Published:Updated:

திருச்சி ஊர்ப்பெருமை: 12 வருடங்களாகப் பலரும் விரும்பும் உழவர் சந்தை கம்மங்கூழ் கடை... என்ன ஸ்பெஷல்?

கம்மங்கூழ் கடை
News
கம்மங்கூழ் கடை

திருச்சியிலும் பல இடங்களில் கம்மங்கூழ் கிடைத்தாலும், உழவர் சந்தையில் தாவூத் பீவியின் கடையில் கிடைக்கும் கம்மங்கூழைத் தேடியே பலரும் வருகின்றனர். அங்கு என்ன ஸ்பெஷல்?

கம்மங்கூழ், கேப்பை கூழ் என கூழ் வகைகளை தேவையில்லை என்று ஒதுக்கிய காலம்போய் தற்போது பலரும் தேடிச் சென்று சாப்பிடும் காலம் வந்துவிட்டது. ஏகப்பட்ட மருத்துவ குணங்களையும், எக்கச்சக்கமான சத்துகளையும் உடலுக்கு தருவதில் இந்த இரண்டு பங்கு வகிப்பதுடன், சமைப்பதற்கு எளிதாக இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் இவை இரண்டும் இன்றும் சமைக்கப்படுகிறது. ஆனால் வீட்டில் இந்த இரண்டு தானியங்களிலும் கூழ் வகைகளை காட்டிலும் தோசை, களி போன்றே செய்யப்படுவதால், உடலுக்கு குளிர்ச்சியும், பலத்தையும் தரும் கூழை வீட்டில் இல்லையென்றாலும், வெளியில் சாப்பிட ஆரம்பித்துள்ளோம்.

கம்மங்கூழ் கடை
கம்மங்கூழ் கடை
DIXITH

நம்முடைய பாட்டி, தாத்தா அவர்களிடம் பேசும்போது, "அந்தக் காலத்துல, இப்போ மாதிரி தினமும் எங்களுக்கு அரிசி சோறுலாம் கிடைக்காது. கூழ்தான்! காலையிலேயே செஞ்சிட்டு வயலுக்கு போயிட்டா வெங்காயத்தோட சாப்பிட அப்படி இருக்கும்! அப்பறம் வேலை முடிச்சி வீட்டுக்கு வரவரைக்கும் பசியே இருக்காது. அதான் கூழோட மகிமை" என ஆச்சர்யமூட்டுவார்கள். இன்றும் பல இடங்களில் சிறிய தள்ளுவண்டிகளில் மோருடனும், மாங்காயுடனும் கூழ் கிடைக்க ஆரம்பித்துள்ளது. எளியவர்களுக்கு பெரும்பாலும் காலை, மதியம் உணவாக இந்தக் கூழ்தான் இன்றும் இருந்துவருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
திருச்சியிலும் பல இடங்களில் கம்மங்கூழ் கிடைத்தாலும், உழவர் சந்தையில் தாவூத் பீவியின் கடையில் கிடைக்கும் கம்மங்கூழைத் தேடியே பலரும் வருகின்றனர். 12 வருடத்திற்கும் மேலாக கம்மங்கூழ் கடையை ஒரே இடத்தில் நடத்தி வருகிறார். இவரின் கடைக்குப் பலரும் தேடி வருவதற்குக் காரணமே இவரின் சுத்தமான அணுகுமுறையே!

காலை ஆறு மணிக்கே கடை ஆரம்பித்தாலும் ஒரு மணிக்குள் அனைத்தும் முடிந்துவிடுகிறது. இதற்காக அதிகாலை இரண்டு மணிக்கே தன் பணியைத் தொடங்குகிறார் தாவூத் பீவி. கணவரை இழந்த நிலையில், தன் 11ஆம் வகுப்பு படிக்கும் மகனை உதவிக்குக் கொண்டு ஆறு மணிக்குக் கடையை ஆரம்பித்துவிடுகிறார். நாம் காலை 10 மணிக்குச் செல்ல, அங்கு கடையை மறைத்தபடி மக்கள் கம்மங்கூழ் பருகி கொண்டிருந்தனர். கம்மங்கூழ் சொம்புடன், கைகளில் சிறிய தட்டுடன் மக்கள் நின்றிந்தனர். கூழுக்கு எதற்கு தட்டு எனக் கேட்கிறீர்களா... நாமும் அந்தச் சந்தேகத்துடனே அருகில் சென்றோம், பெரும்பாலும் கம்மங்கூழ் கடைகளில் கூழுக்கு கொடுக்கும் தொட்டுகைகளை அப்படியே எடுத்து சாப்பிடுவோம். ஆனால், அப்படிச் செய்வதில் சுத்தம் காலியாகும் வாய்ப்புள்ளது என்பதால் சிறிய தட்டுகளில் வைத்து கொடுக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக மண் பானைகளில் வைத்துதான் கொடுப்பார்கள், இங்கு அனைத்துமே எவர்சில்வர் பாத்திரத்திலேயே இருந்ததால் சுவையில் சந்தேகம் இருந்தது. ஆனால், வெங்காயம் வேண்டுமா எனக் கேட்டு வேண்டும் என்றதும் கூழுடன் சேர்த்து வெங்காயத்தையும் கலந்து கொடுத்தனர். அதனை வீட்டிலேயே தயார் செய்யும் மோர் மிளகாயுடன் குடிக்கையில் சுவை பல மடங்கு இருந்தது! கூழ், இதமாக வயிற்றுக்குள் செல்வதை அப்படியே உணர முடிந்தது.

கொத்தவரை வத்தல், மிளகாய், உருளைக்கிழங்கு, மாங்காய் என ஒவ்வொரு தொட்டுகைகளுடனும் குடித்து முடிக்க வயிறும் போதும் என்றது. ஆனாலும் குறைவில்லாமல் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. இவர் கடையின் சுத்தம், சுவைக்காவே தினமும் 200 பேர் வரை இங்கு வருகின்றனர் என்கிறார் தாவூத் பீவி. தொடர்ந்து அவர் பேசுகையில்,

தாவூத் பீவி
தாவூத் பீவி
DIXITH

"என் வீட்டுக்காரர் கூட சேர்ந்து இந்தக் கடையை ஆரம்பிச்சோம். அவர் 5 வருசத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு. ஆனாலும் தொடர்ந்து இந்தக் கடையை நடத்த ஆரம்பிச்சேன். இரண்டு குழந்தைங்க இருக்காங்க, இந்தக் கடையை வச்சிதான் அவங்களை வளர்க்குறேன். எங்களுக்கு வாழ்வளிக்குற தொழில் இது! அதுனாலயே பண்றத ரொம்ப சரியா பண்ணனும்னு நினைச்சி பண்றோம்" என்கிறார்.