Published:Updated:

திருச்சி ருசி: சக்கைப்போடு போடும் சந்துக்கடை பிரியாணி!

சந்துக்கடை பிரியாணி ( DIXITH )

"கொடுக்குற காசுக்கு நல்ல சாப்பாடு கொடுக்குறாங்கன்னு வாழ்த்துறது சந்தோஷம்தானுங்க. மூணு பேரோட ஆரம்பிச்ச கடையில இப்போ 15 பேர் வரைக்கும் வேலை பார்க்கிறாங்க. இப்ப இன்னொரு பிராஞ்ச் போட்டிருக்கோம்."

திருச்சி ருசி: சக்கைப்போடு போடும் சந்துக்கடை பிரியாணி!

"கொடுக்குற காசுக்கு நல்ல சாப்பாடு கொடுக்குறாங்கன்னு வாழ்த்துறது சந்தோஷம்தானுங்க. மூணு பேரோட ஆரம்பிச்ச கடையில இப்போ 15 பேர் வரைக்கும் வேலை பார்க்கிறாங்க. இப்ப இன்னொரு பிராஞ்ச் போட்டிருக்கோம்."

Published:Updated:
சந்துக்கடை பிரியாணி ( DIXITH )

'பிரியாணி', என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரையில் தவிர்க்க முடியாத, மிகவும் விரும்பத்தக்க உணவாக மாறியிருக்கிறது. 'பிரியாணி' இந்தியாவில் பிறந்தது என்றும், அது, 'அரேபியர்களின் உணவு' என்றும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் உலாவந்தாலும், தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் வகையில் மக்கள் மனதில் 'பிரியாணி' தனி இடத்தை பிடித்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

சந்துக்கடை
சந்துக்கடை
DIXITH
அந்த வகையில், திருச்சியில், 'சந்துக்கடை பிரியாணி' கடையைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. தலைமுறைகளை கடந்து, கடந்த 38 வருடங்களை நிறைவு செய்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. 'குறைந்த விலையில் இதன் சுவை, உயர்தரமானது' எனப் புகழ்ந்து தள்ளுகிறார்கள் பிரியாணிப் பிரியர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எப்போதும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் திருச்சி மாநகரில் பிரியாணி எனக் கேட்டாலே நாம் பெறும் ஒரே பதில் 'திருச்சி சந்துகடை பிரியாணி' என்பதாகத்தான் இருந்தது.

'அப்படி என்ன சிறப்பு?' என நாமும் சந்துக்கடைக்குச் சென்றோம். திருச்சி மாநகருக்கு அழகு சேர்க்கும் மலைக்கோட்டையில் இருந்து சிறிது தொலைவிலேயே உள்ளது இந்தப் பிரியாணிக்கடை. ஊரடங்கு நேரத்திலும் வரிசையில் காத்திருந்து பார்சல் வாங்கிச் செல்கிறார்கள் பிரியாணிப் பிரியர்கள்.

சந்துக்கடை பிரியாணி
சந்துக்கடை பிரியாணி
DIXITH

கடைக்குள் பிரியாணி சாப்பிடக் காத்திருந்த போது, வட்டாவை தட்டி பிரியாணியை அள்ளும் போது பட்டை, கிராம்பு, பிரியாணியின் மசாலா, வாசம் மனதை கொள்ளை கொள்கிறது. செய்தி அப்புறம் இருக்கட்டும். முதலில் பிரியாணியை சாப்பிட்டுப் பார்த்துவிட்டு, கடைகாரரிம் பேசுவோம் என ஒரு பிளேட் பிரியாணி ஆர்டர் செய்தேன்.

சந்துக்கடை பிரியாணி
சந்துக்கடை பிரியாணி
DIXITH

அந்தக் கடையில வேலை பார்க்கும் ஒருவர், "அண்ணே... இங்கு மட்டன் கோலாவும், தலக்கறியும் ரொம்ப பேமஸ்ன்ணே" எனச் சொல்ல, "சரிங்க... கொண்டுவாங்க பாப்போம். எதுவா இருந்தாலும் ஒரு கை பாத்துரும்வோம்" எனக் களத்துல குதித்தேன். சாப்பிட்ட பிறகு பணத்தைக் கொடுத்துவிட்டு அந்தக் கடையின் உரிமையாளரிடம் நம்மை அறிமுகம் செய்து கொண்டு பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பரபரப்பான விற்பனை சூழலில் 'சந்துக்கடை பிரியாணி' முகமது பாபுவிடம் பேசினோம், ”இந்தக் கடையை ஷபீர் சாதிக் என்பவர்தான் நிர்வாகம் செய்துட்டு வர்றார். அவரு என்னோட மாப்பிள்ளைதான். அவுங்க அப்பா, சகாபுதீன் என்பவர் மட்டன் ஸ்டால் வச்சுருந்தாரு, அப்புறம் 1987-லதான் பிரியாணிக் கடையை ஆரம்பிச்சாரு. அப்பவே நல்ல பேமஸா இருந்தது நம்ம பிரியாணி. டேஸ்ட் நல்லா இருக்குதுன்னு மக்கள் அதிகமா வர ஆரம்பிச்சாங்க.

முகமது பாபு
முகமது பாபு
DIXITH

'பாய் பிரியாணி அது வேற லெவல்'ன்னு சொல்லி, பலரும் ரசிகர்களாக இருந்தாங்க. வியாபாரம் செய்யுற நேரம் போக, மீதி நேரத்துல மட்டன்ல புதுப்புது வெரைட்டிஸா செஞ்சு கொடுப்பாங்க. அவரு சேர்த்து வச்ச நல்லபேருதான் இதுநாள் வரைக்கும் எங்களுக்குக் கைகொடுக்குது. அந்தப் பெயரையும் அவுங்க கத்துக்கொடுத்த கைப் பக்குவத்தையும் கொஞ்சமும் மாறாமல் அதே தரத்தில் தொடர்ந்து செஞ்சுக்கிட்டு இருக்கோம்.

2007ல இருந்துதான் என் மாப்பிள்ளை இந்தக் கடையை நிர்வாகம் செஞ்சுட்டு வர்றாரு. மூணு பேரோட ஆரம்பிச்ச கடையில இப்போ 15 பேர் வரைக்கும் வேலை பார்க்கிறாங்க. இன்னொரு பிராஞ்சும் போட்டிருக்கோம். காலையில 7 மணிக்கு எல்லாம் காய்கறி, மட்டன் வெட்டுறதுன்னு வேலை ஆரம்பிச்சுடுவோம்.

சந்துக்கடை பிரியாணி கடையின் உரிமையாளர் ஷபீர் சாதிக்
சந்துக்கடை பிரியாணி கடையின் உரிமையாளர் ஷபீர் சாதிக்

ஃப்ரஷ் மட்டன் எங்க கடையில இருந்தே நாங்க எடுத்துப்போம், மசாலா வகை எல்லாமே வீட்டு பாரம்பரியத்துல நாங்களே கைப்பக்குவமா அரைச்சுதான் உபயோகிக்கிறோம். பிரியாணிக்கு சீரகசம்பா அரிசியைத்தான் பயன்படுத்துறோம். அதுவும் துறையூர் கொப்பம்பட்டி மில்லுல இருந்து சீரகசம்பா அரிசியை நேரடியாக வாங்குறோம். அங்கு விளையக்கூடிய அரிசி நல்ல டேஸ்ட் கொடுக்கும்.

மட்டன் பிரியாணி
மட்டன் பிரியாணி
DIXITH

அதே போல பிரியாணிக்கு கறி ரொம்ப முக்கியம். பிரியாணிக்கு செம்மறி ஆடுதாங்க நல்லா இருக்கும். நாங்க அதைத்தான் பயன்படுத்துறோம். அதுவும், கண்ணவாடி, பரமத்தி, சமயபுரம், உள்ளிட்ட பகுதியில உள்ள 'கொங்கு ஆடு'ன்னு சொல்ற 'கொங்கு செம்பிலி' ஆடுகளின் இறைச்சியைப் பயன்படுத்துறோம்.

இந்தக் கறி பசபசப்பு தன்மையும், இருக்குறதுனால, பிரியாணிக்கு ரொம்ப ஏத்தது. கறி விஷயத்துல நாங்க ரொம்ப பாத்துப்பாத்து செய்வோம். பிரியாணியோட டேஸ்டுக்கு அதுவும் முக்கிய காரணம்.

சந்துக்கடை பிரியாணி
சந்துக்கடை பிரியாணி
DIXITH

மூணாவதா, நம்ம பிரியாணிக்கு ஒரிஜினலா வீட்டிலேயே தயாரிக்கிற நெய்தான் உபயோகிக்கிறோம். புதன், வியாழன் கிழமைகள்ல 'பசவு பிரியாணி' நம்ம கடையோட ஸ்பெஷல்.

நடிகர் சிங்கமுத்து
நடிகர் சிங்கமுத்து

சைடு டிஷ்ஷா மட்டன் வறுவல், கோலா உருண்டை, சுவரொட்டி, கல்லீரல், சிக்கன் கிரேவி எல்லாமே கிடைச்சாலும் மட்டன் பிரியாணிதான் எங்களுக்கு அதிகமா சேல்ஸ் ஆகுது" என்றார்.

பிரியாணி
பிரியாணி
DIXITH

கடையை பராமரித்து வரும் முகமது யூசப்பிடம் பேசினோம், "மக்கள் தொடர்ந்து நம்ம கடைக்கு வரங்கன்னா, அதுக்கு முக்கிய காரணம் டேஸ்ட்தாங்க.

முகமது யூசப்
முகமது யூசப்

நம்ம கடை பிரியாணி சாப்பிட்டா எந்த ஒரு நெஞ்செரிச்சல், ஏப்பம், தொடர்ந்த தண்ணீர் தாகம் இதெல்லாம் இருக்காது. காரமும் ரொம்பவே கம்மியாத்தான் இருக்கும். உடம்புக்கு இதனால எந்த பிரச்னையும் இருக்காது. அதனால ஒரு தடவை நம்ம கடை பிரியாணியை சுவைத்தவர்கள் எங்களுடைய ரெகுலர் கஸ்டமர்ஸ்ஸா மாறிவிடுவாங்க. அதனாலதான் நம்ம கடைக்கு அதிகமா கூட்டம் வருது.

அதுமட்டுமில்லங்க... திருச்சியில உள்ள அரசியல்வாதிகள் பலருக்கும் நம்ம கடை பிரியாணி அடிக்கடி பார்சல்ல போகுது. மறைந்த நடிகர் விவேக் சார் கூட எப்போ திருச்சி வந்தாலும் ஆள் அனுப்பி பிரியாணி வாங்கி சாப்பிடுவாரு.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

அதே போல நடிகர் விஜய் சேதுபதி திருச்சி வந்தபோது எங்க கடையிலதான் நல்லாருக்குன்னு சாப்பிட்டு முடிச்சும் எங்களோட உட்கார்ந்து பேசிட்டுப் போனாரு. கொடுக்குற காசுக்கு நல்ல சாப்பாடு கொடுக்குறாங்கன்னு வாழ்த்துறது சந்தோஷம் தானுங்க” என்றார் முகமலர்ச்சியோடு.

பார்சல் வாங்கி செல்லும் மணிகண்டன் என்பவரிடம் பேசினோம், "எத்தனை வகை உணவுகள் இருந்தாலும் எனக்கு பிடிச்சது பிரியாணிதாங்க. 'ட்ரீட்'ன்னு சொன்னா, அது 'பிரியாணி'தான்னு மாறியிடுச்சிங்க. அந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களின் நாவில் பிரியாணியின் சுவை ஊறிப்போயிடுச்சிங்க.

என்னைப் பொறுத்தவரையில், ஹைதராபாத், ஆம்பூர் எனப் பெரிய பெரிய கடைகளில் காசை அதிகமாகக் கொடுத்து பிரியாணி சாப்பிட்டாகூட இந்தக் கடையோட டேஸ்டுக்கு வருமான்னு சொன்னா சந்தேகம் தாங்க. பத்துக்கு பத்து சதுர அடிக்கடைதான். ஆனா, இங்குள்ள கூட்டத்தைப் பாத்தீங்களா? அதுக்கு காரணம், அவுங்களோட டேஸ்ட்தாங்க.

மட்டன் கோலா
மட்டன் கோலா
DIXITH

அதே போல கால் ப்ளேட் பிரியாணி 100 ரூபாய்ங்க. அரை ப்ளேட் ரூ.200, மட்டன் கோலா உருண்டை, முட்டை கிரேவி வெறும் ரூ.10 தாங்க. மட்டன் மூளை, இறால், மட்டன் ரூ.70. இதே வேற ஹோட்டல்ல வாங்குனா குறைந்தது முந்நூறு நானூறு இருந்தா மட்டுமே நல்லசாப்பாடு சாப்பிட முடியும். ஆனா, இங்கு இருநூறு ரூபாய் இருந்தாலே நல்ல திருப்தியா குறைந்த விலையில உடம்புக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம சாப்பிட முடியுங்க” என்றார்.

கொங்கு ஆடு
கொங்கு ஆடு
DIXITH
காலை 11 மணிக்குச் சுறுசுறுப்பாக ஆரம்பிக்கும் மட்டன் பிரியாணி விற்பனை மாலை 3 மணிவரை அதே கூட்டத்துடன் விற்பனை ஆகிறது. மீண்டும் மாலை 7 மணிக்குத் தொடங்கும் கடையில் இரவு 11 மணி வரை கால் வைக்க இடமில்லாதவாறு கூட்டம் நிற்கிறது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்றால் சொல்லவே வேண்டாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism