Published:Updated:

திருச்சி ருசி - அக்கா மெஸ்: குறைவான பட்ஜெட், அம்மாவின் கைமணம் வீசும் நிறைவான வீட்டுச்சாப்பாடு!

திருச்சி அக்கா மெஸ்

அழகாக இலை போட்டு பீன்ஸ் மற்றும் கத்திரிக்காய்ப் பொரியல், வத்தக்குழம்புடன் சாதத்தைப் பிசைந்து சாப்பிடுகையில் சொர்க்கமாக இருக்கும். கடலை எண்ணெயின் வாசம் நம்மை அப்படியே கட்டிப் போட, சாப்பாடை ஒரு பிடி பிடிக்காமல் கிளம்ப மாட்டோம்.

திருச்சி ருசி - அக்கா மெஸ்: குறைவான பட்ஜெட், அம்மாவின் கைமணம் வீசும் நிறைவான வீட்டுச்சாப்பாடு!

அழகாக இலை போட்டு பீன்ஸ் மற்றும் கத்திரிக்காய்ப் பொரியல், வத்தக்குழம்புடன் சாதத்தைப் பிசைந்து சாப்பிடுகையில் சொர்க்கமாக இருக்கும். கடலை எண்ணெயின் வாசம் நம்மை அப்படியே கட்டிப் போட, சாப்பாடை ஒரு பிடி பிடிக்காமல் கிளம்ப மாட்டோம்.

Published:Updated:
திருச்சி அக்கா மெஸ்
வெளியூர்களிலிருந்து வந்து திருச்சியில் தங்கி வேலை பார்ப்பவர்களிடம் ’எங்க சாப்பாடு சாப்பிடலாம்?’ எனக் கேட்டால் அவர்கள் உச்சரிக்கும் பெயர் ’அக்கா மெஸ்’தான். "கம்மியான காசுல உடம்புக்கு எந்தத் தொந்தரவும் இல்லாம சாப்பிடணும்னா கண்டிப்பா அக்கா மெஸ்ஸுக்குப் போங்க பாஸ்... அந்தக் கடைக்கு ’அக்கா மெஸ்’னு பெயர் வெச்சதே நாங்கதாங்க" என அந்த மெஸ்ஸைப் பற்றிப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
திருச்சி அக்கா மெஸ்
திருச்சி அக்கா மெஸ்

'அக்கா மெஸ்' என்ற பெயரே நம்மை வசீகரிக்க, அப்படி என்னதான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டே உறையூர் பாளையம் பஜாரில் உள்ள அக்கா மெஸுக்குள் நுழைந்தோம். திருச்சியின் மையப் பகுதியாக உள்ள உறையூரில் உள்ள பாளையம் பஜார் பகுதியில் ஒரு சிறிய சந்தில் உள்ள ஒரு வீட்டினை அடையாளம் காண்பித்தனர் அப்பகுதியினர். அந்த மெஸ்ஸின் அமைப்பே வீடு போன்ற உணர்வைத் தந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்கா மெஸ்
அக்கா மெஸ்

வாடிக்கையாளர்களின் கூட்டமும் அதிகமாவே இருந்தது. கொரோனா ஊரடங்கு என்பதால், பார்சல் சாப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மெஸ்ஸிற்குள் நுழையும் ஒவ்வொருவரையும் சிரித்த முகத்துடன் கைக்கூப்பி வரவேற்றார் மெஸ்ஸின் நிர்வாகி சரவணன். கிட்டத்தட்ட 20 வருடங்களாக இயங்கிவரும் அக்கா மெஸ் முதலில் அனுசுயா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது அவரின் மகன் சரவணன் மற்றும் மருமகள் சுதா என்பவர்களால் நடத்தப்பட்டுவருகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அக்கா மெஸ்ஸில் தினமும் மதியம் ஒரு வேளை மட்டுமே உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. எல்லா வார நாள்களிலும் சுத்த சைவ உணவு விற்பனை செய்யப்படுகிறது, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் அசைவ உணவுகள் விற்கப்படுகின்றன. உட்கார இடம் இல்லாமல் கூட்டம் நிரம்பி வழிய, சிலர் மெஸ்ஸின் வெளியே சாப்பிடுவதற்காகக் காத்திருந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள்.
அக்கா மெஸ் சரவணன் 
குடும்பத்தினர்
அக்கா மெஸ் சரவணன் குடும்பத்தினர்

அக்கா மெஸ்ஸின் நிர்வாகி சரவணனிடம் பேசினோம். ”1998-ம் வருஷம், எங்க அம்மாதான் இந்த மெஸ்ஸை ஆரம்பிச்சாங்க. அம்மா ஒருத்தரே நின்னு சமைச்சி சாப்பாட்டை விற்பனை செஞ்சிட்டிருந்தாங்க. அப்போ, வெளியூரிலிருந்து இங்க வந்து தங்கி வேலை பாக்குறவங்களுக்கு எங்க அம்மாவோட கைப்பக்குவமும் கருணையான அவங்களோட உபசரிப்பு, ரெகுலரா வர்றங்களுக்கு சாப்பாடு எடுத்து வச்சி பரிமாறுறதுன்னு ரொம்பப் பிடிச்சுப்போச்சி.

அக்கா மெஸ்
அக்கா மெஸ்

அந்த நல்ல பெயரு, மக்களிடம் அப்படியே பரவ ஆரம்பிச்சுது. ஆரம்பத்துல மெஸ்ஸுக்குப் பேருன்னு எதுமே வைக்கல, ஆனா இங்க சாப்பிட வர வாடிக்கையாளர்கள், அம்மாவை, ’அக்கா... அக்கா’ன்னு கூப்பிட்டதனால அதுவே மெஸ்ஸுக்குப் பெயராயிடுச்சி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்க வீட்ல எங்கூடப் பொறந்தது இரண்டு சகோதரிகள். ஆரம்பத்துல நானும், எங்க அப்பாவும், சமையலுக்காக அம்மாவுக்கு உதவியா இருந்தோம். அப்பல்லாம், எங்க மெஸ்ல காலை,மதியம், இரவுன்னு மூணு வேளையும் சாப்பாடு ரெடியாகிக்கிட்டே இருக்கும். அம்மா, பம்பரமாச் சுத்தி வேலை பாப்பாங்க. இப்போ அம்மாவுக்கு வயசாகிட்டதனால, அவங்களுக்கு ஓய்வு கொடுத்துட்டோம்.

அக்கா மெஸ்
அக்கா மெஸ்

2012-ம் வருஷத்துல இருந்து நானும் என் மனைவியும்தான் இந்த மெஸ்ஸை நடத்திட்டு வர்றோம். அதுக்கு முன்னாடி மெஸ் வேலைகளை அம்மாவால கவனிச்சிக்க முடிலேன்னு, மெஸ்ஸை மூடிடலாம்னு நினைச்சோம். ஆனா, 'எங்க சாப்பிட்டாலும் உங்க மெஸ்ஸுல சாப்பிட்டமாதிரி வரமாட்டுதுங்க. சொந்த ஊர்களை விட்டுட்டு, இங்க தங்கி வேலை பார்க்குறோம். இந்த மெஸ்ஸுல சாப்பிடுறது, எங்க அம்மா கையால சாப்பிட்டது மாதிரியே இருக்கு. தயவு செஞ்சு மெஸ்ஸை மட்டும் மூடிடாதீங்க'ன்னு கஸ்டர்மர்ஸ் ரொம்ப அழுத்தம் கொடுத்ததனால, மறுபடியும் நடத்த ஆரம்பிச்சோம்.

காலை, இரவு உணவுகள் கிடையாது. மதியம் மட்டும்தான். பெரும்பாலும் நம்ம மெஸ்ல தினமும் 300 பேர் வரை ரெகுலரா மதிய சாப்பாடு சாப்பிடுறவங்கதான். இவர்களுக்காகவேதான் நாங்க தொடர்ந்து நடத்திட்டு வர்றோம்.

சரவணன்
சரவணன்

எங்க மெஸ்ல சாதம், சாம்பார், ரசம், இரண்டு வகையான காய், அப்பளம், ஊறுகாய்ன்னு மீல்ஸ் கொடுக்குறோம். கூடவே முட்டையில் சில வகைகள் வெரைட்டிஸ் செய்து தரோம். புதன், வியாழன்ல அசைவம் கொடுக்குறோம், அம்மா மெஸ் நடத்தும் போது சண்டே மட்டும் அசைவம் கொடுத்தாங்க, நாங்க சண்டே மெஸ்ஸ ஓபன் பண்றது இல்ல. அதனால வார நாள்களிலேயே கொடுத்துடுறோம்.

அம்மாவோட செய்முறையைத்தான் நாங்க அப்படியே பின்பற்றுறோம். தினம் சாம்பார் மட்டும் வைக்காம, உருண்டைக் குழம்பு, வத்தக்குழம்பு, தட்டைப்பயிறு குழம்புனு ஒவ்வொரு வகையான குழம்பு வைத்து வெரைட்டிஸ் காட்டுவோம். செக்குல ஆட்டுன கடலை எண்ணெய், அதையும் ஒரு முறைக்கு மேல பயன்படுத்தமாட்டோம்.

அக்கா மெஸ்
அக்கா மெஸ்

ஒரு நாள் செய்யற பொரியல் ரிப்பீட் ஆகம பாத்துக்குறதுன்னு எங்க வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்குறதனாலதான் இன்னமும் எங்களுக்கு ஆதரவு அளிச்சிட்டு வராங்க" என்றார்.

மேலும், "புதன்கிழமை செய்ற மட்டன் கிரேவி இங்க வர எங்க கஸ்டமர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். வியாழக்கிழமை ’மூலிகை சிக்கனு’ம் இங்க ரொம்ப ஸ்பெஷல். நாங்க மெஸ்ஸுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைன்னு ரொம்பத் தரமா பாத்துப் பாத்து வாங்குவோம். முக்கியமா மெஸ்ஸுக்குன்னு சொல்லவே மாட்டோம். எங்கே தரம் குறைவா கொடுத்துரு வாங்களோன்னுன், வீட்டுக்குனு சொல்லித்தான் வாங்குவோம்" என்கிறார்.

அருகில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர் கிருஷ்ணனமூர்த்தியிடம் பேசினோம், “என்னோட சொந்த ஊரு சேலம், மெடிக்கல் ரெப்பா திருச்சிலதான் தங்கியிருக்கேன். என்னோட பிரெண்ட்தான் இந்த அக்கா மெஸ்ஸ அறிமுகப்படுத்தி வெச்சாரு. இங்க வந்ததுல இருந்து இங்கதான் சாப்பிடுவேன்.

வாடிக்கையாளர் கிருஷ்ணனமூர்த்தி
வாடிக்கையாளர் கிருஷ்ணனமூர்த்தி

கிட்டத்தட்ட 5 வருசத்துக்கும் மேல இங்கதான் சாப்பிடுறேன். உடம்புக்கு எந்தப் பிரச்னையும் இருக்காதுங்க. அழகா இலை போட்டு பீன்ஸ் மற்றும் கத்திரிக்காய்ப் பொரியல், வத்தக்குழம்புடன் சாதத்தைப் பிசைந்து சாப்பிடுக்கையில் சொர்க்கமாக இருக்கும். கடலை எண்ணெயின் வாசம் அப்படியே கட்டிப்போட, சாப்பாடை ஒரு பிடி பிடிக்காமக் கிளம்ப மாட்டேன். வத்தக்குழம்புன்னு இல்லை இங்க செய்யுற ஒவ்வொரு வகையான குழம்பும் சரி, சாப்பாடும் சரி நமக்கு வீட்டு சாப்பாட்ட ஞாபகப்படுத்திடும். என் பிரெண்ட்ஸ் யாரு வெளியூர்ல இருந்து வந்தாலும் இங்கதான் நான் சாப்பிடச் சொல்லுவேன்” என மன நிறைவுடன் பேசினார்.

அக்கா மெஸ்
அக்கா மெஸ்
வீட்டுச் சுவையில் மெஸ்ஸில் வயிறாரச் சாப்பிட்டு, குறைவாகச் செலவு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு திருச்சி 'அக்கா மெஸ்' பெரிய வரம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism