30 வகை பனீர் ரெசிப்பிகளை இணைப்பிதழில் காண்க!

கடைகளில் வாங்கும் பனீரைப் பார்க்கும்போதெல்லாம், ‘இதை வீட்டிலேயே செய்ய முடியாதா?’ என்று நினைப்பவர்களா நீங்கள்? பனீர் தயாரிப்பதற்குரிய சுலபமான வழிமுறை இதோ...

தேவையானவை: ஒரு லிட்டர் பால், 4 டேபிள்ஸ்பூன் கெட்டித் தயிர் அல்லது எலுமிச்சைச்சாறு.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து, பாலை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்துக் காய்ச்சவும். பால் நன்கு கொதித்ததும் இரண்டு டேபிள்ஸ்பூன் தயிர் அல்லது எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்து லேசாகக் கிளறி விடவும். உடனே பால் திரிந்துவிடும். பின் மீதம் இருக்கும் இரண்டு டேபிள்ஸ்பூன் தயிர்/எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும்.

ஒரு பவுலில் சுத்தமான காட்டன் துணியை விரித்து ஒரு கையால் துணியைப் பிடித்துக்கொண்டு திரிந்த பாலை ஊற்றவும். திரிந்த கெட்டியான பகுதி துணியில் தங்க, அதில் இருக்கும் தண்ணீர் வழிந்து விடும். திரிந்த பால் கலவை கொண்ட துணியைக் கட்டி ஒரு மணி நேரம் தொங்க விடவும். தண்ணீர் சுத்தமாக வடிய வேண்டும். இனி அந்தத் துணியை அப்படியே தட்டையான ஏதாவது பாத்திரம் அல்லது தோசை தவாவில் வைத்து மேலே மூடி அதன்மீது கனமான பொருளை வைத்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செட் ஆக விடவும்.

பனீரைத் துணியில் இருந்து மெதுவாகப் பிரித்து ஒரு பவுலில் வைத்து மூடி போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிறகு பிரித்து கத்தியால் துண்டுகள் போடவும். பனீரை நறுக்கிய பிறகு ஒரு டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் நான்கு நாள்கள் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். அதன் பிறகு கடினமாக ஆரம்பித்து விடும். பனீரை உணவில் சேர்க்கும் முன்பு 10 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைத்து பின்பு சேர்த்தால் உணவில் உள்ள கலவையை நன்கு உறிஞ்சிக்கொள்ளும்.