Published:Updated:

ஏழு ஸ்வரங்கள்... அறுசுவை.... இது அம்மா - மகனின் அசத்தல் சமையல் கச்சேரி

சமையல் கச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
சமையல் கச்சேரி

பாரம்பர்ய சமையல்

ஏழு ஸ்வரங்கள்... அறுசுவை.... இது அம்மா - மகனின் அசத்தல் சமையல் கச்சேரி

பாரம்பர்ய சமையல்

Published:Updated:
சமையல் கச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
சமையல் கச்சேரி

கி.ச.திலீபன்

தென்னிந்திய பாரம்பர்ய உணவுகளை அவற்றின் செய்முறைகளோடு ஆவணப்படுத்தும் நோக்கோடு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் உணவு ஆர்வலர் ராகேஷ் ரகுநாதன். அவரின் அம்மா ரமா ரகுநாதனோடு இணைந்து ‘அம்மாவும் நானும்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்டிருக்கும் சமையல் வீடியோக்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. கர்னாடக இசைக்கலைஞருமான ராகேஷ் பாடல்களோடும் சிறு சிறு சேட்டைகளோடும் பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் விதத்தில் சமையல் வீடியோக்களைக் கொடுக்கிறார்.

“அம்மா, பாட்டி சமையல் மாதிரி தன் சமையல் இல்லைன்னு பொதுவா எல்லா வீட்டுலயும் சொல்வாங்க. ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித்துவமான உணவுகள் இருக்கு. தென்னிந்தியா முழுவதும் எடுத்துக்கிட்டா ஒவ்வொரு நிலத்துக்கும், சமூகத்துக்கும் ஏற்றாற்போல சமையல் முறைகளிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கு. ஆயிரக்கணக்கான ரெசிப்பிகள் இருக்கு. ஆனா, அதுல பலவும் வாய்வழியாத்தான் இருக்கே தவிர, ஆவணமா இல்லை. சமையல் பொருள்களில் அவங்க அளவுக்காகப் பயன்படுத்துற வார்த்தைகள்கூட ஸ்டாண்டர்டான அளவுகள் கிடையாது. மூக்குத்தியளவு, கைப்பிடியளவுன்னுதான் சொல்வாங்க. அவையெல்லாம் முறையான அளவுகளில் சரியான முறையில் பதிவு செய்யணும்ங்கிற நோக்கத்தோட வெளிப்பாடுதான் இந்த வீடியோக்கள்” என்று தொடங்குகிறார் ராகேஷ்.

 ராகேஷ், ரமா ரகுநாதன்
ராகேஷ், ரமா ரகுநாதன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்காவில் எம்.பி.ஏ படிக்கையில், தானே சமைத்துச் சாப்பிட நேர்ந்தபோதுதான் தன் அம்மா, பாட்டி அளவுக்குத் தன்னால் சமைக்க முடியாததை உணர்ந்திருக்கிறார். சமையலில் பலரும் பல நுணுக்கங்களைக் கையாள்வர். அவையெல்லாம் அவர்களோடு அழிந்துவிடக் கூடாது என்ற எண்ணம் அப்போது ராகேஷுக்குள் எழுந்திருக்கிறது. இந்தியா திரும்பியதும், நியூஸ் 7 தமிழ் சேனலில் ‘சுற்றலாம் சுவைக்கலாம்’ என்ற நிகழ்ச்சியின் மூலமும், ஜீ தொலைக்காட்சியில் ‘தக்‌ஷின் டைரிஸ்’ நிகழ்ச்சி மூலமும் தென்னிந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதி மக்களின் பாரம்பர்ய சமையல் முறைகளைப் பதிவு செய்திருக்கிறார்.

“சுற்றலாம் சுவைக்கலாம் நிகழ்ச்சிக்காகத் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங் களுக்குப் பயணம் செஞ்சு, அந்தந்தப் பகுதியோட சிறப்பு உணவுகளை ஆவணப்படுத்தியிருக்கேன். மீன்குழம்பை எடுத்துக்கிட்டோம்னா ஒவ்வோர் ஊருக்கும் ஏத்த மாதிரி அதோட ரெசிப்பி மாறும். உணவு செய்முறை மாதிரியே அந்த உணவு உருவான கதைகளும் சுவாரஸ்யமா இருக்கும். சாத்தூர் காராச்சேவு, கோவில்பட்டி கடலை மிட்டாய், திருநெல்வேலி சொதின்னு பல உணவுகளை அந்நிகழ்ச்சி மூலமாகப் பதிவு செய்ய முடிஞ்சுது” என்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அம்மாவுடன் இணைந்து சமையல் வீடியோக்கள் வெளியிடும் எண்ணம் உருவானது எப்படி?

“அம்மா நல்லா சமைப்பாங்க. அதே மாதிரி நல்லா பாடவும் செய்வாங்க. அவங்களுடைய இத்தனை வருட சமையல் அனுபவத்தைப் பயன்படுத்திக்கணும்கிற நோக்கத்துலதான் அம்மாவோடு சேர்ந்து சமைக்க ஆரம்பிச்சேன். நாங்க பண்ற ரெசிப்பிகள் எதுவும் புதுசு கிடையாது. எல்லோரும் அவங்கவங்க சின்ன வயசுல நிச்சயம் சாப்பிட்டிருக்கக்கூடிய ரெசிப்பிகள்தான். ஆனா, இன்றைய தலைமுறைக்கு அவை எந்தளவுக்கு மாறி யிருக்குன்னு தெரியலை. அதுக்காகத்தான் நாங்க இந்த வீடியோக்கள் பண்றோம்.

ஸ்க்ரிப்டா எதுவும் எழுதிட்டு நாங்க ஷூட் பண்றது கிடையாது. நான் கிச்சன் மேடையில் உட்கார்ந்துப்பேன். என்ன சமைக்கப் போறோம், அதுக்கு என்னென்ன பொருள்கள் தேவை, செய்முறை என்னன்னு அம்மாதான் விளக்குவாங்க. நான் அவங்ககிட்ட கேள்விகள் கேட்பேன். அம்மா சில நேரங்கள்ல ஆர்டர் மாத்திச் சொல்வாங்க அப்பல்லாம் நான் அதைச் சுட்டிக்காட்டி நக்கலடிப்பேன். சரியா சொல்ல மாட்டியான்னு அதட்டுவேன். அதெல்லாம் ரொம்ப கலகலப்பாவும், எதார்த்தமாவும் இருக்கும். நாங்க பண்ற ரெசிப்பிகள் பலருக்கு அவங்களோட பால்ய காலத்தை நினைவுபடுத்தினதா சொன்னாங்க. எங்க கலாட்டாக்களும் ரசிக்குற மாதிரி இருக்கிறதா நிறைய பேர் சொல்லியிருக்காங்க” என்கிறார் ராகேஷ்.

“மயிலாடுதுறைதான் என் சொந்த ஊர். சமையல் விஷயத்துல என் அம்மா, பாட்டி எல்லோரும் ரொம்ப ஸ்ட்ரிக்ட். பள்ளிக் காலத்திலிருந்தே சமையல் எனக்கு பழகிப்போனது. இயற்கையான முறையில் விளைஞ்ச காய்கறிகளைக் கொண்டுதான் சமைப் போம். என்னை மாதிரியே ராகேஷுக்கும் சமையல்ல ஈடுபாடு அதிகம். திடீர்னு ஒரு நாள் இது மாதிரி சமையல் வீடியோ பண்ணணும்னு சொன்னான். முன்னாடியே சொல்லியிருந்தா நான் வேணான்னு சொல்லிடுவேனோனு அவனுக்கு பயம். `எப்பவும் போல இயல்பா பேசுமா'ன்னு மட்டும் சொன்னான். அப்படித்தான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வீடியோ பண்ண ஆரம்பிச்சோம்” என்கிறார் ராகேஷின் அம்மா ரமா ரகுநாதன்.

“வீடியோக்களைப் பொறுத்தவரை எதையும் முன்கூட்டியே யோசிக்கிறதில்லை. தொடக்கம் எப்படி இருக்கலாம்னு வேணா பேசிக்குவோம். பறங்கிக்கொட்டைப் பால் கூட்டு எப்படிச் செய்றதுன்னு ஒரு வீடியோ பண்ணோம். எங்க வீட்டு மாடித்தோட்டத்துல பறங்கிக் கொடி இருக்கு. அதுல சில பூக்களும் பூத்திருந்துச்சு. அங்க இருந்து தொடங்கலாம்னு சொல்லி ‘வாசலிலே பூசணிப்பூ வெச்சுப்புட்டா வெச்சுப்புட்டா’ பாடலை நான் பாடித் தொடங்கினேன். அதுக்கப்புறம் சமையல் செய்முறைகள் எல்லாம் அதோட இயல்புல நாங்க பேசிக்கிறதுதான். நான் சில தடவை செய்முறை, தேவையான பொருள்கள்லாம் சொல்லும்போது தப்பா சொல்லிடுவேன். ராகேஷ் அதுக்காகத் திட்டுவான். இந்த மாதிரி எதார்த்தமா பண்றதுதான் நல்லாருக்குன்னு சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்கிறார் ரமா.

“சமையல் என்பது பாலினம் தாண்டிய கலை!”

இது பாட்டி - பேரனின் பாரம்பர்ய சமையல்

மையல் யூடியூப்களில் சமீபகாலமாக கவனம் ஈர்த்து வைரலாகிக் கொண்டிருக்கிறது `சாந்தா பாட்டி சமையல்’. இதில் பாட்டியொருவர் பாரம்பர்யரெசிப்பிகளை சொல்லிக்கொடுக்க, இளைஞர் ஒருவர் அதைக்கேட்டுச் சமைக்கிறார். அந்த இளைஞர், `சூப்பர் சிங்கர்’ ஷ்ரவண்.

‘`இந்தக் காலத்துக் குழந்தைகள் படிப்பு, வேலைன்னு பரபரன்னு ஓடிட்டு இருக்கிறதால சமைக்கிறதுல ஆர்வம் காட்டறதில்ல. ஒரு சிலருக்கு ஆர்வமிருந்தாலும் பாரம்பர்ய ரெசிப்பிகள் பக்கம் பெரும்பாலும் வர்றதில்ல. ஷ்ரவணுக்கு பாரம்பர்ய சமையல்ல ஆர்வம் இருக்கிறது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. எங்க வீடியோக்களில் நான் மிளகு இவ்வளவு போடு, சீரகம் இவ்வளவு போடுன்னு பொருள்களை மட்டும் சொல்வேன். ஷ்ரவண்தான் ரெசிப்பியை செஞ்சு முடிப்பான். அவன் ரசம் வெச்சா வீடே மணக்கும்’’

 ஷ்ரவண்,  சாந்தா ராகவன்
ஷ்ரவண், சாந்தா ராகவன்

- பேரனைப் புகழ்ந்தபடி பேசுகிறார் பாட்டி சாந்தா ராகவன்.

``கச்சேரிகள் பண்றது, சி.ஏ ஃபைனல் இயருக்கு படிக்கிறது, கூடவே யூடியூப் வேலைகள்னு பிஸியா இருக்கான். எனக்குத் தெரிஞ்ச பாரம்பர்ய ரெசிப்பிகள் என்னோடவே மறைஞ்சுடாம அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் போய்ச் சேர்ந்திடும்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு’’ என்று பெருமிதப்படுகிறார். பாட்டி நிறுத்த, பேரன் ஷ்ரவண் பேச ஆரம்பித்தார்.

‘`எங்கக் குடும்பத்துல எல்லாருமே டேஸ்ட்டியா சமைப்பாங்க. பாட்டியோட கைமணம் சூப்பரா இருக்கும். ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, கால் டீஸ்பூன் மஞ்சள் பொடின்னு இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி அளவுகளோட சமையல் சொல்லித் தர்றதுல அம்மா எக்ஸ்பர்ட். எனக்கும் இயல்பிலேயே சமைக்க வந்திடுச்சு. பாட்டியோட பாரம்பர்ய சமையல் குறிப்புகளை டாகுமென்ட்டேஷன் செய்யணும்னு ஆசைப்பட்டேன். அவங்களோட பேர்லேயே யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். இந்த ஒன்றரை வருஷத்துல கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செஞ்சிருக்காங்க'' என்கிற ஷ்ரவணுக்கு பாட்டி வைக்கிற சாம்பார்தான் ஃபேவரைட்டாம்.

‘‘சமையல் பெண்களுக்கு மட்டுமேயான விஷயம் கிடையாது. பாடுவதுபோல அதுவும் பாலினம் தாண்டிய கலை’’

- சூப்பர் மெசேஜுடன் முடிக்கிறார் சூப்பர் சிங்கர்.