பிரீமியம் ஸ்டோரி

நாம் சமைக்கும் உணவில் சுவை எவ்வளவு முக்கியமோ அதேபோல அழகுபடுத்தி அலங்காரமாகப் பரிமாறுவதும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமாகிவிட்டது. பொரியலாகவோ, சுண்டலாகவோ செய்து தரும் காய்கறி, பயிறு வகைகளைச் சாப்பிட யோசிக்கும் குழந்தைகள், இந்த மசாலா கலவையை ஸ்டஃபிங் ஆக சாண்ட்விச்சுக்குள் வைத்துத்தந்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். அதையே அலங்கரித்துப் பரிமாறினால் `ம்ம்... ம்ம்... யம்மி’ என ரொம்பவே விரும்பிச் சாப்பிடுவார்கள். சிறுசிறு விழாக்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலையழகுடன் அலங்கரித்துப் பரிமாறி அனைவரது பாராட்டையும் பெறலாம். இதோ, உங்களுக்காக ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் செய்முறை விளக்கம் அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் சுதா செல்வகுமார்.

சாண்ட்விச்
சாண்ட்விச்
 சுதா செல்வகுமார்
சுதா செல்வகுமார்

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

பூ வடிவ சன்னா மசாலா ஸ்டஃபிங் சாண்ட்விச்

தேவையானவை:

 • பிரெட் துண்டுகள் - 2

 • கோதுமை பிரெட் துண்டுகள் - 2

 • வெள்ளைக் கொண்டைக்கடலை - கால் கப் (நீரில் ஐந்து மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்)

 • பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

 • பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

 • சன்னா மசாலா பவுடர் - அரை டீஸ்பூன்

 • உப்பு, நெய் - சிறிதளவு

 • கிரீன் சட்னி - 2 டேபிள்ஸ்பூன்

 • பீநட் பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்

சாண்ட்விச்
சாண்ட்விச்

அலங்கரிக்க:

 • உலர் செர்ரி - 2

 • சாக்கோ சிப்ஸ் - ஒரு டீஸ்பூன்

 • வெள்ளரிக்காய் - பாதியளவு (இலை மாதிரி வெட்டி வடிவம் எடுத்துக்கொள்ளவும்)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாண்ட்விச்
சாண்ட்விச்

செய்முறை: வாணலியில் நெய்விட்டு சூடானதும் வெங்காயம், தக்காளி, வெந்த சன்னா, பனீர் துருவல், உப்பு, சன்னா மசாலா பவுடர் சேர்த்து நன்கு வதக்கவும்.அடுப்பை நிறுத்தி மசாலா கலவையை எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் ஓர் ஓட்டு ஓட்டி அரைத்துக்கொள்ளவும்.

சாண்ட்விச்
சாண்ட்விச்

இரு பிரெட்டையும் பெரிய வட்டமாக வெட்டிக்கொள்ளவும். பிரெட்டின் நடுவே சிறு மூடி அல்லது பிஸ்கட் கட்டர் வைத்து அழுத்தம் தரவும். நடுவே சிறு வட்டத்தை வெட்டிவிடக் கூடாது. அதாவது பிரெட் நடுவே சிறு வட்ட அச்சு இருந்தால் போதுமானது (பார்க்க படம்). பிறகு, பூ இதழ் மாதிரி பெரிய வட்ட பிரெட்டைச் சுற்றி ஐந்து சரிசம பாகமாக வெட்டவும். அதாவது பிரெட்டின் நடுவே வரைந்த வட்டம் விட்டு மீதிப் பகுதியை வெட்டினால் பிரெட் பூ இதழ் மாதிரி வந்து விடும்.

சாண்ட்விச்
சாண்ட்விச்

ஒரு பூ இதழ் வடிவ பிரெட்டில் கிரீன் சட்னி, மற்றொரு பூ வடிவ பிரெட் துண்டில் பீநட் பட்டர் தடவவும்.

இந்த இரு பூ வடிவ பிரெட்டின் நடுவே அரைத்த சன்னா மசாலா வைத்து மூடவும்.

சாண்ட்விச்
சாண்ட்விச்

இதே மாதிரி கோதுமை பிரெட்டிலும் செய்து தயார் செய்துகொள்ளவும். இந்த இரண்டு வகையான பூ வடிவ பிரெட் மேற்புறம் உலர் செர்ரி வைத்து அதைச் சுற்றிலும் சாக்கோ சிப்ஸ் அடுக்கவும் (பார்க்க படம்).

சாண்ட்விச்
சாண்ட்விச்

பூ மாதிரி அலங்காரம் செய்த சாதா பிரெட், கோதுமை பிரெட்டைச் சாப்பிடும் தட்டுக்கு மாற்றி பிரெட்டின் கீழ் பூ, காம்பு மாதிரி கிரீன் சட்னியால் வரைந்து, இலை மாதிரி வெட்டி வைத்துள்ள வெள்ளரிக்காயைக் காம்பின் அருகில் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும். சுவையும் அருமையாக இருக்கும்; பார்ப்பதற்கு அழகான பூச்செடி மாதிரி தோற்றமளிக்கும்.

கிரீன் சட்னி செய்முறை: அலசி ஆய்ந்த கொத்தமல்லி இலை அரை கப் எடுத்து அதனுடன் தேங்காய்த் துருவல் கால் கப், சிறிதளவு உப்பு, பாதி பச்சை மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் மைய அரைத்தெடுத்தால் கிரீன் சட்னி தயார்.

சாண்ட்விச்
சாண்ட்விச்

சாண்ட்விச் வண்ணத்துப்பூச்சி

தேவையானவை:

 • பிரெட் துண்டுகள் - 2 (சரி பாதி முக்கோணமாக வெட்டிக்கொள்ளவும்)

 • அமெரிக்க ஸ்வீட் கார்ன் முத்துகள் (வேகவைத்தது) - கால் கப்

 • தேங்காய்த் துருவல்,

 • பால் பவுடர் - தலா 2 டேபிள்ஸ்பூன்

 • டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டேபிள்ஸ்பூன்

 • சாக்லேட் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

 • உப்பு இல்லாத வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

அலங்கரிக்க:

 • வட்டமாக வெட்டிய வாழைப்பழத்துண்டுகள் - 2

 • உலர் செர்ரிப் பழம் - 6

 • சாக்கோ சிப்ஸ் - சிறிதளவு

 • மயோனைஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • வெள்ளரிக்காய் - பாதியளவு

சாண்ட்விச்
சாண்ட்விச்

செய்முறை: ஒரு பவுலில் வெந்த சோள முத்துகள், பால் பவுடர், தேங்காய்த் துருவல், டூட்டி ஃப்ரூட்டி, வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும். பிரெட் உள்ளே வைக்கும் ஸ்டஃபிங் ரெடி.

முக்கோணமாக வெட்டி உள்ள இரண்டு பிரெட் துண்டுகளின் உட்புறம் சாக்லேட் சாஸ் தடவவும். அதன் நடுவே சோள ஸ்டஃபிங் வைத்து மூடவும். அடுத்த இரு பிரெட் துண்டுகளையும் இதே மாதிரி செய்துகொள்ளவும். இது பட்டர்ஃப்ளை இருபக்க விங்ஸ் ஆகும் (பார்க்க படம்).

சாண்ட்விச்
சாண்ட்விச்

இறகு அலங்காரத்துக்குத் தயாரான பிரெட் துண்டு மீது இருபுறமும் வட்டமாக வெட்டிய வாழைப்பழத் துண்டு வைத்து வாழைப்பழத் துண்டு மீது சாக்கோ சிப்ஸ் வைக்கவும் (பார்க்க படம்).

சாண்ட்விச்
சாண்ட்விச்

சிறிய வெள்ளரிக்காயை நடுவே இரண்டாகப் பிளந்து ஒரு துண்டை எடுத்து நடுவே விதை, சதைப் பகுதியை லேசாக குடைந்து அதனுள் சிறிதளவு மயோனைஸ் தடவி, செர்ரிப் பழங்களை ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசையாக அதனுள் அடுக்கவும். இது வண்ணத்துப்பூச்சியின் நடுப்பகுதி ஆகும் (பார்க்க படம்). தனித்தனியாக உடல், வண்ணத்துப்பூச்சி சிறகு தயார். பரிமாறும் தட்டில் இந்த தயாரான சாண்ட்விச்சை வண்ணத்துப்பூச்சி மாதிரி அலங்காரம் செய்து பரிமாறவும்.

குறிப்பு: இதில் பிரெட்டை டோஸ்ட் செய்யவில்லை. உங்களுக்குத் தேவையெனில் டோஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு