Published:Updated:

திருச்சி ருசி: ஸ்பெஷல் வடகறி; `கொங்கு' சந்தகை காம்பினேஷன்! கலக்கும் பீவி டிபன் கடை

பீவி டிபன் கடை

பீவி டிபன் கடை: மாலை நான்கு மணியிலிருந்து இவர்களின் ஸ்பெஷல் வடகறியும், சந்தகை வகைகளும் கிடைக்கின்றன.

திருச்சி ருசி: ஸ்பெஷல் வடகறி; `கொங்கு' சந்தகை காம்பினேஷன்! கலக்கும் பீவி டிபன் கடை

பீவி டிபன் கடை: மாலை நான்கு மணியிலிருந்து இவர்களின் ஸ்பெஷல் வடகறியும், சந்தகை வகைகளும் கிடைக்கின்றன.

Published:Updated:
பீவி டிபன் கடை

தமிழ்நாட்டின் கொங்கு மண்டலம் எனக் கூறப்படும் பகுதியில் சந்தகை எனச் சொல்லப்படும் சேவைக்கு மவுசு அதிகம். இரவு நேரத்தில் சந்தகையுடன் தேங்காய்ப் பாலைச் சேர்த்துச் சாப்பிடுவதுடன், மீதமிருப்பதை அப்படியே பத்திரப்படுத்தி காலையில் கடுகு, உளுந்து சேர்த்து எலுமிச்சை தாளித்து எலுமிச்சைச் சந்தகையாகவும், இல்லையெனில் புளி சேர்த்துப் புளிச் சந்தகையாகவும் சாப்பிடலாம். இடியாப்பம் போன்ற மிருதுவும், சேமியா அளவிற்கு மெல்லிசாகவும் இருக்கும் இந்தச் சந்தகை அப்படியே சாப்பிட சாப்பிட அளவே தெரியாமல் உள்ளே செல்லும். இதுகூடவே சென்னையில் மிக விரும்பி உண்ணும் வடகறியும் சேர்ந்தால் அந்தப் புது காம்பினேஷனில் சுவைமொட்டுகள் உயிர்பெற்று சந்தோஷ நடனத்தில் கூச்சலிடும் என்றே சொல்லலாம். அப்படியான ஒரு சுவையைத் திருச்சி மக்களுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர் பீவி டிபன் கடையைச் சேர்ந்தவர்கள்.

மலைக்கோட்டைக்கு அருகே உள்ள சின்ன கம்மாள தெருவில் உள்ள இந்த பீவி டிபன் சென்டர் 1977 ஆம் ஆண்டு சிறிய சாலையோரக் கடையாக ஆரம்பிக்கப்பட்டது. இப்போது மக்கள் விரும்பி உண்ணும் உணவகமாக மாறியிருக்கிறது. காலையில் வழக்கமாகக் கிடைக்கும் டிபன் வகைகளைக் கொடுக்கும் இவர்கள், மாலையில் கொடுக்கும் உணவுகளோ நம்மை அறியாமல் நமக்குள்ளே உணவு ஆசையைத் தூண்டுபவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாலை நான்கு மணியிலிருந்து இவர்களின் ஸ்பெஷல் வடகறியும், சந்தகை வகைகளும் கிடைக்கின்றன. ஐந்து பருப்புகள் சேர்த்து ஊறவைத்து அரைத்துச் செய்யப்படும் குட்டி வடைகளை அப்படியே மிருதுவாகப் பொரித்து எடுத்து, தினமும் பிரெஷ்ஷாக அரைத்த மசாலாவைச் சேர்த்துச் செய்யும் அந்த வடகறி தோசையுடன், சப்பாத்தியுடன், ஏன், தயிர் சாதத்துடன்கூட சாப்பிட அப்படியொரு டேஸ்ட். தயிர் சாதத்துடன் சாப்பிடுவதற்கு என தனியாக வடகறியை மட்டும் வாங்கிச் செல்கின்றனர். அடுத்து சந்தகை என்னும் சேவை. எலுமிச்சை, மிளகு, புளி, தக்காளி என வகை வகையாகக் கிடைக்கிறது.

