Published:Updated:

வடை|பொரியல்|ஊத்தப்பம்| துவையல் - கீரை ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்!

கீரை உணவுகள்

கட்டுக்கட்டாக கீரை வாங்கி, ஆய்ந்து, சுத்தப்படுத்தி, சமைப்பது என்பது சிலருக்கு பொறுமையைச் சோதிக்கலாம். அப்படி அதிக வேலை எடுக்காமல் சமைக்கக்கூடிய கீரை உணவுகளின் செய்முறை இங்கே உங்களுக்காக. குட்டீஸுக்கும் நிச்சயம் பிடிக்கும். இந்த வார வீக் எண்டை கீரை ஸ்பெஷல் விருந்தாக்குங்கள்.

வடை|பொரியல்|ஊத்தப்பம்| துவையல் - கீரை ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்!

கட்டுக்கட்டாக கீரை வாங்கி, ஆய்ந்து, சுத்தப்படுத்தி, சமைப்பது என்பது சிலருக்கு பொறுமையைச் சோதிக்கலாம். அப்படி அதிக வேலை எடுக்காமல் சமைக்கக்கூடிய கீரை உணவுகளின் செய்முறை இங்கே உங்களுக்காக. குட்டீஸுக்கும் நிச்சயம் பிடிக்கும். இந்த வார வீக் எண்டை கீரை ஸ்பெஷல் விருந்தாக்குங்கள்.

Published:Updated:
கீரை உணவுகள்

வாரத்துக்கு மூன்று நாள்களாவது உணவில் ஏதேனும் ஒரு கீரை இடம்பெற வேண்டும் என்பது காலங்காலமாக மருத்துவர்கள் வலியுறுத்தும் விஷயம். ஆனாலும் அவசர உலகத்தில் கீரையை வாங்கிச் சமைக்கும் பொறுமை பெரியவர்களுக்கும் இல்லை.

கீரையின் அருமை, பெருமை சிறியவர்களுக்கும் புரிவதில்லை. கட்டுக்கட்டாக கீரை வாங்கி, ஆய்ந்து, சுத்தப்படுத்தி, சமைப்பது என்பது சிலருக்கு பொறுமையைச் சோதிக்கலாம். அப்படி அதிக வேலை எடுக்காமல் சமைக்கக்கூடிய கீரை உணவுகளின் செய்முறை இங்கே உங்களுக்காக....

இந்தக் கீரை உணவுகளின் சுவை குட்டீஸுக்கும் நிச்சயம் பிடிக்கும். இந்த வார வீக் எண்டை கீரை ஸ்பெஷல் விருந்தாக்குங்கள்.

முள்ளங்கிக்கீரைப் பொரியல்

முள்ளங்கிக் கீரை பொறியல்
முள்ளங்கிக் கீரை பொறியல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவையானவை:

முள்ளங்கிக்கீரை - ஒரு கட்டு (தண்ணீரில் அலசி, பொடியாக நறுக்கவும்)

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

வாணலியில் எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு கீரை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வேகவிடவும். இறுதியாக தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், கடைசியில் சிறிதளவு மிளகுத்தூள் தூவி இறக்கலாம். வேகவைத்த துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பைச் சேர்த்துக் கிளறி இறக்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சதகுப்பைக் கீரை வடை

தேவையானவை:

கடலைப்பருப்பு - ஒரு கப்

பச்சை மிளகாய் - 3

காய்ந்த மிளகாய் - 2

சோம்பு - ஒரு டீஸ்பூன்

தோல் சீவிய இஞ்சி - அரை இன்ச் துண்டு

பொடியாக நறுக்கிய சதகுப்பைக் கீரை - ஒரு கப்

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

சதக்குப்பைக் கீரை வடை
சதக்குப்பைக் கீரை வடை

செய்முறை:

கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீரை வடியவிடவும். அதனுடன் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சோம்பு, இஞ்சி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

அதனுடன் கீரை, வெங்காயம் சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சதகுப்பைக் கீரை `dil leaf’ என்று அழைக்கப்படுகிறது. இது பெரிய காய்கறி - பழக்கடைகளில் கிடைக்கும். இந்த வடையை பெங்களூரில் அதிகமாகச் செய்வார்கள்

வல்லாரை - வெஜிடபுள் ஊத்தப்பம்

தேவையானவை:

தோசை மாவு - 4 கப் பொடியாக நறுக்கிய

வல்லாரைக் கீரை - கைப்பிடி அளவு

கேரட் – ஒன்று (துருவவும்)

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

குடமிளகாய் - பாதியளவு (பொடியாக நறுக்கவும்)

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

வல்லாரை வெஜிடபிள் ஊத்தப்பம்
வல்லாரை வெஜிடபிள் ஊத்தப்பம்

தோசை மாவுடன் கேரட், குடமிளகாய், வெங்காயம், கீரை, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு எண்ணெய் தடவவும், மாவைச் சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

குறிப்பு: ஊத்தப்பத்தை மூடிபோட்டும் வேகவைத்து எடுக்கலாம்.

வெற்றிலைத் துவையல்

தேவையானவை:

வெற்றிலை - 10 (காம்பு, நடு நரம்பை நீக்கி நறுக்கவும்)

காய்ந்த மிளகாய் - 4

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பூண்டுப் பல் - 3 (பொடியாக நறுக்கவும்)

புளி - கோலிக்குண்டு அளவு

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெற்றிலைத் துவையல்
வெற்றிலைத் துவையல்

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, வெற்றிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்கவும். இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: விரும்பினால் தேங்காய்த் துருவல் சேர்க்கலாம்.