Published:Updated:

திருச்சி ருசி: பிரியாணி, நண்டு லாலிபாப், லெமன் சிக்கன் - சிறப்பான சூழல்கொண்ட ராஜா கார்டன் உணவகம்!

ராஜா கார்டன் ரெஸ்டாரன்ட்
News
ராஜா கார்டன் ரெஸ்டாரன்ட்

ஸ்பெஷல் பரோட்டாவுக்கு இங்கு கிடைக்கும் பெப்பர் சிக்கனையும் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நன்று. தொடர்ந்து நண்டு லாலிபாப், லெமன் சிக்கன் எனச் சாப்பிட சாப்பிட சோறே சொர்க்கம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

பெரும்பாலான வீடுகளில் மாதத்தில் ஒருமுறையாவது வெளியில் சென்று சாப்பிடுவது என்பது எழுதப்படாத விதி. அதற்காகவே பட்ஜெட்டில் ஒரு தொகை ஒதுக்கப்பட்டுவிடும். குழந்தைகள் பெரியவர்கள் என இருக்கும் ஒரு சிறிய குடும்பத்தில் கூட குழந்தைகளுக்கு எனத் தனி விருப்பமும், பெரியவர்களுக்கு எனத் தனி விருப்பமும் இருக்க, சுவையைத் தேடியும், விருப்பம் உள்ள உணவைத் தேடியும் செல்லும் உணவகம், அதற்கு ஏற்றார் போல் அமைந்துவிட்டால் போதும். அன்றைய நாளே அழகாகக் கொண்டாட்டமாக முடியும்.

ராஜா கார்டன் ரெஸ்டாரன்ட்
ராஜா கார்டன் ரெஸ்டாரன்ட்
DIXITH

அப்படியான உணவகங்கள் கிடைப்பது என்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால், திருச்சியில் இருக்கும் ராஜா கார்டன் ரெஸ்டாரெண்ட் பல குடும்பங்களின் ஃபேவரைட் உணவகம். இங்கு உணவு மட்டும் சிறப்பு இல்லை, உணவகத்தின் அமைப்பே சிறப்புதான். பச்சை பச்சையாய் செடிகள், அழகான சிறிய அளவிலான மரங்கள், அதற்கு கீழே போடப்பட்டுள்ள மேஜைகள், சுற்றி அடுக்கப்பட்ட சேர்கள், இரவில் இவற்றை சுற்றி பளீச்சென எரியும் மின்விளக்குகள் என கண்களுக்கும், வயிற்றுக்கும் இந்த உணவகம் விருந்தளிக்கிறது என்பதைத் தெரிந்த பின் ஒரு நாளின் டின்னரை அருமையாக மாற்றலாமே என முடிவெடுத்து ராஜா கார்டன் ரெஸ்டாரன்ட்டை நோக்கி கிளம்பினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ரொம்பவே அருகில் இருப்பதால் எந்தவித தேடலும் இல்லாமல் உணவகத்திற்குச் செல்ல முடிந்தது. உணவகத்தின் முன்பக்கம் உள்ள பெரிய பார்க்கிங்கில் நமது வண்டிகளை பார்க் செய்துவிட்டு உள்ளே சென்ற நமக்கு, மரங்கள் அடர்ந்த அழகான சிறு வனத்திற்குள் நுழைந்த ஓர் உணர்வு ஏற்பட, லைட்டிங் இருக்கும் ஒரு மேசையைப் பிடித்து அமர்ந்தோம்.

இரவு நேரத்தில் டிபன் வகைகள்தான் கிடைக்கும் என்று நினைத்துச் சென்ற நமக்கு பிரியாணியும் கிடைத்தது. இங்கு பிரியாணி சிறப்பாக இருக்கும் என்று பணியாளர் கூற, நாம் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி என பிரியாணியுடன், ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கும் இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா என இரண்டையும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம். அந்தக் காத்திருப்பில் அவதி எதுவும் தோன்றாத வண்ணம், கார்டன் உணவகத்தின் அந்தச் சூழ்நிலையே நமக்கு ஒரு ரம்மியமான காட்சியாக அமைந்தது. கூடவே அழகாகக் குழந்தைகளுக்கு எனச் சில விளையாட்டு பொருள்களும் இருக்க அதில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாம் ஆர்டர் செய்த உணவுகள் மேசைக்கு வந்து சேர்ந்தன. முதலில் இடியாப்பத்தையும், பாயாவையும் டேஸ்ட் செய்ய நல்லி படு மென்மையாக வெந்திருந்தது. இடியாப்பத்தையும், சிறிது பாயாவுடன் நல்லியின் இறைச்சியையும் எடுத்து வாயில் வைக்க அது அப்படியே கரைந்தது. காரம் சரியாக இருந்ததால் பயமே இல்லாமல் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். தொடர்ந்து சிக்கன் பிரியாணியை சாப்பிட நெய்யின் வாசத்துடன், சீரகச் சம்பாவில் செய்த அந்த பிரியாணி அருமை.

அடுத்து மட்டன் பிரியாணியைச் சாப்பிட, அது வேறொரு சுவையில் இருக்க, அடுத்ததடுத்து பிரியாணிக்கு வாய்க்குச் சென்று கொண்டே இருந்தது. இங்கு ஸ்பெஷல் பரோட்டா என ஓன்று கிடைக்கிறது. பன் பரோட்டோ போன்ற சாப்ட், கேரளா பரோட்டாவை விட கொஞ்சம் பெரிதாக, சிறப்பாகவே இருந்தது. இதற்கு அவர்கள் உணவகத்தில் கிடைக்கும் பெப்பர் சிக்கனையும் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நன்று. தொடர்ந்து நண்டு லாலிபாப், லெமன் சிக்கன் எனச் சாப்பிட சாப்பிட சோறே சொர்க்கம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

சுவைக்கு இவர்கள் சேர்க்கும் மசாலாவும், பிரெஷ்ஷாக தினம் தினம் வாங்கும் இறைச்சியும்தான் காரணம் எனக் கூறும், உணவகத்தின் தற்போதைய நிர்வாகி, "எங்களுடைய உணவகத்திற்குத் தேவையான மசாலா எங்க அம்மா ஊரான திருநெல்வேலி பக்கத்துல இருக்க விஸ்வபுரி என்ற ஊரில் இருந்து வரும். விவசாயிகளிடம் இருந்து நேரிடையா கொள்முதல் செய்யப்படும் மசாலா பொருள்களைக் கொண்டு தயார் செய்து கொடுக்குறாங்க. குறிப்பா எங்களுக்கான ஒரு முறையில் தொடர்ந்து பிரியாணியை ரெடி பண்றோம். மொத்தமா இல்லாம, காலையில இருந்து இரவு வரை குறைய குறைய அடுப்புல பிரியாணி செஞ்சிகிட்டே இருப்போம். அந்த பிரெஷ் ஃபீல்தான் இந்தப் பிரியாணியை மக்களோட விருப்பமான ஒண்ணா மாத்திருக்கு. அப்படிதான் ஒவ்வொரு உணவையும் பாத்து பாத்து எல்லாத்தையும் தயார் செஞ்சிட்டு இருக்கோம்" என்கிறார்.

மூன்றாவது தலைமுறையாக மக்களின் வரவேற்புடன் இயங்கும் இந்த உணவகத்தில் காலை 11 மணியில் இருந்து முகல் பிரியாணி கிடைக்கிறது என்ற தகவல் கிடைக்க அதை ஆர்டர் செய்ய கேட்க, பசவு முறையில் செய்யப்படும் அந்த பிரியாணி மதியத்திற்குள் முடிந்துவிடும் எனக் கூறிவிட்டனர். வட இந்தியாவிற்குப் பயணம் செய்த உணவகத்தின் உரிமையாளர், தான் சுவைத்த முகல் பிரியாணியை தங்கள் உணவகத்திற்கு வரும் மக்களுக்கும் கொடுக்க ஆசைப்பட, அப்படி உருவானதுதான் இந்த முகல் பிரியாணி. இதன் டேஸ்ட் மக்களிடம் வரவேற்பைப் பெற, வெளியூரில் இருந்தும் வரும் மக்களும் இந்த பிரியாணியை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

இரவிலும் பிரியாணி, எவ்வளவு செய்தாலும் தீர்ந்துவிட கூடிய இடியாப்பம், நல்லி பாயா என அசைவ உணவுப் பிரியர்களுக்கு ஏற்ற இந்த உணவகம், குழந்தைகளுடன் வரும் குடும்பத்தினருக்கும் ஏற்ற இடமாக இருப்பதால் கண்டிப்பாக திருச்சி வந்தால் ஒருமுறை சுவைத்துவிடுங்கள் மக்கா!