இதில் ஸ்பெஷல் என்னவென்றால், தயார்செய்து வைத்திருந்த சந்தகைகளை 25 ரூபாய் அளவிற்கு வாழை இலையில் கட்டி வைத்திருக்கின்றனர். தயார் செய்தவுடன் இலையில் கட்டப்படுவதற்குக் காரணமாகக் கூறுவது, அதனுடைய சுவையும் இயல்பும் மாறாமல் இருப்பதுதான். திருச்சியில் சந்தகையை அறிமுகம் செய்தவர்கள் நாங்கள்தான் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கடையின் உரிமையாளர். நாமளும் சாப்பிட்டுப் பார்த்தோம். சேவை எனக் கூறப்படும் சந்தகை நம்மை அப்படியே சொர்க்கத்துக்கு இழுத்துச் சென்றது, அதற்கு வடகறியைத் தொட்டு சாப்பிடுங்கள் எனக் கூற லெமன் சேவையுடன் தேங்காய் சட்னி வடகறி என அல்டிமேட் காம்பினேஷன்.

திருச்சி ருசி: ஸ்பெஷல் வடகறி; `கொங்கு' சந்தகை காம்பினேஷன்! கலக்கும் பீவி டிபன் கடை

ஸ்பெஷல் ஊத்தப்பம் என வெஜிடபிள், தக்காளி என இரண்டை ஆர்டர் செய்தோம், எந்த வெங்காயத்தையும், கேரட்டையும் பரபரவெனத் தூவாமல் கேரட், பீன்ஸ், வெங்காயம், முட்டைகோஸ் எனப் பலவிதமான காய்கறிகளை நன்றாக வனக்கி அதனை மாவின் மேல் போட்டு நன்றாகத் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்துக் கொடுக்கின்றனர். தக்காளி ஊத்தாப்பத்தில் தக்காளி, வெங்காயத்தை வனக்கிச் சேர்த்துக் கொடுக்கின்றனர், தக்காளியின் சுவை அதிகமாக இருந்தாலும் அது எந்த விதத்திலும் ஊத்தாப்பத்தை சாப்பிடுவதை நிறுத்த விடவில்லை. இன்னும் சொல்லப்போனால் தக்காளியின் சுவை தான் இந்த ஸ்பெசல் ஊத்தாப்பத்தை இன்னும் சுவையாக்குகிறது. வேறு எந்தத் தொட்டுகைகளும் தேவையே இல்லாமல் நமக்கு உள்ளே இறங்குகிறது. இவை மட்டுமன்றி முடக்கத்தான் தோசை, தூதுவளை தோசை, இட்லி வகைகள் எனப் பலவகை உணவுகள் நினைப்பதைவிட சுவையுடன் வயிற்றுடன், மன நிறைவைத் தருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தனை சுவைக்கும் காரணமாக இருப்பவர், கடையின் உரிமையாளர் பாலகிருஷ்ணா.

பீவி டிபன் கடை - உரிமையாளர் பாலகிருஷ்ணா
பீவி டிபன் கடை - உரிமையாளர் பாலகிருஷ்ணா
DIXITH

"எங்க அப்பா ஆரம்பிச்ச கடை இது, ரோட்டுக் கடையாதான் ஆரம்பிச்சோம், எப்போதும் போல டிபன், சாப்பாடு கொடுத்துட்டு இருந்தோம், அப்போ கஸ்டமர் கேட்டதை வச்சுதான் நாங்க இந்த உணவு எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சோம். எல்லாருக்கும் பிடிச்சுப்போக, ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்பாக்கு உதவியா ஸ்கூல் படிக்கறதுல இருந்து கடையைப் பாத்துப்பேன். இப்போ வரைக்கும் நான்தான் சமையல், வேற யாரையும் செய்ய விடுறது இல்ல. அப்ப இருந்து அதே சுவையை இப்ப வரை மாத்திக்காம இருக்க இதுவும் ஒரு காரணம், அப்பறமா தினமும் அரைக்குற மசாலா, பிரெஷ்ஷா போடுற காய் இதெல்லாம் ஒரு காரணமாகும்” என்கிறார்.

நாம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஒருவர் சிறிய தூக்குவாளியுடன் வந்து இரண்டு வடகறி எனக் கேட்க, அதைக் கொடுத்தனுப்புகின்றனர். திருச்சியில் இந்த இடத்தில் கிடைக்கும் இந்த அற்புத உணவுகளை மிஸ் பண்ணிடாதீங்க!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism