Published:Updated:

திருச்சி ருசி: ஸ்டாலினுக்கு வஞ்சிர மீன், எடப்பாடிக்கு விரால் மீன்குழம்பு - அசத்தும் கார்த்திக் மெஸ்!

திருச்சி கார்த்திக் மெஸ்

மீன்குழம்பு, சைடிஷ், மட்டன் கிரேவின்னு அசைவப் பிரியர்களுக்கு இது ஏற்ற கடை. நான் கொஞ்ச நாளாவே இந்த மெஸுக்கு அடிமையாகிட்டேன்னு சொல்லலாம். இங்க கிடைக்குற ஸ்பெஷல் அயிரை மீன்குழம்பு மாதிரி எங்கயுமே சாப்பிட்டதில்லை.

திருச்சி ருசி: ஸ்டாலினுக்கு வஞ்சிர மீன், எடப்பாடிக்கு விரால் மீன்குழம்பு - அசத்தும் கார்த்திக் மெஸ்!

மீன்குழம்பு, சைடிஷ், மட்டன் கிரேவின்னு அசைவப் பிரியர்களுக்கு இது ஏற்ற கடை. நான் கொஞ்ச நாளாவே இந்த மெஸுக்கு அடிமையாகிட்டேன்னு சொல்லலாம். இங்க கிடைக்குற ஸ்பெஷல் அயிரை மீன்குழம்பு மாதிரி எங்கயுமே சாப்பிட்டதில்லை.

Published:Updated:
திருச்சி கார்த்திக் மெஸ்

"கொஞ்சமா சோறு… அதுல அயிரை மீன், விரால் குழம்போடு, நண்டு ஆம்லெட்டை வச்சி சாப்பிட்டா எப்புடி இருக்கும் தெரியுமா?” என திருச்சியில் ’அசைவப் பிரியர்’களுக்கு ஏற்ற இடமென்றால் அது ’கார்த்திக் மெஸ்’தான் எனப் புகழ்ந்து பேசுகிறார்கள்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் வரையிலும் திருச்சிக்கு வந்தால் இந்த மெஸ்ஸின் சாப்பாட்டை விரும்பிச் சாப்பிடுவார்கள். குடும்பம் குடும்பமாகச் சென்று சாப்பிடும் இடமாகவும் மாறியிருக்கிறது. அப்படி என்னதாங்க ஸ்பெஷல் ’கார்த்திக் மெஸ்’ஸில்..?
திருச்சி கார்த்திக் மெஸ்
திருச்சி கார்த்திக் மெஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்சியில் வசிக்கும் மக்கள் மனதில் மட்டுமன்றி, உணவுப் பிரியர்கள் அனைவரின் மனதிலும் இடம்பெற்ற ’கார்த்திக் மெஸ்’ பற்றிக் கேள்விப்பட்டதும் அங்கு செல்லாமல் இருக்க முடியுமா என்ன? அறுசுவை ‘அசைவ விருந்தை’ ஒரு பிடி பிடித்துவிடலாம் எனக் கிளம்பிவிட்டோம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை மட்டுமே சாப்பாடு கிடைக்கும் எனக் கூறியதால் அறக்கப்பறக்க ரெடியானோம். சரியாக ஒரு மணிக்குத் திருச்சி கன்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் உள்ள ’கார்த்திக் மெஸ்’ஸின் மீன்குழம்பு வாசனை காற்றோடு கலந்து மூக்கைத் துளைத்து நம்மை வரவேற்றது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மெஸ்ஸின் உள்ள நுழையும்போதே குடல், மட்டன், சிக்கன், மீன் என அசைவ உணவில் அத்தனை வாசனையும் கலந்துகட்டி நம் பசியை மேலும் தூண்டியது. இங்கே கூட்டம் எப்போதும் அலைமோதிக்கொண்டே இருக்கும் என்பதால், ஆளில்லாத மேஜையை நோக்கி நகர்ந்தோம். காரில் வருபவர்கள் காரிலும், மற்றவர்கள் வெளியேயும் சிறிது நேரம் காத்திருந்து சாப்பிட்டு விட்டுச் செல்வார்கள். அந்த அளவிற்கு அறுசுவையால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது இந்த மெஸ். ஆனால், தற்போது கொரோனாவால் சற்று களையிழந்து காணப்படுகிறது.

கார்த்திக் மெஸ்
கார்த்திக் மெஸ்

90 ரூபாய்க்கு முழுச் சாப்பாடு, கூடவே சிக்கன், மட்டன், மீன் குழம்பு வகைகள் என வயிற்றுக்கு திவ்யமாக சாப்பிட்டு வரலாம். இங்கு வீட்டுமுறையில் செய்யப்படும் ’விரால் மீன்குழம்பு’க்கு அடிமையாகாதவர்களே இருக்கமாட்டார்கள். வழக்கமாக எல்லா ஹோட்டல்களிலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், ’மெனு’வை வரிசையாகச் சொல்ல, அதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வரச் சொல்லுவோம். இங்கு அப்படியில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாப்பாடு அல்லது பிரியாணி எது வாங்கினாலும், பிரத்யேகமாக வீட்டுமுறையில் செய்யப்படும் அசைவ வகைகள் ’மட்டன்’, ’சிக்கன்’,’ மூளை’, ’ஈரல்’, ‘தலைக்கறி’, ’மீன்’, ‘ இறால்’, ‘கோலா உருண்டை’, ‘ நண்டு’ என அனைத்து சைடு டிஷ்களையும் பெரிய டிரேயில் வைத்துக் கொண்டு வந்து காட்டுகின்றனர். பார்க்கும்போதே நமக்குச் சாப்பிடத் தோன்றும்.
கார்த்திக் மெஸ் அசைவ வெரைட்டீஸ்
கார்த்திக் மெஸ் அசைவ வெரைட்டீஸ்

அருகில் வாசனையுடன் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதைப் பார்த்தால் வேண்டாம் என்றா சொல்லமுடியும். நமக்குப் பிடித்ததைக் கூறினால், அடுத்த சில நிமிடங்களில் சுடச் சுட ’ஆவி’ பறக்கக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, நண்டு ஆம்லேட் என நன்றாகச் சாப்பிட்டுவிட்டு கடையின் உரிமையாளர் சங்கரிடம் பேச ஆரம்பித்தோம்.

கல்லூரியில் பேராசிரியராக இருந்து உணவக உரிமையாளர் ஆனதில் தொடங்கி, உணவின் மணம், ருசி பற்றிக் கூற ஆரம்பித்தார்.

கார்த்திக் மெஸ் கடையின் உரிமையாளர் சங்கர்
கார்த்திக் மெஸ் கடையின் உரிமையாளர் சங்கர்

"தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்தான் எங்க அப்பாவுக்கு சொந்த ஊரு. அப்பாவுக்கு பெல் நிறுவனத்துல வேலை கிடைச்சதனால, குடும்பத்தோடு திருச்சிக்கே வந்துட்டாங்க. நான் பொறந்தது, படிச்சது எல்லாமே திருச்சிதான். நான் ’ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ படிச்சி முடிசிட்டு, புதுக்கோட்டையில இருக்குற ஒரு தனியார் கல்லூரியில 15 வருசத்துக்கும் மேல பேராசிரியரா வேலை பார்த்தேன். ஆனாலும், படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி, மனசுக்குப் புடிச்ச மாதிரி ஒரு தொழில் பண்ணணும்னு நினைச்சதனால, 2002-ல உருவானதுதான் இந்த ’கார்த்திக் மெஸ்.’

கார்த்திக் மெஸ்ஸில் மீன்
கார்த்திக் மெஸ்ஸில் மீன்

ஆரம்பத்தில் குடும்பத்துல இருக்குற அஞ்சு பேர வச்சிக்கிட்டு தொடங்குன இந்த மெஸ், இப்போ 25 பேர் வரை வேலை பாக்குற அளவுக்கு ஆலமரமா மாறியிருக்கு. ஆரம்பத்துல இங்க இயங்கிக்கிட்டு இருக்குற மாதிரியான கார்த்திக் மெஸ் இல்லை, ரொம்பச் சின்னதா பத்துக்குப் பத்து சதுர அடி இடத்துலதான் மெஸ் வச்சிருந்தோம். இப்போ மேல, கீழன்னு கடையை விரிவு செஞ்சிருக்கோம். நாங்க ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வரை தரத்துல எந்த சமரசமும் செஞ்சதே இல்லை. கே.கே நகர்ல இன்னொரு கிளை ஆரம்பிச்சிருக்கோம்.

