Published:Updated:

மணப்பாறை முறுக்கின் ருசிக்கான சீக்ரெட்ஸ்! #VikatanDiwaliMalar2019

சரியான விகிதத்தில் அரிசியையும், உளுந்தையும் அளவான நீரோடு சேர்த்து அதோடு எள், ஓமம், சீரகம் ஆகியவற்றையும் கலந்து, மாவை பக்குவமாகத் தயார் செய்யணும்

மணப்பாறை முறுக்கு
மணப்பாறை முறுக்கு

தீபாவளிப் பலகாரப் பட்டியலில் முறுக்குக்குத் தவிர்க்க முடியாத இடம் உண்டு. வீடுகளில் முறுக்குச் சுற்றிய காலம் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி, கடை முறுக்குகளில் கண் பதிக்கத் தொடங்கிய மக்களின் மனங்களை ஆக்கிரமித்துவிட்டது 'மணப்பாறை முறுக்கு.' அரிசி முறுக்கு, நெய் முறுக்கு, தேன்குழல் முறுக்கு, கேழ்வரகு முறுக்கு, சாமை முறுக்கு, வரகு முறுக்கு, சிறுதானிய முறுக்கு, ஓம முறுக்கு, கடலை மாவு முறுக்கு, பூண்டு முறுக்கு என... மணப்பாறையில் அணிவகுக்கும் வகை வகையான முறுக்குகள் வாயூறவைக்கின்றன. மொறு மொறுவென இதமாக நாவில் கரையும் பதமும், சுண்டியிழுக்கும் ருசியும் மணப்பாறை முறுக்கின் விசேஷம்.

> விகடன் தீபாவளி மலர் 2019... அப்படி என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

திருச்சியிலிருந்து 48 கி.மீ தொலைவில் உள்ளது மணப்பாறை. திரும்பும் பக்கமெல்லாம் முறுக்குக் கடைகள். விற்பனையில் பரபரப்பாக இருந்த மணப்பாறை முத்தன் தெருவைச் சேர்ந்த 'முறுக்கு' மனோகரைச் சந்தித்துப் பேசினோம்.

'டேஸ்ட் பாருங்க...' என்று முறுக்கை நீட்டியபடி பேச ஆரம்பித்தார், "60 வருஷத்துக்கும் முன்னாடி மணி ஐயர் என்பவர்தான் எங்க ஊர் ரயில்வே ஸ்டேஷனில் இந்த முறுக்கு வியாபாரத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். அவரிடம் வேலைசெய்த பலரில் என் அப்பா துரைசாமியும் ஒருத்தர். ஆரம்பத்தில் நல்லா போய்க்கொண்டிருந்த மணி ஐயரின் முறுக்கு வியாபாரம், என்ன காரணத்தினாலோ திடீர்னு சரிவைச் சந்திச்சிருக்கு. தொழில் நஷ்டமடைஞ்சதால குடும்பத்துடன் இந்த ஊரைவிட்டே போய்விட்டாராம் மணி ஐயர்.

மணப்பாறை முறுக்கு
மணப்பாறை முறுக்கு

> விகடன் தீபாவளி மலர் 2019... அப்படி என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

ஆனால், அவரிடம் வேலை பார்த்தவங்களுக்கு வேற வழி இல்லை. 'எப்படியாவது இந்த முறுக்கு வியாபாரத்தை முன்னேத்திரணும்'ங்கிற முனைப்போடு வேலை செஞ்சிருக்காங்க. அவங்களோட கடின உழைப்புதான் இன்னைக்கு மணப்பாறை முறுக்குக்குத் தனி அந்தஸ்து கிடைக்கக் காரணம். இப்போ சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முறுக்கு வியாபாரத்தில் இருக்காங்க. மணப்பாறை முறுக்குக்கு வேறெந்த ஊர் முறுக்கும் ஈடுகொடுக்க முடியாது.

> விகடன் தீபாவளி மலர் 2019... அப்படி என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

சரியான விகிதத்தில் அரிசியையும், உளுந்தையும் அளவான நீரோடு சேர்த்து அதோடு எள், ஓமம், சீரகம் ஆகியவற்றையும் கலந்து, மாவை பக்குவமாகத் தயார் செய்யணும். விறகு அடுப்பில் எண்ணெயைக் காயவைக்க வேண்டும். கைப்பிடி மாவை முறுக்குக்குழாயில் வைத்துச் சுற்றி, முறுக்கைப் பிழிந்து, பொன்னிறத்தில் பொரித்து எடுக்கணும். கொஞ்சம் டைம் மிஸ் ஆனாலும், எண்ணெய் ஓவராக் கொதிச்சு முறுக்கு கருகிடும். இந்த கைப்பக்குவத்தைவிட மணப்பாறை முறுக்கு ருசிக்கு இன்னொரு மிக முக்கியமான காரணம் இருக்கு." சஸ்பென்ஸ் வைத்தவர், ஒரு சொம்பில் தண்ணீர் கொடுத்துப் பருகச் சொன்னார். லேசான உவர்ப்புத் தன்மையுடன் இருந்தது. இந்தத் தண்ணீர்தான் மணப்பாறை முறுக்கின் தனிச்சுவைக்கு முதன்மையான காரணம்ங்க" என்றார்.

மணப்பாறை முறுக்கின் ருசிக்கான சீக்ரெட்ஸ்! #VikatanDiwaliMalar2019

- இத்துடன் தீர்ந்துவிடவில்லை, மணப்பாறை முறுக்கின் ருசிக்கான சீக்ரெட்ஸ். இதன் முழு பின்னணியுடன், மணப்பாறை முறுக்குத் தொழிலின் தற்போதைய நிலையையும் விவரிக்கிறது, விகடன் தீபாவளி மலரில் வெளிவந்துள்ள 'ருசியின் ரகசியம்! - மணப்பாறை முறுக்கு' எனும் செய்திக் கட்டுரை.

> விகடன் தீபாவளி மலர் 2019... அப்படி என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1