Published:Updated:

திருச்சி ஊர்ப் பெருமை: "எசன்ஸ் இல்லை, நன்னாரி வேர்தான்!"- 81 ஆண்டுகளாக இயங்கும் பிரம்மானந்தம் சர்பத்

திருச்சி ஊர்ப் பெருமை | பிரம்மானந்தம் சர்பத்

இந்தக் குளிர்பானங்கள் காலத்தில் சர்பத்திற்கும் இந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை திருச்சியின் பிரம்மானந்தம் சர்பத் கடைக்குச் சென்றால் நாம் தெரிந்து கொள்ளலாம்.

திருச்சி ஊர்ப் பெருமை: "எசன்ஸ் இல்லை, நன்னாரி வேர்தான்!"- 81 ஆண்டுகளாக இயங்கும் பிரம்மானந்தம் சர்பத்

இந்தக் குளிர்பானங்கள் காலத்தில் சர்பத்திற்கும் இந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை திருச்சியின் பிரம்மானந்தம் சர்பத் கடைக்குச் சென்றால் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Published:Updated:
திருச்சி ஊர்ப் பெருமை | பிரம்மானந்தம் சர்பத்

திருச்சிக்கும், பிரம்மானந்தம் சர்பத் கடைக்கும் இரண்டு தலைமுறைகளைத் தாண்டி 81 ஆண்டுக்கால பந்தம் இருக்கிறது. திருச்சி, பாலக்கரையில் உள்ள 'பிரம்மானந்தம் சர்பத் கடை' பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. முக்கியமாகத் திருச்சியின் 90-ஸ் கிட்ஸ்களுக்கு இந்தக் கடைதான் பேவரைட் எனச் சொல்கிறார்கள் திருச்சி மக்கள். அதுமட்டுமல்லாமல், வெளியூரில் வாழும் பலரும் இந்தக் கடையைப் பற்றிச் சொல்வதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது.

சர்பத் கடை
சர்பத் கடை

தினமும் காலை 6 மணிக்கு ஆரம்பிக்கும் பிரம்மானந்தம் சர்பத் கடையில் இரவு 10 மணிவரை கூட்டம் அலை மோதுகிறது. பலவித குளிர்பானங்கள் கிடைக்கும் இந்த நவநாகரீக உலகத்தில், சர்பத்தானே என அலட்சியமாகப் பார்க்கும் நிலையில், சுவை மிகுந்த ஆரோக்கியமான இந்தப் பானத்திற்கும் இந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை திருச்சியின் பிரம்மானந்தம் சர்பத் கடைக்குச் சென்றால் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தினமும் 500 பேர் வரை இந்தக் கடைக்குச் சென்று சர்பத் குடிக்கின்றனர் என்னும் போதே நமக்கு அது புரியும். நாம் சென்ற நேரத்திலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது, கலகலவென பேசி, சிரித்துக் கொண்டும், பல கதைகளைப் பேசி மகிழ்வதற்கும் ஏற்ற ஸ்பாட்டாக இருப்பதால் மக்கள் தேடி வருகின்றனர். சர்பத்துக்காக மட்டுமல்லாமல், திருச்சியின் மையப்பகுதியான பாலக்கரையில் கடை அமைந்துள்ளதால், மக்களின், குறிப்பாக இளைஞர்களின் சந்திக்கும் இடமாகவும் மாறியிருக்கிறது. ஒரு மாலை வேளையில் நாமும் ஆஜரானோம்.

சர்பத் கடை
சர்பத் கடை

கடையில் கூடியிருந்தவர் சர்பத்தின் சுவையை விரும்பிப் பருகுவதை கண்முன்னே கண்டு நாமும் அனுபவிப்போம் என்று இரண்டு நன்னாரி சர்பத்களை வாங்கிப் பருக ஆரம்பித்தோம். சுவையும், மணமும் நம்மைப் போட்டிப் போட்டு கிறங்கடிக்க உண்மையிலேயே நன்னாரியின் குளிர்ச்சி நம்மைப் பரவசப்படுத்தியது.

சர்பத் கடை
சர்பத் கடை

முதல் சிப்பிலேயே சர்பத்தின் சுவையை உணர முடிந்தது. சில நேரங்களில் சர்பத் குடிக்கும்போது, ஆரம்பத்தில் ஒரு டேஸ்டாகவும், டம்பளரின் கடைசியில் மிகுந்த இனிப்புடனும் சரியாகக் கலக்காமல் ஒரு மோசமான அனுபவத்தை ஏற்படுத்தும். ஆனால், இங்கு ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சுவை நம்மைத் திகட்ட வைக்காமலிருந்தது ஆச்சரியமாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு கடையின் உரிமையாளர் முகமது ஹனிபாவுடன் பேசினோம், "1940ம் வருசத்துல என்னோட தகப்பனாரால் ஆரம்பிக்கப்பட்டது இந்த சர்பத் கடை. 1952-க்குப் பிறகு நான் நிர்வகிக்க ஆரம்பிச்சேன். அப்போதிலிருந்து இப்போதுவரை சர்பத்துக்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தினமும் 500 பேர் வரை சர்பத் குடிக்க நம்ம கடைக்கு வந்துடுவாங்க.

கடையின் உரிமையாளர் முகமது ஹனிபா
கடையின் உரிமையாளர் முகமது ஹனிபா

காலையில 6 மணிக்கு ஆரம்பிச்சா இரவு 10 மணிவரை கடை இயங்கும். நம்ம கடையில் தயாரிக்கும் சர்பத்தில் எந்த விதமான ரசாயனமும் கலப்பதில்லை. நம்ம வீட்டிற்குத் தயாரித்தால், எவ்வளவு சுத்தமாக ஆரோக்கியமாகத் தயாரிக்க முடியுமோ அதே போலவேதான் மக்களுக்கும் தயாரிக்கிறோம். அதுதான் மக்களும் நம் கடையைத் தேடி வருவதற்கான காரணம்.

நன்னாரி சர்பத்துக்கு எசன்ஸ் ஏதும் சேர்க்காமல் ஒரிஜினல் நன்னாரி வேரைத்தான் பயன்படுத்துகிறோம். இதே போலத்தான் ஒவ்வொரு பிளேவருக்கும், எல்லாமே இயற்கையாகத்தான் செய்கிறோம். அப்போதிலிருந்து இப்போதுவரை தொடர்ந்து செய்துட்டு வர்றோம். விலையும் குறைவாகவே கொடுக்கிறோம். நமக்கு லாபம் குறைவாகக் கிடைத்தாலும் மக்களின் ஆதரவு இருப்பதால்தான் தொடர்ந்து 81 வருடங்களுக்கு மேலாக எங்களால் தொடர்ந்து கடையை நடத்த முடிகிறது" எனச் சிரிக்கிறார்.

சர்பத் கடை
சர்பத் கடை

தொடர்ந்து கடையின் பெயர்க் காரணம் கேட்க, "மக்கள் நம்ம கடையைத் தேடி வந்து சர்பத் குடிக்கையில் பெரும் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என நினைத்தேன். அதனால், சர்பத்தின் சுவையுடன் கூடவே கடையின் பெயரையும் ஆனந்தமாக வைத்திருக்க வேண்டும் என நினைத்து 'பிரம்மானந்தம் சர்பத் கடை' என வைத்துவிட்டேன்" எனச் சொல்லி சிரிக்கிறார்.

"சர்பத்தின் சுவையக்காகவே பல ஊர்களிலிருந்து இங்கு வந்து சர்பத் பருகிச் செல்கின்றனர். மற்ற ஊர்களிலிருந்து வந்து சர்பத்தின் செய்முறையும் கேட்டுச் சென்று செய்து பார்க்கின்றனர். ஆனாலும் நம்முடைய கடையைப் போலச் சுவையைக் கொண்டு வர முடிவதில்லை.

வாடிக்கையாளர்
வாடிக்கையாளர்

பல அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் பிரம்மானந்தா சர்பத் கடைக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர். தற்போதைய தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு எங்க கடையோட ரெகுலர் கஷ்டமர். கடைக்கு நேரிடையாகவே வந்து சர்பத் சாப்பிட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த வாரம் கூட இங்கு வந்து அமர்ந்து சர்பத் பருகினார்" எனச் சொல்லி ஆனந்தம் அடைகிறார் முகமது ஹனிபா.

கூட்டமாக சர்பத் குடித்துக் கொண்டிருந்த கார்த்திகேயனிடம் பேசினோம், "எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து இங்க சர்பத் குடிக்கிறேன். எங்க அப்பாதான் இங்க கூட்டிட்டு வந்து பழக்குனாரு. அப்போல்லாம் இப்போ இருக்குற குழந்தைங்க போல எல்லாமே ஈஸியா கூல் டிரிங்க்ஸ் வாங்கிட முடியாதுல... அப்போல்லாம் எங்களுக்கு இருக்குற சாய்ஸ் பிரம்மானந்தம் சர்பத் கடைதான். அப்போ இருந்து எங்களுக்கு இது ரொம்ப பேவரைட் ஆகிடுச்சு.

வாடிக்கையாளர்
வாடிக்கையாளர்

பிரெண்ட்ஸ் கூட வந்து இங்க இருக்குற சர்பத்தை வாங்கிட்டு பேசி சிரிச்சிகிட்டு நேரம் போறதே தெரியாம பேசிட்டு இருப்போம். அதுவும் இவங்க கடை சர்பத் வேற லெவல்ல இருக்கும். எவ்ளோ ஊர் சுத்துனாலும், எங்க போனாலும் இது மாதிரி ஒரு சர்பத் கிடைக்குறது ரொம்ப கஷ்டம்" எனச் சிலாகித்தார்.

சர்பத் கடை
சர்பத் கடை
ஆரம்பத்தில் 2 பணியாளர்களைக் கொண்டு ஆரம்பித்த கடையில், தற்போது 10 பேர் வரை பணியாற்றுகிறார்கள். திருச்சிக்கு வரும் நண்பர்கள் ஒருமுறை இங்கே சர்பத் குடித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்களேன்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism