ஹெல்த்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பாரம்பர்ய மைசூர் பாக்

மைசூர் பாக்
பிரீமியம் ஸ்டோரி
News
மைசூர் பாக்

பார்வதி கோவிந்தராஜ்

30 வகை கடலைப்பருப்பு ரெசிப்பிகளை இணைப்பிதழில் காண்க!

அருமையான சுவை இது!

தேவை: கடலை மாவு - ஒரு கப் சர்க்கரை - 3 கப் நெய் - 3 கப் சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்த்து, அது மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி கடலை மாவைத் தூவிக்கொண்டே கிளற வேண்டும். மற்றோர் அடுப்பில் குறைவான தீயில் நெய்யை இளக வைத்து இடையிடையே ஊற்றிக் கைவிடாமல் கிளறவும். நெய் வெளியேறி, பொங்கி வரும்போது சமையல் சோடா சேர்த்து நெய் சேர்த்துக் கிளறவும். நன்கு கிளறிய பின் நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, தட்டை அசைத்தால் மைசூர் பாகு தாம்பாளம் முழுவதும் பரவிவிடும். கரண்டியால் மேலே லேசாகத் தேய்த்து துண்டு போடவும்.

பாரம்பர்ய மைசூர் பாக்

சிறப்பு: சுவை மட்டுமல்ல, சத்துகளை அளிப்பதிலும் கடலைப்பருப்பு சிறந்து விளங்குகிறது. புரதச்சத்து அதிகம் கொண்டது. கடலைப்பருப்பைக்கொண்டு `பாரம்பர்ய மைசூர் பாக்’ மட்டுமல்லாமல் புடிங், கூழ், அல்வா, புட்டு பாயசம், டோக்ளா, பருப்புக்கூட்டு எனப் பல்வேறு ருசிகரமான 30 வகை ரெசிப்பிகளை இந்த இதழ் 32 பக்க இணைப்பில் வழங்குகிறார், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சமையற்கலைஞர் பார்வதி கோவிந்தராஜ்.