Published:Updated:

திருச்சி ருசி: "எம்.சி.ஏ படிச்ச மனைவி சொன்ன மெஸ் ஐடியா!"- அசைவத் தொக்குகளில் அசத்தும் சேதுராம் மெஸ்!

திருச்சி சேதுராம் மெஸ்

திருச்சி ருசி: சிக்கன், மட்டன், இறால், கருவாடு, நண்டு என அனைத்துமே குழம்பாக இல்லாமல், தொக்காகவும் செய்து கொடுப்பதுதான் இங்கு ஸ்பெஷல்.

திருச்சி ருசி: "எம்.சி.ஏ படிச்ச மனைவி சொன்ன மெஸ் ஐடியா!"- அசைவத் தொக்குகளில் அசத்தும் சேதுராம் மெஸ்!

திருச்சி ருசி: சிக்கன், மட்டன், இறால், கருவாடு, நண்டு என அனைத்துமே குழம்பாக இல்லாமல், தொக்காகவும் செய்து கொடுப்பதுதான் இங்கு ஸ்பெஷல்.

Published:Updated:
திருச்சி சேதுராம் மெஸ்
அசைவ சாப்பாடுன்னாலே அலாதி ருசி. அதுலயும், பாரம்பர்யமான மணக்கும் 'மண் பானை'யில் சமைத்து ஆவி பறக்க ரசிச்சு ருசிச்சு சாப்பிடணும்னு நினைக்குறவங்க, திருச்சியில மிஸ் பண்ணக்கூடாத முக்கியமான இடம் 'சேதுராம் மெஸ்'. திருச்சியில இருக்குற சாப்பாட்டுப் பிரியர்கள் மட்டுமில்லாம மத்த ஊரு சாப்பாட்டுப் பிரியர்களும் இந்த மெஸ்ஸை புகழ்ந்துச் சொல்ல, ஒரு மதிய நேரத்தில் சேதுராம் மெஸ்ஸுக்குச் செல்ல முடிவெடுத்தோம்.
சேதுராம் மெஸ்
சேதுராம் மெஸ்

பல ஆண்டுகளாக இயங்கிவரும் ஹோட்டலே மக்கள் மனதில் இடம்பிடிப்பது என்பது கஷ்டமானது என்னும் சூழலில், ஐந்து வருடத்திற்கு முன் தொடங்கிய ஒரு மெஸ், அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருப்பது நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. அதனால், வேறு யோசனையேயின்றிக் கிளம்பினோம். நாம் கிளம்பிய நேரத்தில் மழையும் வரவே, அந்த இதமான சூழலில் சிறிது நேரத்தில் மெஸ்ஸை அடைந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் என எந்தப் பேருந்து நிலையத்தில் இறங்கினாலும், 20 நிமிடத்தில் புத்தூர் சென்றுவிடலாம். அங்கிருந்து சில மீட்டர் தொலைவிலேயே உள்ளது சேதுராம் மெஸ். மாடியில் உள்ள மெஸ்ஸிற்கு படிகளில் ஏறிச் செல்லச்செல்ல அங்குத் தயார் செய்யப்படும் அசைவத் தொக்குகளின் வாசமே நம்மை வேக வேகமாகப் படியேற வைத்தது.

கோலா உருண்டை
கோலா உருண்டை

கூட்டம் அதிகமாக இருக்க, சிறிது நேரம் காத்திருந்துவிட்டு மேசை காலியானதும் அங்குச் சென்று அமர்ந்தோம். இங்கு முழு சாப்பாடு மட்டுமே கிடைக்கும் என்பதால் அதனை ஆர்டர் செய்தோம். அங்கிருக்கும் பணியாளர்களின் உபசரிப்பு நம்மை ஆச்சரியப்படுத்தியது. நல்ல சுடச்சுட அசைவத் தொக்குகளை அவர்கள் மண்பானையில் கொண்டுவந்து வாழை இலையில் பரிமாற, அதன் மணம் நம்மைச் சுண்டி இழுத்தது.

சிக்கன், மட்டன், இறால், கருவாடு, நண்டு என அனைத்துமே குழம்பாக இல்லாமல், தொக்காகவும் செய்து கொடுப்பதுதான் இங்கு ஸ்பெஷல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுவும் மண்பானையில் பரிமாறும்போது, சுவை இன்னும் அதிகமாகவே இருந்தது. வெளியே மழையின் சாரலுடன், சாப்பாட்டை நமக்குப் பார்த்துப் பார்த்து பரிமாற அளவில்லாமல் உள்ளே இறங்கியது. கூடவே ரசம், பொரியல், தயிர் என அனைத்தும் கொடுத்த சுவை எல்லாம் வேற லெவலில் அல்டிமேட்டாக இருந்தது.

திருச்சி சேதுராம் மெஸ்
திருச்சி சேதுராம் மெஸ்

அதுவும் அந்தக் கருவாட்டுத் தொக்கு நம் வீட்டில் நம்முடைய பாட்டி மசாலா அரைத்துச் செய்து தரும் கருவாட்டுத் தொக்கின் சுவையை நினைவூட்டியது. மீனும், கோலா உருண்டையும் இங்கு ஸ்பெஷல். மேலே நல்ல மொறுமொறு என கிரிஸ்பியாகவும், உள்ளே இறைச்சி நன்றாக வெந்தும் சுவையைத் தூக்கிக் கொடுத்தது. கூடவே மீன் வறுவல், சிக்கன் வறுவல் என எல்லாவற்றையும் ஒரு பிடி பிடித்தோம். சுவை மட்டுமில்லாமல், விலையும் நம்மை ஆச்சரியப்படுத்தியது.

பணத்தைக் கொடுத்துவிட்டு கடையின் நிர்வாகி விமலிடம் பேசினோம். ”இந்தக் கடை, குறுகிய காலத்துல நல்ல பெயர் எடுத்திருக்குன்னா அதுக்கு காரணம் என் மனைவி காந்தலட்சுமிங்க. எம்.சி.ஏ படிச்சிட்டு படிச்சப் படிப்புக்கு வேலைக்குப் போகாம சமையல் சமையல் மீதுள்ள அதீத காதலால், 'ஒரு மெஸ் ஆரம்பிக்கலாம்' என்றுச் சொல்ல, கடந்த 2016-ம் ஆண்டு இந்த மெஸ்ஸை ஆரம்பிச்சோம்.

நிர்வாகி விமல்
நிர்வாகி விமல்

எங்களுக்கான இந்தச் சொந்த இடமும், சும்மாவே இருந்ததால் அதையே மெஸ் ஆரம்பிக்கப் பயன்படுத்திக்கிட்டோம். காரைக்குடி பக்கத்துல ஒரு பாட்டி தொக்கு ஸ்டைல்ல கறி குழம்புகளை செய்வாங்க. அதோட டேஸ்ட் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால், அந்த ஸ்டைல்ல நாமளும் அசைவ உணவுகளை தொக்கு போல செய்து கொடுக்க ஆரம்பிச்சோம்.

அதோட டேஸ்ட், மக்களுக்குப் புதுசா மட்டும் இல்லாம ரொம்ப ஈர்க்கும் ஒன்றாவும் இருந்ததுனால மக்களுக்கும் ரொம்ப் புடிச்சிப் போச்சு. அதனால நம்மளயே ரெகுலராத் தேடி வர ஆரம்பிச்சாங்க. நம்மளோட உபசரிப்பும் நல்லா இருக்கும்ங்கிறனால ஒருமுறை வந்தவங்க அடிக்கடி வர ஆரம்பிச்சாங்க. பெருசா எந்த விளம்பரமும் பண்ணல.

வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளர்கள்

உபசரிப்புலயும், உணவுலயும் குறை இல்லாம மக்களுக்கு கொடுக்கணும்னு நினைக்குறோம். அதான் மக்கள் நம்ம கடையைத் தேடி வர ஆரம்பிச்சிட்டாங்க" என்றவர், மெஸ்ஸின் உணவுகளின் சுவைக்கான காரணங்களைச் சொல்ல ஆரம்பித்தார். "வீட்டுலயே சுத்தமா நாங்களே அரைச்சி வைக்குற மசாலாவும், இங்க பக்குவமா வேலை செய்யுற பெண்களும்தான் எங்க மெஸ்ஸின் சிறப்பும் பலமும்.

எங்களது கடையிலிருந்து அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் என பலருக்கும் பார்சல்கள் செல்கின்றன. தினமும் 200 முதல் 250 பேர் வரை மெஸ்ஸிற்கு வருகின்றனர். இதில் பலரும் ரெகுலர் வாடிக்கையாளர்களே!
திருச்சி சேதுராம் மெஸ்
திருச்சி சேதுராம் மெஸ்

மண்பானையின் சுவையும், மணமும் நம்மைக் கட்டிப் போடும் என்பதால் ஆரம்பத்திலிருந்தே மண்பானையில்தான் பரிமாறுகிறோம். மக்களின் தேவையும், எங்களின் தொழில் தர்மமும் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை எங்களின் நினைவில் வைத்துக்கொண்டே சமைக்கிறோம்" என்கிறார்.

சேதுராம் மெஸ்ஸின் கஸ்டமரான மகேஷிடம் பேசினோம். "நான் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனக்கு உணவுனாலே கொள்ளை பிரியம், யாருக்குத்தான் இருக்காது சொல்லுங்க.

திருச்சி சேதுராம் மெஸ்
திருச்சி சேதுராம் மெஸ்

அப்படி சாப்பாடு மேல பிரியமா இருக்க யாரா இருந்தாலும் கண்டிப்பா அவங்களுக்கு இந்த மெஸ் ஒரு வரப் பிரசாதம் தாங்க. இவங்க மெஸ் பத்தி மத்தவங்க சொல்றத கேட்டுட்டுத்தான் இங்க சாப்பிட வந்தேன்.

திருச்சி சேதுராம் மெஸ்
திருச்சி சேதுராம் மெஸ்

உண்மையிலேயே சாப்பாடுலாம் ரொம்ப டேஸ்ட்ங்க. அதும் அசைவத் தொக்கு எல்லாமே சாப்பாட்டை அளவு தெரியாம சாப்பிட வைக்கும். இங்க பரிமாறுறவங்க இன்னும் கொஞ்சமா சாதம் வாங்கிக்கோங்கனு நம்மள சாப்பட வச்சி சந்தோஷப்படுத்துவாங்க பாருங்க... அதெல்லாம் எந்த ஹோட்டல் போனாலும் நம்மளால அனுபவிக்க முடியாதது.

திருச்சி சேதுராம் மெஸ்
திருச்சி சேதுராம் மெஸ்

எந்த மசாலாவும் அதிகமா இல்லாம தேவைக்கு ஏத்தமாதிரி இருக்கும். இங்கு சாப்பிட்டா எந்த ஒரு நெஞ்செரிச்சல், ஏப்பம், தொடர்ந்த தண்ணீர் தாகம் இதெல்லாம் இருக்காது. வயிறு மேல அக்கறை இருக்குறவங்க பயமே இல்லாம இங்க சாப்பிடலாம். காரமும், உப்பும் தேவையான அளவுல இருந்து நம்மல சாப்பாட்டுல இருந்து போகஸை எடுக்கவே வைக்காது" என்றார்.

சேதுராம் மெஸ்ஸோட அசைவத் தொக்குகளின் சுவையை அசைவப் பிரியர்கள் சுவைக்க மறந்துடாதீங்க!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism