Published:Updated:

பிரெட் சாண்ட்விச் வெரைட்டீஸ்

கிரில்டு பனீர் சாண்ட்விட்ச்
பிரீமியம் ஸ்டோரி
கிரில்டு பனீர் சாண்ட்விட்ச்

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: பாத்திமா

பிரெட் சாண்ட்விச் வெரைட்டீஸ்

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: பாத்திமா

Published:Updated:
கிரில்டு பனீர் சாண்ட்விட்ச்
பிரீமியம் ஸ்டோரி
கிரில்டு பனீர் சாண்ட்விட்ச்

‘‘சிறுவயதிலிருந்து அம்மா சமையல் என்றால் மிகவும் இஷ்டம். அவர் அரசு அதிகாரி என்பதால் இடமாற்றம் காரணமாக வேறு ஊர் செல்ல நேர்ந்தது. சில நாள்கள் பாட்டி, சித்தி ஆகியோரின் கைமணம்... பின்னர் சிலகாலம் வேலையாட்கள் சமையல். அதனால், அம்மாவின் சமையலில் எல்லாரும் மிஸ் பண்ணோம். எங்கள் ஊரான திருநெல்வேலிக்கே அம்மா மீண்டும் வந்ததும், அவரிடம் சமையல் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். கல்லூரியில் படிக்கும்போது இரவு நேர உணவுகளைச் சமைக்க ஆரம்பித்தேன். அப்பாவின் பாராட்டுகளைவிட, அவர் சுட்டிக்காட்டும் குறைகள் மிகவும் உதவியாக இருக்கும்.

பிரெட் சாண்ட்விச்
பிரெட் சாண்ட்விச்
பாத்திமா
பாத்திமா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமணத்துக்குப் பின் கணவருக்காக விதம் விதமாகச் சமைக்க ஆரம்பித்தேன். கணவரின் வேலை காரணமாக அமெரிக்காவுக்குக் குடிவந்தோம். சமையல் திறனை வளர்க்க நேரம் கிடைத்தது’’ என்கிற சமையற்கலைஞர் பாத்திமா, ‘Fathima’s Kitchen’ யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். இப்போது வித்தியாசமான சாண்ட்விச் வகைகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிரில்டு பனீர் சாண்ட்விட்ச்

தேவையானவை:

 • பிரெட் ஸ்லைஸ் – 2

 • பனீர் – 10 கிராம்

 • மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

 • கஸூரி மேத்தி (காய்ந்த வெந்தயக்கீரை) – கால் டீஸ்பூன்

 • வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

 • தக்காளி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்

 • உப்பு - ஒரு சிட்டிகை

கிரில்டு பனீர் சாண்ட்விட்ச்
கிரில்டு பனீர் சாண்ட்விட்ச்

செய்முறை:

பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, காய்ந்த வெந்தயக்கீரை சேர்த்துக் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் ஒரு க்ரில் தவாவில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து ஊறவைத்த பனீர் துண்டுகளை க்ரில் செய்யவும். பிரெட் ஸ்லைஸ்களை தவாவில் லேசாக டோஸ்ட் செய்யவும். ஒரு பிரெட் ஸ்லைஸின் ஒருபக்கத்தில் மட்டும் தக்காளி சாஸ் தடவிக்கொள்ளவும். க்ரில் செய்த பனீர் துண்டுகளை பிரெட் ஸ்லைஸில் பரப்பி, மேலே மற்றொரு பிரெட் ஸ்லைஸ் கொண்டு மூடி பரிமாறவும்.

இங்கிலாந்தில் உள்ள சாண்ட்விச் பகுதியில் 1762-ம் ஆண்டில் நிலப்பிரபு ஜான் மாண்டேகு சீட்டாட்டத்தின்போது சாப்பிடுவதற்காக கண்டுபிடித்ததே சாண்ட்விச்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில்கி அவகாடோ சாண்ட்விச்

தேவையானவை:

 • பிரெட் ஸ்லைஸ் – 4

 • அவகாடோ - ஒன்று

 • கொத்தமல்லி இலை - சிறிதளவு

 • புதினா‌ - சிறிதளவு

 • பச்சை மிளகாய் - ஒன்று

 • தக்காளி - சிறிய பகுதி

 • வெங்காயம் - சிறிய பகுதி

 • இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)

 • பூண்டு - 2 பல்

 • உப்பு - ஒரு சிட்டிகை

 • மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

 • வெண்ணெய் - 2 டீஸ்பூன்

சில்கி அவகாடோ சாண்ட்விச்
சில்கி அவகாடோ சாண்ட்விச்

செய்முறை:

முதலில் கொத்தமல்லி இலை, புதினா இலை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி துண்டு சேர்த்து சட்னியாக அரைத்துக்கொள்ளவும். அவகாடோவை இரண்டாக வெட்டி ஸ்கூப் செய்து எடுத்து அதில் வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிப் போடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும். பிரெட் ஸ்லைஸ்களின் ஒருபுறம் மட்டும் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

ஒரு ஸ்லைஸின் டோஸ்ட் செய்யாத பக்கத்தில் தயாரித்துவைத்திருக்கும் கொத்தமல்லி சட்னி தடவி, மசித்துவைத்திருக்கும் அவகாடோவை அதன் மேல் பரப்பி மற்றொரு ஸ்லைஸிலும் சட்னி தடவி முதல் பிரெட்டின் மேல் வைத்து மூடவும். பிரெட் ஸ்லைஸ்களின் மேலும் கீழும் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து எடுத்தால், சில்கி அவகேடோ சாண்ட்விச் ரெடி. மீதமுள்ள 2 பிரெட் ஸ்லைஸ் கொண்டு இதேபோல் மற்றொரு செட் செய்து கொள்ளவும்.

சாண்ட்விச்சில் முதலில் ரொட்டியின் நடுவே பாலாடைக்கட்டி, காய்கறிகளே வைக்கப்பட்டன.

கிளாஸிக் அமெரிக்கன் சாண்ட்விச்

தேவையானவை:

 • பிரெட் ஸ்லைஸ் - 3

 • ஸ்வீட் கார்ன் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • தக்காளி (நறுக்கி விதை நீக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன்

 • க்ரீம் சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • மயோனைஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை

 • சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு சிட்டிகை

கிளாஸிக் அமெரிக்கன் சாண்ட்விச்
கிளாஸிக் அமெரிக்கன் சாண்ட்விச்

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் க்ரீம் சீஸ் உடன் அரை டேபிள்ஸ்பூன் கார்ன், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் மயோனைஸ் உடன் மீதி கார்ன், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். ஒரு பிரெட் ஸ்லைஸில் க்ரீம் சீஸ் கலவையைத் தடவிக்கொள்ளவும். இரண்டாவது பிரெட் ஸ்லைஸில் மயோனைஸ் கலவையைத் தடவிக்கொள்ளவும். இதை முதல் பிரெட் ஸ்லைஸ் மேல் வைக்கவும். மூன்றாவது பிரெட் ஸ்லைஸின் ஒருபுறத்தில் சீஸ் தடவி மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ் தூவிக்கொள்ளவும், பின்னர் இரண்டாம் பிரெட் ஸ்லைஸ் மேல் வைத்து மூடவும். தவாவை சூடேற்றி பிரெட் லைஸ்களை வைத்து ஒருபுறம் மட்டும் டோஸ்ட் செய்து பரிமாறவும்.

ஜான் மாண்டேகுவின் பிறந்த நாளான நவம்பர் 3 அன்று ‘சாண்ட்விச் தினம்’ கொண்டாடப்படுகிறது.

பீன் சாண்ட்விச்

தேவையானவை:

 • பிரெட் ஸ்லைஸ் - 2

 • ராஜ்மா - ஒரு டேபிள்ஸ்பூன்

 • கொண்டைக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்

 • பச்சைப் பயறு - ஒரு டேபிள்ஸ்பூன்

 • வெங்காயம் - பாதியளவு (நறுக்கவும்)

 • மயோனைஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • வெண்ணெய் - 2 டீஸ்பூன்

 • உப்பு - ஒரு சிட்டிகை

பீன் சாண்ட்விச்
பீன் சாண்ட்விச்

செய்முறை:

ராஜ்மா, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு மூன்றையும் இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் மூன்றையும் வேகவைத்து எடுக்கவும். வேகவைத்த பயற்றில் இருந்து தண்ணீர் வடித்து நன்கு மசித்துக்கொள்ளவும். மசித்த பயற்றுடன் மயோனைஸ், தக்காளி சாஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிரெட் ஸ்லைஸ்களின் இருபுறமும் வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து எடுக்கவும். பின் டோஸ்ட் செய்த பிரெட் ஸ்லைஸ்கள் நடுவில் பயிறு கலவையை வைத்து மூடி குறுக்காக வெட்டிப் பரிமாறவும்.

மாட்டிறைச்சி உட்பட அசைவம் கலந்த புதுப்புது சாண்ட்விச் வகைகளைக் கண்டுபிடித்ததும் ஜான் மாண்டேகுதான்.

சிபோடில் வீகன் சாண்ட்விச்

தேவையானவை:

 • பொட்டேட்டோ பன் - 2

 • லெட்யூஸ் (இலை கோஸ்) - ஒரு இலை

 • வெங்காயம் (வட்டமான துண்டுகள்) - தேவைக்கேற்ப

 • தக்காளி (வட்டமான துண்டுகள்) - தேவைக்கேற்ப

 • அவகாடோ - பாதியளவு

 • சிபோடில் ரான்ச் சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

சிபோடில் வீகன் சாண்ட்விச்
சிபோடில் வீகன் சாண்ட்விச்

செய்முறை:

ஒரு பொட்டேட்டோ பன்னின் உள் பகுதியில் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து எடுக்கவும். பிறகு பன்னின் உள்ளே சிபோடில் ரான்ச் சாஸ் தடவி லெட்யூஸ் இலை வைக்கவும். அதன் மேல் வட்டமாக வெட்டிய வெங்காயம், தக்காளி அதன் மேல் அவகாடோ வைக்கவும் ஒவ்வொரு காய் வைத்தவுடன் தக்காளி சாஸ் விடவும் கடைசியாக மீண்டும் ரான்ச் சாஸ் தடவவும். மற்றொரு பன்னிலும் இதேபோல் செய்துகொள்ளவும்.

இப்போது சாண்ட்விச் குக்கீஸ், ஐஸ்க்ரீம் சாண்ட்விச் உட்பட ஆயிரக்கணக்கான சாண்ட்விச் வகைகள் உலகெங்கும் கிடைக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism