Published:Updated:

திருச்சி ருசி: பாம்பே காஜா, பன் அல்வா, அக்கார அடிசில் - 3 மணிநேரம் மட்டுமே இயங்கும் வெங்கடேச பவன்!

வெங்கடேச பவன்

தினம் ஒரு ஸ்பெஷல்தான் இங்கு ஸ்பெஷல். காலையில் மட்டுமே கிடைக்கும் என நாம் நினைத்த ரவா பொங்கல், தோசை, பூரி, இட்லி, தயிர்வடை, சாம்பார் வடை என எல்லாமே மதிய நேரத்திலும் இங்கு கிடைத்தன.

திருச்சி ருசி: பாம்பே காஜா, பன் அல்வா, அக்கார அடிசில் - 3 மணிநேரம் மட்டுமே இயங்கும் வெங்கடேச பவன்!

தினம் ஒரு ஸ்பெஷல்தான் இங்கு ஸ்பெஷல். காலையில் மட்டுமே கிடைக்கும் என நாம் நினைத்த ரவா பொங்கல், தோசை, பூரி, இட்லி, தயிர்வடை, சாம்பார் வடை என எல்லாமே மதிய நேரத்திலும் இங்கு கிடைத்தன.

Published:Updated:
வெங்கடேச பவன்

ஸ்ரீ வெங்கடேசபவன் ஹோட்டலுக்கும் திருச்சிக்கும் 80 ஆண்டுக்கால பந்தம் இருக்கிறது. இந்தக் கடையைப் பற்றித் தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது.

"மறைந்த அரசியல் கட்சித் தலைவர்களான ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், கக்கன் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவருமே எங்கள் கஸ்டமர்கள்தான்" என்கிறார்கள் கடை உரிமையாளர்கள். முக்கியமாக மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை மூன்றே மணிநேரம் மட்டுமே இந்த ஹோட்டல் இயங்குகிறது. அதுவும் அசத்தலான டிபன் அயிட்டங்கள் மட்டுமே கிடைக்கும் எனப் புகழ்ந்துதள்ளுகிறார்கள் உணவுப் பிரியர்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்துடன் ஸ்ரீரங்கம், ரங்க கோபுரம் அருகேயுள்ள ஹோட்டலைத் தேடிபிடித்து அமர்ந்தோம்.

வெங்கடேச பவன்
வெங்கடேச பவன்

நாம் எங்கு, எந்த உணவகத்திற்குச் சென்றாலும், முதலில் நமக்கு ஆசுவாசத்தைத் தரக்கூடியது கடையின் உணவோ, அவற்றின் விலையோ இல்லை. கடையின் அமைப்பும், அவர்களின் உபசரிப்பும்தான். இங்கு அந்த இரண்டுக்கும் பஞ்சமே இல்லை. 80 வயதிற்கு மேற்பட்ட இரண்டு பேரும், அவர்களின் அண்ணன் பையன் ஒருவரும்தான் இந்த வெங்கடேச பவனை நடத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெங்கடேச பவன் வாடிக்கையாளர்கள்
வெங்கடேச பவன் வாடிக்கையாளர்கள்
தினம் ஒரு ஸ்பெஷல்தான் இங்கு ஸ்பெஷல். காலையில் மட்டுமே கிடைக்கும் என நாம் நினைத்த ரவா பொங்கல், தோசை, பூரி, இட்லி, தயிர்வடை, சாம்பார் வடை என எல்லாமே மதிய நேரத்திலும் இங்கு கிடைத்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாம் சென்றது திங்கள்கிழமை என்பதால் அன்றைக்கு ஸ்பெஷலான ’இடியாப்ப சேவை’ இருக்கிறது எனக் கூறினார்கள். இடியாப்பம் கேள்விப்பட்டிருப்போம், அது என்ன இடியாப்ப சேவை என நினைத்துக்கொண்டே இருக்க, "சாதாரணமாக இடியாப்பம் பச்சரிசி மாவில் செய்வார்கள், ஆனால் சேவை என்பது புழுங்கலரிசியில் மாவு ஆட்டி செய்வது" என அதற்கான விளக்கத்தையும் சொன்னார்கள்.

