Published:Updated:

இனி வீட்டிலேயே செய்யலாம், ஈஸி அண்ட் டேஸ்டி புரொக்கோலி பரோட்டா! #Video

புரொக்கோலி
News
புரொக்கோலி ( Representation Image )

சூப்பர் டேஸ்ட் மற்றும் ஆற்றல் தரும் புரொக்கோலி பரோட்டா செய்வோமா?

சமீபகாலமாக, சூப்பர் ஃபுட் என்ற உணவு கலாசாரம் பரவலாகி வருகிறது. சூப்பர் ஃபுட் உணவு கலாசாரம் என்பது, அளவுக்கதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மூலமாகச் சமைக்கப்படும் உணவுகளுக்கான பொதுப்பெயர்!

சூப்பர் ஃபுட்ஸ்
சூப்பர் ஃபுட்ஸ்
Representation Image

வளரும் குழந்தைகள் முதல் முதியோர் வரை, ஊட்டச்சத்து தேவையுள்ளவர்கள் பலருக்கும், நன்மைகள் பல தரும் இந்த சூப்பர் ஃபுட்ஸ் கலாசாரத்தின் கீழ் செய்யப்படும் `புரொக்கோலி பரோட்டா ' ரெசிபியை நமக்காகச் செய்து காட்டுகிறார், சமையல் கலை நிபுணர் ஜானகி அஸாரியா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சமையல் கலை நிபுணர் ஜானகி அஸாரியா
சமையல் கலை நிபுணர் ஜானகி அஸாரியா

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தேவையான பொருள்கள் :

தயார் நிலையில் சப்பாத்தி மாவு (உப்பு, எண்ணெய், வெந்நீர் கொண்டு மாவு பிசையவும்) - தேவையான அளவு

துருவிய புரொக்கோலி - ஒரு கப்

துருவிய பனீர் அல்லது சீஸ் - அரை கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1

தேவையான பொருள்கள்
தேவையான பொருள்கள்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

சாட் மசாலா - ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செய்முறை:

புரொக்கோலி பரோட்டாவுக்கு, முதலில் ஃபில்லிங் செய்ய வேண்டும். அந்த ஃபில்லிங்கை, சப்பாத்தி மாவின் உள்ளே வைத்து, அதை பரோட்டாவாகத் தேய்த்தெடுத்து சமைக்க வேண்டியிருக்கும். எனவே, புரொக்கோலி ஃபில்லிங் செய்முறையை முதலில் பார்க்கலாம்.

ஃபில்லிங் செய்முறை - ஒரு டீஸ்பூண் எண்ணெய்விட்டு, கடாயைச் சூடுபடுத்திக் கொள்ளவும். கடாய் நன்கு சூடானவுடன், அதில் வெங்காயம், பச்சை மிளகாய், புரொக்கோலி போன்றவற்றை வரிசையாகச் சேர்க்கவும். அடுத்த சில நொடிகளில், கடாயில் கொத்தமல்லி, மிளகாய்த்தூள், சாட் மசாலா, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். இவை அனைத்தையும் சில நொடிகள் நன்கு கிளறிவிட்டு, உடன் பனீர் சேர்த்தால். ஃபில்லிங் ரெடி!

* புரொக்கோலி சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் கவனமாக இருக்கவும்.
* அடுப்பிலிருந்து இறக்கியபின், ஃபில்லிங்கை பாத்திரத்துக்கு மாற்றி, சில நிமிடங்களுக்கு நன்கு ஆறவைக்கவும்.
புரொக்கோலி
புரொக்கோலி
Representation Image

அடுத்தது, புரொக்கோலி பரோட்டாவுக்கான செய்முறையைப் பார்க்கலாம். ஏற்கெனவே தயார் நிலையிலுள்ள சப்பாத்தி மாவை, பெரிய பெரிய உருண்டைகளாகப் பிசைந்து கொள்ளவும். ஒவ்வோர் உருண்டையையும், (வீடியோவில் காட்டியுள்ளது போல), கைகளால் கப் வடிவத்தில் செய்து கொள்ளவும். இந்த கப்பின் உட்பகுதியில், தயார் நிலையிலுள்ள ஃபில்லிங்கை வைத்து மூடிக்கொள்ளவும்.

தொடர்ந்து, ஸ்டஃப் செய்த சப்பாத்தி மாவு உருண்டையை, கல்லில் தேய்த்தெடுத்து, தோசைக்கல்லைச் சூடாக்கி பெரிய தீயில் வைத்து சப்பாத்திகளை எண்ணெய் விட்டு வாட்டி எடுக்கவும். சுவையான புரொக்கோலி பரோட்டா ரெடி! ஊறுகாய் அல்லது தயிருடன் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு : ஹை ஃப்ளேமில் வைத்துச் சமைத்தால்தான் பரோட்டா சாஃப்டாக வரும்.

புரொக்கோலி பரோட்டா
புரொக்கோலி பரோட்டா

புரொக்கோலி ஏன் சூப்பர் ஃபுட்? - ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம்

புரொக்கோலியில், கே, சி, ஏ, பி 1, பி2, பி3, பி6 போன்ற பல வைட்டமின்கள் உள்ளன. மேலும் பீட்டா கரோட்டின், நார்ச்சத்துகள், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் போன்றவையும் நிறைந்துள்ளன. அந்த வகையில் புரொக்கோலிக்கு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறனும், எலும்புத்திசுக்களை வலுவடையச் செய்யும் திறனும் உள்ளது. ஆய்வு ஒன்றில், புரொக்கோலியிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் சல்பர் கலவைக்குப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால்தான், புரொக்கோலி சூப்பர் ஃபுட் எனக் குறிப்பிடப்படுகிறது!

சிறுநீரகப் பிரச்னை இருந்தால், புரொக்கோலிக்கு நோ சொல்லுங்க!
ஊட்டச்சத்து நிபுணர்கள்

குறிப்பு :

* புரொக்கோலியை எப்போதும் வேகவைத்துதான் சாப்பிட வேண்டும்!

* சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், குறிப்பாக டயாலிசிஸ் மேற்கொண்டவர்கள் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் புரொக்கோலியை எப்போதும் தவிர்க்கவும்.