Published:Updated:

திருச்சி: "கடைக்கு ஏன் இந்தப் பெயர் தெரியுமா?"- பரோட்டாவுக்கு 4 கிரேவி தரும் ட்ராபிக் ஜாம் ஹோட்டல்!

திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்

திருச்சி ருசி: பரோட்டாவிற்கு ஏற்ற சால்னா கிடைத்தால், கண்டிப்பாக அந்த உணவு சொர்க்கம்தான். நமக்கோ நான்கு வகையில் சொர்க்கத்தைக் காண்பித்தார்கள்.

திருச்சி: "கடைக்கு ஏன் இந்தப் பெயர் தெரியுமா?"- பரோட்டாவுக்கு 4 கிரேவி தரும் ட்ராபிக் ஜாம் ஹோட்டல்!

திருச்சி ருசி: பரோட்டாவிற்கு ஏற்ற சால்னா கிடைத்தால், கண்டிப்பாக அந்த உணவு சொர்க்கம்தான். நமக்கோ நான்கு வகையில் சொர்க்கத்தைக் காண்பித்தார்கள்.

Published:Updated:
திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்
பரோட்டாவுக்கு நாலு விதக் குருமா... அப்படியே பிச்சுப்போட்ட கோழிக் கறி, ஆம்லெட்டை வச்சி சாப்பிட்டா எப்படி இருக்கும் தெரியுமா? திருச்சியில் இரவு நேரத்தில் ’அசைவப் பிரியர்’களுக்கு ஏற்ற இடமென்றால் அது மலைக்கோட்டை அருகேயுள்ள ’ட்ராபிக் ஜாம்’தான் எனப் புகழ்ந்து பேசுகிறார்கள் உணவுப் பிரியர்கள்.
திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்
திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்

எப்போதும் பரபரப்பாக இயங்கும் திருச்சி மாநகரின் மிகப்பெரும் அடையாளம் மலைக்கோட்டை. அதன் பின்புறத்தில் அமைந்துள்ளது இந்த ஹோட்டல். இரவு ஏழு மணியளவில் கடையில் ஆஜரானோம். அந்த மாலை நேரத்திலேயே இளைஞர்கள், பெண்கள் எனக் கடையில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நாம் சிறிது நேர காத்திருப்பிற்குப் பிறகு, ஒரு மேசையை வசமாக்கி அமர்ந்தோம். அடுத்தடுத்து கடையின் ஸ்பெஷல் டிஷ்களான பரோட்டா, பிச்சுப்போட்ட கோழி, முட்டை குஸ்கா, பிரியாணி போன்றவற்றை ஆர்டர் செய்தோம். சுடச்சுட ஒவ்வொன்றாக நம் மேசைக்கு வர அதன் மணம் இன்னும் பசியைத் தூண்டியது.
திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்
திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்

ஆவி பறக்கக் பறக்கக் கொண்டுவந்து வைத்த பரோட்டாவின் வாசம்... பரோட்டாவிற்கு வாசமா என நீங்கள் கேட்பது உணர முடிகிறது, பரோட்டா பிரியர்களுக்குத் தெரியும் ஆவி பறக்க எண்ணெயில், அதுவும் விறகு அடுப்பில் செய்து அப்படியே தட்டி எடுத்து வரப்பட்டு, வாழை இலையில் பரிமாறப்படும் பரோட்டாவிற்கு ஆளை மயக்கும் வாசம் உண்டு.

திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்
திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்

அப்படியான பரோட்டாவிற்கு ஏற்ற சால்னா கிடைத்தால், கண்டிப்பாக அந்த உணவு சொர்க்கம்தான். நமக்கோ நான்கு வகையில் சொர்க்கத்தைக் காண்பித்தார்கள். ஆம், சூடான பரோட்டாவிற்கு தக்காளி மசாலா, கார மசாலா, சிக்கன் கிரேவி என மூன்று வகை குழம்புகளைத் தொட்டுக்கொள்வதற்குத் தருகிறார்கள். கூடவே வெள்ளைக் குருமாவும் கொடுப்பதால் கணக்கே பார்க்காமல் பரோட்டா வாயில் கரைந்துகொண்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்து அவர்கள் கடையின் முட்டை குஸ்கா... நார்மலாக செய்யப்படும் குஸ்காவை அடுப்பில் இட்டு, முட்டையை உடைத்து ஊற்றி, கொத்து பரோட்டா போலப் பிரட்டி எடுத்துத் தருகையில் வாழ்க்கையில் வேறு எதுவுமே வேண்டாம் எனத் தோன்றிவிடும்.
பரோட்டா - திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்
பரோட்டா - திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்

தொடர்ந்து முட்டை பரோட்டா, பிச்சுப்போட்ட கோழிக்கறி, எந்த நேரத்திலும் கிடைக்கும் சிக்கன் பிரியாணி என அனைத்தையும் சுவைத்துவிட்டு எழுந்தால், மனதும் வயிறும் திருப்தி அடைந்திருந்தது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

கோழிக்கறி - திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்
கோழிக்கறி - திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்

சாப்பிட்டத்தற்கான பில்லைக் கொடுத்துவிட்டு கடையின் உரிமையாளர் மயில்வாகனனிடம் பேசினோம், ”கல்லணை பக்கம் இருக்குற சர்க்கார்ப்பாளையம்தான் என்னோட சொந்த ஊரு. திருச்சிக்கு வந்து ஒரு ஹோட்டல்ல வேலை பார்த்துட்டு இருந்தேன்.

திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்
திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்

அப்போதான் சொந்தமா கடை போடலாம்னு யோசிச்சி, 1998-ல சின்னதா தள்ளுவண்டியில ஆரம்பிச்ச கடைதான் இது. அப்போ நான் மட்டும்தான். சமைக்கிறதிலிருந்து எல்லாமே நானே செஞ்சேன். அப்புறம் இரண்டு வருஷத்துல பக்கத்துல இருந்த கடையை வாடகைக்கு எடுத்து கொஞ்சம் பெரியதா ஹோட்டல் நடத்த ஆரம்பிச்சோம்.

21 வருசமா இங்கதான் கடை நடத்திட்டு வர்றோம். ஆரம்பத்துல கடைக்கு ஏதும் பேர் வைக்கல, தொடர்ந்து இங்க கடை வச்சத்துக்கு அப்புறம் மக்களுக்கு எங்க கடை டேஸ்ட் புடிச்சுப்போய்டுச்சி. நெறைய மக்கள் நம்ம கடையைத் தேடி வர ஆரம்பிச்சதனால, நம்ம கடை இயங்குற இடத்துல கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும், இதுனாலேயே நம்ம கடையை மக்கள் 'ட்ராபிக் ஜாம்' கடைன்னு சொல்ல அதையே கடையோட பெயரா மாத்திட்டோம்" எனச் சொல்லிச் சிரிக்கிறார்.

திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்
திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு நாளைக்கு எங்க கடைக்கு 400 பேர் முதல் 500 பேர் வரை வந்து சாப்பிடுவாங்க. அதுல பெரும்பாலும் நம்ம கடைல ரெகுலரா சாப்பிடுறவங்களாதான் இருப்பாங்க.

திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்
திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்

பல மாவட்டங்கள்ல இருந்தும், வெளி மாநிலங்கள்ல இருந்தும் இங்க வந்து சாப்பிட்டு இருக்காங்க. நம்ம கடையோட டேஸ்ட்டுக்கு முக்கிய காரணமே, நாம சொந்தமா வீட்டில் அரைச்சுப் பயன்படுத்துற மசாலாவும், சுத்தமான இறைச்சிகளும்தான்.

ஒவ்வொரு பொருளையும் கடையில இருந்து வாங்கும்போது நம்ம வீட்டுக்கு வாங்குறது போலதான் பாத்து வாங்குவோம், எங்கயும், எதுலயும் நம்மளோட தரம் குறைஞ்சிடக் கூடாதுங்கிறதுல நாங்க உறுதியா இருக்கோம்" என்றவரிடம், "இத்தனை வருஷம் கடை நடத்துறீங்க. வெளில வேற எங்கயும் கிளைகள் இல்லையா?" என நாம் கேட்டதற்கு,

திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்
திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்

"கடைக்கு வர்ற வாடிக்கையாளர்களை நல்லா உபசரிக்கணும். அதுக்கு நாம இருக்கணும். நெறைய கிளைகள் வந்துட்டா அதைப் பண்ண முடியாதுங்க. நம்ம கடையைத் தேடி வர்றவங்களுக்கு தரமான, சுவையான சாப்பாடு கொடுக்கணும். தள்ளுவண்டியில ஆரம்பிச்ச கடை, இப்போ 21 பேர் வரை வேலை செய்யும் அளவிற்கு விரிவடஞ்சிருக்குன்னா அதுக்குக் காரணம் மக்கள்தான்" என்றார் ஆனந்தமாக.

டிராபிக் ஜாம் கடையின் ரெகுலர் வாடிக்கையாளரான சிவாவிடம் பேசினோம், ”நான் கரூரைச் சேர்ந்தவன். திருச்சிக்கு காலேஜ் படிக்கிறதுக்காக வந்திருக்கேன். இந்தக் கடையோட பேருதான் எங்கள ருசிபாக்க வச்சது. டேஸ்டும் விலையும் ரொம்பவே நிறைவா இருந்ததனால ரொம்பப் பிடிச்சிப்போச்சு.

திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்
திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்

ப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து சாப்பிட முடிவு பண்ணுனாலே இங்கதான் வருவோம். பரோட்டாக்கு நாலு வகை குருமா தரதுனால திகட்டாம எல்லாத்தையும் டேஸ்ட் பண்ண முடியும். விலையும் ரொம்ப கம்மியா இருக்கறதால மாசக்கடைசில கூட பரோட்டா சாப்பிட முடியுது.

திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்
திருச்சி ட்ராபிக் ஜாம் ஹோட்டல்

இந்த லாக்டௌன்ல வீட்ல இருந்தது சந்தோசமா இருந்தாலும், வயிறும் மனசும் எப்படா இங்க சாப்புடுவோம்னு இருந்துச்சி. அவ்ளோ டேஸ்ட் இந்தக் கடை!" என அவர் மகிழ்ச்சியை நமக்கும் பாஸ் செய்கிறார்.

மாலை, இரவு நேரங்களில் உங்களுக்கான இடம் திருச்சி 'ட்ராபிக் ஜாம்' ஹோட்டல்தான். திருச்சி வர்றவங்க மிஸ் பண்ணிடாதீங்க!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism