Published:Updated:

சூப்பர் பொடி... ஸ்பீடு சமையல்!

சூப்பர் பொடி
பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் பொடி

பொடிக்குப் பயன்படுத்தும் மூலிகைகளை நன்றாக அலசி, உலரவைத்த பின்னரே பொடி செய்ய வேண்டும்

சூப்பர் பொடி... ஸ்பீடு சமையல்!

பொடிக்குப் பயன்படுத்தும் மூலிகைகளை நன்றாக அலசி, உலரவைத்த பின்னரே பொடி செய்ய வேண்டும்

Published:Updated:
சூப்பர் பொடி
பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் பொடி

`தண்ணீர் கஷ்டத்தில் சமையலுக்குத் தண்ணீர் பயன்படுத்தத் திண்டாடுபவர்களுக்கும், சாம்பார், ரசம் கறி என்று தனித்தனியாக சமைத்து முடித்த பாத்திரத்தைத் தேய்க்கத் தண்ணீருக்காக அவஸ்தைப்படுபவர்களுக்கும் இந்தப் பொடி வகை ரெசிப்பிகள் உதவும். தினசரி இல்லாவிட்டாலும் வாரம் மூன்று நாள்களாவது இந்தப் பொடிகளை உபயோகப்படுத்தினால், சுவையான, சத்தான, அதே நேரம் தண்ணீர் செலவில்லாமல் சாப்பாட்டு வேலை முடியும்.

சூப்பர் பொடி... ஸ்பீடு சமையல்!

பொடிக்குப் பயன்படுத்தும் மூலிகைகளை நன்றாக அலசி, உலரவைத்த பின்னரே பொடி செய்ய வேண்டும். இல்லையென்றால், பொடியில் பூஞ்சைக்காளான் பூத்துவிடும்.புரதச்சத்தும், நார்ச்சத்தும், வைட்டமின் ஈ மற்றும் இரும்புச்சத்தும் சேர்ந்துள்ள இந்தப் பொடிகள், கொழுப்புச்சத்தே இல்லாத உணவு. நேரமும் பொறுமையும் இருந்தால் பச்சடியுடனோ, வற்றல் குழம்புடனோ பரிமாறலாம். காரக்குழம்பு, வற்றல் குழம்பு வகைகளை இரண்டு நாள்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்’’ என்று டிப்ஸ் தருகிற மெனுராணி செல்லத்தின் சூப்பர் பொடி ரெசிப்பிகள் அடுத்தடுத்த பக்கங்களில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாழைக்காய்ப் பொடி

தேவையானவை:

  • முற்றிய வாழைக்காய் - 2

  • வறுத்துப் பொடிக்க:

  • துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 4

  • பெருங்காயத்தூள் - சிறிதளவு

  • எண்ணெய் - வறுக்கத் தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

  • கறிவேப்பிலை - சிறிதளவு

தாளிக்க:

  • எண்ணெய், கடுகு - சிறிதளவு

சூப்பர் பொடி... ஸ்பீடு சமையல்!

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய்விட்டு சூடாக்கி வறுக்கக் கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும். எண்ணெயில் சிறிதளவு கறிவேப்பிலையும் போட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

வாழைக்காயை இரண்டாக நறுக்கி, கொதிக்கும் நீரில் சேர்த்து முக்கால் பதத்துக்கு வேகவிட்டு எடுத்துத் துருவிக் கொள்ளவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு தாளித்து, துருவிய வாழைக்காய் மற்றும் கொரகொரப்பாகப் பொடித்த மசாலாவைக் கலந்து வைக்கவும். சூடான சாதத்தில் கலந்து அப்பளத்துடன் பரிமாறவும்.

ஒருமுறை வாழைக்கன்றை நட்டுவிட்டால் தொடர்ந்து கன்றுகள் தோன்றி பயனளித்துக்கொண்டே இருக்கும். அதனால்தான் ‘வாழையடி வாழை’ வாழ்த்து தோன்றியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாகற்காய்ப் பொடி

தேவையானவை:

  • பாகற்காய் - கால் கிலோ

  • கடலைப்பருப்பு - அரை கப்

  • மல்லி (தனியா) - அரை கப்

  • காய்ந்த மிளகாய் - 4

  • மஞ்சள்தூள் - சிறிதளவு

  • நாட்டுச்சர்க்கரை (அ) வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • புளி - ஒரு எலுமிச்சை அளவு

  • துருவிய கொப்பரை - கால் கப்

  • எண்ணெய் - சிறிதளவு

  • உப்பு - தேவையான அளவு

சூப்பர் பொடி... ஸ்பீடு சமையல்!

செய்முறை:

பாகற்காயை நன்றாகக் கழுவி பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு கடலைப்பருப்பு, மல்லி, காய்ந்த மிளகாய், துருவிய கொப்பரை, புளி ஆகியவற்றைச் சிறிதளவு எண்ணெயில் சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். ஆறியதும் ஒன்றாக அரைத்துவைக்கவும். அதே எண்ணெயில் பாகற்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து முறுகலாக வறுத்து அடுப்பை அணைக்கவும். ஆறியதும் பாகற்காய் கலவையுடன் அரைத்து வைத்த மசாலா, நாட்டுச்சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். இதைச் சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட... சுவை அள்ளும்!

பாகற்காயின் தாயகம் இந்தியாவே. இங்கிருந்து 14-ம் நூற்றாண்டில் சீனாவில் அறிமுகமானது.

புதினாப் பொடி

தேவையானவை:

  • புதினா - 2 கப்

  • புளி - சிறிதளவு

  • கடுகு - 2 டீஸ்பூன்

  • உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 3

  • பூண்டு - 8 பல் (விருப்பப்பட்டால்)

  • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

சூப்பர் பொடி... ஸ்பீடு சமையல்!

செய்முறை:

புதினாவைக் கழுவி ஈரப்பதம் போக நன்கு காயவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும். பொன்னிறமானதும் அடுப்பை அணைத்து இறக்கி ஆறவிடவும். இதனுடன் புதினா, உப்பு, புளியை சேர்த்துப் பொடிக்கவும். சூடான சாதத்துடன் உப்பு, நெய், கொத்தமல்லிப் பொடி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல், செரியாமை போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவ மூலிகையான புதினா நிவாரணம் தரும்.

கறிவேப்பிலைப் பொடி

தேவையானவை:

  • கறிவேப்பிலை - 2 கப்

  • கடுகு - 2 டீஸ்பூன்

  • உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

  • பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 4

  • புளி - சிறிதளவு

  • எண்ணெய் (வறுக்க) - ஒரு டேபிள்ஸ்பூன்

  • நல்லெண்ணெய் அல்லது ஏதாவது சமையல் எண்ணெய் (தாளிக்க) - சிறிதளவு

  • உப்பு - தேவைக்கேற்ப

சூப்பர் பொடி... ஸ்பீடு சமையல்!

செய்முறை:

கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் மிக்ஸியில் முதலில் உப்பு, புளி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து பாதி பொடித்த பின் கடுகு, உளுத்தம்பருப்பும் போட்டுப் பொடித்து வைத்துக்கொள்ளவும். சூடான சாதத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து, நெய் ஊற்றி, பொடித்த கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கலக்கவும். இதை சிப்ஸ் அல்லது அப்பளத்துடன் பரிமாறலாம்.

கறிவேப்பிலை தென்னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

பூண்டுப் பொடி

தேவையானவை:

  • உரித்த பூண்டு - 100 கிராம்

  • துவரம்பருப்பு - 50 கிராம்

  • மிளகு - ஒரு டீஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 3

  • உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

  • எண்ணெய் (வறுக்க) - சிறிதளவு

  • உப்பு - தேவைக்கேற்ப

சூப்பர் பொடி... ஸ்பீடு சமையல்!

செய்முறை:

கொடுத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் (பூண்டு நீங்கலாக) எண்ணெயில் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். உரித்த பூண்டை மிகவும் பொடிப் பொடியாக நறுக்கி அதே எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் அனைத்தையும் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.

நெய் சேர்த்துக் கலந்த சூடான சாதத்துடன் இந்தப் பொடியைக் கலந்து பிசைந்து, வற்றல் குழம்பு, காரக்குழம்பு இவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் அப்பளத்துடன் பரிமாறவும்.

கொடைக்கானல், மூனார் மலைப்பகுதிகளில் மலை பூண்டு விளைகிறது. ஊட்டி பகுதிகளில் தரைப் பூண்டு விளைகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism