Published:Updated:

ஜில் ஜில் ரெசிப்பிகள்

ஜில் ஜில் ரெசிப்பிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜில் ஜில் ரெசிப்பிகள்

நளினா கண்ணன்

குழந்தையின் முதல் உணவாகிய தாய்ப் பாலில் தொடங்கி, கடைசி வரை தாகம் தீர்க்கும் தண்ணீர் வரை நம் வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை பானங்கள்! பால், சூப் வகைகள், சாறு வகைள், காப்பி, தேநீர், பழரசங்கள், மென்பானங்கள், ஆற்றல் பானங்கள், மதுவகைகள் என நதிபோல ஓடுகிறது பட்டியல்.

ஜில் ஜில் ரெசிப்பிகள்

`மாக்டெயில்’ எனப்படும் இன்சுவை பானங்கள் மட்டும், லஸ்ஸி வகைகள் மட்டும், வித்தியாசமான ஐஸ்க்ரீம்கள் மட்டும் என பிரத்யேகமான பிராண்டுகளைப் பெருநகர வீதிகளில் காணமுடியும். இதுபோன்ற புதுமை யான ஜில் அயிட்டங்களை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?

‘ஓ... யெஸ்’ என்கிறார் மயிலாப்பூரிலுள்ள தளிகை ரெஸ்டாரென்ட் உரிமையாளர் நளினா கண்ணன். இவர் அளிக்கும் ஜில் ஜில் ரெசிப்பிகள் புதுமையானவை... சத்தும் சுவையும் நிறைந்தவை... குட்டீஸுக்கு மிகவும் விருப்பமானவை...

ஜில் கொண்டாட்டம் தொடரட்டும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வால்நட் சாக்கோ மில்க்‌ஷேக்

தேவையானவை:

 • வால்நட் - அரை கப் (முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்)

 • வெனிலா பவுடர் - அரை சிட்டிகை

 • நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்

 • டார்க் சாக்லேட் துருவல் - சிறிதளவு

 • கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன்

ஜில் ஜில் ரெசிப்பிகள்

செய்முறை:

எல்லா பொருள்களையும் ஒன்றாகச்சேர்த்து மிக்ஸி அல்லது பிளெண்டரில் அடித்து வடிகட்டவும். அழகான டம்ளர்களில் நிரப்பி குளூட்டன் ஃப்ரீ பிஸ்கட் உடன் பரிமாறவும்.

ஆழ்ந்த உறக்கத்தை அளிக்கும் தன்மை வால் நட் என்கிற அக்ரூட்களுக்கு உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோயா காபி

தேவையானவை:

 • சூடான சோயா மில்க் - 2 கப் (கடைகளில் கிடைக்கும் சோயா மில்க்கை வாங்கிச் சூடாக்கிக்கொள்ளவும்)

 • காபி டிகாக்‌ஷன் - 4 டீஸ்பூன்

 • நாட்டுச் சர்க்கரை - 3 டீஸ்பூன்

 • உப்பு - சிறிதளவு

ஜில் ஜில் ரெசிப்பிகள்

செய்முறை:

எல்லா பொருள்களையும் ஒன்றாகக் கலந்து சிறிய கப்களில் பரிமாறவும்.

ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பொதுவான பானமாகத் திகழ்கிறது சோயா மில்க்.

பீச் வேகன் ஐஸ்க்ரீம்

தேவையானவை:

 • கெட்டியான தேங்காய்ப்பால் - ஒரு கப்

 • பாதாம் விழுது - 2 டீஸ்பூன்

 • முந்திரி விழுது - 2 டீஸ்பூன்

 • உப்பு - ஒரு சிட்டிகை

 • ஸ்லைஸ் செய்த பீச் பழங்கள் - ஒரு கப்

 • தேன் - 3 டீஸ்பூன்

ஜில் ஜில் ரெசிப்பிகள்

செய்முறை:

எல்லா பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து அடித்து ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து இரண்டு நிமிடங்களுக்கு மிக்ஸி அல்லது பிளெண்டரில் அடிக்கவும். மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதேபோன்று இரண்டு, மூன்று முறை செய்யவும். பிறகு பழத் துண்டுகளுடன் ஐஸ்க்ரீம் கோப்பைகளில் பரிமாறவும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பாதாம் உதவும். இது நினைவாற்றலுக்கும் துணைபுரியும்.

மிக்ஸ்டு நட் மில்க் வித் ஹோம் மேடு கிரனோலா பார்

தேவையானவை:

மிக்ஸ்டு நட் மில்க் செய்ய:

 • முந்திரி - ஒரு டீஸ்பூன்

 • பாதாம் - ஒரு டீஸ்பூன்

 • வால்நட் - 2

 • சூரியகாந்தி விதை - ஒரு டீஸ்பூன்

 • ஆளி விதை - அரை டீஸ்பூன்

 • ஹேஸல் நட்ஸ் - அரை டீஸ்பூன்

 • தண்ணீர் - 2 கப்

 • பேரீச்சம்பழம் - 4 (பொடியாக நறுக்கவும்)

கிரானோலா பார் செய்ய:

 • ரோல்டு ஓட்ஸ் - ஒரு கப்

 • மல்ட்டி கிரெய்ன் அவல் - ஒரு கப்

 • பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் - ஒரு கப்

 • நாட்டுச் சர்க்கரை - அரை கப்

 • எண்ணெய் சேர்க்காமல் வறுத்த கொப்பரைத் துண்டுகள் - அரை கப்

ஜில் ஜில் ரெசிப்பிகள்

செய்முறை:

மிக்ஸ்டு நட் மில்க் செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு மிக்ஸி அல்லது பிளெண்டரில் அடிக்கவும்.

கிரானோலா பார் செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அவனில் (oven) பேக்கிங் டிரேயில் 200 டிகிரியில் 12 நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும். அரை இன்ச் துண்டுகளாக வெட்டி லேசான சூட்டில், மிக்ஸ்டு நட் மில்க் உடன் பரிமாறவும்.

முந்திரி, பிரேசிலின் வடகிழக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது.

ஆல்மண்டு கோல்டு காபி

தேவையானவை:

 • குளிர்ந்த பாதாம் மில்க் - 2 கப் (முதல்நாள் இரவே அரை கப் பாதாமை ஊறவைத்து, மறுநாள் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டவும்)

 • காபி டிகாக்‌ஷன் - 4 டீஸ்பூன்

 • நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்

 • உப்பு - சிறிதளவு

ஜில் ஜில் ரெசிப்பிகள்

செய்முறை:

எல்லா பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸி அல்லது பிளெண்டரில் நுரைக்க அடித்து கப்களில் ஊற்றிப் பரிமாறவும். இதனுடன் வீட்டிலேயே செய்த சாக்கோ சிப்ஸ் குக்கீஸைப் பரிமாறலாம்.

தாமிரம், இரும்பு, வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளதால் பாதாம் ரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும்.

பிட்டா பிரெட்

தேவையானவை:

 • குளூட்டன் இல்லாத சிவப்பரிசி, கறுப்பு அரிசி, சோளம், குதிரைவாலி, ஆளிவிதை எல்லாம் சேர்த்து அரைத்த மாவு - 2 கப்

 • உப்பு - ஒரு சிட்டிகை

 • ஒரிகானோ - ஒரு டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • தண்ணீர் - ஒரு கப்

ஜில் ஜில் ரெசிப்பிகள்

செய்முறை:

எல்லா பொருள்களையும் சேர்த்து கெட்டியான மாவாகப் பிசைந்து சிறிது நேரம் மூடிவைக்கவும். பிறகு மெல்லிய ரொட்டிகளாகச் செய்து நீளத் துண்டுகளாக வெட்டவும்.

அவற்றை அவனில் (oven) 180 டிகிரி சென்டிகிரேடில் 15 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். கரகரப்பானதும் காற்றுப்புகாத டப்பாவில் நிரப்பி வைக்கவும். இதை கோக்கம் சர்பத் போன்ற பானங்களோடு பரிமாறவும்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் ஆப்பிரிக்காவிலும் இது விளைவிக்கப்படுகிறது.