சைவ - அசைவ உணவு குறித்த விவாதங்கள் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில், முன்பில்லாத அளவுக்கு தற்போது அசைவ உணவு உண்ணும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என தேசிய குடும்பநல ஆய்வின் தரவுகள் (NFHS) தெரிவிக்கின்றன.
2019 - 2021-ல் வெளியான தேசிய குடும்பநல ஆய்வின் தரவுகளின் அடிப்படையில், 15 - 49 வயதிலுள்ள 83.4 சதவிகித ஆண்களும் 70.6 சதவிகித பெண்களும் தினசரியோ, வாரத்தில் சில நாள்களோ அல்லது எப்போதாவதோ அசைவ உணவுகளைச் சாப்பிடு கிறார்கள். இதில் ஆண்கள் 78.4 சதவிகிதமும், பெண்கள் 70 சதவிகிதமும் இருப்பதாகத் தெரிகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதேபோல் வாராந்தர அசைவ உணவு விரும்பிகளின் விகிதமும் கடுமையாக உயர்ந்துள்ளது. 2015-16-ம் ஆண்டுக் கணக்குப்படி வாரம் ஒரு முறையாவது மீன், கோழி அல்லது இறைச்சியை சாப்பிடுவதாகத் தெரிவித்த ஆண்கள் 48.9 சதவிகிதமாகவும், பெண்கள் 42.8 சதவிகிதமாகவும் இருந்திருக்கிறார்கள். இப்போது அந்த எண்ணிக்கை, ஆண்களில் 57.3 சதவிகிதமாகவும், பெண்களில் 45.1 சதவிகிதமாகவும் உயர்ந்திருக்கிறது.