Published:Updated:

டிப்ஸ்

ரிப்பன் பக்கோடா செய்யும்போது மாவுடன் சிறிதளவு வெங்காய விழுது சேர்த்துப் பிசைந்து தயாரித்தால் ருசி கூடும்.

பிரீமியம் ஸ்டோரி

புளித்துவிட்ட இட்லி மாவில் சிறிதளவு புதினா, ஒரு துண்டு இஞ்சி, பத்து மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைத்து மாவுடன் கலந்து மினி இட்லி வார்த்து எடுத்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான ஃப்ரைடு இட்லிகள் கிடைக்கும்.

பருப்பு வடை மொறுமொறுப்பாக வர, மூன்று பங்கு கடலைப்பருப்புடன் ஒரு பங்கு துவரம்பருப்பு சேர்த்து ஊறவைத்து அத்துடன் நான்கைந்து மிளகாய் வற்றல், சிறிதளவு மிளகு, வழக்கமாகச் சேர்க்கப்படும் வெங்காயம் சேர்த்து அரைத்து வடை தட்டி பொரித்தால் பருப்பு வடை மொறுமொறுப்பாக வரும்.

பஜ்ஜி செய்யும்போது பஜ்ஜி மாவுடன் சிறிதளவு தோசை மாவு கலந்து தயாரித்தால் கடைகளில் விற்கப்படும் பஜ்ஜிபோல உப்பலாக வரும்.

பாரம்பர்ய கல்தோசை செய்ய விரும்புபவர்கள், மூன்று பங்கு அரிசியுடன், ஒரு பங்கு உளுந்து, ஒரு கைப்பிடி அவலுடன் 3 - 4 வெண்டைக்காய்களை நறுக்கி சேர்த்து அரைத்தால், கல்தோசை மொறுமொறுப்பாகவும் பாரம்பர்ய சுவையாகவும் இருக்கும்.

பொரியல் எதுவாக இருந்தாலும் தேங்காய்த் துருவலுடன் சிறிதளவு மிளகுத்தூள், இஞ்சி - பூண்டு விழுது, கறிவேப்பிலை பொடி சேர்த்துத் தாளித்து இறக்கினால் சுவை கூடும்.

ரிப்பன் பக்கோடா செய்யும்போது மாவுடன் சிறிதளவு வெங்காய விழுது சேர்த்துப் பிசைந்து தயாரித்தால் ருசி கூடும். வெங்காயத்துடன் சிறிதளவு பூண்டு விழுதும் சேர்க்கலாம்.

தொகுப்பு: நங்கநல்லூர் பத்மா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு