Published:Updated:

திருச்சி ருசி: "அரசியல், சினிமா பிரபலங்களுக்கு மீன் சாப்பாடு நம்ம கடையிலதான்!"- அசத்தும் விஜய் மெஸ்

விஜய் மெஸ்

விரால் மீன் குழம்பு, சிக்கன் சுக்கா ஆகியவை உண்மையிலேயே ருசியில் கிறங்கடித்தன. சிக்கன், மட்டன் குழம்புகளும் அதே ரகம்தான். அத்தனையும் ருசி பார்த்தோம்.

திருச்சி ருசி: "அரசியல், சினிமா பிரபலங்களுக்கு மீன் சாப்பாடு நம்ம கடையிலதான்!"- அசத்தும் விஜய் மெஸ்

விரால் மீன் குழம்பு, சிக்கன் சுக்கா ஆகியவை உண்மையிலேயே ருசியில் கிறங்கடித்தன. சிக்கன், மட்டன் குழம்புகளும் அதே ரகம்தான். அத்தனையும் ருசி பார்த்தோம்.

Published:Updated:
விஜய் மெஸ்
திருச்சியில் எத்தனையோ ஹோட்டல்கள் இருந்தாலும், உபசரிப்பிலும் சுவையிலும் எந்த சமரசமும் இல்லாமல், உணவுப்பிரியர்களுக்கு தினம் தினம் விருந்து படைக்கும் ஹோட்டல்களும் சில உண்டு. அவற்றில் ஒன்றுதான், திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள விஜய் மெஸ். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த உணவகத்தில் காலை உணவும், மதிய சாப்பாடும்தான் கிடைக்கும் என்பதால், ஒரு மதிய வேளையில் போட்டோகிராபருடன் ஆஜரானேன்.
விஜய் மெஸ்
விஜய் மெஸ்

கமகமக்கும் விரால் மீன் குழம்பின் வாசம் மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. குறைவான விலை, நிறைவான தரம், வீட்டு முறை உணவு என்பதால் சாப்பிட இடம்பிடிக்க கூட்டம் முண்டியடித்தது. நாமும் ஒரு மேசையைப் பிடித்து அமர்ந்து ஆளுக்கொரு மீல்ஸ் ஆர்டர் செய்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இலையில், ஆவி பறக்க சாதத்தை வைத்த சர்வர், "அண்ணே நம்ம கடையில மீல்ஸ்க்கு, வஞ்சிரம் மீன் வறுவல், சிக்கன் சுக்கா சூப்பரா இருக்கும்ணே, கொண்டு வரட்டுமா?" என்று கேட்டார். உடனே கொண்டு வரச் சொன்னோம். மூன்று நிமிடத்தில் அவை அனைத்தும் நம் டேபிளுக்கு வந்தன. அன்லிமிடெட் மீல்ஸுடன் சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, குடல் குழம்பு, மீன் குழம்பு என அனைத்தும் வந்தன. வாழை இலையில் சூடாகப் பரிமாறியவுடன் கிளம்பிய வாசனை வேற லெவலில் இருந்தது.

வஞ்சிரம் மீன் வறுவல்
வஞ்சிரம் மீன் வறுவல்

விரால் மீன் குழம்பு, சிக்கன் சுக்கா ஆகியவை உண்மையிலேயே ருசியில் கிறங்கடித்தன. சிக்கன், மட்டன் குழம்புகளும் அதே ரகம்தான். அத்தனையும் ருசி பார்த்தோம்.

வீட்டில் சாப்பிடுவது போன்ற உணர்வு கொடுக்கும் வகையில், பணியாளர்களும் தனி அக்கறையுடன் கவனித்தனர். கடைசியாக வஞ்சிரம் வறுவலுடன் முடித்துக்கொண்டு எழுந்தோம். பில் கேட்டபோது, பட்ஜெட்டுக்குள்தான் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய் மெஸ்ஸின் நிர்வாகி விஜய்யிடம் பேசினேன். "எங்களுக்குப் பூர்வீகம் கேரளாவிலுள்ள கோழிக்கோடு. எங்க அப்பா சின்ன வயசுலயே இங்க வந்துட்டார். தொடர்ந்து திருச்சியில் பல வேலைகள் பார்த்துட்டு, 1967-ம் வருஷம் இந்த இடத்தில சின்ன மளிகைக்கடையை ஆரம்பிச்சார்.

சிக்கன்
சிக்கன்

அப்புறம் சின்ன டிபன் சென்டரா மாத்தினார். தொடர்ந்து 1980-ம் வருஷம், ’விஜய் மெஸ்’ன்ற பெயரில் உணவகத்தை ஆரம்பிச்சோம். கொஞ்ச வருஷம் கழிச்சு நானே பார்த்துக்க ஆரம்பிச்சேன். காலையில 6 மணிக்கு இட்லி, தோசை, பூரி, பொங்கல்னு டிபன் விற்பனை செய்றோம். எங்க மெஸ் தோசைக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்காங்க.

மதியம் 12 மணிக்கு மதிய உணவை ஆரம்பிச்சுடுவோம். மாலை 4.30 வரை உணவகம் திறந்திருக்கும். நம்ம கடையின் அசைவ உணவு வகைகளுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்காங்க.

விஜய் மெஸ்
விஜய் மெஸ்

பல வருஷமா தொடர்ந்து சாப்பிடுபவர்களும் உண்டு. தினமும் சாப்பிடுபவர்களில் 100 பேராவது ரெகுலர் கஸ்டமராத்தான் இருப்பாங்க. ஆரம்பித்ததிலிருந்து இப்போ வரை மசாலாக்களைக் கலப்படம் இல்லாம வீட்டில்தான் தயாரிக்கிறோம்.

கோலா உருண்டை
கோலா உருண்டை

அதனாலதான், வாடிக்கையாளர்கள் தேடி வர்றாங்க. இங்க சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், ஏப்பம், தாகம் எதுவும் இருக்காது. காரமும் ரொம்ப கம்மியாத்தான் இருக்கும். உடம்புக்கு பிரச்னை வராது. ஒரு தடவை இங்க சாப்பிட்டாலே, ரெகுலர் கஸ்டமரா மாறிடுவாங்க.

உரிமையாளர் விஜய்
உரிமையாளர் விஜய்

எங்களோட அணுகுமுறையும், உபசரிக்கும் விதமுமே வாடிக்கையாளர்களை எங்களைத் தேடி வர வைக்குது. அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள்னு பலரும் திருச்சி வரும்போது, அவங்களுக்கு எங்க கடையில் இருந்துதான் மீன் சாப்பாடு பார்சல் போகும்.

விஜய் மெஸ்
விஜய் மெஸ்

தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எங்க கடையிலிருந்து அடிக்கடி பார்சல் போயிருக்கு" என்று பெருமையாகச் சொன்னார்.

விஜய் மெஸ்ஸின் ரெகுலர் கஸ்டமர் வெங்கடேஷிடம் பேசினேன். ”நான் திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்தவன். ரொம்ப நாளா இந்தக் கடையில் சாப்பிடுறேன். மிடில் கிளாஸ் மக்களுக்கு பட்ஜெட்டுக்குள்ள குடும்பத்தோடு நிறைவா சாப்பிடுறதுக்கு இந்த ஹோட்டல் நல்ல சாய்ஸ்.

வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளர்கள்

சாப்பாடும் வேற லெவெல்ல இருக்கும். குழந்தைகளைக் கூப்பிட்டு வந்து சாப்பிட வைக்கிறதிலும் சிரமம் இருக்காது. வீட்டு மசாலாங்கிறதால, பயம் இல்லாம குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இவங்களோட உபசரிப்பு நல்லா இருக்கும். பார்த்துப் பார்த்துப் பரிமாறுவாங்க. திருச்சிக்கு வர்றவங்க மிஸ் பண்ணக்கூடாத இடம் விஜய் மெஸ்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism