Published:Updated:

சூப், சாலட், கிரேவி, கறி... வெங்காயத்தாளில் வெரைட்டி வீக் எண்டு விருந்து!

வெங்காயத்தாள்

ஃப்ரைடு ரைஸ் செய்யும்போது கடைசியாகத் தூவ வெங்காயத் தாள் பயன்படுத்தியிருப்போம். அதைத்தாண்டி அதன்வெங்காயத்தாள் உபயோகம் பலருக்கும் தெரிவதில்லை. வெங்காயத்தாளை வைத்து விதம்விதமான உணவுகள் தயாரிக்கலாம். அதன் மணம் அந்த உணவின் ருசியை பல மடங்கு அதிகரிக்கும்.

சூப், சாலட், கிரேவி, கறி... வெங்காயத்தாளில் வெரைட்டி வீக் எண்டு விருந்து!

ஃப்ரைடு ரைஸ் செய்யும்போது கடைசியாகத் தூவ வெங்காயத் தாள் பயன்படுத்தியிருப்போம். அதைத்தாண்டி அதன்வெங்காயத்தாள் உபயோகம் பலருக்கும் தெரிவதில்லை. வெங்காயத்தாளை வைத்து விதம்விதமான உணவுகள் தயாரிக்கலாம். அதன் மணம் அந்த உணவின் ருசியை பல மடங்கு அதிகரிக்கும்.

Published:Updated:
வெங்காயத்தாள்

ஃப்ரைடு ரைஸ் செய்யும்போது கடைசியாகத் தூவ வெங்காயத் தாள் பயன்படுத்தியிருப்போம். அதைத்தாண்டி அதன் உபயோகம் பலருக்கும் தெரிவதில்லை. வெங்காயத்தாளை வைத்து விதம்விதமான உணவுகள் தயாரிக்கலாம். அதன் மணம் அந்த உணவின் ருசியை பல மடங்கு அதிகரிக்கும். இந்த வார வீக் எண்டை வெங்காயத்தாள் ஸ்பெஷலாக கொண்டாடத் தயாரா? 

வெங்காயத்தாள் சூப்

தேவையானவை:

வெங்காயத்தாள் (நறுக்கியது) - ஒரு கப்

தேங்காய்ப்பால் - 2 கப்

மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்

தக்காளி - ஒன்று (நறுக்கவும்)

ஸ்வீட்கார்ன் முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - கால் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)

குடமிளகாய் (நறுக்கியது) - கால் கப்

அலசி ஆய்ந்த கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - சிறிதளவு

சூப் பிஸ்கட் க்யூப் - ஒரு டேபிள்ஸ்பூன்

வெங்காயத்தாள் சூப்
வெங்காயத்தாள் சூப்

செய்முறை:

தக்காளி, இஞ்சியை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு நீர்விட்டு அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடானதும் குடமிளகாய், வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். தக்காளி - இஞ்சி சாற்றை ஊற்றவும். உப்பு, ஸ்வீட் கார்ன் சேர்க்கவும். தேங்காய்ப்பால் ஊற்றி, மிதமான தீயில் அடுப்பை வைத்து சூப்பைக் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தி, சூப் பவுலுக்கு மாற்றி மிளகுத்தூள், சீரகத்தூள் தூவி, கொத்தமல்லித்தழை சேர்த்து, மேலே மொறுமொறு சூப் பிஸ்கட் தூவிப் பருகவும்.

வெங்காயத்தாள் உருளைக்கிழங்குக் கறி

தேவையானவை:

வெங்காயத்தாள் - ஒரு கட்டு (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

உருளைக்கிழங்கு - 2

சோம்பு - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

கிரீன் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

சீஸ் க்யூப் - 2

கஸூரி மேத்தி (உலர் வெந்தயக் கீரை) - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

வெங்காயத்தாள் உருளைக்கிழங்குக் கறி
வெங்காயத்தாள் உருளைக்கிழங்குக் கறி

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவிட்டு தோல் எடுத்து நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, சோம்பு, வெங்காயத்தாள் போட்டு வதக்கி, உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, தக்காளி சாஸ், கிரீன் சில்லி சாஸ் சேர்த்து மேலும் வதக்கவும். அனைத்தும் வெந்ததும் இறக்கி வைக்கும்போது சீஸ் க்யூப் சேர்த்து, கஸூரி மேத்தி தூவி ஒரு புரட்டு புரட்டி, அடுப்பை அணைக்கவும். வெங்காயத்தாள் உருளைக்கிழங்குக் கறி தயார்.

வெங்காயத்தாள் சாலட்

தேவையானவை:

வெங்காயத்தாள் (நறுக்கியது) - கால் கப்

கோதுமைப்பொரி - 2 டேபிள்ஸ்பூன் (ஆர்கானிக் கடை, சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்)

தக்காளி (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்

வேகவைத்த ஸ்வீட்கார்ன் - 3 டேபிள்ஸ்பூன்

ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - 2 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு எடுக்கவும்)

நெய் - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

வெங்காயத்தாள் சாலட்
வெங்காயத்தாள் சாலட்

செய்முறை:

வாய் அகன்ற பாத்திரத்தில் தக்காளி, ஸ்வீட்கார்ன். உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் நெய்யில் வதக்கிய வெங்காயத்தாள், மிளகுத்தூள் சேர்க்கவும். பிறகு ஓமப்பொடி, கொத்தமல்லித்தழை தூவி, கோதுமைப்பொரி சேர்த்துக் கிளறி, எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.

வெங்காயத்தாள் காலிஃப்ளவர் கிரேவி

தேவையானவை:

வெங்காயத்தாள் (நறுக்கியது) - ஒரு கப்

காலிஃப்ளவர் (உதிர்த்த பூ) - 6

தேங்காய்ப்பால் - ஒரு கப்

கசகசா - ஒரு டீஸ்பூன்

முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

சின்ன வெங்காயம் - கால் கப் (தோல் உரிக்கவும்)

தக்காளி - ஒன்று (நறுக்கவும்)

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

கிராம்பு - ஒன்று

வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

பட்டை - சிறிய துண்டு

இஞ்சி - கால் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)

பூண்டு - 3 பல்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு

வெங்காயத்தாள் காலிஃப்ளவர் கிரேவி
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் கிரேவி

செய்முறை:

முந்திரி, கசகசாவை நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய், எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு தாளித்து, சுத்தம் செய்த காலிஃப்ளவர் பூ போட்டு வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது சேர்த்து மேலும் வதக்கி, முந்திரி விழுது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனை போக வதக்கி அடுப்பை மிதமான தீயில் வைத்து தேங்காய்ப்பால் ஊற்றிக் கொதிக்கவிடவும். அனைத்தும் வெந்ததும் அடுப்பை அணைத்து, வெண்ணெய் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.