வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளராக மட்டுமல்ல; சமையற்கலையில் ஈடுபாடும் திறமையும் கொண்ட கலைஞராகவும் மிளிர்கிறார் `ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் செயல் அதிகாரி ஹேமா ருக்மணி. இவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் அவ்வப்போது அழகான உணவுப் படங்கள் கமகமக்கும் என்பது ஓர் உதாரணம். இதோ... நமக்காகவே மீட் கட்லெட், புரொக்கோலி சீஸ் சூப், டார்ட்டிலா ரோல், மக் கேக், டிராகன் சிக்கன் ஆகிய சிறப்பு உணவுகளின் செய்முறைகளைத் தந்திருக்கிறார் ஹேமா ருக்மணி. அடுத்து என்ன... அசத்தல் சமையலில் இறங்க வேண்டியதுதானே!

தேவையானவை:

எலும்பில்லாத மட்டன் அல்லது சிக்கன் - அரை கிலோ

தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்

வினிகர் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - கால் கப்

முட்டை - ஒன்று

நறுக்கிய வெங்காயம் - அரை கப்

நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்

பிரெட் தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மட்டன் அல்லது சிக்கனை பொடியான நறுக்கி, தனியாத்தூள், மிளகாய்த்துள், மிளகுத்தூள், இஞ்சி விழுது , வினிகர், உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். (சிக்கனாக இருந்தால் குக்கரில் ஒரு விசில் மட்டனாக இருந்தால் மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம்.)

வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடாக்கி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் வதக்கி எடுத்துக்கொள்ளவும். முட்டையின் மஞ்சள் கருவையும் வெள்ளைக் கருவையும் தனித்தனி யாகப் பிரித்து அடித்துவைத்துக் கொள்ளவும்.

வேகவைத்த மட்டன் கலவையுடன் வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் கரு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து சிறு சிறு வட்டங்களாகத் தட்டவும். பின்னர் இதை வெள்ளைக்கருவில் தோய்த்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

தனியாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ரைபோபிளேவின், நியாஸின், கால்சியம், போலிக் அமிலம், கரோட்டின், வைட்டமின்கள் ஏ, சி, கே, உட்பட ஏராளமான சத்துகள் இருக்கின்றன.

தேவையானவை:

உருளைக்கிழங்கு - 4

உப்பு சேர்க்கப்பட்ட வெண்ணெய் - கால் கப்

காய்ச்சிய பால் - ஒரு கப்

பொடியாக நறுக்கி, எண்ணெயில் வதக்கிய பூண்டு பற்கள் - 5 - 6

செய்முறை:

உருளைக்கிழங்குகளைத் தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி, நன்கு வேகவிடவும். நீரை வடித்து, கிழங்குத்துண்டுகள் ஆறியதும் நன்கு மசிக்கவும். இதனுடன் வெண்ணெயைச் சேர்த்து இன்னும் நன்கு மசிக்கவும். இப்போது பாலை சிறிது சிறிதாகச் சேர்த்து, மேலே வதக்கிய பூண்டு பற்களைத் தூவி விடவும். மீட் கட்லெட்டை உருளை மசியலில் தொட்டு சாப்பிடவும்.

அறை வெப்ப நிலையில் சற்று குழைவாக இருக்கும் வெண்ணெய், 35 சென்டிகிரேடுக்கு அதிகமான வெப்பத்தில் உருகி நெய்யாகிறது.

தேவையானவை:

சிக்கன் வெந்த நீர் - 4 கப் (சாதாரண நீரும் பயன்படுத்தலாம்.)

நறுக்கிய புரொக்கோலி - ஒரு கப்

க்ரீம் சீஸ் - 2 டீஸ்பூன்

பூண்டு - 10 பற்கள்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

மிளகுத்தூள் – சுவைக்கேற்ப

செய்முறை:

பூண்டுப் பற்களைப் பொடியாக நறுக்கி, எண்ணெயில் வதக்கி தனியாக வைக்கவும். அதே எண்ணெயில் நறுக்கிய புரொக்கோலி துண்டுகளை லேசாக வதக்கி, இதனுடன் சிக்கன் வெந்த நீர், உப்பு, க்ரீம் சீஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு வேக விடவும். புரொக்கோலி வெந்ததும், சில துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து, ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்து தனியாக வைக்கவும். ஒரு பவுலில் சூப்பை ஊற்றி, அரைத்த புரொக்கோலி விழுது மற்றும் வதக்கிய பூண்டை டாப்பிங் செய்து, தேவைப்பட்டால் மிளகுத்தூள் தூவி அருந்தவும்.

தேவையானவை:

மைக்ரோவேவ் சேஃப் செராமிக் கப் (Microwave Safe Ceramic Cup) - 2

சலித்த மைதா மாவு - அரை கப்

பொடித்த வெள்ளை சர்க்கரை - அரை கப்

இனிப்பில்லாத கொக்கோ பவுடர் - 4 டீஸ்பூன்

தேங்காய்ப்பால் - அரை கப்

தேங்காய் எண்ணெய் அல்லது வாசனையில்லாத எண்ணெய் - 4 டீஸ்பூன்

கோகனட் ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு கலக்கவும். இதனுடன் தேங்காய்ப்பால், எண்ணெய் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை இரண்டாகப் பிரித்து, இரண்டு ‘செராமிக் மக்’கில் கொட்டி, ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்தால், மக் கேக் ரெடி. கேக்கின் மேல் கோகனட் ஐஸ்கிரீமை டாப்பிங் செய்து, உடனே சாப்பிடலாம்

குறிப்பு: கேக் கலவை அதிக நேரம் வெந்து விட்டால் கேக், ரப்பர் போலாகி விடும்.

கொக்கோ விதைகள் மூலமே கொக்கோத்தூளும் சாக்லேட்டும் தயாரிக்கப்படுகின்றன.

தேவையானவை:

டார்ட்டிலா - 4 (ரெடிமேடாகக் கடைகளில் கிடைக்கும்)

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

சீக்கிரம் வதங்கக்கூடிய காய்கறிகள் (பொடியாக நறுக்கவும்) - 2 கப்

தக்காளி கெட்சப் - 3 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மயோனைஸ் - 4 டீஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

டார்ட்டிலாக்களை டோஸ்ட் செய்யவும். கிடைக்கவில்லையென்றால் சப்பாத்தியையும் டோஸ்ட் செய்து கொள்ளலாம். வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி சிவக்கும் வரை நன்கு வதக்கவும். இதனுடன் காரத்துக்கு ஏற்றபடி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும். பின்னர் இதனுடன் 3 டீஸ்பூன் டொமேட்டோ கெட்சப் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சிறிது எண்ணெயில் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

டார்ட்டிலாவின் மேல் சிறிது மயோனைஸ் தடவவும். அதன் மேலே தயாரித்து வைத்துள்ள தக்காளிச் சட்னியைத் தடவவும், பிறகு அதில் வதக்கிய காய்கறிகளை வைத்து ரோல் செய்து சாப்பிடவும்.

முதலில் வட அமெரிக்கப் பழங்குடி மக்களின் உணவாகவே இருந்தது டார்ட்டிலா.

தேவையானவை:

சிக்கன் - கால் கிலோ

சோள மாவு - 2 டீஸ்பூன்

மைதா மாவு - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

மேகி மசாலா மேஜிக் பவுடர் - ஒரு பாக்கெட்

வெங்காயத்தாள் - 2 கீற்று

முந்திரி - 10

டொமெட்டோ கெட்சப் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கொழுப்பில்லாமல் சுத்தம் செய்யப்பட்ட சிக்கனுடன் சோள மாவு, மைதா மாவு, மேகி மசாலா மேஜிக் பவுடர், தனி மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, நன்கு கலந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தாள்களை நறுக்கி தனியாக வைக்கவும். ஊறிய சிக்கன் துண்டுகளை எண்ணெயில் பொரித்தெடுத்து எண்ணெயை வடிய விடவும்.

அகலமான வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தாளைக் கொட்டி வதக்கவும். லேசாக வதங்கியதும் முந்திரிப்பருப்பு, பொரித்த சிக்கன் துண்டுகள், டொமெட்டோ கெட்சப் ஆகியவற்றை சேர்த்து, ஒரு கிளறு கிளறினால் சுடச்சுட டிராகன் சிக்கன் ரெடி.

100 கிராம் சிக்கனில் காணப்படும் கொழுப்பின் அளவு 14 கிராம். கொலஸ்ட்ரால் அளவு 88 மில்லி கிராம்.