திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா இது இருளிலே தொடங்கும் இன்சுவை!

119 வருடங்களுக்கு முன்பு, கிருஷ்ணசிங் என்பவரால் நெல்லையப்பர் கோயிலின் எதிரே தொடங்கப்பட்டதுதான் இருட்டுக்கடை அல்வா கடை. அன்றைக்குப் பரவ ஆரம்பித்த இருட்டுக்கடை அல்வாவின் புகழ், தொடர்ந்து காற்றில் மணம் வீசிக்கொண்டிருக்கிறது. நெல்லை டவுன் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கடையில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பிட்ட அளவு அல்வா மட்டுமே தயாரிக்கப்பட்டு, அது விற்றுத்தீர்ந்ததும் கடை மூடப்பட்டுவிடுகிறது. வெளிநாடு செல்வதற்கு முன்பு இங்கு வந்து அல்வா வாங்கிக்கொண்டு போவது பலரது வழக்கம். அப்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் எனப் பல்வேறு நாடுகளுக்கும் பயணிக்கிறது இந்த அல்வா.

``இதன் ஸ்பெஷலே தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் பயன்படுத்தித் தயாரிப்பதுதான். ஒரு மாதமானாலும் வைத்திருந்து சாப்பிடலாம்... கெட்டுப் போகாது'' என்கிறார் இருட்டுக்கடையின் உரிமையாளரான ஹரிசிங். ``சம்பா கோதுமை, சீனி, நெய் ஆகியவற்றை மட்டுமே கொண்டு இருட்டுக்கடை அல்வா தயாரிக்கப்படுகிறது. சுவையைக் கூட்டுவதற்காக ரசாயனமோ கலர்பொடியோ சேர்க்கப்படுவதில்லை'' என்கிற ஹரிசிங், ``வேறு எங்கும் இந்தக் கடையை ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்தப் பெயரில் செயல்படும் கடைகள் எதுவும் எங்களுடையவை அல்ல'' என்றும் பதிவுசெய்கிறார். அதுமட்டுமல்ல... ஒரிஜினல் கடைக்குத் தொடர்பு எண் எதுவும் கிடையாது. அல்வா விரும்பிகள் இங்கு நேரில் வந்துதான் வாங்கிச் செல்ல வேண்டும்!

கன்னியாகுமரி முந்திரிக்கொத்து இது பாரம்பர்யத்தின் ஆரோக்கிய ருசி!

சிறிய அளவிலான மோதகத்தின் வடிவில் தங்கநிற திராட்சைக்கொத்து போன்று இருக்கும் பலகாரம்தான் முந்திரிக்கொத்து.

“கருப்பட்டிப் பாகில் பாசிப்பயிறு மாவு, பொடித்த சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றைக் கலந்து சிறிய அளவில் உருட்டி உலரவைத்து, பச்சரிசி மாவுக் கலவையில் முக்கியெடுத்து எண்ணெயில் பொரிப்பதுதான் முந்திரிக்கொத்து. இது 15 முதல் 20 நாள்கள் வரை கெடாமல் இருக்கும். இதைப் பொரிக்க மரச்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயும், தவிடு நீக்காத சம்பா அரிசி மாவையும் பயன்படுத்துகிறோம். ஆரோக்கியத்துக்காகவே கருப்பட்டியில் செய்யும் முறையை நாங்கள் தொடர்கிறோம்.

தமிழகம், திருவனந்தபுரம் மற்றும் கேரளத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இதை வாங்கிச் செல்கிறார்கள். ஒரு கிலோ முந்திரிக்கொத்து 400 ரூபாய். கம்பு, சோளம், வரகு, திணை, சாமை, குதிரைவாலி, பனிவரகு ஆகிய சிறுதானியங்களிலும் முந்திரிக்கொத்து செய்கிறோம். கறுப்பு கவுனி அரிசியில் செய்யும் முந்திரிக்கொத்து மிகவும் சுவையாக இருக்கும்” என்கிறார் இயற்கை அங்காடி உரிமையாளர் கெளதமன்.