சாப்பாட்டைப் பொறுத்தவரைக்கும் ’அரிசி’தாங்க ரொம்ப முக்கியம். எங்க தரமான அரிசி கிடைக்கும்னு தேடிப் பார்த்துட்டே இருப்போம். ’காங்கேயம்’, ‘வேலூர்’, ‘நாமக்கல்’னு நாங்க நல்ல தரமான அரிசியைத் தேடி ஒண்ணவிட உயர்ந்ததா எங்கெல்லாம் கிடைக்குதோ அங்க போய் நேரடியா பார்த்துத் தரம் பிரிச்சு எடுத்துட்டு வருவோம்.

கார்த்திக் மெஸ் வாடிக்கையாளர்கள்
கார்த்திக் மெஸ் வாடிக்கையாளர்கள்

அதே மாதிரிதான் மசாலாப் பொருள்களும். முடிஞ்ச வரைக்கும் விவசாயிகளிடம் வாங்கி, வீட்டுலயே மிஷின்ல பொடியாக்கி சமையலுக்கு யூஸ் பண்றோம். மட்டன் பிரியாணி, மட்டன் கிரேவிகான ஆடு எல்லாமே ’வெள்ளாடு’தான். அதுவும் தரமா வேணும்னு ’நாமக்கல்’, ‘வேலூர்’ன்னு சுத்தி இருக்குற கிராமங்களில் வளக்குற ரொம்ப நல்ல ஆடுகள வாங்கி வந்து சமைக்குறோம்.

சிக்கன்
சிக்கன்

இறால் எடுத்துக்கிட்டீங்கன்னா ’வளர்ப்பு இறால்’, ‘ கடல் இறால்’ன்னு ரெண்டு வகை இருக்கு. ’வளர்ப்பு இறால்’ ரப்பர் மாதிரி இருக்கும்ங்க. அது சரியா இருக்காது. இதுல ’கடல் இறால்’தான் சுவையைத் தூக்கிக் கொடுக்கும். அதனால நாங்க எப்போதுமே ’கடல் இறால்’தான் வாங்குறோம்.

பெரும்பாலும் நான், மனைவி, குழந்தைங்க, என் தம்பி, அவங்க மனைவி, குழந்தைங்கன்னு குடும்பத்துல இருக்குறவங்கதான் வேலைகளைப் பிரிச்சி செஞ்சிடுறோம், இவங்களோடு உதவிக்கு ஆள் வச்சும் சமைக்குறோம். 20 வருஷமா இந்த மெஸ்ஸை நடத்திட்டு வர்றோம். அப்போ இருந்து இப்போ வரைக்கும் ரெகுலரா வர கஸ்டமர்ஸ் இன்னும் இருக்காங்க.

உரிமையாளரின் தம்பி
உரிமையாளரின் தம்பி

பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள்னு யாரு திருச்சி வந்தாலும் நம்ம கடைச் சாப்பாடு சாப்பிடாம இருக்கவே மாட்டாங்க. நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்திலிருந்தும், எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சர் ஆன பிறகும் திருச்சி வந்தா நம்ம கடைச் சாப்பாட்டைச் சாப்பிடாமப் போகமாட்டார்.

கார்த்திக் மெஸ்
கார்த்திக் மெஸ்

’விரால் மீன்குழம்பு’ன்னா அவருக்கு ரொம்பப் பிடிக்கும். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நம்ம கடையோட ’வஞ்சிர மீன்’ ரொம்பப் பிடிக்கும். முக்கியப் புள்ளிகள், திருச்சிக்கு விசிட் அடிச்சாலும் முதல் நாளே கட்சிக்காரர்கள் முதல் புட்சேப்ட்டி ஆபீஸர் வரை எங்க கடையில சொல்லி வச்சி சாப்பாடு எடுத்துப்போவாங்க.

நடிகர் மயில்சாமி, திரைத்துறையைச் சேர்ந்த யார் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்தாலும், ”கண்டிப்பா ’கார்த்திக்மெஸ்’ல போயி சாப்பிட்டுப் பாருங்க”ன்னு விளம்பரத் தூதுவர் மாதிரி எங்களுக்கு பப்ளிசிட்டியை ஏற்படுத்திக்கொடுக்கிறார்.

கார்த்திக் மெஸ்
கார்த்திக் மெஸ்

காரணம், எங்களுடைய சாப்பாடு அவரைக் கட்டிபோட்டு வச்சிருக்கு“ எனப் புன்னகைத்தார். தொடர்ந்து பேசிய அவர், “நடிகர்களில் யாரு திருச்சி வந்தாலும் அவர்களுக்கு நம்ம கடைல இருந்துதான் அசைவ சாப்பாடு போகும். விலையும் அதிகமா சொல்றதில்ல நாங்க. நல்ல சிக்கன் மீல்ஸ், நல்ல சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்புன்னு திருப்தியா சாப்பிட்டா அதிகபட்சமா 200 ரூபாய்க்கு மேல ஆகாது.

கோலா உருண்டை
கோலா உருண்டை

மட்டன்னா இன்னும் ஒரு 50 ரூபாய் அதிகம். முழுச் சாப்பாடு 90 ரூபாய்க்குக் கொடுக்குறோம். கிடைக்கும்போது ஸ்பெஷலா புறா, பண்ணை முயல் கறியும் விற்பனை பண்றோம். முழுச் சாப்பாடுக்குக் கொடுக்குற அசைவக் குழம்புல ஒண்ணு, ரெண்டு பீஸ் போட்டுதான் கொடுப்போம். வச்சி அயிரை, விறால்னு என்ன மீன் கிடைக்குதோ அதைக் குழம்பு வைப்போம். 4 மணிக்குள்ள அத்தனையும் காலியாகிடும்” எனச் சொல்லி முடித்தார்.

உணவருந்திக்கொண்டிருந்த மணிகண்டனிடம் பேசினோம், ”மீன்குழம்பு, சைடிஷ், மட்டன் கிரேவின்னு அசைவப் பிரியர்களுக்கு இது ஏற்ற கடை. நான் கொஞ்ச நாளாவே இந்த மெஸுக்கு அடிமையாகிட்டேன்னு சொல்லலாம். இங்க கிடைக்குற ஸ்பெஷல் அயிரை மீன்குழம்பு மாதிரி நான் எங்கயுமே சாப்பிட்டதில்லை. வேற லெவெலில் இருக்கும்.

வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளர்கள்

அப்புறம் இறால் பாத்தீங்கன்னா நல்லா எண்ணெய்ல தொக்கு மாதிரி செஞ்சி கொடுப்பாங்க பாருங்க, அத சாப்பிட்டு எங்க போய் இறால் சாப்பிட்டாலும் நமக்கு அது பிடிக்காது. நான் சாப்பிட்டதுலயே ரொம்ப பெஸ்ட்ன்னா அது விறால் மீன் குழம்புதான். என் பிரெண்ட்ஸ், பேமிலின்னு யாரைக் கூட்டிட்டு வந்தாலும் அந்த மீன் குழம்ப சாப்பிட்டுருவோம்.

கார்த்தி மெஸ்
கார்த்தி மெஸ்

முக்கியமா நண்டு ஆம்ப்லேட்... ஒண்ணு, நமக்கு நண்டு சாப்பிடத் தெரியாது, இல்லனா வெளில சாப்பிட கூச்சப்படுவோம். ஆனா அந்தக் கவலை இல்லாம நண்டு சாப்பிட இங்க வரலாம். நல்லா நண்டு ஓட்டை உடைச்சி அதுல முட்டை போட்டு ஆம்லேட் செய்வாங்க பாருங்க, சூப்பரா இருக்கும்” எனச் சொல்ல, அவரின் பேச்சிலேயே அதன் சுவையை உணர முடிந்தது.

கோலா உருண்டை
கோலா உருண்டை
விலையும் அதிகம் இல்லாமல், வீட்டு முறையில் செய்த சூப்பரான அசைவச் சாப்பாடு சாப்பிடணுமா? உங்களுக்கான இடம் திருச்சி கார்த்திக் மெஸ்தான். திருச்சி வரவங்க மிஸ் பண்ணிடாதீங்க!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism