தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

2K kids: பிரியாணி ஹோட்டல்... பரோட்டாவும் அசத்தல்!

நம்ம ஊரு பிரியாணி
பிரீமியம் ஸ்டோரி
News
நம்ம ஊரு பிரியாணி

ரா.ஆ.அஸ்வின் ராஜா

எந்த ஊருக்குப் போனாலும், ‘நல்ல ஹோட்டலா பார்த்துச் சாப்பிடணும்’னு தேடுறவங்க ‘சோறுதான் முக்கியம்’ சங்கத்தினர். திருச்சியில அப்படி நாக்குக்கு ருசியான ஒரு ஹோட்டல தேடுறவங்களுக்கு ‘நம்ம ஊரு பிரியாணி’... ரைட் ரைட்.

திருச்சி மாவட்டம், உறையூர் மார்க்கெட் பகுதி எப்பவுமே கலகலனு இருக்கும். அங்க தான் கமகமனு மணக்குது ‘நம்ம ஊரு பிரியாணி’ ஹோட்டல். மதிய நேரம் இந்தப் பக்கம் போறவங்கள, இங்க இருந்து வர்ற பிரியாணி வாசம் கடைக்குள்ள கூட்டிட்டு வந்துடும்.

ஜெயராஜ்
ஜெயராஜ்

‘பிரியாணி மட்டுமில்ல... சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுல்ஸ், பரோட்டானு இந்தக் கடையில எல்லா அயிட்டமும் சூப்பரு. அதுலயும் அந்த பன் பரோட்டா, தூள். பொதுவா மதுரையிலதான் பன் பரோட்டா கிடைக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, இந்த ஏரியாவுல பன் பரோட்டான்னாலே இந்தக் கடைதான். ஒரு பரோட்டா 8 ரூபாதான். பஞ்சுபோல உப்பி இருக்குற அந்தப் பரோட்டாவை பிச்சுப் போட்டு, வெரைட்டி யான சால்னாக்களை அதுல அபிஷேகம் பண்ணி, பிசைஞ்சு, ஒரு வாய் எடுத்துவெச்சா... அப்படி இருக்கும் பாருங்க’னு ருசிச்சுப் பேசுறாங்க ஊர்க்காரவங்க.

2K kids: பிரியாணி ஹோட்டல்... பரோட்டாவும் அசத்தல்!
2K kids: பிரியாணி ஹோட்டல்... பரோட்டாவும் அசத்தல்!

கடை உரிமையாளர் ஜெயராஜ், ‘`இந்தக் கொரோனா ஊரடங்குல மக்கள் வருமானம் இல்லாம சிரமப்படுறாங்க. ஏதோ நம்மால முடிஞ்சது, ‘லாக்டௌன் ஆஃபர்’னு எங்க ஹோட்டல் உணவுகளோட விலையைக் கொஞ்சம் குறைச்சோம். மட்டன் பிரியாணி முன்ன 150 ரூபாய், இப்போ 120 ரூபாய். சிக்கன் பிரியாணி முன்ன 120 ரூபாய், இப்போ 80 ரூபாய். பரோட்டா முன்ன 10 ரூபாய், இப்போ 8 ரூபாய். சிக்கன் ரைஸ் 50 ரூபாய், நூடுல்ஸ் 40 ரூபாய். இதுல நியாயமான லாபம் கிடைக்குது. அப்புறம், இந்த விலைக் குறைப்பு என் மனைவி கொடுத்த ஐடியா. மேலும் லாக்டௌன் முடிஞ்சு ஹோட்டலை ஆரம்பிச்சப்போ, எங்க வேலை ஆட்களைக் குறைக்காம எல்லாரையும் வேலைக்குக் கூப்பிட்டுக் கிட்டோம்’’னு சொல்றார் பெருமையோடு.

2K kids: பிரியாணி ஹோட்டல்... பரோட்டாவும் அசத்தல்!
2K kids: பிரியாணி ஹோட்டல்... பரோட்டாவும் அசத்தல்!
2K kids: பிரியாணி ஹோட்டல்... பரோட்டாவும் அசத்தல்!

கடையில பார்சல் வாங்க நின்னவங்ககிட்ட பேசினோம். ‘`விலையைக் குறைச்சாலும் இந்தக் கடையில தரத்தை, பீஸைக் குறைக்க மாட்டாங்க. பிரியாணி சாப்பிடலாம்னு முடிவெடுத்துட்டா, இந்த ஏரியாக்காரங் களோட சாய்ஸ் இந்தக் கடைதான். சனி, ஞாயிறு மட்டுமில்லாம, தினமும் இங்க நல்ல வியாபாரம் நடக்கும். லாக்டௌன்னால இப்போ பார்சல் மட்டும்தான். கொரோனா வுக்கு பை சொன்னதும் நீங்களும் வந்து ஒரு தடவை சாப்பிட்டுப் போங்க’’னு சொல்றாங்க சுடச்சுட பார் சல்களைக் கைகள்ல வாங்கிய படி.