உப்பு விளையுற பூமி, தூத்துக்குடி. கடல் அலை, இந்த மக்களுக்கு ராப்பகல் தாலாட்டு. கடல் மேல போர் வீரர்கள் மாதிரி வரிசையா நிக்கிற கப்பல்கள், இந்த மண்ணோட கம்பீரம். தூத்துக்குடியோட பெருமை இவை யெல்லாம் மட்டுமல்ல, சாப்பாட்டுக்கும் ரொம்ப பிரபலமான ஊரு இது. அதுல நாலு ஹைலைட் உணவுகள் இங்க..!

‘தங்க நிலா’ பொரிச்ச பரோட்டா

எல்லா ஊருலயும்தான் பரோட்டா கிடைக் குது. ஆனா, அதெல்லாம் தூத்துக்குடி பொரிச்ச பரோட்டாவுக்கு ஈடாகாதுங்குறது இதை சாப்பிட்டுப் பார்த்தவங்களுக்குத் தெரியும். பரோட்டா மாவப் பிசஞ்சு, தட்டி, சேர்த்து, உருட்டி, அதை வானத்துக்கும் பூமிக்குமா வீசுறதே ஒரு கலை. அதை அப்புடியே நிலா மாதிரி வட்டமா சுருட்டி, கடாயில சூடாகி யிருக்குற எண்ணெயில போட்டு, திருப்பி எடுக்கும்போது, அந்த வெள்ள நிலா தங்க நிலாவா மாறியிருக்கும். மொறுமொறுனு இருக்குற அந்த பரோட்டாவ எடுத்து, வாழை இலையில வெச்சு, குளம்போல சால்னாவ ஊத்திச் சாப்பிடும்போது... அடடா!

குழல்போல கருப்பட்டி மிட்டாய்

சின்னக் குழலா, வளையல் மாதிரி இருக்கும் இந்தக் கருப்பட்டி மிட்டாய். அதைக் கடையில அடுக்கி வெச்சிருக்கிறதைப் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும். வெளியில மொறுமொறுனும் உள்ளே மென்மையாவும் இருக்குற டூ இன் ஒன் பண்டம் இது. கருப்பட்டி பாகுல செய்யுற இந்த மிட்டாய எடுத்து ஒரு கடி கடிச்சா, அந்த ருசியே தனிதான்.

குச்சி குச்சியா இருக்கும் நெய் மிட்டாய்

ஒல்லியா, நீளமா இருக்கும் நெய் மிட்டாயை தூத்துக்குடி குச்சி மிட்டாய்னும் சொல்லுவாங்க. நெய், முந்திரி, வெல்லம் சேர்த்துக் கிண்டக் கிண்ட வரும் பாருங்க ஒரு மணம்... அப்புடியே ஆள மயக்கிடும்.

குழந்தைங்களுக்குப் பிடிச்ச இந்த மிட்டாய், குழந்தைங்க பேரைச் சொல்லி பெரியவங் களையும் சாப்பிட வைக்கும்.

போர்த்துகீசிய மக்ரூன்

தூத்துக்குடி ஸ்பெஷல் மக்ரூன் பத்தி தெரியாத, அதைச் சாப்பிடாத ஆளே இல்லேன்னு சொல்ற அளவுக்கு இந்தியா முழுக்க இது ஃபேமஸ். முந்திரியும் சர்க்கரை யும், முட்டையும் சேர்த்துச் செய்யுற இனிப்பு. வாயில போட்டதும் நாக்குல கரையுற அந்தப் பதம்தான் இதோட ஸ்பெஷல். முட்டையோட மஞ்சள் கருவை பிரிச்சிட்டு வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து, நுரைக்க நுரைக்க அதை அடிக்கிறதுலதான் இருக்கு மக்ரூனோட மென்மை.

இது போர்த்துகீசியர் களோட விருப்பமான தின் பண்டங்கள்ல ஒண்ணு. ஒரு காலத்துல தூத்துக்குடிக்கு வந்தவங்க, நம்ம மக்களோட விருப்பமான தின்பண்ட மாவும் இந்த மக்ரூனை மாத்திட்டாங்க. அந்த ரெசிப்பியை அருணாசலம் என்பவர் தூத்துக்குடியில அறிமுகப்படுத்துனாரு. ருசி யான மக்ரூனின் வரலாறும் சுவாரஸ்யம்ல?!