Published:Updated:

திருச்சி ருசி: வித்தியாசமான மசால் தோசை, வெண்ணெய் சேர்த்த பரோட்டா... இது குருக்ருபா ஹோட்டல் ஸ்பெஷல்!

குருக்ருபா ஹோட்டல் மசாலா தோசை

முட்டை, டால்டா, பாமாயில் எதுமே பயன்படுத்தாமல், 'வெண்ணெய்' மட்டுமே சேர்த்துச் செய்யப்படும் இவர்களின் பரோட்டா, பன் பரோட்டா எல்லாமே வேற மாதிரியான சுவையில் அற்புதமாகவும் சுத்தமாவும் இருந்தன.

திருச்சி ருசி: வித்தியாசமான மசால் தோசை, வெண்ணெய் சேர்த்த பரோட்டா... இது குருக்ருபா ஹோட்டல் ஸ்பெஷல்!

முட்டை, டால்டா, பாமாயில் எதுமே பயன்படுத்தாமல், 'வெண்ணெய்' மட்டுமே சேர்த்துச் செய்யப்படும் இவர்களின் பரோட்டா, பன் பரோட்டா எல்லாமே வேற மாதிரியான சுவையில் அற்புதமாகவும் சுத்தமாவும் இருந்தன.

Published:Updated:
குருக்ருபா ஹோட்டல் மசாலா தோசை
திருச்சி, ஸ்ரீரங்கம் ஆன்மிகச் சுற்றுப்பயணம் வருபவர்கள் திருச்சி ரெங்கநாதரை தரிசித்துவிட்டு, அப்படியே 'குருக்ருபா' ஹோட்டலில் சைவ பன் பரோட்டா, மைசூர் மசால் தோசைக்குச் சின்ன வெங்காய சாம்பார், காரச் சட்னி, தேங்காய்ச் சட்னி ஆகியவற்றை சைடிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா?

'சாப்பிட்டுப் பாருங்க, அப்புறம் தெரியும்' என உணவுப் பிரியர்கள் சிலாகித்துப்பேச, மசால் தோசையைச் சாப்பிட்டாலே சுவை அள்ளும் என்ற விவரமும் நமக்குள் ஆர்வத்தைத் தூண்டிவிட, வண்டியை நேராக 'குருக்ருபா' ஹோட்டல் நோக்கி விட்டோம்.

குருக்ருபா ஹோட்டல் உணவுகள்
குருக்ருபா ஹோட்டல் உணவுகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீரங்கம் பஸ் நிறுத்தத்திற்கு அருகிலேயே இருப்பதால், எங்கேயுமே தேட விடாமல் குருக்ருபா ஹோட்டல் உணவுகளின் வாசனையும் நம்மை ஹோட்டலுக்குள் இழுத்தது. நேராகக் கடைக்கு முன் சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றால், ஆதிகாலத்தில் இருக்கக்கூடிய ஒய்யார அமைப்புடன், அழகிய வேலைப்பாட்டுடன், பழைய காலத் தூண்களுடன் எழுப்பப்பட்ட பாரம்பர்யமான வீடு நம்மை வரவேற்கிறது.

சைவ பரோட்டா
சைவ பரோட்டா

கூடவே, ஹோட்டல் உரிமையாளரின் வரவேற்பும் உபசரிப்பும். ஹோட்டல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற நமது பல யோசனைகளைத் தவிடுபொடியாக்கிப் பூரிப்பை ஏற்படுத்தியது அவரின் உபசரிப்பு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நமக்கான மேசையைப் பிடித்து அமர்ந்தோம். குருக்ருபா ஹோட்டலின் சிறப்பாக அனைவரும் கூறுவது மைசூர் மசால் தோசை, ரவா தோசை, சைவ பரோட்டா ஆகியவற்றைத்தான். இவை அனைத்தையும் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம். சரியாக மூன்று நிமிடங்களில் நமக்கு உணவை மிகச் சூடாக ஆவி பறக்கப் பரிமாறினார்கள். வீட்டிலேயே பதமாகத் தயாரித்த மாவை நல்ல சூடான கல்லில் இட்டு, மேலே காரமாகச் செய்யப்பட்ட சட்னியைப் பரப்பி, அதில் ஸ்பெஷலாகச் செய்யப்பட்ட மசாலாவைச் சேர்த்து வேற லெவல் டேஸ்ட்டில் கொடுத்திருந்தார்கள். மற்ற கடை மசால் தோசைகளில் இருந்து இது நிறையவே மாறுபட்டிருந்தது.

குருக்ருபா ஹோட்டல் கொத்து பரோட்டா
குருக்ருபா ஹோட்டல் கொத்து பரோட்டா

தோசைக்குச் சின்னவெங்காய சாம்பார், காரச் சட்னி, தேங்காய்ச் சட்னி ஆகியவற்றை சைடிஷ்ஷாகக் கொடுத்தாலும், வெறும் மசால் தோசையாகச் சாப்பிட்டாலே அமிர்தமாக இருந்தது.

பன் பரோட்டா
பன் பரோட்டா

உண்மையிலே சுவை ரொம்ப அற்புதம்ங்க... கூடவே அந்தச் சைவ பரோட்டா! முட்டை, டால்டா, பாமாயில் எதுமே பயன்படுத்தாமல், 'வெண்ணெய்' மட்டுமே சேர்த்துச் செய்யப்படும் இவர்களின் பரோட்டா, பன் பரோட்டா எல்லாமே வேற மாதிரியான சுவையில் அற்புதமாகவும் சுத்தமாவும் இருந்தன.

சாப்பிட்டுவிட்டு பில்லைக் கொடுத்துவிட்டு, கடையின் உரிமையாளர் துவாரகநாத்திடம் பேசினோம், "எனக்குப் பூர்வீகம் தேனி பக்கத்துல இருக்குற சின்ன ஊர். எங்க அப்பா காலத்துல இங்க (ஸ்ரீரங்கம்) வந்துட்டோம். என் மனைவிக்கும் இதே ஸ்ரீரங்கம்தான் சொந்த ஊர். எங்களுக்கு இரண்டு பெண், ஒரு பையனும் இருக்காங்க.

கடை உரிமையாளர் துவாரகநாத் குடும்பம்
கடை உரிமையாளர் துவாரகநாத் குடும்பம்

கிட்டத்தட்ட 25 வருசமா நானும் என் மனைவியும் சேர்ந்து ஒண்ணாதான் கேட்டரிங் நடத்திட்டு வர்றோம். முதல்ல வீட்டிலேயே வாடிக்கையாளர்களுக்கு சமைச்சுக் கொடுத்துட்டு வந்தோம். நல்ல சாப்பாடு கொடுக்குற நீங்க ஏன் ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கக்கூடாது என வாடிக்கையாளர்கள் பலரும் கேட்டனர். அவர்கள் கொடுத்த அழுத்தத்தால் உருவானதுதான் இந்த 'குருக்ருபா ஹோட்டல்.' இப்போ குடும்பமாச் சேர்ந்து ஹோட்டல் வச்சி நடத்திட்டு வர்றோம்.

இங்க வேலை செய்யுற பலரும் நம்ம குடும்பத்துல இருக்குறவங்கதான். என் மனைவி ஜெயலட்சுமிதான் எல்லாத்தையும் நிர்வகிக்குறாங்க. காலையில ஏழு மணிக்கு ஆரம்பிக்குற கடை, இரவு 10 மணி வரை இயங்கும். காலையில டிபன், மதியம் சாப்பாடு, ஈவ்னிங் டிபன்னு தொடர்ந்து இயங்கிட்டே இருக்கும். தினமும் ஒரு வகைக் குழம்பு, தினமும் ஒரு வகை ரசம்னு கஸ்டமர் விருப்பதுக்கு ஏத்த மாதிரி சமைப்போம்.

முக்கியமா சாப்பாடு மட்டுமல்லாம, தனியா யாராவது குழம்பு, பொரியல்னு கேட்டா அதையும் தனியாக் கொடுப்போம். முக்கியமா பெரும்பாலும் முட்டை சேர்க்காம யாரும் பரோட்டா செய்ய மாட்டாங்க. ஆனா, இங்க முட்டைக்கு பதிலா வெண்ணெய் சேர்த்து பரோட்டா செய்யுறோம். அதுல பன் பரோட்டா, கொத்து பரோட்டான்னு வெரைட்டியாவும் கொடுக்குறோம்.

குருக்ருபா ஹோட்டல்
குருக்ருபா ஹோட்டல்

தொடர்ந்து எந்தக் கலப்பட எண்ணெயும் பயன்படுத்தாம செக்குல ஆட்டுற நல்லெண்ணெய், கடலெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், வீட்டுல உருக்குற நெய், வெண்ணெய் இதெல்லாம்தான் பயன்படுத்துறோம். இதான் நம்ம கடையை மக்கள் தேடி வாரத்துக்கு ஒரே காரணமா இருக்குது" என்றார் மகிழ்ச்சி பொங்க.

கடைக்குச் சாப்பிட வந்திருந்த தெய்வநாயகத்திடம் பேசினோம். "எனக்குப் பெரும்பாலும் வெளியில சாப்பிட்டே பழக்கமாயிடுச்சி. 10 வருசமா வெளியில சாப்புடுறேன். ஆனா, இங்க கிடைக்குற டேஸ்ட் எங்கேயுமே அனுபவிச்சதில்ல. உண்மையாவே ரொம்ப அருமையா, சுத்தமா இருக்கும். வயித்துக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. புகைச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல் எதுமே இருக்காது.

குருக்ருபா ஹோட்டல் வாடிக்கையாளர்கள்
குருக்ருபா ஹோட்டல் வாடிக்கையாளர்கள்

அதேபோல இங்கு கிடைக்கிற பன் பரோட்டா, மசால் தோசைக்கு நான் அடிமைங்க. காரம், உப்பு எல்லாமே அளவா இருக்கும். மதிய சாப்பாடுக்கு இவங்க தர்ற பொரியல், கூட்டு எல்லாமே அளவா இல்லாம எவ்ளோ கேட்டாலும் கொடுத்துட்டே இருப்பாங்க. தினமும் தக்காளி - பூண்டு ரசம், மைசூர் ரசம், கல்யாண ரசம்னு எல்லாமே நல்லாருக்கும். இந்த ரசத்துக்காகவே மதியம் கணிசமான கூட்டம் வரும்" என்றார்.

சாம்பார் இட்லி
சாம்பார் இட்லி
காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளைகளில் ஸ்ரீரங்கத்தில் உணவு உண்ண ஏதுவான இடமாக இருக்கிறது இந்த 'குருக்ருபா' ஹோட்டல். திருச்சி, ஶ்ரீரங்கம் வர்றவங்க மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்!