குடும்ப உறுப்பினர்களில் யாருக்கு எது பிடிக்கும், அவர்கள் உடல்நலத்துக்கு எது நல்லது, சமையல் பட்ஜெட் எவ்வளவு என பலவற்றையும் பேலன்ஸ் செய்து சமைத்துப் பரிமாறுவது என்பது குடும்ப நிர்வாகிகளுக்கு கைவந்த கலை. இந்த விஷயத்தில் காட்டும் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் பாராட்டு கிடைக்கும்போது உண்டாகும் மன நிறைவே அலாதிதான். ஆனாலும், எப்போதாவது ஒரு மாறுதலுக்காக ஹோட்டலுக்குச் சென்று மெனு கார்டு பார்த்து, வித்தியாசமான உணவு வகைகளை ஆர்டர் செய்து விரும்பிச் சாப்பிடுகிறோம். அவ்வாறு செய்யும்போது `இது நல்லாயிருக்கே... நம்ம வீட்டிலேயே செய்யலாமா?’ என்கிற ஆவல் தோன்றும். அதை வீட்டில் செய்து பார்க்கும்போது சில நேரம் க்ளிக் ஆகும். சில நேரம் `ஹோட்டல் ருசி வரவில்லையே’ என்று நினைப்போம். அப்படிப்பட்ட குறை இருந்தால், அதை நிவர்த்தி செய்து, விரும்பிய ருசியை வீட்டிலேயே கொண்டுவர உதவும் சில ரெஸ்ட்டாரன்ட் ஸ்டைல் உணவுக் குறிப்புகளை அழகிய படங்களுடன் வழங்குகிறார் பெங்களூருவைச் சமையற்கலைஞர் ஜானகி அஸாரியா.

பெர்ரி மாக்டெயில்

தேவையானவை:

ஸ்ட்ராபெர்ரி - 6

ப்ளூபெர்ரி - 5

இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்)

சர்க்கரை - 2 டீஸ்பூன்

கோவா (கொய்யா) ஜூஸ் - ஒரு கப்

சோடா - ஒரு கப்

புதினா இலை - அலங்கரிக்கத் தேவையான அளவு

ஐஸ்கட்டி - தேவைக்கேற்ப

செய்முறை:

பெர்ரி பழங்களை சர்க்கரை, இஞ்சி, கோவா ஜூஸுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு அதனுடன் சோடா, ஐஸ்கட்டியைச் சேர்த்து புதினா இலைகள் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

ஸ்ட்ராபெர்ரியிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளை சாக்லேட், கேக், ஐஸ்க்ரீம் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். இது நிறமூட்டியாகவும் செயல்படுகிறது.

கேரட் கொரியாண்டர் சூப்

தேவையானவை:

கேரட் - 4

இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப்

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்)

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

கேரட்டைத் தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும். ஒரு பிரஷர் குக்கரை சூடாக்கி அதில் வெண்ணெயைச் சேர்த்து, நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். அதில் நறுக்கிய கேரட்டைச் சேர்த்து 2 கப் தண்ணீரையும் சிறிதளவு உப்பையும் சேர்த்து நான்கைந்து விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பிறகு, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு, ஃப்ரெஷ் க்ரீம், மிளகுத்தூள் சேர்த்துச் சூடாக்கிப் பரிமாறவும்.

தேவையில்லாத நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மை கேரட் டுக்கு உண்டு.

வெஜ் ஸ்ப்ரிங் ரோல்

தேவையானவை:

ஸ்ப்ரிங் ரோல் ஷீட் - 8

வெங்காயத்தாள் - 2

கேரட் - ஒன்று

குடமிளகாய் - ஒன்று

கோஸ் - 100 கிராம்

சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் - 2 டீஸ்பூன்

தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கவும்)

மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்

தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு + 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வெங்காயத்தாள், கோஸ், கேரட், குடமிளகாய் ஆகியவற்றை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கவும். ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூண்டை சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் வெங்காயத்தாள், கோஸ், கேரட், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி கலவையை ஆற வைக்கவும். மைதாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து விழுதாக செய்துகொள்ளவும்.

ஒரு ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டை எடுத்து, ஒரு ஓரத்தில், 2 டீஸ்பூன் காய்கறிக் கலவையை வைத்து சுருட்டி மூடி, ஓரத்தில் சிறிது அளவு மைதா விழுதை தடவி, ஒட்டி, நீளமான ஸ்ப்ரிங் ரோலாக செய்துகொள்ளவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி ஸ்ப்ரிங் ரோலைப் பொரித்தெடுக்கவும். எல்லா ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டிலும் இதே போல் செய்துகொள்ளவும். தக்காளி சாஸ், சில்லி சாஸுடன் பரிமாறவும்.

வெங்காயத்தாளில் சி, பி2, ஏ, கே ஆகிய வைட்டமின்கள் அடங்கியுள்ளன.

கார்ன் பனீர் டிக்கா

தேவையானவை:

வேகவைத்த கார்ன் - ஒரு கப்

துருவிய பனீர் - அரை கப்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய புதினா - ஒரு டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

பிரெட் தூள் - அரை கப்

எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வேகவைத்த கார்னை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் அரைத்த கார்ன், துருவிய பனீர், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், புதினா, சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், பிரெட் தூள், உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு அதை வட்டமான கட்லெட் போல செய்துகொள்ளவும்.

ஒரு தோசைக்கல்லை சூடாக்கி, அதில் செய்துவைத்துள்ள டிக்கிகளை ஒவ்வொன்றாகப் போட்டு, எண்ணெய்விட்டு இரண்டு புறமும் திருப்பிப்போட்டு பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும். தக்காளி சாஸ், புதினாச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

கார்னில் நார்ச்சத்து மிகுதியாகவும், புரதச்சத்து குறிப்பிடத்தக்க அளவிலும் இருக்கிறது.

வெஜ் ஒ க்ராடின்

தேவையானவை:

வெங்காயம் - ஒன்று (மெல்லியதாக நறுக்கவும்)

கேரட், புரொக்கோலி, கார்ன், ஸூச்சினி ஆகிய காய்கறிகள் - 2 கப் (வேகவைத்தது)

நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்

துருவிய சீஸ் - ஒரு கப்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

சில்லி ஃப்ளேக்ஸ் - அரை டீஸ்பூன்

ஒரிகானோ - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்

வொயிட் சாஸ் செய்வதற்கு:

வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

மைதா - 2 டேபிள்ஸ்பூன்

பால் - 2 கப்

உப்பு - அரை டீஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாயைச் சூடாக்கி வெண்ணெய், மைதா இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுக்கவும். பிறகு அதில் பாலை ஊற்றி கட்டிதட்டாமல், கைவிடாமல் கிளறவும். சிறிது கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து உப்பைச் சேர்க்கவும். வொயிட் சாஸ் தயார்.

ஓ க்ராடின் செய்முறை:

ஒரு கடாயைச் சூடாக்கி ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு அதில் வேக வைத்த காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும். மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ், ஒரிகானோ, வொயிட் சாஸ் சேர்த்துக் கலக்கவும். ஒரு பேக்கிங் பானில் (pan) இந்தக் கலவையைப் பரப்பி அதன் மேல் துருவிய சீஸைப் போட்டு 180 சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்த அவனில் (oven) வைத்து 10-ல் இருந்து 12 நிமிடங்கள் வரை பேக் செய்து சூடாகப் பரிமாறவும்.

100 கிராம் வெங்காயத்தில் 40 கலோரி ஆற்றல் அடங்கியுள்ளது.

அம்ரிட்சரி ஆலு குல்சா

தேவையானவை - மாவு செய்ய:

மைதா - 2 கப்

தயிர் - கால் கப்

பால் - முக்கால் கப்

பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்

பொடித்த சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

ஸ்டஃபிங் செய்ய:

பெரிய உருளைக்கிழங்கு - 3 (வேகவைத்து மசிக்கவும்)

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

அனார்தானா பவுடர் - ஒரு டீஸ்பூன் (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்)

இடித்த மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவிபொடியாக நறுக்கவும்)

உப்பு - தேவைக்கேற்ப

சுட்டெடுக்க:

எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், பொடித்த சர்க்கரை உப்பு ஆகியவற்றைப் போட்டு எண்ணெய், தயிர் இரண்டையும் கலந்து பால் ஊற்றி நன்றாக இழுத்துப் பிசையவும். பிசைந்த மாவை ஈரத்துணியால் மூடி ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு மாவை மறுபடியும் ஒரு முறை பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இடித்த தனியா, அனார்தானா பவுடர், சாட் மசாலாத்தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும் ஸ்டஃபிங் தயார்.

ஓர் உருண்டை மாவை எடுத்து ஒரு கிண்ணம் போல் செய்துகொள்ளவும். இதில் ஒரு டேபிள்ஸ்பூன் செய்து வைத்த ஸ்டஃபிங்கை வைத்து நன்றாக மூடி சற்று தடிமனான சப்பாத்திகளாகச் செய்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, செய்து வைத்துள்ள குல்சாவைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய்விட்டு, இரண்டு புறமும் திருப்பிப்போட்டு, பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.

பல்லாண்டுக்காலம் வாழ்கின்ற பூண்டு தாவர வகையைச் சேர்ந்ததே உருளைக்கிழங்கு.

தால் மகாராணி

தேவையானவை:

துவரம்பருப்பு - ஒரு கப்

தயிர் - ஒரு கப்

ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப்

பால் - ஒரு கப்

குங்குமப்பூ - சிறிதளவு

பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கவும்)

கிராம்பு - 3

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

ஏலக்காய் - 2

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

துவரம்பருப்பை நன்றாகக் கழுவி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். பாலை சூடாக்கி குங்குமப் பூவை ஊறவைக்கவும். கிராம்பையும் ஏலக்காயையும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வேகவைத்த பருப்பை நன்றாக மசித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதில் குங்குமப்பூ சேர்த்த பால், தயிர், ஃப்ரெஷ் க்ரீம், சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

ஒரு கடாயில் நெய்யைச் சூடுசெய்து அதில் நறுக்கிய பூண்டு, சீரகம், பச்சை மிளகாய் பொடித்த ஏலக்காய், கிராம்பு தாளித்து, அதை கொதிக்கவைத்த தாலில் சேர்க்கவும்.

அகழ்வாராய்ச்சியின் போது கி.மு 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த துவரையின் படிமங்கள் இந்தியாவில் கிடைத்திருக்கின்றன.

மலாய் கோஃப்தா

தேவையானவை - கோஃப்தா செய்வதற்கு

துருவிய பனீர் - ஒரு கப்

பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பிரெட் தூள் - அரை கப்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

கிரேவி செய்வதற்கு:

வெங்காயம் (பெரியது) - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தக்காளி (பெரியது) - 4

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 10

கஸூரி மேத்தி - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கோப்தா செய்முறை:

ஒரு பாத்திரத்தில் துருவிய பனீர், உப்பு, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பிரெட் தூள் எல்லாவற்றையும் சேர்த்து, நன்றாகக் கலந்து விரிசல் இல்லாமல் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி, சூடானதும் தீயைக் குறைத்து, உருட்டி வைத்த கோஃப்தாக்களைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்

கிரேவி செய்முறை:

முந்திரிப்பருப்பை அரை கப் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். தக்காளிகளைத் தோல் உரித்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய், வெண்ணெய் இரண்டையும் சேர்த்து சூடாக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, முந்திரி விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன், தக்காளி விழுது, சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். சற்று கெட்டியானவுடன் கரம் மசாலாத்தூள், ஏலக்காய்த்தூள், கஸூரி மேத்தி சேர்த்து மிதமான தீயில் லேசாகக் கொதிக்கவிடவும்.

பரிமாறும் விதம்:

பொரித்த கோஃப்தாக்களை ஒரு பவுலில் வைத்து அதன் மேல் கிரேவியை ஊற்றி, ஃப்ரெஷ் க்ரீம், கொத்தமல்லித்தழையால் அலங்கரித்துப் பரிமாறவும்.

பனீரில் கொழுப்பும் புரதமும் சம அளவில் காணப்படுகிறது. கார்போஹைட்ரேட் மிகக் குறைவாகவே உள்ளது.

காஷ்மீரி புலாவ்

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 2 கப்

பனீர் - 200 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)

வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கவும்)

கேரட் - ஒன்று (சிறிய துண்டுகளாக நறுக்கவும்

பீன்ஸ் - 6 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)

பைனாப்பிள் துண்டுகள் - அரை கப்

பச்சைப் பட்டாணி - கால் கப்

கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3 (நீளவாட்டில் நறுக்கவும்)

ஏலக்காய் - 3

கிராம்பு - 3

சோம்பு - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

பட்டை - ஒரு சிறிய துண்டு

பாதாம் - 6

முந்திரி - 6

உலர் திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்

பால் - கால் கப்

குங்குமப்பூ - சிறிதளவு

நெய் - 6 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பாஸ்மதி அரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊறவைத்து உதிரியாக வேக வைக்கவும். பாலை சூடாக்கி அதில் குங்குமப்பூவைப் போட்டு ஊறவைக்கவும். நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, கார்ன் ஆகியவற்றை லேசாக வேக வைத்துக்கொள்ளவும். பைனாப்பிள் டின் இருந்தால் வேகவைக்கத் தேவை இல்லை. ஃப்ரெஷ் பழமாக இருந்தால் பொடியாக நறுக்கி வேகவைத்துக்கொள்ளவும்.

பெரிய கடாய் அல்லது குக்கரை சூடாக்கி ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி நறுக்கிய பாதாம், முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். பனீரையும் லேசாக வறுத்து எடுக்கவும். இன்னும் சிறிதளவு நெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தில் பாதியை நல்ல பிரவுன் கலராக வறுத்து எடுக்கவும். மீதி நெய்யை ஊற்றி, கிராம்பு, ஏலக்காய், பட்டை, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மீதமுள்ள வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வேகவைத்த காய்கறிகள், பைனாப்பிள், வறுத்த பனீர், வேக வைத்த அரிசி, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். அதில் குங்குமப்பூ கரைத்த பாலையும் ஊற்றி, டைட்டாக மூடிவைத்து (குக்கரில் செய்வதாக இருந்தால் விசில் போட வேண்டாம்), அடுப்பை மிக சிறியதாக வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

வறுத்த பாதாம், முந்திரி, திராட்சை, வறுத்த வெங்காயம் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்தில் பாஸ்மதி அரிசி அதிக அளவில் விளைவிக்கப் படுகிறது.

கேரட் அல்வா ட்ரைஃபிள்

தேவையானவை:

கேரட் - அரை கிலோ (துருவவும்)

கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்

குங்குமப்பூ - சிறிதளவு

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

வறுத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்

வறுத்த பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

கஸ்டர்ட் செய்வதற்கு:

பால் - அரை லிட்டர்

கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

ட்ரைஃபிள் செய்வதற்கு:

ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப்

பொடித்த சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய பழத் துண்டுகள் (ஆப்பிள், மாம்பழம், ஸ்டராபெர்ரி போன்ற ஏதாவது ஒரு பழம்) - சிறிதளவு

செய்முறை

பிரஷர் குக்கரில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றி துருவிய கேரட்டை நன்றாக வதக்கவும். பிறகு அதில் கண்டன்ஸ்டு மில்க் ஊற்றி குங்குமப்பூவையும் சேர்க்கவும். குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை வேகவைக்கவும். பிறகு குக்கரைத் திறந்து மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாகக் கிளறவும். அல்வா நன்கு கெட்டியானவுடன் கீழே இறக்கி ஏலக்காய்த் தூளையும் வறுத்த நட்ஸையும் சேர்க்கவும்.

கஸ்டர்ட் செய்முறை

கஸ்டர்ட் பவுடரில் அரை கரண்டி பாலை ஊற்றி நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். பாலில் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்தவுடன் கஸ்டர்ட் பவுடர் கலவை சேர்த்து, தீயைக் குறைத்துவைத்துக் கிளறவும். கஸ்டர்ட் நன்றாகக் கெட்டியானவுடன் இறக்கி ஆற வைக்கவும். ஃப்ரெஷ் க்ரீமுடன் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து நன்றாக நுரைத்து க்ரீமியாகும்வரை அடித்துக்கொள்ளவும்.

ஒரு கண்ணாடி பவுலில் அடியில் கேரட் அல்வா ஒரு லேயர் பரப்பி, அதன் மேல் கஸ்டர்ட் ஒரு லேயர் ஊற்றவும். அதற்கு மேல் அடித்த க்ரீமை பரப்பி, நறுக்கிய பழத் துண்டுகளால் அலங்கரித்து ஃப்ரிட்ஜில் வைத்து `ஜில்’லென்று பரிமாறவும்.

இந்தியாவில் காஷ்மீரில் மட்டுமே குங்குமப்பூ பயிரிடப்படுகிறது.