வெங்கடேச பவன் வாடிக்கையாளர்கள்
வெங்கடேச பவன் வாடிக்கையாளர்கள்

இடியாப்ப சேவைக்கு சாம்பார், சட்னி என அவர்கள் கொடுக்கும் தொடுகைகளும் செம டேஸ்ட்டாக இருந்தன. தோசை, ரவா பொங்கல் என அனைத்தும் அருமையாகவே இருந்தது. மதியத்தில் டிபன் சாப்பிட முடியுமா என யோசிப்பவர்கள், யோசிக்காமல் இங்கு வந்துவிடுங்கள். கண்டிப்பாகச் சாப்பிட்டு விடுவீர்கள். அவ்வளவு சுவை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பில்லைக் கொடுத்துவிட்டுக் கடை உரிமையாளர்களில் ஒருவரான செல்வத்திடம் பேசினோம். ”கேரளா அருகேயுள்ள பாலக்காடுதான் எங்களது சொந்த ஊர். 1935-லயே இங்க வந்துவிட்டோம். அப்போ எங்க கொள்ளுத்தாத்தா ஒரு உணவகத்துல வேலை பாத்தாங்க. அப்புறம் ஸ்ரீரங்கம் கோபுர வாசல்ல ஒரு சின்னக் கடையா 1948-ல இந்த ஹோட்டலை ஆரம்பிச்சாங்க. அப்போ, அந்தக் கடை காலையில 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரைக்கும் இயங்கியது.

வெங்கடேச பவன் கடையின் உரிமையாளர்கள்
வெங்கடேச பவன் கடையின் உரிமையாளர்கள்

மதிய நேரத்துல சாப்பாடு கொடுத்தோம். வீட்லயே சமைச்சி நாலணாக்கு விற்பனை பண்ணிட்டிருந்தோம். தொடர்ந்து, 1977-ல ஜனதா சாப்பாடு என்கிற திட்டத்தைக் கொண்டுவந்தது அரசு. ஒரு ரூபாய் சாப்பாடு, அதுவும் சாப்பாட்டை எடைபோட்டுக் கொடுப்பது என்கிற சட்டதிட்டத்தைப் புகுத்தியது. அத்திட்டம் மக்களுக்கும் நமக்கும் எதிரானது என்பதால் கடையை நிறுத்திட்டோம். அதுக்கு அப்புறம் 1980 வரை காலையில 5 மணியிலிருந்து 10 மணி வரையிலும், மதியம் 2 மணியில இருந்து 5 மணி வரையும் மட்டும் கடை இயங்க ஆரம்பிச்சுச்சு.

மாலை நேரத்துல பலகாரம், ஸ்வீட் கொடுக்க ஆரம்பிச்சோம். தற்போது மூணாவது தலைமுறையா நாங்க நடத்திட்டு வர்றோம். எங்க தாத்தாவோட பேரு வெங்கடேச ஐயர். அதனாலயே இந்தக் கடைக்கு, ’வெங்கடேச பவன்’ னு பேரு வச்சு கஸ்டமர்களே கூப்பிட ஆரம்பிச்சாங்க. இப்போ சித்தப்பாக்கள் அனந்த ராமன், ரெங்கநாதன் அவங்களோட சேர்ந்து நானும் ஒண்ணா இந்தக் கடையை நடத்திட்டு வர்றோம். வேற எந்த வேலையாட்களும் இல்லை.

காரணம் என்னன்னா, இங்க வர்றவங்க எல்லாருமே ஒரு உறவா, குடும்பமா மாறிடுறாங்க அவங்களுக்குத் தேவையான உபசரிப்பும் விருந்தோம்பலும் நம்மளால மட்டும்தான் சிறப்பாக் கொடுக்க முடியும். வேலைக்குன்னு ஆள் வச்சா அது அவ்வளவு சரியா வருமான்னு தெரியல அதுனாலயே வேலைக்கு ஆள் வச்சிக்கல நாங்க. அதுனால நாங்க மூணு பேர் மட்டும் இருக்குறதனாலயே மதியம் 3 மணிநேரம் மட்டும் இயங்குற மாதிரி கடையோட நேரத்தை வச்சிட்டோம்.

வெங்கடேச பவன்
வெங்கடேச பவன்

சோலார்ல இருந்து கடைக்குத் தேவையான மின்சாரம் கிடைச்சுடுறதனால கரண்ட் பில் கட்ட வேண்டியதுமில்ல. இடியாப்ப சேவை திங்கள்கிழமை மட்டும் கிடைக்கும். செவ்வாய்க் கிழமை சீரா போளி, புதன்கிழமை கிச்சடி, வியாழக்கிழமை பாம்பே காஜா இல்லன்னா அக்கார அடிசில், வெள்ளிக்கிழமை கோதுமை அல்வா, சனிக்கிழமை கேசரி, ஞாயிற்றுக் கிழமை பன் அல்வா எனத் தினமும் ஒண்ணு கொடுத்துடுவோம். சித்தப்பா செய்யுற கோதுமை அல்வாவை ஒருமுறை சாப்பிட்டுப் பார்த்தா, அடுத்த நாள்ல இருந்து வாடிக்கையாளரா மாறிடுவாங்க.

சாம்பார் வடை
சாம்பார் வடை

நம்ம கடையில கிடைக்குற சாம்பார் வடை, தயிர் வடைன்னா பிரபலங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். குறிப்பா மறைந்த அரசியல் கட்சித்தலைவர்களான ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், கக்கன் போன்றவர்கள் ஸ்ரீரங்கம் வந்தால் நம்ம கடையில் சாப்பிடாமல் போக மாட்டாங்கன்னு எங்க தாத்தா, அப்பா சொல்லிக் கேட்டுருக்கேன். திரைப் பிரபலமான இயக்குநர் வசந்த், அவருக்கு நம்ம கடையின் டிபன்லாம் ரொம்பவே பிடிக்கும். கூடவே தாத்தாச்சாரியர் மாம்பழக்கடைக்கு பக்தவச்சலம் வரும் போதெல்லாம் நம்ம கடைக்கு வந்துவிட்டுதான் போவாராம்” எனப் பூரிக்கிறார்.

தினமும் 200 பேர் வரை இவர்களின் கடையில் சாப்பிடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோனோர் ரெகுலர் வாடிக்கையாளர்களே. குறிப்பாக இவர்கள் கடையின் சாம்பார் வேற லெவல் டேஸ்டில் இருந்தது. ஆனால் இதில் என்ன ஆச்சரியம் என்றால் வெங்காயம், பூண்டு போன்றவை சேர்க்காமல்தான் இவர்கள் பெரும்பாலான உணவுப் பொருள்களைச் சமைக்கின்றனர்.

தொடர்ந்து கடையின் வாடிக்கையாளர்களில் ஒருவரான பூமிநாதனிடம் பேசினோம், ”நான் கிட்டத்தட்ட 30 வருசமா இந்தக் கடையில சாப்பிட்டிருக்கேன். வீட்ல சாப்பிடுற மாதிரியேதான் இருக்கும். இங்க சாப்பிட்டா ரொம்ப சுத்தமா, விலையும் நமக்கு ஏத்த மாதிரி இருக்கும். அதுவும் வெள்ளிக்கிழமை கோதுமை அல்வா கிடைக்கும் பாருங்க, அதுக்கெல்லாம் நான் பெரிய ஃபேன். அப்புறம் இவங்க அக்கார அடிசில் அதோட டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும். இவங்ககிட்ட ரொம்பப் பிடிச்சதே அவங்க உபசரிப்புதான். ரொம்ப நாளா வரவங்களா இருக்கட்டும், இல்லை இன்னைக்குப் புதுசா வரவங்களா இருக்கட்டும், எல்லாருக்கும் ஒரேபோலதான் உபசரிப்பு இருக்கும்.

வெங்கடேச பவன் வாடிக்கையாளர்கள்
வெங்கடேச பவன் வாடிக்கையாளர்கள்

உறவு மாதிரிதான் பழகுவாங்க, பரிமாறுவாங்க. வந்ததும் இலை போட்டு வெயிட் பண்ணவே விட மாட்டாங்க. இருக்குறத சாப்பிட வச்சிட்டுப் போய் நாம கேட்டதை எடுத்துட்டு வருவாங்க.

இன்னும் முக்கியமா யாராவது சும்மா பாக்க வந்தாக்கூட அவங்கள வெறும் வயிற்றோட அனுப்பக்கூடாதுன்னு ஒரு வடையாவது கொடுத்து அனுப்புவாங்க. முக்கியமா இவங்க பிளாஸ்டிக் பயன்படுத்துறதே இல்லை. இதற்காகத்தான் நாங்க இவங்க கடைக்கு அடிக்கடி வர்றது“ என முடித்தார்.

ஸ்ரீரங்கம் மட்டுமல்ல, திருச்சிக்குக் கிளம்புபவர்களும் ஸ்ரீ வெங்கடேச பவனை உங்கள் பயணத்திட்டத்தில் சேர்த்துவிடுங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism