Published:Updated:

இனிக்கட்டும் புத்தாண்டு!

புத்தாண்டு
பிரீமியம் ஸ்டோரி
புத்தாண்டு

#Utility

இனிக்கட்டும் புத்தாண்டு!

#Utility

Published:Updated:
புத்தாண்டு
பிரீமியம் ஸ்டோரி
புத்தாண்டு

ராஜலட்சுமி, படங்கள்: உமாசங்கர் தனபால்

திரும்பிப் பார்க்கவோ, நினைத்துப் பார்க்கவோ தோன்றாத வகையில் முடியக் காத்திருக்கிறது 2020. கொரோனாவின் கோரதாண்டவத்தால் நாம் இழந்தது ஏராளம். வரவிருக்கும் புத்தாண்டு, அத்தனை துயரங்களிலிருந்தும் மீட்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும். கொண்டாட்டங்களையும் குதூகலங்களையும் மறந்து, துறந்திருந்த நாம் இனி அப்படி இருக்கத் தேவையிருக்காது என்றும் நம்புவோம்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைள் வரிசைகட்டி காத்திருக்கின்றன. கடந்தகால கசப்புகளை மறந்து, இனிப்போடும் இனிமையோடும் எதிர்காலத்தை வரவேற்போம். அதற்கான சின்ன தொடக்கமாக உங்கள் வீட்டிலேயே செய்து அசத்த சூப்பரான எட்டு ரெசிப்பிகளைச் செய்து காட்டியிருக்கிறார் செஃப் உமாசங்கர் தனபால்.

ரபடி

இனிக்கட்டும் புத்தாண்டு!

தேவையானவை:

ஃபுல் க்ரீம் பால் - 500 மில்லி

ஏலக்காய் - 2

குங்குமப்பூ - 2 சிட்டிகை

கண்டன்ஸ்டு மில்க் - 100 மில்லி

பாதாம், பிஸ்தா துண்டுகள் - 10 கிராம்

செய்முறை: பாலைக் கொதிக்கவைக்கவும். ஆடை சேரும்போது அதைப் பாத்திரத்தின் பக்கவாட்டில் ஒதுக்கவும். பால் பாதியாக வற்றும்வரை இதைச் செய்யவும். பிறகு பக்கவாட்டில் சேர்த்த பாலாடையைச் சுரண்டி, பாலோடு சேர்க்கவும். குங்குமப்பூவை வெதுவெதுப்பான நீரில் கரைத்துவைத்துக் கொள்ளவும். கொதிக்கும் பாலில் கண்டன்ஸ்டு மில்க், குங்குமப்பூக் கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் 10 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். பாதாம், பிஸ்தா துண்டுகள் சேர்த்து, குளிரவைத்துப் பரிமாறவும்.

எக்லெஸ் ரெட் வெல்வெட் கேக்

இனிக்கட்டும் புத்தாண்டு!

தேவையானவை:

மைதா மாவு - ஒரு கப்

பொடித்த சர்க்கரை - ஒரு கப்

பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

வெண்ணெய் - அரை கப்

பால் - முக்கால் கப்

வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

ரெட் ஃபுட் கலர் - 2-3 துளிகள்

விப்பிங் க்ரீம் - ஒரு கப் (ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும்)

செய்முறை: மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்துச் சலிக்கவும். வெண்ணெயோடு பொடித்த சர்க்கரை சேர்த்து க்ரீம் பதம் வரும்வரை நன்கு அடிக்கவும். க்ரீம் தவிர்த்து மற்ற எல்லா பொருள்களையும் ஒன்றாகக் கலக்கவும். ஓவனை ப்ரீஹீட் செய்யவும். கேக் கலவையை வெண்ணெய் தடவிய டிரேயில் கொட்டி, 15 நிமிடங்களுக்கு 180 டிகிரியில் பேக் செய்யவும். இதற்கிடையில் விப்பிங் க்ரீமை நன்கு அடித்துத் தயாராக வைத்துக்கொள்ளவும். கேக் பேக் ஆனதும் அதை ஸ்லைஸ் செய்து, விப்பிங் க்ரீம் தடவி, மேலே பொடித்த சர்க்கரை தூவி பரிமாறவும்.

ஓவன் இல்லாதவர்கள் சாதாரண அடுப்பிலும் செய்யலாம். அகலமான பாத்திரத்தினுள் ஸ்டாண்டு வைத்து அந்தப் பாத்திரத்தை சூடு செய்யவும்.பிறகு அதன் மேல் கேக் மாவு நிரப்பிய பாத்திரத்தை வைத்து மூடி, குறைந்த தணலில் 40-45 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கலாம்.

சாக்லேட் சிப் குக்கீஸ்

இனிக்கட்டும் புத்தாண்டு!

தேவையானவை:

வெண்ணெய் - கால் கப்

பொடித்த சர்க்கரை - அரை கப்

மைதா - முக்கால் கப்

பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

வெனிலா எசென்ஸ் - கால் டீஸ்பூன்

சாக்கோ சிப்ஸ் - கால் கப் (சாக்லேட் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுவது)

செய்முறை: வெண்ணெயோடு பொடித்த சர்க்கரை சேர்த்து க்ரீம் பதம் வரும்வரை நன்கு அடிக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்துச் சலிக்கவும். இதை வெண்ணெய், சர்க்கரைக் கலவை யோடு சேர்க்கவும். வெனிலா எசென்ஸ் உள்ளிட்ட எல்லா பொருள்களையும் சேர்த்து மென்மையான மாவாகப் பிசையவும். அழுத்தம் கொடுக்கக்கூடாது. பிசைந்த மாவில் சிறு உருண்டைகளாக எடுத்து குக்கீஸ் போல ஷேப் செய்யவும். ஓவனை ப்ரீஹீட் செய்யவும். பட்டர் ஷீட் பொருத்திய டிரேயில் குக்கீஸை அடுக்கி, 180 டிகிரியில் 15 நிமிடங் களுக்கு பேக் செய்து எடுக்கவும்.

அச்சு முறுக்கு

இனிக்கட்டும் புத்தாண்டு!

தேவையானவை:

அரிசி மாவு - ஒரு கப்

மைதா மாவு - அரை கப்

பொடித்த சர்க்கரை - அரை கப்

உப்பு - ஒரு சிட்டிகை

தேங்காய்ப்பால் - ஒரு கப்

எள் - ஒரு டீஸ்பூன்

தண்ணீர், எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு மிதமான தீயில்வைத்து, அச்சு முறுக்கு செய்யும் அச்சை எண்ணெய்க்குள் சில நொடிகள் வைத்திருக்கவும். சூடான அந்த அச்சை, தயாராக உள்ள மாவில் முக்கி மீண்டும் எண்ணெயில் வைக்கவும். மாவு எண்ணெய்க்குள் இறங்கி, அச்சு தனியே வரும். முறுக்கு வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

சாக்கோ ஃபட்ஜ்

இனிக்கட்டும் புத்தாண்டு!

தேவையானவை:

சாக்லேட் - 350 கிராம்

கண்டன்ஸ்டு மில்க் - 350 கிராம்

வெண்ணெய் - 50 கிராம்

பொடித்த வால்நட்ஸ் - 75 கிராம்

செய்முறை: சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கவும். அதில் கண்டன்ஸ்டு மில்க்கும் வெண்ணெயும் சேர்த்து மிருதுவாகும்வரை கலக்கவும். வால்நட்ஸ் சேர்க்கவும். ஒரு டிரேயில் வெண்ணெய் தடவி, பட்டர் ஷீட் வைக்கவும். சாக்லேட் கலவையை அதில் ஊற்றி, 2-3 மணி நேரத்துக்கு ப்ரீஸரில் வைக்கவும். பிறகு எடுத்து விருப்பமான ஷேப்பில் வெட்டிப் பரிமாறவும்.

பட்டர் முறுக்கு

இனிக்கட்டும் புத்தாண்டு!

தேவையானவை:

அரிசி மாவு - 2 கப்

கடலை மாவு - ஒரு கப்

வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

சீரகம் - 2 டீஸ்பூன்

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: எண்ணெய் தவிர்த்து எல்லாப் பொருள் களையும் ஒன்றாகக் கலக்கவும். சிறிது, சிறிதாகத் தண்ணீர் தெளித்து மென்மையான மாவாகப் பிசைந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டுச் சூடாக்கவும். மீடியமான சூட்டில் இருக்கட்டும். மாவை முறுக்கு அச்சில் நிரப்பி எண்ணெயில் பிழியவும். இரண்டு பக்கங்களும் பொன்னிறமாக வெந்ததும் எண்ணெயை வடித்து எடுத்துவைக்கவும்.

இனிக்கட்டும் புத்தாண்டு!

எக்லெஸ் ப்ளம் கேக்

இனிக்கட்டும் புத்தாண்டு!

தேவையானவை:

உலர்ந்த செர்ரி - 2 டேபிள்ஸ்பூன்

ஒன்றிரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்

கறுப்புநிற உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்

டூட்டி ஃப்ரூட்டி - 4 டேபிள்ஸ்பூன்

கிரேப் ஜூஸ் - ஒரு கப்

பால் - அரை கப்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

பட்டைத்தூள் - அரை டீஸ்பூன்

சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்

மைதா மாவு - அரை கப்

பொடித்த சர்க்கரை - அரை கப்

வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கேரமலைஸ் செய்ய:

சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

தண்ணீர் - 50 மில்லி

செய்முறை: செர்ரி முதல் டூட்டி ஃப்ரூட்டி வரையிலான அனைத்தையும் கிரேப் ஜூஸில் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரையைப் போட்டுச் சூடேற்றவும். அது உருகி கேரமல் நிறத்துக்கு வரும். பிறகு அதில் 50 மில்லி தண்ணீர் சேர்க்கவும். இதுதான் கேரமலைஸ் செய்வது. இதைத் தனியே எடுத்துவைக்கவும். மைதா மாவுடன், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துச் சலிக்கவும். அதில் சுக்குத்தூளும் பட்டைத்தூளும் சேர்க்கவும்.

பொடித்த சர்க்கரையில் வெண்ணெய் சேர்த்து நன்கு அடிக்கவும். அது க்ரீம்போல வர வேண்டும். இதை மாவில் சேர்க்கவும். கிரேப் ஜூஸில் ஊற வைத்த டிரை ஃப்ரூட்ஸ், கேரமல் கரைசல் ஆகியவற்றையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். வெண்ணெய் தடவிய கேக் மோல்டில் ஊற்றி, ப்ரீஹீட் செய்யப்பட்ட ஓவனில் 180 டிகிரி செல்சியஸில் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுககவும்.

ஓவன் இல்லாதவர்கள் சாதாரண அடுப்பிலும் செய்யலாம். அகலமான பாத்திரத்தினுள் ஸ்டாண்டு வைத்து அந்தப் பாத்திரத்தை சூடுசெய்யவும்.பிறகு அதன் மேல் கேக் மாவு நிரப்பிய பாத்திரத்தை வைத்து மூடி, குறைந்த தணலில் 40-45 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கலாம்.

கலகலா

இனிக்கட்டும் புத்தாண்டு!

தேவையானவை:

மைதா மாவு - 2 கப்

பொடித்த சர்க்கரை - அரை கப்

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

பால் - ஒரு கப்

உப்பு - ஒரு சிட்டிகை

எள் (விரும்பினால்) - அரை டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை: மைதா மாவில் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய், உப்பு எல்லாம் சேர்த்துக் கலக்கவும். பிறகு பால் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசையவும். பிசைந்த மாவை 15 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். பிறகு சப்பாத்திக்குத் தேய்ப்பதுபோல தேய்த்து, சதுரங்களாகவோ, டயமண்டு வடிவிலோ வெட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.