Published:Updated:

திருச்சி ருசி: இட்லி, கெட்டி சட்னி, பில்டர் காஃபி, ரிப்பீட்டு... 70 ஆண்டுகளாக அசத்தும் மணிஸ் கஃபே!

திருச்சி ருசி: மணிஸ் கஃபே!
News
திருச்சி ருசி: மணிஸ் கஃபே! ( DIXITH )

"இப்பல்லாம் கெட்டி சட்னி நிறைய இடத்துல கொடுக்குறது இல்ல. இங்க எப்போ வந்தாலும் அது கிடைக்கும். அதுதான் மணிஸ் கஃபே!"

திருச்சியின் ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் செல்பவர்கள் ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் மணிஸ் கஃபேவில் காலை உணவை சாப்பிட்டு இருந்தால் கண்டிப்பாக அந்த உணவின் சுவையை மறந்திட மாட்டார்கள். தென்னிந்திய உணவுகளில் தவிர்க்க முடியாத உணவு என்றால் அதில் சாம்பார் சட்னியுடன் பரிமாறப்படும் இட்லியும் தோசையும் நிச்சயம் இடம்பிடிக்கும். ஆவியில் வேக வைத்து பரிமாறப்படும் அந்த ஆரோக்கிய உணவிற்கான ரசிகர்கள் ஏராளம். நல்ல பொசு பொசுவென இருக்கும் இட்லிக்கு மாற்றாக ஒல்லியாக முறுகலாக இருக்கும் தோசைக்கும் ஏராளமானோர் அடிமை, நானும்!
திருச்சி ருசி: மணிஸ் கஃபே
திருச்சி ருசி: மணிஸ் கஃபே
DIXITH

ஸ்ரீரங்கத்தில் காலை நேரத்தில் பணி விஷயமாக சென்ற நாம் மணிஸ் கஃபேவில் இட்லியையும் தோசையையும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம். சாதாரண இட்லியும் தோசையும் தானே என நீங்கள் நினைத்தால், ஆம் சாதாரண இட்லியும் தோசையும்தான். அவை போன்று மனதை சந்தோஷப்படுத்த கூடிய உணவு, ரொம்ப மிகைப்படுத்த படாத, மசாலா இல்லாத, வயிற்றை சந்தப்படுத்த கூடிய உணவை நம்மால் வேறு எதையும் கூறவே முடியாது. அதிலும் அதற்கு துணையான சாம்பாரும், சட்னியும் நல்லதாக அமைந்துவிட்டால் போதும் வயிற்றுக்கு நிம்மதி கிடைத்துவிடும். அப்படியான நிம்மதி மணிஸ் கஃபேவில் கிடைத்தது. ஆர்டர் செய்ததும் ஆவிபறக்க சூடாக இலையில் வைத்த இட்லி, சாம்பாருடன் அளவில்லாமல் தொண்டைக்கு இதமாக இறங்கியது. கூடவே 'ஸ்பெஷல் தோசை' என்று அவர்கள் கொண்டு வந்த தோசை, விறகடுப்பில் உள்ள தோசைகல்லில் செய்து கொடுத்துள்ளனர் என்பதை பறைசாற்றும் வகையான சுவையுடன் அருமையாக இருந்தது. தொடர்ந்து பூரி, மசாலாவை கேட்க அதனின் சுவை மற்ற கடைகளை விட வித்தியாசமாக அதிக சுவையுடன் அதுவும் எங்களை கவரத்தவறவில்லை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Mani's Cafe | மணிஸ் கஃபே
Mani's Cafe | மணிஸ் கஃபே

பொதுவாக இங்கு தயாராகும் உணவுகள் பெரும்பாலும் நல்லெண்ணெய்யிலும், மறுமுறை உபயோகபடுத்த படாத சூரியகாந்தி எண்ணெயிலும் மட்டுமே செய்வதால் சுவை உண்மையாக அருமையாக இருந்ததுடன், நமக்கு வயிற்றிருக்கும் எந்த தொந்தரவும் தராமல் இருந்தது. தொடர்ந்து காபியும், வடையும் இல்லாமல் முடிக்க வேண்டாம் என வயிறு கூறியதால் அத்தனையும் சாப்பிட்டு முடித்தோம். காலை மணி ஏழரை தான் ஆகியிருந்தாலும் தொடர்ந்து மக்கள் வந்து கொண்டே இருந்தனர். சாப்பிட்டு முடிந்தபின் தான் சாப்பாட்டை தவிர்த்து மணிஸ் கஃபேவை முழுதாக பார்க்க ஆரம்பித்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

70 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட அதே இடத்தில் இன்றும் தொடர்கிறது. நல்ல ஓடு வேயப்பட்ட முற்றதுடன் கூடிய பெரிய வீடு, அதனை அப்படியே உணவகமாக மாற்றியுள்ளனர். ஏன் மாற்றங்கள் எதும் செய்யாமல் அப்படியே உள்ளது என்று உணவகத்தின் தற்போதைய நிர்வாகி சங்கரன் அவர்களிடம் கேட்க, அவரோ இங்கு வருபவர்களுக்கு உணவு மட்டும் வீட்டுமு றையில் இருக்க கூடாது, உணவகத்தின் உள்ளே வரும்போதே வீட்டு உணர்வை கடத்த வேண்டியே அப்படியே வைத்துள்ளோம் என்கிறார். தொடர்ந்து தனது உணவகத்தை பற்றி பேசினார், "என்னுடய அப்பாவோட பூர்வீகம் கேரளா அங்கிருந்து இங்கு வந்த அவர் சின்ன சின்ன வேலைகளை பாத்துட்டு இருந்தார்.

Mani's Cafe | மணிஸ் கஃபே
Mani's Cafe | மணிஸ் கஃபே
அப்பறம் எங்க சித்தப்பா கூட சேந்து இந்த கஃபேவை 1953-ல் ஆரம்பிச்சாரு. அவருக்கு அப்பறம் என்னோட கூட பொறந்தவங்க நடத்துனாங்க. இப்போ இருபது வருசமா நான் நடத்திட்டு வரேன். எல்லாமே வீட்டுக்கு சமைக்குற மாதிரி தான் சமைக்குறதுனால எப்போவும் கடையை தேடி வந்துட்டே இருக்காங்க. டேஸ்ட் மாறிட கூடாதுனு பூரி மசாலா, சாம்பார்லாம் எப்போதுமே நானே சமைச்சிடுறேன். கூட மனைவி ரொம்பவே உதவிய இருக்காங்க" என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Mani's Cafe | மணிஸ் கஃபே
Mani's Cafe | மணிஸ் கஃபே

காலை 4 மணிக்கு பில்டர் காபியின் தித்திப்புடன் ஆரம்பிக்கும் இவர்களின் உணவகத்தில் 5 மணி முதல் சூடாக உணவுகள் கிடைக்க ஆரம்பிக்கிறது. ஆனால் அதிகபட்சமாக 10 மணிக்குள் முடிந்துவிடுகிறது. ஆனால் அதற்குள் 200 பேர் வரை சாப்பிட்டு விடுகின்றனர். நாம் சென்ற நேரத்திலும் மக்கள் வந்துகொண்டே இருந்தனர். முக்கியமாக இவர்களின் உபசரிப்பு, 'இன்னொரு இட்லி வச்சிக்கோங்க, கொஞ்சமா சட்னி வச்சிக்கோங்க'ன்னு இவர்கள் அன்பாக கேட்பதே மக்கள் இவர்களை தேடி வர வைக்கும் பெரிய காரணமாக இருக்கிறது.

நாம் சென்ற நேரத்தில் பல்லவன் எக்ஸ்பிரஸில் இருந்து மணிஸ் கஃபேவிற்கு வந்து உணவருந்தி கொண்டிருந்த சந்தானம் அவர்களிடம் பேசினோம், "எப்போதுமே ஸ்ரீரங்கம் வரப்போ இங்க வந்து சாப்பிடுவோம். பல ஊர்களுக்கு பயணம் செய்ற வேலை எனக்கு. அப்படி வேலை விஷயமா இங்க வரப்போ எல்லாம் இங்க டிபன் சாப்பிட்டுட்டு தான் கிளம்புவோம். தரமா இருக்கும் எல்லாமே. இப்பல்லாம் கெட்டி சட்னி நிறைய இடத்துல கொடுக்குறது இல்ல. இங்க எப்போ வந்தாலும் அது கிடைக்கும்" என முடித்தார்.

Mani's Cafe | மணிஸ் கஃபே
Mani's Cafe | மணிஸ் கஃபே

ஸ்ரீரங்கம் கோபுர தரிசனம் முடித்தவர்கள், இங்கயும் ஒரு விசிட் அடித்தால் கண்டிப்பாக மறுமுறையும் இங்கு வருவீர்கள் என்பதில் ஐயமில்லை.