் ஆகியவை ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவைதான். அவ்வளவு ஏன் நிலக்கடலைகூட இங்கு கிடையாது. தென்கிழக்கு ஆசியா நாடான பிலிப்பைன்ஸிலிருந்து நிலக்கடலை இந்தியாவுக்குள் நுழைந்தது. நிலக்கடலையைத் தமிழகத்தில் ‘மணிலாக்கொட்டை', ‘மல்லாக்கொட்டை’ என்றெல்லாம் அழைப்பார்கள். விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ‘மல்லாட்டை’ என்றும் அழைக் கின்றனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவைக் குறிக்கும் வகையிலேயே இப்படி அழைக்கப்படுகிறது'' என்றவரிடம், ‘நம்மிடம் என்னென்ன காய்கறிகள்தான் இருந்தன?’ எனக் கேட்டோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இங்கு பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், புடலை, கோவைக்காய்... என நம்மிடமும் ஏராளமான காய்கறிகள் இருந்தன. தானியங்களில் பாலீஷ் செய்யப்படாத அரிசி, சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானிய வகைகள் நம்மிடம் இருந்தன.

கத்திரிக்காய் சீனாவுக்குச் சொந்தம்... பெரிய வெங்காயம் தென் அமெரிக்காவுக்குச் சொந்தம்...

பழங்களில் பார்த்தோமானால்... ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, பைனாப்பிள், டிராகன் ஃப்ரூட் உள்ளிட்ட பழங்கள் வெளிநாடு களிலிருந்து இங்கே புகுந்தவை. மா, பலா, வாழைதான் நம்முடைய பழங்கள்.

கத்திரிக்காய் சீனாவுக்குச் சொந்தம்... பெரிய வெங்காயம் தென் அமெரிக்காவுக்குச் சொந்தம்...

மிளகு, சீரகம், லவங்கம், ஏலக்காய், பட்டை ஆகிய நறுமணப் பொருள்கள் நம்முடையவை. இன்று பிற நாட்டினர் இதை விளைவித்தாலும் நம்முடைய சுவைக்கு இணையாக வரவில்லை. தென் அமெரிக்காவில் கௌதமலா பகுதியில் ஏலக்காய் பயிர் செய்யப்படுகிறது. ஆனால், அது இங்குள்ள தரத்தில் இல்லை. காரணம், நம் மண்ணுக்கும் தண்ணீருக்கும் மகிமை இருக்கிறது. நெல்கூட இங்கிருந்துதான் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவியது என்று வரலாறு சொல்கிறது. நம்மிடையே 1,50,000 நெல் வகைகள் இருந்திருக்கின்றன. இப்போது சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் அமைந்திருக்கும் பிலிப்பைன்ஸில் இந்த நெல் ரகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் எண்ணெய் வித்துகளின் உற்பத்தி குறைந்துவிட்டதால் இப்போது மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. செம்பனை என்று அழைக்கப்படும் மரத்திலிருந்து எடுக்கப்படும் பாமாயிலின் சிறப்பு என்னெவென்றால் அதை எந்த எண்ணெய்யில் கலந்தாலும் அந்த எண்ணெய் போலவே மாறிவிடும். சூரியகாந்தி எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் என்று ஒவ்வொன்றுக்கும் ஒருவிதப் பயன்பாடு இருந்தது. கோயில்களைச் சுற்றி அந்தக் காலத்தில் இலுப்பை மரங்களை வளர்த்ததும் கோயில் விளக்கேற்றும் எண்ணெயாக பயன்படுத்துவதற்குத்தான். ஒவ்வொன்றுக்கும் தனித்துவம் கொண்ட எண்ணெயைப் பயன்படுத்தி வந்த நாம், இன்று அதிகளவில் பாமாயிலைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வருந்தத்தக்க விஷயம்.

கத்திரிக்காய் சீனாவுக்குச் சொந்தம்... பெரிய வெங்காயம் தென் அமெரிக்காவுக்குச் சொந்தம்...

நம்முடைய பாரம்பர்ய உணவு வகைகள் சத்து மிக்கவை. நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததற்கு காரணம், நம்முடைய பாரம்பர்ய உணவுப் பழக்க வழக்கங்களிருந்து விலகியதுதான்.

புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தபோது, அங்கு உயர் பதவியில் இருந்த ஆனந்தரங்கம் பிள்ளை டைரி குறிப்பில், ‘ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகும் அவர்களுடைய உணவு பழக்கங்கள் எதுவும் மாறவில்லை. சாப்பிடுவதற்கு முன்பு மது அருந்துவது, டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவது என எந்தப் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாமோ ‘காஞ்சமாடு கம்மங்கொல்லைக்குள் புகுந்த மாதிரி’ கிடைக்கும் புது புது உணவு வகைகள் எல்லாவற்றையும் அவை உடல் நலத்துக்கு நல்லதா, கெட்டதா என்று ஆராயாமல் சாப்பிடுகிறோம். நாம் நலமுடன் வாழ வேண்டுமென்றால் நம் உணவுப் பாரம்பர்யத்தை மீட்டெடுக்க வேண்டும்” என்று முடித்தார்.

கத்திரிக்காய் சீனாவுக்குச் சொந்தம்... பெரிய வெங்காயம் தென் அமெரிக்காவுக்குச் சொந்தம்...

மரவள்ளிக்கிழங்கு வந்த கதை!

“இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் உருளைக்கிழங்கு ஆங்கிலேயர் களால் கொண்டு வரப்பட்டது. மரவள்ளிக் கிழங்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வந்தது. 200 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் பஞ்சம் ஏற்பட்டபோது, திருவிதாங்கூர் மன்னர் பலராம வர்மா என்பவர் மூலமாக மரவள்ளிக்கிழங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது கேரளாவில் கப்பக்கிழங்கு என்ற பெயரில் உணவாக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம்முடைய பாரம்பர்ய கிழங்கு வகை என்றாலே சர்க்கரைவள்ளிக் கிழங்குதான்."

கத்திரிக்காய் சீனாவுக்குச் சொந்தம்... பெரிய வெங்காயம் தென் அமெரிக்காவுக்குச் சொந்தம்...

சேகோ சர்வ்!

“மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ‘சேகோ சர்வ்’ என்பது ஜவ்வரிசியைக் குறிக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு சேலம் மாவட்ட மக்களையே சாரும். இன்று இதற்கான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் உருவாகியிருக்கிறது. மரவள்ளிக்கிழங்கு மாவை நன்கு அரைத்து, அதைத் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். பிறகு, அதை எடுத்து இட்லி அவிப்பதுபோல அவித்து வெளியில் எடுத்து லேசாக எண்ணெய் சேர்த்து வறுத்து, வெயிலில் காய வைத்தால் ஜவ்வரிசி தயார். இதை அளவுக்கு ஏற்றவாறு தயாரித்துக்கொள்ளலாம். இது 2 வருடங்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம். நம்மைவிட வட மாநிலங்களில் இதை அதிகம் பயன் படுத்துகின்றனர். இதைக் கூழ் செய்து சாப்பிடலாம். இதில் ஸ்டார்ச், கார்போஹைட்ரேட் உள்ளது. டூத் பேஸ்ட் உள்ளிட்ட பொருள்களில் சேர்க்கப்படுகிறது.”