Published:Updated:

திருச்சி ருசி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிடித்த ஶ்ரீ ராகவேந்திரா அன்னபூரணி மெஸ் முறுக்கு!

ஶ்ரீ ராகவேந்திரா அன்னபூரணி மெஸ்

திரை பிரபலங்கள் நிழல்கள் ரவி, இயக்குநர் திருமுருகன் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் இவர்கள் மெஸ்ஸின் வாடிக்கையாளர்களாம். இங்கு செய்யப்படும் முறுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மிகவும் பிடித்ததாம்.

திருச்சி ருசி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிடித்த ஶ்ரீ ராகவேந்திரா அன்னபூரணி மெஸ் முறுக்கு!

திரை பிரபலங்கள் நிழல்கள் ரவி, இயக்குநர் திருமுருகன் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் இவர்கள் மெஸ்ஸின் வாடிக்கையாளர்களாம். இங்கு செய்யப்படும் முறுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மிகவும் பிடித்ததாம்.

Published:Updated:
ஶ்ரீ ராகவேந்திரா அன்னபூரணி மெஸ்
வெளியூரில் இருந்து திருச்சிக்கு வரும் பெரும்பாலானோர் கண்டிப்பாக ஸ்ரீரங்கம் சென்று தரிசனம் மேற்கொள்ளாமல் செல்லமாட்டார்கள். வரலாறும், ஆன்மீகமும் கொட்டிக்கிடக்கும் ஸ்ரீரங்கத்தில் உணவுகளும் ரொம்பவே சிறப்பாக இருக்கும். பூண்டு, வெங்காயம் சேர்க்காத சாம்பார், வெண்ணெய் சேர்த்த பரோட்டா, விதவிதமான தோசை, இட்லி வகைகள் என ஸ்ரீரங்கம் என்றாலே சைவ உணவு பிரியர்களுக்கு மட்டுமில்லாமல் ஆன்மிக பக்தர்கள் என அனைவருக்கும் கொண்டாட்டமான ஓர் இடமாக இருக்கும்.

அப்படி வீட்டுச் சுவையில், மொத்த குடும்பமாய் சேர்ந்து வீட்டுமுறை மெஸ்ஸை நடத்தி வருகின்றனர் கோபாலன் குடும்பத்தினர். ஆரோக்கியமான முறையில், சுவையும் கூடவே உபசரிப்பும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்றால் அமைதியாக இருக்க முடியாது அல்லவா? அதனால் ஒரு வேலை நாளில் ஸ்ரீரங்கம் நோக்கி கிளம்பினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஓடிக்கொண்டிருக்கும் காவிரியின் அழகை ரசித்தவாறே ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தோம். தொடர்ந்து உலக புகழ்பெற்ற ஸ்ரீரங்க கோபுரத்திற்கு முன்பாகவே இடதுபுறம் சென்றால் ஸ்ரீ ராகவேந்திரா மடம் உள்ளது. அதற்கு அருகிலேயே ஸ்ரீ ராகவேந்திரா அன்னபூரணி மெஸ் உள்ளது. இல்லையில்லை கோபாலன் அவர்களின் வீடு அமைந்துள்ளது. நாம் சென்ற நேரத்தில் பலரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஒவ்வொருத்தரையும் தன் வீட்டில் உள்ளவர்களை போல கவனித்து கொண்டிருந்தனர், அந்த மெஸ்ஸின் உரிமையாளர்கள். கிட்டத்தட்ட 1993-ம் ஆண்டு தற்போதைய உரிமையாளர்களின் தந்தை கோபாலன் ஐயங்கார் அவர்கள் தன் மனைவியுடன் சேர்ந்து இந்த உணவகத்தை ஆரம்பித்துள்ளார். அப்போதிலிருந்து தற்போது வரை இவர்களின் வீட்டிலேயேதான் இந்த மெஸ் இயங்கி வருகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திரை பிரபலங்கள் பலருக்கும் இவர்களின் மெஸ் ரொம்பவே பிடித்த இடம். முக்கியமாக நிழல்கள் ரவி, இயக்குநர் திருமுருகன் மற்றும் அரசியல்வாதிகள் பலருக்குமே பிடித்தமான மெஸ். இப்படிப் பலரும் இந்த மெஸ்ஸின் உணவை விரும்புவதற்கு காரணம், சுவையும் உபசரிப்பும்தான். பொதுவாக நாம் சாம்பார் சாதமோ, வத்தக்குழம்பு சாதமோ கேட்டால் ஏற்கெனவே தயார் செய்திருப்பதைத்தான் தருவார்கள். ஆனால், இங்கு சுடச்சுட வடித்து வைத்திருக்கும் சாதத்தில் நாம் கேட்டபின்பே சாம்பாரையோ, வத்தக்குழம்பையோ ஊற்றி, அதை உடனடியாக தயார் செய்து கொடுக்கின்றனர். அதனால் அதன் சுவை அற்புதமாக இருந்தது.

முக்கியமாக காலை 7 மணியில் இருந்தே இங்கு டிபனுடன் சாப்பாடு, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என அனைத்தும் தயாராகிவிடுகிறது. இவ்வளவு காலையில் எதற்காக சாப்பாடு என்றால், பணிக்குச் செல்பவர்கள், கல்லூரி செல்பவர்களுக்கு மதிய உணவு பேக்கிங்கிறகாகத் தேவைப்படுமே என்கின்றனர். ஆனால், காலை 7 மணிக்குக் கிடைக்கும் இந்தக் காய்கறி வகை 10 மணிக்கு மேல் கிடைக்காது. காரணம் மதியம் மூன்று மணி வரை இயங்கும் இந்த மெஸ்ஸில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை புதிது புதிதாக ரொம்ப ஃப்ரெஷ்ஷாக கூட்டு, பொரியல் என ரெடியாகி கொண்டே இருக்கிறது. கோபாலன் கடந்த வருடம் இறந்துவிட, தற்போது அவர்களின் மகன் மற்றும் மகள் குடும்பத்தினர் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக நடத்திவருகின்றனர். இதனாலயே அடுத்தடுத்து வருபவர்களை உபசரிக்கவும், சூடாக பரிமாறவும் முடிகிறது என்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதிய நேரத்தில் இதுபோன்ற சாத வகைகள், முழு சாப்பாடு சிறப்பு என்றால், காலையிலும், மாலையிலும் தோசை வகைகள் ரொம்பவே ஸ்பெஷல். சாதாரணமாக நாம் சுவைத்திருக்கும் தோசை வகைகளில் இருந்து இவர்களின் வகைகள் ரொம்பவே வித்தியாசப்படுகின்றன. மிளகு நெய் தோசை, தக்காளி மிளகு தோசை, கறிவேப்பிலை இஞ்சி சீரகம் கலந்த தோசை என ஒவ்வொன்றிலும் வேறு சுவை; கூடவே ஆரோக்கியமும் சேர்த்து பரிமாறுகின்றனர்.

தொடர்ந்து வீட்டிலேயே அரைத்த மாவு, வத்தல், முறுக்கு, தினம் தினம் ஸ்பெஷலாக செய்யக்கூடிய ஸ்வீட் என ஒவ்வொன்றும் அப்படியான ருசி. நாம் சென்ற நாளில் மைசூர் பாக் செய்திருக்க, சூடாக இருந்த அந்த இனிப்பை சாப்பிட வித்தியாசமான சுவையில் அருமையாக இருந்தது. முக்கியமாக இவர்களின் வீட்டிலிருந்து செய்யப்படும் முறுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மிகவும் பிடித்ததாம். சேலம் மாவட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் பெரும்பாலோனோர் வீட்டில் உணவு சம்பந்தமாகக் கண்டிப்பாக சிறிய அளவிலான தொழில் நடந்து கொண்டிருக்கும். அதில் சாம்பார், குழம்பு வகைகளை மட்டும் தனியாக விற்பது என்பது சிறப்பான ஓன்று. அதுபோலவே இவர்களின் மெஸ்ஸில் இருந்தும் சாம்பார், ரசம், பொரியல் என அனைத்தையும் தனி தனியாக வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி உண்ணும் உணவில் இருந்து உபசரிப்பு வரை அனைத்துமே இங்கு சிறப்பாக இருப்பதால் தொடர்ந்து கூட்டம் வந்துகொண்டே இருந்தது.

ஸ்ரீரங்கம் செல்பவர்கள், இந்த ஸ்ரீ ராகவேந்திரா அன்னபூரணி மெஸ்ஸை மறந்துவிடாதீர்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism