Published:Updated:

திருச்சி ருசி - கேரளா மெஸ்: தேங்காய் எண்ணெய் மணக்கும் அசைவ உணவுகள் - குறைவான செலவில் கலக்கல் ட்ரீட்!

திருச்சி கேரளா மெஸ்

"தமிழகம்போல வேறு எங்கும் சுதந்திரமாக, அமைதியாகத் தொழில் செய்ய முடியாது. குறிப்பாக, திருச்சி மாதிரியான ஊரை விட்டுவிட்டு வேறு எங்கும் செல்ல எங்களுக்கு மனம் இல்லை."

திருச்சி ருசி - கேரளா மெஸ்: தேங்காய் எண்ணெய் மணக்கும் அசைவ உணவுகள் - குறைவான செலவில் கலக்கல் ட்ரீட்!

"தமிழகம்போல வேறு எங்கும் சுதந்திரமாக, அமைதியாகத் தொழில் செய்ய முடியாது. குறிப்பாக, திருச்சி மாதிரியான ஊரை விட்டுவிட்டு வேறு எங்கும் செல்ல எங்களுக்கு மனம் இல்லை."

Published:Updated:
திருச்சி கேரளா மெஸ்
கேரளச் சுவையில் தேங்காய் எண்ணெய் வாசத்துடன் சிக்கனை மணக்க மணக்க நெய்ச் சோற்றுடன் சாப்பிட எப்படி இருக்கும்? அனுபவித்தவர்களுக்கு அதன் சுவை நன்கு தெரியும். ஒருமுறை நீங்கள் அனுபவித்துவிட்டால், உங்களால் அந்தச் சுவையை மறந்துவிட முடியாது. இந்தக் காம்பினேஷனில் சாப்பிட கேரளாவுக்குத்தான் போக வேண்டும் என்று இல்லை. திருச்சியிலேயே கேரள உணவை, குறைவான விலையில் சாப்பிடலாம் என உணவுப் பிரியர்கள் ஆசை காட்ட, கேரளா மெஸ் நோக்கிப் புறப்பட்டோம்.
கேரளா மெஸ்
கேரளா மெஸ்

சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள, மினி ரங்கநாதன் தெருவான திருச்சி சிங்காரத்தோப்பில்தான் கேரளா மெஸ்ஸின் முதல் கிளை ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் கேரளா மெஸ் என்ற பெயரில் கேரள மணத்துடன் மலையாள மக்களின் உணவு வகைகளைச் சமைக்கிறார்கள். விலையும் குறைவாகவே இருப்பதால், தினசரி 500 பேர் வரை சாப்பிட்டுச் செல்கின்றனர். காலை தவிர்த்து மதிய உணவு, இரவு உணவு என இருவேளைகளிலும் கிடைக்கிறது. கேரள உணவு வகைகள் மட்டுமல்லாமல், இப்போது வடஇந்திய உணவுகள், தென்னிந்திய உணவுகள் என மெனு நீள்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நாம் மதிய நேரத்தில் கேரளா மெஸ்ஸுக்குள் புகுந்தோம். உள்ளே நுழையும்போதே தேங்காய் எண்ணெயில் செய்த உணவுகளின் வாசமும், பரோட்டாவின் மணமும் நம் பசியைத் தூண்டியது. கேரள பரோட்டா, சிக்கன் கிரேவி, நெய்ச் சோறு, ஸ்பெஷலாகக் கிடைக்கும் வெள்ளைக் குஸ்கா, கேரளாவின் பாரம்பர்யமான மீன் பொழிச்சது என வகை வகையாக ஆர்டர் செய்தோம்.
கேரளா மெஸ்
கேரளா மெஸ்

கேரளாவுக்குச் சிலமுறை சென்றிருந்த அனுபவமிருந்ததால், சாப்பிட்டு முடித்தபின் உண்மையிலேயே கேரளா சென்று சாப்பிட்ட உணர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது. பில்லைப் பார்த்தால் இன்னும் ஆச்சர்யம்... விலை நாம் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரளா மெஸ்ஸின் இந்தச் சுவை குறித்தும், எப்படித் திருச்சியில் கேரளா மெஸ் உருவானது என்பது குறித்தும் நிர்வாகிகளில் ஒருவரான ஷிஹாப்-பிடம் பேசினோம், மலையாளம் கலந்த தமிழில் அழகாகப் பேசினார்.

உரிமையாளர் ஷிஹாப்
உரிமையாளர் ஷிஹாப்
உணவு வகைகள்
உணவு வகைகள்

”எங்களுக்குச் சொந்த ஊரு கேரளாவிலே இருக்குற பாலக்காடு. இன்னமும் எங்க குடும்பத்துல எல்லாரும் அங்கதான் இருக்காங்க. எங்க அப்பாவும், சித்தப்பாவும் 1980-கள்ல ஜோலி (வேலை) விஷயமா இங்க வந்தவங்க, இந்த நாட்டுலயே (இங்கேயே) தங்கியிருக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்போதான், சிங்காரத்தோப்புல இருக்கிற ஒரு சின்ன சந்துக்குள்ளே, சின்னதா கிடைச்ச கடையில கேரளா மெஸ் ஆரம்பிச்சு, கேரளாவில கிடைக்கிற பாரம்பர்ய உணவுகளை மட்டும் சமைச்சு விற்க ஆரம்பிச்சாங்க.

மக்களுக்கு அந்த உணவு வகைகள் பிடிச்சுப்போனதனால, தொடர்ந்து நம்ம கடையை இன்னும் கொஞ்சம் விரிவாக்கினோம். நாங்க கொடுக்குற உணவுகளின் தரம், உணவுப் பொருள்களில் நாங்க சேர்க்குற சுத்தமான மசாலா எல்லாம் மக்களுக்கு நல்லா ரீச் ஆயிடுச்சு.

கேரளா மெஸ்
கேரளா மெஸ்

சாப்பாட்டு அரிசி தரமா இருக்கணும்கிறதுதான் எங்களோட முக்கிய கண்டிஷன். அதனால, அதிகமா சீரகச்சம்பா அரிசியையே பயன்படுத்துறோம். அதுவும் கேரளாவுலே இருந்துதான் இங்க எடுத்துட்டு வர்றோம். மசாலா, நெய்யும் கேரளால வீட்டுலயே தயாரிக்கிறதுதான்.

சிக்கன்
சிக்கன்

அதனாலதான், எங்க சாப்பாடு ரொம்ப சுவையா இருக்கும். குறிப்பா, கேரளாவோட பாரம்பர்யச் சுவை கொஞ்சமும் குறையாம இருக்கணும்னு, சமையல் செய்ற செஃப்களைக்கூட கேராளவுல இருந்துதான் கூட்டிட்டுவருவோம். சிக்கன் பிரியாணி 130 ரூபாய், பீப் பிரியாணி 110 ரூபாய். ஆவரேஜ் விலையிலேதான் கொடுக்குறோம். ஏன்னா... பணம் குறைவா இருக்கிறவங்களும் நம்ம கடைல சாப்பிடணும்னு நினைக்குறோம்.

1980-ல அப்பாவும் சித்தப்பாவும் ஆரம்பிச்ச இந்த ஹோட்டலை, இப்போ எட்டு வருஷமா நானும், என் சகோதரரும்தான் பார்த்துக்கிட்டு இருக்கோம். நாங்க எல்லாரும் படிச்சிட்டு வேற வேற வேலைக்குப் போனோம்.

கேரளா மெஸ் வாடிக்கையாளர்கள்
கேரளா மெஸ் வாடிக்கையாளர்கள்

ஆனா, அப்பாவுக்கு அடுத்து கடையைப் பார்த்துக்கணும், அதேபோல உணவை ரொம்பத் தரமா கொடுக்கணும்னு வேலையை விட்டுட்டு, இங்க வந்து இருந்து ஹோட்டலை நடத்திட்டு வர்றோம். கடந்த 30 வருஷத்துல திருச்சியில இருக்குற மக்கள் மட்டுமல்லாம, நெறைய அரசியல், சினிமா பிரபலங்கள்னு இங்க வந்து சாப்பிட்டு எங்க உணவைப் பாராட்டியிருக்காங்க" என்கிறார் பெருமிதத்துடன்.

பல ஆண்டுகளாக சின்னச் சந்தில் உள்ள மாடியில் மெஸ்ஸை நடத்திவந்தவர்கள், தற்போது அருகிலேயே ஒரு கிளை ஆரம்பித்துள்ளனர். திருச்சியில் மட்டுமே மூன்று கிளைகள் உள்ளன. தற்போது இவர்களின் ஹோட்டல் கிளைகளை தந்தை, இரண்டு சகோதரர்கள், சித்தப்பா என இவர்களின் உறவினர்களே நிர்வகித்து வருகின்றனர்.

மீன்
மீன்

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இதன் கிளை தொடங்க அனுமதி கேட்டும் மறுத்துவிட்டதாகச் சொல்கின்றனர். இவர்களின் சொந்த மாநிலமான கேரளாவில்கூட இவர்களுக்குக் கிளை இல்லை. "வேறு ஊர்களில் ஏன் கிளை ஆரம்பிக்கவில்லை?" எனக் கேட்டதற்கு, "தமிழகம் போல வேறு எங்கும் சுதந்திரமாக, அமைதியாகத் தொழில் செய்ய முடியாது. குறிப்பாக, திருச்சி மாதிரியான ஊரை விட்டுவிட்டு வேறு எங்கும் செல்ல எங்களுக்கு மனம் இல்லை. லாபம் குறைவாகக் கிடைத்தாலும் திருச்சியில் மட்டுமே இருக்கலாம் என்று முடிவு செய்துவிட்டோம்” என நெகிழவைத்தார்.

கேரளா மெஸ்ஸின் சுவை குறித்து சாப்பிட வந்திருந்த திவாகரிடம் பேசினோம், "நான் திருச்சியில இருக்கிறேன். எங்க சாப்பாடு டேஸ்ட்டா இருந்தாலும் அங்க தவறாமப் போய்டுவேன். அப்படிதான் சும்மா ட்ரை பண்ணலாம்னு கேரளா மெஸ் வந்தேன்.

கேரளா மெஸ் வாடிக்கையாளர்கள்
கேரளா மெஸ் வாடிக்கையாளர்கள்

இங்க டேஸ்ட் பிடிச்சுப்போனதால் திரும்பத் திரும்ப இங்க வர ஆரம்பிச்சிட்டேன். எனக்கு இங்க பிடிச்சதே கேரளா பரோட்டாவும், அதுகூட தொட்டுக்க வாங்குற சிக்கன் அல்லது பீப் கிரேவியும்தான். ரெண்டும் டேஸ்ட்டுல வேற லெவல். வேற எதனாலயும் இதோட டேஸ்ட்ட அடிச்சிக்கவே முடியாது.

கேரளா மெஸ்
கேரளா மெஸ்

அடுத்து இவங்க பண்ற பிரியாணி, மசாலா வாசத்தோட சூடா சாப்பிட்டா அவ்வளவு அருமையா இருக்கும். அப்புறம் மத்த கிரேவி, கேரளால மட்டுமே நாம சாப்பிட முடியிற மீன் பொழிச்சதுன்னு, கேரள வகை உணவை வகைதொகை இல்லாம திருச்சிலேயே சாப்பிடலாம்'' என்று அடுக்கிக்கொண்டே செல்கிறார் திவாகர்.

கேரளா மெஸ்
கேரளா மெஸ்
கேரளச் சாப்பாடு வேணும்னா கேரளா மெஸ்ஸ மிஸ் பண்ணிடாதீங்க!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism