Published:Updated:

திருச்சி ருசி: "வாவ்! இப்படியும் பரிமாறலாமா?!"- செல்லம்மாள் மெஸ் மண்பானைச் சமையலின் மகத்துவம்!

மண்பானைச் சமையல்

அத்தனையும் மண்பானையில் சமைத்து, மண் குவளைகளிலே பரிமாறப்படுகின்றன. ஒவ்வொன்றுமே தனிச்சுவை. சைவ உணவுகளில் இத்தனை வகையா என ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு ஒவ்வொரு வகையிலும் நிறைய நிறைய வெரைட்டி.

திருச்சி ருசி: "வாவ்! இப்படியும் பரிமாறலாமா?!"- செல்லம்மாள் மெஸ் மண்பானைச் சமையலின் மகத்துவம்!

அத்தனையும் மண்பானையில் சமைத்து, மண் குவளைகளிலே பரிமாறப்படுகின்றன. ஒவ்வொன்றுமே தனிச்சுவை. சைவ உணவுகளில் இத்தனை வகையா என ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு ஒவ்வொரு வகையிலும் நிறைய நிறைய வெரைட்டி.

Published:Updated:
மண்பானைச் சமையல்
”வெளிய எந்த ஊருக்குப் போனாலும், வீட்டைத் தவிர வேற எங்கேயும் சாப்பிட மாட்டேன். ஏன்னா வீட்டுச்சாப்பாடு மாதிரி எங்கயும் சுத்தமா, ஆரோக்கியமான உணவுகள் கிடைப்பதில்லை” என நினைப்பவர்களுக்கு எந்த பயமும் இல்லாமல், தைரியமாகச் சாப்பிடுவதற்குத் திருச்சியில் ஏற்ற இடம் எது எனக் கேட்டால், ‘செல்லம்மாள் மெஸ்’தான் என்கிறார்கள் சாப்பாட்டுப் பிரியர்கள்.
செல்லம்மாள் மெஸ்
செல்லம்மாள் மெஸ்

மண்பானைச் சமையல், சிறுதானியங்கள், மூலிகைக் கீரைகள் என இயற்கை சார்ந்த உணவுகளைச் சொந்தமாக ஆட்டிய செக்கு எண்ணெயில் சமைத்து, வாழையிலையில் பரிமாறுவதால் கூட்டம் அலைமோதுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மண்பானைச் சமையல்
மண்பானைச் சமையல்

ஒரு மதிய வேளையில் நாமும் ’செல்லம்மாள் மெஸ்’ஸுக்குச் சென்றோம். நமக்கான மேசையைத் தேடிப் பிடித்து அமர்ந்தவுடன், வாழை இலையை விரித்தனர். மற்ற ஹோட்டல்களில் நம்முடைய மேசைக்கே வந்து ’உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டு கடையில் உள்ள மெனுவை வரிசையாகச் சொல்வார்கள்.

சொந்தமாக ஆட்டிய செக்கு எண்ணெய்
சொந்தமாக ஆட்டிய செக்கு எண்ணெய்

நாம் எதுவேண்டும் எனச் சென்ன பிறகு, அவற்றைக் கொண்டு வருவார்கள். இங்கு அப்படி இல்லை. நாம் மேசையில் உட்கார்ந்ததும், ஒரு ட்ரேயில் சின்னச் சின்ன மண்குவளைகளில் 10-க்கும் மேற்பட்ட காய்கறிகள், கீரைகள் எனக் கொண்டுவந்து காண்பிக்கின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில் நமது சாய்ஸைச் சொன்னால், அடுத்த சில நிமிடத்தில் சுடச்சுட நம் டேபிளுக்கு வந்துவிடும். வாழைப்பூப் பொரியல் வல்லாரை, பொன்னாங்கண்ணிக் கீரைக்கூட்டுகளை நமக்குப் பரிமாறிவிட்டுச் சென்றனர். தொடர்ந்து சாப்பாடு பரிமாறியவர்கள், குழம்பையும் நம்மையே தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள்.

காய்கறிப் பொரியல்
காய்கறிப் பொரியல்

அதிலும் பருப்புக்குழம்பு, சாம்பார், வத்தக்குழம்பு, கீரைக்குழம்பு, மோர்க்குழம்பு எனப் பல வகைகள் இருந்தன. அத்தனையும் மண்பானையில் சமைத்து, மண் குவளைகளிலே பரிமாறப்படுகின்றன. ஒவ்வொன்றுமே தனிச்சுவை. சைவ உணவுகளில் இத்தனை வகையா என ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு ஒவ்வொரு வகையிலும் நிறைய நிறைய வெரைட்டி. கூடவே அவல் பாயசம், அப்பளம் என ஆரோக்கியத்திற்கான அத்தனை வகைகளும் இங்கேதான் உள்ளன.

காய்கறிப் பொரியல்
காய்கறிப் பொரியல்
தினமும் 5 வகையான கீரைகள், 7 வகையான காய்கறிக் கூட்டு, பொரியல் வகைகள், 8 வகையான குழம்புகள் என அனைத்தும் காலையிலிருந்தே தயாராகத் தொடங்குகின்றன. ஆள் உயர அடுப்பில், பெரிய பெரிய மண் பானையில் அரிசிச்சாதம் தொடங்கி அனைத்தும் தயாராகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மசாலா அரைப்பதற்கு, இடிப்பதற்கு என அம்மிகளையும் உரல்களையுமே பயன்படுத்துகிறார்கள். அவர்களே செக்கு மூலமாக ஆட்டி எடுக்கும் எண்ணெயைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

மசாலா அரைப்பதற்கு, இடிப்பதற்கு என அம்மி
மசாலா அரைப்பதற்கு, இடிப்பதற்கு என அம்மி

வாடிக்கையாளர்களுக்கு எது தேவையோ அதை அவர்களே தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம் என செல்லம்மாள் மெஸ்ஸில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆச்சரியம்தான். அதே ஆச்சரியத்துடன் சாப்பிட ஆரம்பித்தால், அத்தனையும் அப்படி ஒரு ருசி! மசாலாக்கள் சுவை அதிகமாக இல்லாமல், அந்தந்தக் காய், கீரைகளின் ருசி நம்மைப் கட்டிப்போட போதும் போதும் எனச் சாப்பிட்டு முடித்தோம். நாமே தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவதால் விலையும் நமக்கு ஏற்றபடியே இருந்தது.

மணக்கும் மண்பானைச் சமையல் குறித்துத் தெரிந்துகொள்ள செல்லம்மாள் மெஸ்ஸின் உரிமையாளர் மோகனிடம் பேசினோம், ”இந்தக் கடை குறுகிய காலத்துல நல்ல பெயர் எடுத்திருக்குன்னா அதுக்கு என் மனைவி செல்விதான் காரணம்.

கடை உரிமையாளர்கள்
கடை உரிமையாளர்கள்

எனக்கும், என் மனைவிக்கும் நல்லா சமைக்கத் தெரியும்ங்கிறதனால பக்கத்துல இருக்கிற மகளிர் விடுதியில் தங்கியிருந்த பொண்ணுங்களுக்குச் சமைச்சுக் கொடுக்க ஆரம்பிச்சோம். தொடர்ந்து, மண்பானையில் வீட்டிற்குச் சமைக்கும்போது, அதேபோல அவர்களுக்கும் கொடுக்க ஆரம்பித்தோம்.

புகை போக்கி அடுப்பு சமையல்
புகை போக்கி அடுப்பு சமையல்

தொடர்ந்து பலரும் எங்கள் சமையலின் ருசியைப் பார்த்து, தனியா மெஸ் ஆரம்பிக்கலாமேன்னு சொன்னாங்க. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த மெஸ்.

ஆரம்பத்துல இருந்தே ஆரோக்கியத்திலும் இயற்கையிலும் ஆர்வம் இருந்ததனால நாம் ஆரம்பிக்கும் கடையில மசாலா, எண்ணெய் என எதிலேயும் செயற்கை இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணினோம்.

அதைத் தொடர்ந்தே விறகடுப்பு, அதுவும் புகைபோக்கி கொண்டு உபயோகப்படுத்தப்படும் விறகடுப்பு, சமையலுக்குச் சேர்க்கப்படும் மசாலாக்கள் முழுவதும் இடிக்க, அரைக்க, பொடிக்க என எதையும் வெளியில் இருந்து வாங்குவதில்லை. நம் கைப்பட தினமும் ப்ரெஷ்ஷா அரைச்சிக்குவோம்.

கீரைகள் - செல்லம்மாள் மெஸ் - மண் பானைச் சமையல்
கீரைகள் - செல்லம்மாள் மெஸ் - மண் பானைச் சமையல்

பொதுவா சாதத்திலிருந்து குழம்பு, கூட்டு, பொரியல், காய், பாயசம், அப்பளம்னு எல்லாமே மண் பாத்திரங்களில் மட்டுமே சமைக்கிறோம். இப்படி சமைக்குறதனால உணவின் இயற்கைத் தன்மை மாறாம இருக்கு. தொடர்ந்து சமைக்குறதனால மண் பாத்திரங்களில் விரிசல் விடுறது, உடையுறதுன்னு இருக்கும்.

குழம்பு வகைகள் - செல்லம்மாள் மெஸ் - மண் பானைச் சமையல்
குழம்பு வகைகள் - செல்லம்மாள் மெஸ் - மண் பானைச் சமையல்

இதுக்குன்னு தனியா ஒரு செலவானாலும், ஆரோக்கியம் முக்கியம்ங்கிறதனால தொடர்ந்து அப்படியே சமைக்கிறோம். வாடிக்கையாளரை வாடிக்கையாளரா பார்க்காம, வீட்டுக்கு வர்ற விருந்தாளியா நினைச்சு சுத்தமான உணவை அக்கறையோடு பரிமாறுறதனாலதான் எங்க மெஸ்ஸுக்கு வர்ற வாடிக்கையாளரோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே இருக்கு” என்றார் பெருமையாக.

கடையின் ரெகுலர் வாடிக்கையாளரான ராமநாதனிடம் பேசினோம், ”கடை ஆரம்பிச்சதுல இருந்து இங்க ரெகுலரா சாப்பிட்டுட்டிருக்கேன். மண்பானைச் சாப்பாடு மற்ற கடைய விட இங்க ஸ்பெஷல்.

செல்லம்மாள் மெஸ் - மண் பானைச் சமையல்
செல்லம்மாள் மெஸ் - மண் பானைச் சமையல்

ஆரோக்கியமாவும் இருக்கறதால குடும்பத்துல இருக்குற குழந்தைகளைக்கூட அடிக்கடி கூட்டிட்டு வந்து வாங்கிக் கொடுப்போம். அதோடு, உணவு பரிமாறுற முறையே இங்க வித்தியாசம்தான். மற்ற எல்லா ஹோட்டல்லேயும் என்னென்ன சாப்பாடு இருக்குன்னு சொல்லி ஆர்டர் வாங்குவாங்க.

வாடிக்கையாளர்கள் - செல்லம்மாள் மெஸ் - மண் பானைச் சமையல்
வாடிக்கையாளர்கள் - செல்லம்மாள் மெஸ் - மண் பானைச் சமையல்

ஆனா, இங்க எல்லாத்தையும் நம்ம முன்னாடி கொண்டுவந்து காட்டி ஆர்டர் வாங்குறாங்க. அப்படிக் காட்டும்போதே சாப்பிடத் தோணும். உதாரணமா, கீரையை எடுத்துக்கிட்டா, அந்தந்தக் கீரையின் மருத்துவ குணத்தைச் சொல்லுவாங்க.

செல்லம்மாள் மெஸ் - மண் பானைச் சமையல்
செல்லம்மாள் மெஸ் - மண் பானைச் சமையல்

அவல் பாயசம், வாழைப்பூக் கோலா உருண்டையைச் சாப்பிட மட்டுமே இந்தக் கடைக்கு ஸ்பெஷலா வருவோம். இந்த மெஸ் மாதிரியே, வீட்லயும் மண்பானையில சமைக்கச் சொல்லிப் பழக்குறோம். சுவையோடு சேர்ந்து ஆரோக்கியமாகவும் இருக்கு” என்றார்.

செல்லம்மாள் மெஸ் - மண் பானைச் சமையல்
செல்லம்மாள் மெஸ் - மண் பானைச் சமையல்
திருச்சி வருபவர்கள், முடிந்தால் ’செல்லம்மாள் மெஸ்’ஸுக்கு ஒரு விசிட் அடியுங்களேன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism