Published:Updated:

டிப்ஸ்

ரவா லட்டு
பிரீமியம் ஸ்டோரி
ரவா லட்டு

பால் காய்ச்சுவதற்கு முன் பாத்திரத்தில் முதலில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதித்தப் பின்பு பால் சேர்த்துக் காய்ச்சினால்....

டிப்ஸ்

பால் காய்ச்சுவதற்கு முன் பாத்திரத்தில் முதலில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதித்தப் பின்பு பால் சேர்த்துக் காய்ச்சினால்....

Published:Updated:
ரவா லட்டு
பிரீமியம் ஸ்டோரி
ரவா லட்டு

ரவா லட்டு செய்ய ரவையை வறுத்த பின் மிக்ஸியில் பொடி செய்யும்போது இரண்டு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் கலந்தால் ருசியாக இருக்கும்.

கட்லெட் செய்யும்போது உருளைக்கிழங்கு மசாலா கலவையை சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு் செய்தால் கட்லெட் மொறு மொறுப்பாக இருக்கும்.

பால் காய்ச்சுவதற்கு முன் பாத்திரத்தில் முதலில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதித்தப் பின்பு பால் சேர்த்துக் காய்ச்சினால் அடி பிடிக்காமல் இருக்கும்.

பொரிப்பதற்கு முன் சீவிய உருளைக்கிழங்கு ஸ்லைஸ்களை நன்கு கழுவி, மூழ்கும் அளவு தண்ணீரில் சுமார் ஒரு மணி நேரம் போட்டு வைக்கவும். பின் பொரித்து எடுத்தால் மொறு மொறுப்பான, க்ரிஸ்ப்பியான சிப்ஸ் ரெடி.

தீயல் குழம்பு செய்யும்போது தேங்காய்த்துருவலை மிக்ஸியில் லேசாகத் தண்ணீர் விடாமல் அரைத்து பின் ஃபிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து பின் வறுத்தால் ஈரம் இல்லாமல் கருகாமல் வறுப்பதற்கு நன்றாக இருக்கும்.

கேரளா சிவப்பு மட்டா அரிசி அல்லது சாப்பாட்டு புழுங்கல் அரிசியை இரண்டு முறை கழுவி இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து சில நிமிடங்கள் காய வைத்து மிக்ஸியில் கொர கொரப்பாகப் பொடிக்கவும். பின் தேங்காய்த்துருவல் சேர்த்து அவித்தால் சுவையான புட்டு ரெடி.

சிவப்பு முட்டைகோஸ் சமைக்கும்போது நீல நிறமாக மாறாமல் இருக்க, வேகவைக்கும் தண்ணீரில் அரை டீஸ்பூன் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், தக்காளி, பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயம், தனியா(மல்லி)தூள் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் வைத்து எடுத்து அரைத்தால் சுவையான தக்காளி தொக்கு தயார்.