Published:Updated:

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

மட்டிப்பழம்
பிரீமியம் ஸ்டோரி
மட்டிப்பழம்

ஒரு கிலோ மட்டிப்பழம் சீசனுக்கு ஏற்றாற்போல 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

ஒரு கிலோ மட்டிப்பழம் சீசனுக்கு ஏற்றாற்போல 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.

Published:Updated:
மட்டிப்பழம்
பிரீமியம் ஸ்டோரி
மட்டிப்பழம்

கன்னியாகுமரி மட்டிப்பழம்

இது வாசமான வாழைப்பழம்!

ரு விரல் நீளம், அள்ளும் சுவை, பரவும் மணம்... இதுதான் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்தின் ஸ்பெஷல்.

மட்டிப்பழம்
மட்டிப்பழம்
 அரிஹரன்
அரிஹரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் விளையும் மட்டிப்பழம் புளிப்புச் சுவை இல்லாதது. எளிதில் ஜீரணிக்கக்கூடியது. அதனால் ஆறு மாதக் குழந்தைக்குக்கூட இந்தப் பழத்தையே கொடுக்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள். மட்டிப்பழம் வீட்டில் இருந்தால் அதன் வாசம் வீடு முழுக்க நிறையும். மற்ற வாழைகளுக்கு 10 மாத வளர்ச்சியென்றால், மட்டி வாழைக்கோ... 12 மாதங்கள். பராமரிப்பும் அதிகம் தேவை. அதற்கேற்ற விலை கிடைப்பதில்லை என்பதால், எல்லா நேரங்களும் மட்டி வளர்க்கப்படுவதில்லை.

மட்டிப்பழம்
மட்டிப்பழம்

ஒரு கிலோ மட்டிப்பழம் சீசனுக்கு ஏற்றாற்போல 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது. கன்னியாகுமரி வருபவர்கள் மட்டிப்பழம் வாங்கிச் செல்ல மறக்க மாட்டார்கள்” என்கிறார் மூலிகைகளின் மரபணுக்கள் குறித்து ஆய்வு செய்யும் முனைவர் அரிஹரன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கம்பம் பன்னீர் திராட்சை

இது பள்ளத்தாக்கு முந்திரி!

தேனி மாவட்டத்தின் மேகமலை, சுருளி அருவி, கேரளாவின் குமுளி, தேக்கடி பகுதிகளுக்குச் சுற்றுலா செல்பவர்கள், பன்னீர் திராட்சையைச் சுவைக்காமல் திரும்ப மாட்டார்கள். ‘முந்திரிப்பழம்’, ‘கொடி முந்திரி’ என அழைக்கப்படும் இது, மாதவிடாய் பொழுதுகளில் பெண்களுக்கு ஏற்படும் இரும்புச்சத்து இழப்பை ஈடுகட்டும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

பொன்.காட்சிக்கண்ணன்,  அருண்
பொன்.காட்சிக்கண்ணன், அருண்
கம்பம் பன்னீர் திராட்சை
கம்பம் பன்னீர் திராட்சை

‘‘முப்பது வருஷமா கறுப்பு பன்னீர் திராட்சை விவசாயம் பண்றோம். கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியின் சீதோஷ்ண நிலை, மண்ணின் தன்மை காரணமாக இந்தப் பகுதியில வருஷம் முழுவதும் திராட்சை விளையும். தினமும் வியாபாரிகள் வந்து வாங்கிட்டு போற அளவுக்கு நல்ல விளைச்சல் தரும். ஒரு பெட்டியில 10 கிலோ திராட்சை இருக்கும். ஒரு கிலோ இப்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது’’ என்கிறார்கள் விவசாயிகளான பொன்.காட்சிக்கண்ணன் மற்றும் அருண்.

கம்பம் பன்னீர் திராட்சை
கம்பம் பன்னீர் திராட்சை

இங்கு வாங்கப்படும் திராட்சையை வெந்நீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு, மூன்று நாள்கள் வெயிலில் உலரவைத்து உலர்பன்னீர் திராட்சையாகவும் பல கடைகளில் விற்பனை செய்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருவையாறு அசோகா அல்வா
திருவையாறு அசோகா அல்வா
திருவையாறு அசோகா அல்வா
திருவையாறு அசோகா அல்வா
கணேசமூர்த்தி
கணேசமூர்த்தி

திருவையாறு அசோகா அல்வா

இது காவிரிக்கரை இனிப்பு!

‘`இந்த மண்ணின் விருந்தோம்பல் புகழ்பெற்றது. இசைப்பிரியர்களை மட்டுமல்ல, சுவைப் பிரியர்களையும் திருவையாறு திருப்திப்படுத்தும். இங்கு வருகிறவர்கள் அசோகாவைச் சுவைக்காமல் செல்லமாட்டார்கள்; கிலோ கணக்கில் பார்சல் வாங்காமல் பஸ் ஏற மாட்டார்கள். வாழையிலையில் அசோகாவுடன் சிறிது மிக்சர்வைத்துக் கொடுப்போம். இதன் செய்முறை ஒருபக்கம் இருந்தாலும், காவிரித் தண்ணீர்தான் அசோகாவின் சுவைக்கு முக்கியக் காரணம். இரும்புச் சட்டியில் நெய் காய்ந்ததும் மைதா, பாசிப்பருப்பு, பால் கோவா, அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக் கிளறி, மீண்டும் நெய் ஊற்றி, கொதித்ததும் சர்க்கரை, கலர் பொடி, முந்திரி, ஏலக்காய் சேர்த்துக் கிளறி இறக்கினால், ருசியான அசோகா அல்வா நாவை சப்புக்கொட்டவைக்கும். ஒரு கிலோ அசோகா விலை 340 ரூபாய். இதற்கு உலக அளவில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்!” என்கிறார் `ஆண்டவர் அசோகா அல்வா' கடையின் நிர்வாகி கணேசமூர்த்தி.

மணப்பாறை முறுக்கு
மணப்பாறை முறுக்கு
மணப்பாறை முறுக்கு
மணப்பாறை முறுக்கு
 மனோகர்
மனோகர்

மணப்பாறை முறுக்கு

இது மனத்தை மயக்கும் நொறுக்கு!

``வகைவகையான முறுக்குகள் கிடைத்தாலும், நாவில் கரையும் பதமும் மயக்கும் ருசியும்கொண்ட மணப்பாறை முறுக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான். மணப்பாறையில் முதன்முதலில் மணி ஐயர் என்பவர் முறுக்கு செய்து ரயில்வே ஸ்டேஷனில் விற்றிருக்கிறார். பிசினஸ் சரிவராததால் அதைக் கைவிட்டுவிட்டார். அதன்பின் அவரிடம் வேலை பார்த்த என் அப்பா துரைசாமி 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த முறுக்கு வியாபாரத்தை நாங்கள் தொடர்ந்து வருகிறோம். சிங்கப்பூர், மலேசியா உட்பட பல இடங்களுக்கு எங்கள் முறுக்கு வாங்கிச் செல்லப்படுகிறது. இதற்கென கடை போடாமல் வீட்டிலேயே சுவை மணக்கச் செய்துவருகிறோம். பச்சரிசி மாவு அரை கிலோ, உளுந்து மாவு கால் கிலோ, கூடவே ஒரு ஸ்பூன் ஓமம், சீரகம், எள், தேவையான அளவு உப்பு கலந்து, சரியான பதத்துக்கு நீர்சேர்த்துப் பிசைய வேண்டும். அதே நேரம் கால் கிலோ எண்ணெயை விறகு அடுப்பில் பதத்துக்கு காய்ச்ச வேண்டும். பிசைந்த மாவைப் பக்குவமாக கலந்து, அதில் கைப்பிடி மாவை முறுக்குக்குழாயில் வைத்துச் சுற்றி, எண்ணெயில் பதமாகப் போட்டு பொன்னிறத்தில் எடுக்க வேண்டும். எண்ணெய் கொதிக்கக் கூடாது. கொதித்தால், முறுக்கு ருசி மாறவும் கருகவும் வாய்ப்புள்ளது. சிலர் முறுக்கை இரண்டு வேக்காட்டில் எடுப்பார்கள். மாவு பிசையும் பக்குவம், பொரிப்பு முறை மற்றும் இப்பகுதியில் கிடைக்கும் லேசான உவர் தன்மையுடைய தண்ணீர் ஆகியவை மணப்பாறை முறுக்கின் ருசி ரகசியம்” என்கிறார் மணப்பாறை முறுக்கு செய்யும் மனோகர்.

கோவை மைசூர்பா
கோவை மைசூர்பா
கோவை மைசூர்பா
கோவை மைசூர்பா
 எம்.கிருஷ்ணன்
எம்.கிருஷ்ணன்

கோவை மைசூர்பா

இது நினைத்தாலே இனிக்கும் சுவை!

‘`கோவை, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவுக்கு சிவாஜி கணேசன், மூப்பனார் தொடங்கி தீபிகா படுகோன் வரை வி.வி.ஐ.பி ரசிகர் பட்டாளம் உண்டு. மைசூர்ப்பாகுவைச் செங்கலோடு ஒப்பிட்டு ஜோக்குகள் வந்துகொண்டிருந்த காலத்தில் பல நூறு தடவை, பல பக்குவங்களில் அதை முயன்று பார்த்தோம். அப்போது ஒருமுறை மிகவும் வித்தியாசமாக வந்தது. ‘மைசூர்ப்பாகு’ என்பதை ‘மைசூர்பா’ என்று மாற்றும் அளவுக்கு அது மென்மையாகி, கைகொடுத்தது. அது நாவில் வைத்தாலே கரைந்துவிடும். மிகப்பெரிய ஆர்டர் (17,500 கிலோ), மூன்று மணி நேரத்தில் அதிக விற்பனை (13,188 கிலோ) என்று மைசூர்பாவில் இதுவரை ஆறு உலக சாதனைகளைப் படைத்துள்ளோம். இப்போது ஒரு கிலோ மைசூர்பா ரூ. 580. செப்டம்பர் 20 அன்று என் தந்தையின் நினைவு நாளன்று, ஒரு கிலோ மைசூர்பா ரூ.99-க்கு (குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்) விற்பனை செய்வோம். 15 நாள்கள் வரை எங்கள் மைசூர்பாவை வைத்துச் சாப்பிடலாம்’’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன்.

ஊட்டி வர்க்கி
ஊட்டி வர்க்கி
ஊட்டி வர்க்கி
ஊட்டி வர்க்கி
 ராஜ்குமார்
ராஜ்குமார்

ஊட்டி வர்க்கி

இது ஆங்கிலேயர் அளித்த மொறுமொறுப்பு!

பெரும்பாலான வீடுகளில் ஒவ்வொரு நாளும் உட்கொள்ளப்படும் அளவுக்கு ஊட்டி மக்களின் ரசனையோடு ஒன்றிபோயிருக்கிறது வர்க்கி. 1820-களில் ஆங்கிலேயர் மூலமாக இங்கு வந்த பேக்கரி உணவுகளே பிரெட், பன், குக்கீஸ். அதில் குக்கீஸ்தான் `வர்க்கி'யாக உருமாறியிருக்கிறது.

“அப்பா சுப்பிரன், பேக்கிங் தொழிலை ஆங்கிலேயரிடமிருந்து கற்றுக்கொண்டார். வர்க்கியில் ஆர்வம்காட்டிய அப்பா, 70 ஆண்டுகளுக்கு முன் ‘மோகன் பேக்கரி’ என்ற பெயரில் அதை விற்பனை செய்தார். பிறகு `ஸ்ரீயாஸ்' என்று பெயர் மாற்றினோம். வீட்டின் அருகில் உள்ள இரண்டு அறையை வர்க்கி தயாரிக்கும் பேக்கிங் இடமாக மாற்றி, பாரம்பர்ய முறைப்படி இன்றும் அடுப்பில்தான் தயாரிக்கிறோம். மைதாவை முக்கிய உட்பொருளாகக் கொண்ட வர்க்கியை, இன்றைய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் கோதுமையில் தயாரிக்கிறோம். மாவு பிசைவதை மட்டுமே இயந்திரத்தில் செய்ய முடியும். அடுத்த நிலை பணிகள் அனைத்தும் கைகளால் மட்டுமே செய்கிறோம். இதனால் தேவை அதிகம் என்றாலும் உற்பத்தியை அதிகபடுத்த முடியாது. தினமும் 80 கிலோ வரை தயாரிக்கிறோம். ஒரு கிலோ வர்க்கி ரூ.140-க்கு விற்பனை செய்கிறோம். காற்றுபுகாமல் அடைத்துவைத்திருந்தால் மூன்று மாதங்கள் வரை மொறுமொறுப்புடன் இருக்கும் ஊட்டி” என்கிறார் ஸ்ரீயாஸ் பேக்கரி உரிமையாளர் ராஜ்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism