Published:Updated:

திருச்சி ஊர்ப்பெருமை: "செயற்கையா எதுவும் கலக்கறதில்லை. விலை ஏத்தவும் மனசில்லை!"- ஜில் ஐஸ்கிரீம் கடை!

மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை

மைக்கெல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடையில் சாப்பிடாத பிரபலங்களே இல்லை. குறிப்பாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், மற்றும் விமல் ஆகியோருக்கு இந்தக் கடைதான் பேவரைட்!

திருச்சி ஊர்ப்பெருமை: "செயற்கையா எதுவும் கலக்கறதில்லை. விலை ஏத்தவும் மனசில்லை!"- ஜில் ஐஸ்கிரீம் கடை!

மைக்கெல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடையில் சாப்பிடாத பிரபலங்களே இல்லை. குறிப்பாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், மற்றும் விமல் ஆகியோருக்கு இந்தக் கடைதான் பேவரைட்!

Published:Updated:
மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை
திருச்சியில் 80 ஆண்டுக்கும் மேலாக தனக்கென தனி அடையாளத்தைப் பிடித்திருக்கும் ஐஸ்கிரீம் கடை ஒன்று உண்டு. எல்லா வயதினருக்கும் ஏற்றபடி ட்ரீட் கொடுக்கவும், அரட்டை அடிக்கவும், கூடவே வயிற்றையும், மனதையும் குளுகுளுவென வைத்திருக்கவும் திருச்சி மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே இடம் மைக்கெல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடைதான்.
மைக்கெல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை
மைக்கெல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை

திருச்சியில் இருப்பவர்கள் மட்டுமல்ல பல மாவட்டங்களிலிருந்து வருபவர்கள், வெளிமாநிலத்தினர், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் திருச்சியில் தவறாமல் செல்ல நினைக்கும் இடங்களில் மலைக்கோட்டை ஒன்று என்றால், மெயின்கார்டு கேட்டுக்கு எதிரில் உள்ள மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடையும் ஒன்று.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுத்தமான கறவைப் பாலில், எந்தச் செயற்கை ரசாயனங்களும் இல்லாத வகையில் குழந்தைகளுக்குத் தரும் வகையில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீமுக்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கூடவே இந்த ஐஸ்கிரீமின் விலையும் ரசிகர்களைத் தன் பக்கம் இழுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆம், குறைந்தபட்சம் 10 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 15 ரூபாய்க்குள்ளாகவே முடிந்துவிடுகிறது ஐஸ்கிரீமின் விலை.

மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை
மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை

வாயில் கரையும் ஐஸ்கிரீமின் சுவையை ருசித்துப் பார்க்க வேண்டும் என நினைத்து நேராக மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடைக்கு வண்டியை விட்டோம். மாலை 5 மணி அளவில் திருச்சி மெயின்கார்டு கேட்டில் எதிரிலுள்ள கடையில் ஆஜரானோம்.

தலைமுறைகளை கடந்து...
தலைமுறைகளை கடந்து...

கடையில் கூட்டம் அதிகமாக உள்ளதா, இல்லை சின்ன கடையாக இருப்பதால் அப்படித் தெரிகிறதா என ஆராய மனமில்லை. ஏனெனில் கடையில் நுழைந்தவுடன் நாம் பார்க்கும் மேசைகளில் எல்லாம் நிறைய நிறைய ஐஸ்கிரீம்கள் சுவைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாமும் நமக்கான இடத்தைத் தேடிப்பிடித்து அமர்ந்தோம். ஐஸ்கிரீம் என்றாலே 'வெனிலா'தான் நமக்கு பேவரைட் என்பதால், அதை முதலில் ஆர்டர் செய்தோம். அதன் சுவை வேறு லெவலில் இருந்தது.

மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை
மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை
மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை
மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை
மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை
மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை

கூடவே சாக்லேட், ஸ்ட்ராபெரி, மேங்கோ, கிரேப், பாதாம் என அனைத்தையும் டேஸ்ட் செய்தோம். எத்தனை சாப்பிட்டாலும் திகட்டாமல் மறுபடியும் சாப்பிடுவதற்கான உணர்வு மட்டுமே இருந்தது. நமக்கு பின்னால் அமர்ந்திருந்த நண்பர்கள் கூட்டத்தினரோ, போட்டிப் போட்டுக்கொண்டு மேசையைக் காலி கிண்ணங்களால் நிறைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் புரிந்தது, ஐஸ்கிரீம் என்பது அனைவருக்குமான உணர்வு என்று. சாப்பிட்டதற்கு பில் கொடுத்துவிட்டு மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் நிர்வாகிகளில் ஒருவரான சேவியரிடம் பேசினோம். கடையைக் குறித்தும், அதனின் சுவை குறித்தும் பேச ஆரம்பித்தார்.

சேவியர்
சேவியர்

"1939-ம் வருஷம் என்னுடைய தாத்தாவால் ஆரம்பிக்கப்பட்டது இந்த ஐஸ்கிரீம் கடை. இப்போ, நான்காம் தலைமுறையினரே வந்துவிட்டனர். ஆனாலும் கடை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சோடா கம்பெனியாக இருந்த எங்க கடையில் ஒரே மரத்தைச் சேர்ந்த நாவல் பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்தோம்.

அப்போதான் ஐஸ்கிரீம் குறித்துத் தெரிந்து, அதற்கான மெஷின் வாங்கி, ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தோம். எங்கள் தாத்தாவிற்குப் பின் என்னுடைய தந்தை மற்றும் அவரின் சகோதரர்கள் நடத்திவந்தனர். அதன்பின் தற்போது நாங்கள் நான்கு பேர் நடத்தி வருகிறோம்.

மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை
மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை

இப்போது திருச்சியில் மட்டும் 8 கிளைகள் உள்ளன. நாம் அப்போதிலிருந்து வெறும் பாலில் சீனி, எசன்ஸ் மட்டும் கலந்து ஐஸ்கிரீம் தயாரிப்போம். வேறு செயற்கை ரசாயனங்கள் எதுவும் இல்லாமல்தான் தயாரிப்போம்.

மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை
மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை

குறிப்பாக ஐஸ்கிரீம் தயாரிப்புக்கு உணவு அதிகாரிகள் எதைப் பயன்படுத்தலாம் என்று கூறியிருக்கிறார்களோ அவற்றை மட்டுமே வாங்குவோம். கூடுதலாகச் சிலர் செயற்கை நிறமூட்டிகள், ரசாயனங்கள் சேர்ப்பார்கள். ஐஸ்கிரீம் உப்பலாக வர வேண்டும் என ஆக்சிஜன் கூட சேர்ப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால், நம் வீட்டில் குழந்தைகள் இருந்தால் எப்படி ஐஸ்கிரீம் தயாரிப்போமோ அதைப்போலவேதான் நாங்கள் தயாரிப்போம். இதனால் எங்களுடைய ஐஸ்கிரீம் ஒரே நாள் மட்டும்தான் சாப்பிட முடியும்.

மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை
மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை

விலை குறைவாக இருக்கிறதே என்று கேட்டால், அப்போது இருந்து நம் கடையை நம்பி 40 குடும்பங்கள் வேலை செய்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பது முக்கிய காரணமாக இருக்கிறது. கூடவே மக்கள் நம் கடையைத் தேடி வருகிறார்கள். அதனால் அவர்களிடம் விலையை அதிகரிக்க தோன்றவில்லை. லாபம் குறைவாக இருந்தாலும் மனத்திருப்தி அதிகமாகவே கிடைக்கும்" என்றார்.

மைக்கெல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடையில் சாப்பிடாத பிரபலங்களே இல்லை. குறிப்பாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், மற்றும் விமல் ஆகியோருக்கு இந்தக் கடைதான் பேவரைட்!
மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை
மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை

தொடர்ந்து, கடைக்கு குழந்தைகளுடன் வந்திருந்த வாடிக்கையாளர் நிவேதாவிடம் பேசினோம். "நான் மதுரையைச் சேர்ந்த பொண்ணு. எனக்குக் கல்யாணம் ஆனப்புறம் என் கணவர் அடிக்கடி இங்கதான் கூட்டிட்டு வருவாரு. அதுக்கு அப்பறம் நான், என் குழந்தைங்களை கூட்டிட்டு வர ஆரம்பிச்சிட்டேன். நம்ம குழந்தைங்க நம்மகிட்ட கேக்குறதுல நாம வாங்கியே தராம இருக்குற முக்கியமான பொருள்ன்னா அது கண்டிப்பா ஐஸ்கிரீமாதான் இருக்கும்.

மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை
மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை

ஏன்னா குழந்தைங்களுக்கு உடம்பு சரியில்லாமல போய்டுங்கற பயம்தான். ஆனா இங்க விக்கிற ஐஸ்கிரீமை ரெகுலரா எப்போ பஜார் வந்தாலும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பேன். இதுவரை அவங்களுக்கு எந்த உடல்நல பிரச்னையும் வந்தது இல்ல.

மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை
மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடை

டேஸ்ட், விலைன்னு எல்லாமே கரெக்ட்டா இருக்கும். செயற்கையா எதுவும் சேர்க்காததால எல்லாருக்கும் பயமே இல்லாம சாப்பிடலாம். அதுவும் அந்த ஃப்ரூட் மிக்சர்... அதுல நல்ல ஃப்ரெஷ் பழங்களோட வெனிலா ஐஸ்கிரீம் போட்டு கொடுப்பாங்க. அது ரொம்ப நல்லாருக்கும்" என முடித்தார்.

திருச்சிக்கு எங்கிருந்து யார் வந்தாலும் தேடித் தேடி வரும் மைக்கேல் ஐஸ்கிரீம் கடையை நீங்களும் மிஸ் பண்ணிடாதீங்க!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism