Published:Updated:

திருச்சி ருசி: 2 இட்லி; 11 வகையான சட்னி; புதுமையில் அசத்தும் குறிஞ்சி ரெஸ்டாரன்ட்

குறிஞ்சி ரெஸ்டாரன்ட் சாப்பாடு
News
குறிஞ்சி ரெஸ்டாரன்ட் சாப்பாடு ( DIXITH )

பொதுவாகவே ஆப்பம் என்றால் அதற்கு தேங்காய் பால் மட்டுமே சாப்பிட்டு பழகியிருப்போம். ஆனால் இங்கு தேங்காய்ப் பாலுடன் சொதி என்ற உணவு வழங்கப்படுகிறது.

வீட்டிற்கு வரும் உறவினர்களை உபசரிப்பதில் உணவிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. அதற்கு தமிழ்நாடு மிக பெரிய உதாரணமாக இருக்கிறது என்றால் மிகையில்லை. இந்தப் பகுதி தான் என்று சொல்லிவிட முடியாத அளவிற்கு தமிழ்நாட்ட்டின் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், எந்த உறவினர் வீட்டிற்கு சென்றாலும் வீட்டிற்கு வருபவர்களுக்கு நீர் கொடுப்பதில் ஆரம்பிக்கும் உபசரிப்பனாது, தல வாழையில் உப்பு வைப்பதில் தொடங்கி தொடுகைகளுடன் நிரப்பப்படும் இலையில் சுட சுட சாதத்துடன் பருப்பும், சாம்பாரும் என அதற்கு ஏற்றார் போல் பரிமாற புன்சிரிப்பும், பழங்கதைகளுமாக கழியும் விருந்தில் சுவையுடன் கூடவே சந்தோஷமும் நிரம்பியிருக்கும். ஆனால் ஓடி கொண்டிருக்கும் உலகில் அப்படியான விருந்தோம்பல்களை பெரும்பாலான வீடுகளே மறந்திருக்கும் சூழலில் திருச்சியில் இருக்கும் குரு உணவகத்தில் அப்படியான விருந்தும் உபசரிப்பும் கிட்டத்தட்ட 40 வருடங்களை கடந்தும் நடந்து கொண்டே இருக்கிறது.

குறிஞ்சி ரெஸ்டாரன்ட்
குறிஞ்சி ரெஸ்டாரன்ட்
DIXITH

மூன்றாவது தலைமுறையாக நடந்து கொண்டிருக்கும் இந்த விருந்து திருவிழாவில் முக்கியப்படுத்தி நாம் கூற வேண்டியது இவர்கள் உணவகத்தின் இட்லியைத் தான். காலையிலும், இரவிலும் கிடைக்கும் இட்லியில் சிறப்பு இவர்கள் கொடுக்கும் சட்னியில் தான் உள்ளது. ஒன்றோ இரண்டோ எத்தனை இட்லி சாப்பிட்டாலும் அதற்கு 11 வகையான சட்னி (வல்லாரை, துளசி, கறிவேப்பிலை, மல்லி ), சாம்பார், ஆந்திரா ஸ்பெஷலான கடப்பா, முக்கியமாக வீட்டில் முந்தின நாள் வைத்த பூண்டு குழம்பை நம் அம்மா நமக்கு எடுத்து வைக்க இட்லியுடன் சேர்த்து அவற்றை ருசி பார்த்திருப்போம், அந்த வீட்டு உணர்வை கொண்டு வர வேண்டும் என்று மெனக்கெடலுடன் அந்த பூண்டு குழம்பையும் தினமும் கொடுக்கிறாரகள், கூடவே இட்லிப்பொடி, எள்ளுப்பொடி, பூண்டு பொடி என பொடி வகைகளும் அவற்றிற்கு செக்கில் ஆட்டிய எண்ணையும் என லிஸ்ட் நீளுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மற்ற டிபன் வகைகளையும் விடுவது இல்லை என வகை வகையான தோசைகள், பூரி, முக்கியமாக இவர்களின் நெய் பொங்கல் அளவில்லாமல் ஊற்றப்படும் நெய்யுடன் மிளகும், முந்திரியும் ஒவ்வொரு வாயிற்கும் வருவது கூடல் சிறப்பாக உள்ளது. நாம் ஆர்டர் செய்து விட்டால் மேசையின் மீது பரப்பப்படும் உணவு வகைகளுடன் தொடுகைகளும் பாத்திரங்களுடன் வைத்துவிடுகின்றனர். வேண்டிய அளவில் நாமளே எடுத்து கொள்ளலாம்.

அடுத்ததாக இவர்களின் மதிய உணவு கொஞ்சமே பெரிதான தட்டில் மிருதுவான சாதத்துடன், சாம்பார், புளிக்கொழம்பு, ரசம், மோருடன் மூன்று பொரியல் வகைகள் கூடவே சுண்டைக்காய் வத்தல், மோர் மிளகாய், கொத்தவரை என வத்தல் வகைகளும், இரண்டு வகையான ஊறுகாய்களுடன், தினம் ஒரு துவையல் என நாம் சென்ற நாளில் பருப்பு துவையல் கொடுத்திருந்தனர். இது மட்டும் இல்லாமல் தினம் ஒரு சிறப்பு என்று பாகற்காய், சுண்டக்காய், வாழைத்தண்டு, வாழைக்காய், கோவக்காய் என தினமும் ஏதாவது ஒரு காயை துணையாக கொடுக்கின்றனர். பாயசத்தை பொறுத்தவரை அரிசி, ரவை, சேமியா, கோதுமை, ஜவ்வரிசி, பருப்பு என விதவிதமான பாயசம். நமக்கு ரவை பாயசம் கொடுக்க சுவை உண்மையிலேயே அருமையாக இருந்தது. முழுக்க முழுக்க சைவம் என்பதால் அசைவ உணவை எதிர்பார்ப்பவர்களுக்கு என சைவ உணவை அசைவம் போல செய்து கொடுக்கின்றனர். அதில் வாழை பூவில் செய்யப்படும் சைவ நெத்திலி பிரை, வாழைகாயில் செய்யப்படும் மீன் வறுவல் என எல்லாமே ஸ்பெஷல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து மாலையில் கிடைக்கும் ஆப்பம் பலரும் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது எனலாம். பொதுவாகவே ஆப்பம் என்றால் அதற்கு தேங்காய் பால் மட்டுமே சாப்பிட்டு பழகியிருப்போம். ஆனால் இவர்களுடன் தேங்காய் பாலுடன் சொதி என்ற உணவு வழங்கப்படுகிறது. சொதி நமக்கு புதிதாகத் தெரியலாம். ஆனால் திருநெல்வேலி பகுதியில் இருப்பவர்களின் மிக பிடித்தமான உணவில் சொதி கண்டிப்பாக முக்கிய இடம் பிடித்திருக்கும். அதை இங்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே புதிதாக இருந்தது. பணியாரம் அதற்கு மூன்று வகையான சட்னி, முடக்கத்தான் தோசை, சுரைக்காய் தோசை என மாலை நேரம் எளிய உணவுகளுடன் இங்கு கழிகிறது. இது மட்டும் இல்லாமல் வட இந்திய உணவுகளும் பரிமாறப்படுகிறது.

'எங்களுடைய உணவகத்தின் மிக முக்கியமான நோக்கமே, வரும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களையும் விருந்தினர்கள் போல் பாவித்து பரிமாற வேண்டும் என்பதே. இதற்காகவே ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து தயார் செயவ்துடன், பரிமாறவும் செய்கிறோம். 45 வருடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட அந்த சுவையை இப்போதும் கொடுக்க காரணம் அதே அளவு தரத்தை அப்படியே தொடர்ந்து செய்துகிட்டு இருக்கோம். புதுசு புதுசா டிஷ் கொடுக்க ஆர்வமா இருப்போம், கூடவே வர்ற வாடிக்கையாளர்களுக்கு ஒரு காபி வேண்டும் என்றால் கூட அதில் அவர்களுக்கு எது தேவையோ அதை கேட்டு கேட்டு தயாரிப்போம்' என்று கூறுகின்றனர் நிர்வாகத்தினர்.

குறிஞ்சி ரெஸ்டாரன்ட்
குறிஞ்சி ரெஸ்டாரன்ட்
DIXITH

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் எதிரே அமைந்துள்ள இந்த குரு ஹோட்டல் குறிஞ்சி ரெஸ்டாரெண்ட் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. திருச்சி வரும் உணவு விரும்பிகள் கண்டிப்பாக ஒரு முறை சுவைத்து விடுங்கள்.