Published:Updated:

திருச்சி ஊர்ப்பெருமை: 10 வகை பானிபூரி, 4 வகை பாவ் பாஜி... சொக்க வைக்கும் சேட் ஜி சாட் கடை!

சேட் ஜி சாட் கடை

’வாசம் புடிச்சிகிட்டே இருக்காத, எடுத்து வாயில போடு ராசா’ என மனசு உள்ளுக்குள்ளே வசைபாட ஆரம்பிக்க, சாப்பிட ஆரம்பித்தோம். உண்மையிலேயே வேற லெவல் டேஸ்ட்.

திருச்சி ஊர்ப்பெருமை: 10 வகை பானிபூரி, 4 வகை பாவ் பாஜி... சொக்க வைக்கும் சேட் ஜி சாட் கடை!

’வாசம் புடிச்சிகிட்டே இருக்காத, எடுத்து வாயில போடு ராசா’ என மனசு உள்ளுக்குள்ளே வசைபாட ஆரம்பிக்க, சாப்பிட ஆரம்பித்தோம். உண்மையிலேயே வேற லெவல் டேஸ்ட்.

Published:Updated:
சேட் ஜி சாட் கடை
’சாட் ஐட்டம்’ என்றாலே பொதுவாகப் பலருக்கும் பானிபூரி, மசால் பூரி, பாவ்பாஜியை தவிரப் பெரிதாக எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பூரிகளிலேயே பத்துக்கும் மேற்பட்ட வகைகள், பாவ் பாஜியில் பன்னீர் ஃபிரைட் பாவ் பாஜி என பல வெரைட்டியாகக் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறது ’சேட் ஜி சாட் கடை’.

திருச்சி மக்களுக்கு இந்தக் கடைதான் ஃபேவரைட் எனச் சொல்கிறார்கள். வெளியூர்வாசிகளும் இந்தக் கடையைப் பற்றிச் சொல்வதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது.

சேட் ஜி சாட் கடை
சேட் ஜி சாட் கடை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ளது சேட் ஜி சாட் கடை. ஸ்ரீரங்கம் கோயில் தரிசனத்துக்கு வரும் பலருக்கும் இந்தக் கடை மிகவும் பிடித்தமான ஒன்று. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் திருச்சியின் பெருமையான ஸ்ரீரங்கம் என்னும் அழகிய தீவின் பெருமைகளில் ஒன்று நாவிற்குச் சுவையான, மனதுக்கு இனிமையான இந்த சாட் ஐட்டம்கள்.

வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளர்கள்

இளசுகள், குழந்தைகள், வயதில் மூத்தோர் என அனைவரும் விரும்பிச் சாப்பிட, கதைகளைப் பேசிட, தங்களின் நேரத்தைப் பசுமையாக்கிக் கழித்திட பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது இந்த சேட் ஜி சாட் கடைதான் எனப் பலரும் கூற, நமக்கும் டெம்ப்ட் ஆகியது. ஒரு மாலை நேரம் போல் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் சேட் ஜி கடை முன் ஆஜரானோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாலை நேரம் என்பதால் இளைஞர்கள் பட்டாளம், தந்தையுடன் வந்திருந்த குழந்தைகள் என சேட் ஜியின் கடை நிரம்பியிருந்தது. கடையில் நுழையும்போதே உரிமையாளரின் உபசரிப்பு தொடங்க ஆரம்பிக்கிறது. 56 வயதிலும் உழைப்பதில் மட்டும் வெற்றியைப் பெற முடியும் என்பதை உணர்ந்தவராய் படபடவென மசாலாக்களை ரெடி செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார்.

சேட் ஜி சாட் கடை
சேட் ஜி சாட் கடை

சாட் ஐட்டம் என்றாலே, பொதுவாக பலருக்கும் பானிபூரி, மசால் பூரி, பாவ் பாஜியை தவிரப் பெரிதாக எதுவும் தெரிந்திருக்காத நிலையில் பூரிகளிலே பத்துக்கும் மேற்பட்ட வகை, பாவ் பாஜியில் பன்னீர் ஃபிரைட் பாவ் பாஜி, ஃபிரைட் பாவ் பாஜி, காளான் பாவ் பாஜி என பல வகைகளும், கட்லட் மசாலா, சமோசா மசாலா என அதில் பல வெரைட்டிகளும், கூடவே இவையெல்லாம் சாப்பிட்டு மனதை இலேசாக்க குளோப் ஜாமூனும், பாதாம் பாலும் எனப் பல வகைகளில் நம்மை சந்தோஷப்படுத்துகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'இங்கு மிகவும் டேஸ்டாக இருக்கும், கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க' எனச் சொல்லி அனுப்பிய பன்னீர் பிரை ஃபாவ் பாஜியையும், மிக்ஸ்ட் மசாலாவையும், கூடவே இவர்களின் பானிபூரி, தாகி பூரியையும் ஆர்டர் செய்தோம். வெண்ணை வாசத்தில் 3 நிமிடத்தில் பாவ் பாஜியை நல்ல சுடச்சுட நம் கண்முன்னே கொண்டு வந்தார்கள். ’வாசம் புடிச்சிகிட்டே இருக்காத, எடுத்து வாயில போடு ராசா’ என மனசு உள்ளுக்குள்ளே வசைபாட ஆரம்பிக்க, சாப்பிட ஆரம்பித்தோம். உண்மையிலேயே வேற லெவல் டேஸ்ட்.

சேட் ஜி சாட் கடை வாடிக்கையாளர்கள்
சேட் ஜி சாட் கடை வாடிக்கையாளர்கள்

நார்மல் பாவ் பாஜியின் சுவையே தனியாக இருக்கும், இது ஃபிரைட் பாவ்பாஜி கூடவே பன்னீரும் ஃபிரைட் செய்து கொடுக்க 5 நிமிடத்தில் பிளேட்டை காலி செய்தோம். தொடர்ந்து பானிபூரி, சமோசா மசாலா, மிக்ஸ்ட் மசாலா என ஆர்டர் செய்த அனைத்தும் வர ஒவ்வொன்றாய் சாப்பிட்டு முடித்தோம். சாப்பிட்டு முடிக்கும் போதே நம்முடைய ஃபேவரைட் ஸ்பாட்டில் இந்தக் கடை இடம் பிடித்தது. சாப்பிட்டு முடித்துவிட்டு பில் கொடுத்தால் விலையும் அவ்வளவு அதிகமாக இல்லாமல் ஆச்சரியப்படுத்தியது.

தொடர்ந்து கடையின் உரிமையாளர் முகேஷ்குமாரிடம் பேசினோம். ”எங்க அப்பா, அம்மா உத்திரபிரதேசத்துல உள்ள அலிகர் நகரத்தைச் சேர்ந்தவங்க. சின்ன வயசுலயே திருச்சிக்கு வந்துட்டாங்க. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே திருச்சிதான். இங்க வந்தவங்க ஸ்வீட் கடையை வச்சி நடத்திட்டு வந்தாங்க. கொஞ்ச வருசத்துல அப்பா பெங்களூருக்கு பிசினஸ் பண்ண போய்ட்டாங்க. எங்க அம்மா சமோசா தயாரிச்சு விற்பனை பண்ணிட்டு இருந்தாங்க. கூடவே திருச்சியில இருக்குற எல்லா தியேட்டருக்கும் சமோசா சப்ளை செஞ்சோம்.

சேட் ஜி சாட் கடை உரிமையாளர் முகேஷ்குமார்
சேட் ஜி சாட் கடை உரிமையாளர் முகேஷ்குமார்

சின்ன வயசுலேயே அவங்கக்கூட சேர்ந்து நானும் வேலை செய்ய ஆரம்பிச்சிட்டேன். அப்படியே தொடர்ந்து ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் தெருவுல 1988-ல ’அகர்வால் ஸ்வீட் கடை’ன்னு ஒண்ணு வச்சிருந்தோம். அதுல சைடுல ரொம்ப சின்னதா சாட் ஐட்டம் செஞ்சிட்டு இருந்தேன். அது மக்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சனால சாட் ஐட்டம்க்கு எனத் தனி கிடையா போடலாம்னு தள்ளுவண்டியில கடை ஆரம்பிச்சேன். அப்போ ஸ்ரீரங்கத்துல இருக்குற பலரும், கோயிலுக்கு வர பலரும் நம்ம கடையை தேடி வந்து சாப்பிட ஆரம்பிச்சாங்க.

விலையும் மக்களுக்கு ஏத்த மாதிரிதான் நிர்ணயம் பண்றோம். எவ்வளவு விலைவாசி ஏறினாலும் நம்மளோட விலையை நாம ஏத்துறது, இறக்குறதுனு எதுவுமே பண்றது இல்லை. தொடர்ந்து நம்மளோட உபசரிப்பிலும், என்ன கேக்குறாங்களோ அதுக்கு ஏத்த மாதிரிதான் மசாலா போட்டு ரெடி பண்ணி தருவோம். மக்களுக்கு இது ரொம்ப புடிச்சிடுச்சி.

நம்ம கேக்குற மாதிரி நமக்கு பிடிச்சத செஞ்சி தர்றாங்க, உபசரிப்பும் நல்லா இருக்குன்னு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்தாங்க. அதுக்கு அப்பறம் 2001ல தான் இங்க ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம்ல இருக்குற இந்தக் கடைய தொடங்குனோம். தொடர்ந்து திருச்சி மாநகரத்துல பல இடங்கள்ல சதவிகித அடிப்படையில் 9 கடைகள் இயங்கி வருகின்றன” என்கிறார்.

சேட் ஜி சாட் கடை
சேட் ஜி சாட் கடை

9 கடைகளிலும் சேர்ந்து தினமும் 1,000 பேர் வரை இவர்களின் சாட் உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். இவர்களின் கடையில் உள்ளூர் பிரபலங்கள் முதல் பல திரை பிரபலங்களும் சாப்பிட்டு உள்ளனர். எப்படி மக்கள் ஆதரவு தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்று கேட்டதற்கு, ”ஆரம்பித்த காலத்தில் இருந்து அதே தரம், அதே அளவுகளில் மசாலா சேர்ப்பது, எதையும் மாற்றாமல் வீட்டில் நம் குழந்தைகளுக்குக் கொடுப்பதைப் போன்றே செய்து கொடுப்பது, முக்கியமாக உபசரிப்பும்தான் மக்களை ஆதரவு கொடுக்க வைக்கிறது. என்னைக்கும் மக்களுக்குத் திருப்தி அளிக்கவே நினைக்கிறேன்" என நெகிழ்கிறார்.

"முக்கியமாகக் கடுமையான உழைப்பு இருக்கணும். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தள்ளுவண்டியில் நின்று உழைத்துக் கொண்டே இருந்ததால் ஒருகட்டத்தில் முதுகின் வலி அதிகமாகி கடையில் வேலை செய்வதற்குக் கூட முடியாமல் போய்விட்டது.

தற்போது என்னுடைய இரண்டு மகன்களில் ஒருவர் என்னுடன் கடையில் இருக்கிறார். ஒரு மகன் வெளிநாட்டிலும், மகள் பெங்களூரிலும் திருமணம் முடிந்து செட்டில் ஆகிவிட்டனர்" எனக் கூறுகிறார்.

மூன்றாவது தலைமுறையாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த கடையில், ஆரம்பத்தில் 2 மட்டுமே வேலை செய்துள்ளனர், தற்போது 9 கிளைகளிலும் சேர்த்து மொத்தம் 26 பேர் வரை வேலை செய்கின்றனர் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

சேட் ஜி சாட் கடை
சேட் ஜி சாட் கடை

கடையில் குழந்தைகளை அழைத்து வந்திருந்த குமாரிடம் பேசினோம். ”ஸ்ரீரங்கம்தான் என்னோட ஏரியா. பொதுவா நான் என் குழந்தைகளுக்கு அதிகமா வெளிய எந்த உணவு பொருளும் வாங்கி தர மாட்டேன், ஆனா இந்த சேட் ஜி கடை மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. இவங்களோட சுத்தமும், சாட் ஐட்டம் ரெடி பண்ற முறையும் பார்த்து பயம் இல்லாம சாப்பிட கொடுக்கலாம்.

சேட் ஜி சாட் கடை
சேட் ஜி சாட் கடை

டேஸ்டும் வேற லெவல்! நாம எதாவது எக்ஸ்ட்ரா கேக்குறோம்ன்னா கூட அதையும் சேர்த்தே ரெடி பண்ணி தருவாங்க. பொதுவா எங்காவது வெளிய போய் சாப்பிட்டா முழுசா திருப்தியா இருக்குமான்னு கேட்டா நெறைய நேரம் இல்லனுதான் பதில் வரும் ஆனா இங்க அப்படி இல்ல, எப்போது வந்தாலும் மன திருப்தியா, பர்ஸும் பெருசா பாதிக்கப்படாம இருக்கும்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

திருச்சிக்கு வருபவர்கள், முக்கியமாக ஸ்ரீரங்கம் வருபவர்கள் இந்தக் கடையை மிஸ் பண்ணிடாதீங்க!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism