Published:Updated:

மில்லெட் மேஜிக் விருந்து!

மில்லெட் மேஜிக் விருந்து
பிரீமியம் ஸ்டோரி
மில்லெட் மேஜிக் விருந்து

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலேயே ஆப்பிரிக்காவிலும், இந்திய துணைக் கண்டத்திலும் கம்பு விளைவிக்கப்பட்டிருக்கிறது.

மில்லெட் மேஜிக் விருந்து!

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலேயே ஆப்பிரிக்காவிலும், இந்திய துணைக் கண்டத்திலும் கம்பு விளைவிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
மில்லெட் மேஜிக் விருந்து
பிரீமியம் ஸ்டோரி
மில்லெட் மேஜிக் விருந்து

ரகு, சாமை, குதிரைவாலி, தினை, கம்பு, சோளம், கேழ்வரகு, பனிவரகு போன்ற சிறுதானியங்களை அன்றாடச் சமையலில் இணைக்க ஆரம்பித்துவிட்டோம். சமையலறைக்குள் வந்துவிட்ட சிறுதானியங்களை வீட்டினர் நன்மைபெறும் வகையில் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துவிட வேண்டும்.

மில்லெட் மேஜிக் விருந்து!

இருப்பினும் வெரைட்டி என்கிறபோது இவற்றில் மிகக் குறைவாகவே உள்ளது என்பது சிலரது மனக்குறை. கொஞ்சம் மேஜிக் செய்து சிறுதானியங்களை வீட்டினருக்குப் பிடித்த உணவோடு புகுத்தி சுவையாக அளித்தால் அனைவரையும் அசத்தலாம். அப்படியான முயற்சியில் உருவானதே இந்த இதழில் வெளியாகியிருக்கும் மில்லெட் மேஜிக் ரெசிப்பிகள்.

மில்லெட் மேஜிக் விருந்து!

``உதாரணமாக... மாம்பழத்தை எல்லோருக்கும் பிடிக்கும். அதோடு சாமையைக் கலந்து ஓர் அருமையான ஸ்வீட் செய்ய முடியும். நான்/ரொட்டி என்பது நாம் ஹோட்டலுக்குப் போனால் ஆர்டர் செய்யும் ஒரு ஸ்பெஷல் உணவு. அதை வீட்டிலேயே சோளம் சேர்த்து சத்தான மேஜிக் விருந்தை உங்கள் சமையலறையில் தொடங்குங்கள்!’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் ஜெ.கலைவாணி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கம்பு உருண்டை மோர்க்குழம்பு

தேவையானவை:

  • காராமணி - கால் கப்

  • கம்பு - 2 டேபிள்ஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 2

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

குழம்பு செய்ய:

  • கடைந்த மோர் - 2 கப்

  • கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

  • துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 2

  • சீரகம் - அரை டீஸ்பூன்

  • தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

  • எண்ணெய் - அரை டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

  • கடுகு - அரை டீஸ்பூன்

  • பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

மில்லெட் மேஜிக் விருந்து!

செய்முறை:

காராமணியையும் கம்பையும் முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து அதை சிறு உருண்டைகளாக உருட்டி இட்லிப் பானையில் ஆவியில் வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குழம்பு செய்ய கொடுக்கப்பட்டுள்ள கடலைப் பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அவற்றைத் தேங்காய்த் துருவல், சீரகத்துடன் சேர்த்து விழுதாக அரைத்து கடைந்த மோரில் சேர்த்துக் கொதிக்கவிடவும். உப்பு சேர்த்து நன்கு பொங்கி வந்தவுடன் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்துச் சேர்க்கவும். வேகவைத்து, பொரித்த காராமணி உருண்டைகளையும் சேர்த்துக் கலந்து இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலேயே ஆப்பிரிக்காவிலும், இந்திய துணைக் கண்டத்திலும் கம்பு விளைவிக்கப்பட்டிருக்கிறது.

சாமை மாம்பழ ஸ்வீட்

தேவையானவை:

  • சாமை அரிசி - 2 கப் (ஊறவைக்கவும்)

  • பால் - அரை லிட்டர்

  • பாதாம் - 10 (நறுக்கவும்)

  • முந்திரி - 5 (நறுக்கவும்)

  • பாதாம் டிரிங்க் மிக்ஸ் (ரெடிமேடாக கிடைக்கும்) - ஒரு கப்

  • ஏலக்காய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • டூட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்பூன்

மில்லெட் மேஜிக் விருந்து!

செய்முறை:

ஊறவைத்த சாமையை அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். வாணலியில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். அதில் பாதாம் சேர்த்து மேலும் காய்ச்சவும். பிறகு சாமை அரிசி மாவை ஊற்றி கைவிடாமல் கலந்து கொதிக்கவிடவும். அதனுடன் பாதாம் டிரிங்க் மிக்ஸ் சேர்த்துக் கொதிக்கவிட்டு, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். முந்திரி சேர்த்து, டூட்டி ஃப்ரூட்டி தூவி கெட்டி யாகும்வரை கிளறிக் கொதிக்கவிட்டு இறக்கி, அரை மணி நேரம் ஆறவிடவும். பின்பு அதில் நறுக்கிய மாம்பழத்தைச் சேர்த்துக் கிளறி, பரிமாற சுவையோ சுவை!

சாமையில் 11 சதவிகிதம் புரதம் உள்ளது. உட்கொள்ளப்படும் 100 கிராம் சாமையில் 9 - 11 கிராம் புரதத்தைப் பெறலாம்.

பனிவரகு பூண்டு காராசேவு

தேவையானவை:

  • பூண்டு - 15 பல்

  • கடலை மாவு - ஒரு கப்

  • பனிவரகு மாவு - ஒரு கப்

  • அரிசி மாவு - ஒரு கப்

  • பொட்டுக்கடலை மாவு - ஒரு கப்

  • தனி மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

  • எண்ணெய் - ஒன்றரை கப்

மில்லெட் மேஜிக் விருந்து!

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, பனிவரகு மாவு, பொட்டுக்கடலை மாவு நான்கையும் சலித்து எடுத்துக்கொள்ளவும். பூண்டைத் தோல் உரித்துக்கொள்ளவும். மிக்ஸியில் பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு மூன்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சலித்த கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, பனிவரகு மாவு ஆகியவற்றைக் கலந்து அதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். அதில் அரை கப் தண்ணீரைச் சிறிது சிறிதாகத் தெளித்து மிருதுவாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த பிறகு கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். மாவை காராசேவு கரண்டியில், ஒருமுறை தேய்த்துப் பார்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதிலிருந்து ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெயை எடுத்துப் பிசைந்து வைத்திருக்கும் மாவுடன் ஊற்றி ஒருமுறை நன்கு பிசைந்துகொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் காராசேவு கரண்டியை எண்ணெயின் மேல்புறம் பிடித்துக்கொண்டு அதில் மாவை வைத்து உள்ளங்கைகளால் அழுத்தித் தேய்த்துவிடவும். கம்பி போல் விழ வேண்டும். பின்னர் 2 நிமிடங்கள் கழித்துத் திருப்பிப்போட்டு எண்ணெய் சத்தம் அடங்கி, சேவு பொன்னிறமானதும் எடுத்து, வடிதட்டில் வைத்து, எண்ணெய் வடிந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

எலும்பு வளர்ச்சிக்கு அவசியமான கால்சியம் நிறைந்துள்ள சிறுதானியம் பனிவரகு.

சோள பட்டர் நான் - ராஜ்மா கிரேவி

தேவையானவை:

  • சோள மாவு - ஒரு கப்

  • கோதுமை மாவு - ஒரு கப்

  • வெண்ணெய் (மாவில் சேர்த்துப் பிசைய) - 2 டேபிள்ஸ்பூன்

  • உப்பு - அரை டீஸ்பூன்

  • சர்க்கரை - அரை டீஸ்பூன்

  • வெண்ணெய் (சுட்டெடுக்க) - தேவையான அளவு

ராஜ்மா கிரேவி செய்ய:

  • ராஜ்மா - அரை கப் (8 மணி நேரம் ஊறவைத்து வேகவைக்கவும்)

  • பச்சை மிளகாய் - 4

  • தக்காளி - 2

  • வெங்காயம் - 2

  • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

  • கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

  • பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மராத்தி மொக்கு - தலா ஒன்று

  • எண்ணெய் - சிறிதளவு

மில்லெட் மேஜிக் விருந்து!

செய்முறை:

முக்கால் டம்ளர் தண்ணீரில் உப்பு மற்றும் சர்க்கரையைக் கலந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சோள மாவையும் கோதுமை மாவையும் கலந்துகொண்டு வெண்ணெய் சேர்த்து லேசாகப் பிசையவும். பின்பு உப்பு - சர்க்கரை நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். 20 முதல் 30 நிமிடங்கள் மாவை துணியில் சுற்றி வைக்கவும். எவ்வளவு நேரம் வைக்கிறோமா மாவு அவ்வளவு மென்மையாக இருக்கும். பின்பு எடுத்து உருண்டையாக்கி மெல்லிய சப்பாத்தியாகத் திரட்டிக்கொள்ளவும். சப்பாத்திக் கல்லில் போட்டு வெண்ணெய் விட்டு பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு தக்காளி, வெங்காயத்தை 10 நிமிடங்கள் வதக்கி ஆறவிட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். பின்பு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். பின்பு அரைத்துவைத்துள்ள தக்காளி - வெங்காய விழுதைச் சேர்த்துக் கிளறி கொதிக்கவிடவும். கொதித்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பின்னர் வேகவைத்துள்ள ராஜ்மாவைச் சேர்க்கவும். ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு கலந்து கொதித்ததும் இறக்கி, சோள நான் உடன் சுடச்சுட பரிமாறவும்.

சோளத்தின் தாயகம் ஆஸ்திரேலியா. பின்னர் இது ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களுக்குப் பரவியது.

குதிரைவாலி தேங்காய்ப்பால் பணியாரம்

தேவையானவை:

  • குதிரைவாலி அரிசி – முக்கால் கப்

  • உளுந்து – அரை கப்

  • தேங்காய் – ஒன்று

  • காய்ச்சி ஆறவைத்த பால் – ஒரு டம்ளர்

  • ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

  • நாட்டுச்சர்க்கரை – தேவையான அளவு

  • சமையல் சோடா - ஒரு சிட்டிகை

  • உப்பு - சிறிதளவு

  • எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

மில்லெட் மேஜிக் விருந்து!

செய்முறை:

உளுந்து மற்றும் குதிரைவாலி அரிசியை ஒன்றாகச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து வடை மாவு பதத்துக்கு (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) அரைக்கவும். அதனுடன் ஒரு சிட்டிகை சமையல் சோடா, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். தேங்காயைத் துருவி தேங்காய்ப்பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பால், அதனுடன் பால், ஏலக்காய்த் தூள், தேவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கலந்துவைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயைச் சூடாக்கி, அரைத்துவைத்திருக்கும் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து, தனியாக எடுத்துவைக்கவும். பரிமாறும்போது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து ஒரு கப்பில் போட்டு அதில் தேங்காய்ப்பால் கலவையைச் சேர்த்துப் பரிமாறவும்.

இந்தியா, ஜப்பான், சீனா, கொரியா ஆகிய நாடுகளில் குதிரைவாலி அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.

சாமை வெங்காய மிளகு சாதம்

தேவையானவை:

  • சாமை அரிசி சாதம் - ஒரு கப்

  • சின்ன வெங்காயம் - 50 கிராம்

  • பச்சை மிளகாய் - ஒன்று

  • கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

  • கடுகு, கறிவேப்பிலை, சீரகம், கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தாளிக்கத் தேவையான அளவு

  • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப

மில்லெட் மேஜிக் விருந்து!

செய்முறை :

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிவைக்கவும். பாத்திரத்தில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை, சீரகம், கடலைப்பருப்பு, வேர்க்கடலை தாளித்து, பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பச்சை வாசனை போக வதங்கியதும் வடித்த சாமை சாதம் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் மூடிபோட்டு வைக்கவும். கடைசியாக கொத்த மல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான சாமை வெங்காய மிளகு சாதம் தயார்.

வறட்சியிலும் வெள்ளத்திலும் தாக்குப்பிடித்து வாழும் தன்மை சாமைக்கு உண்டு.

கம்பு சோயா ரிங் ஃப்ரை

தேவையானவை:

  • சோயா - 2 கப்

  • கம்பு - அரை கப்

  • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

  • பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

  • பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கவும்)

  • இஞ்சி - ஒரு துண்டு (தோல் சீவி பொடியாக நறுக்கவும்)

  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

  • ஆம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

  • கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டீஸ்பூன்

  • மைதா - ஒரு டீஸ்பூன்

  • உப்பு - ஒரு டீஸ்பூன்

  • எண்ணெய் - தேவையான அளவு

மில்லெட் மேஜிக் விருந்து!

செய்முறை:

கம்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து வேகவைக்கவும். சோயாவைத் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, பிழிந்தெடுத்து வெந்நீர் ஊற்றி மீண்டும் இரண்டு நிமிடங்கள் வைத்து பிறகு, பிழிந்தெடுத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் கம்பையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதை அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு. அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லித்தழை உப்பு, சில்லி பவுடர், மஞ்சள்தூள். ஆம்சூர் பவுடர், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கார்ன்ஃப்ளார், மைதா ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து அளவான உருண்டைகளாகப் பிடித்துவைத்துக் கொள்ளவும்.

ஒவ்வோர் உருண்டையையும் எடுத்து நீளவாக்கில் கெட்டியாக உருட்டி பென்சிலால் நடுவில் துளையிட்டுக்கொள்ளவும். உருளைகளை ஃப்ரீசரில் வைத்தால், சிறிதளவு கெட்டியாகும். பிறகு கூர்மையான கத்தியால் ரிங் வடிவத்தில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் ரிங்குகளை மெதுவாகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால், கம்பு சோயா ரிங் ஃப்ரை ரெடி.

கிழக்கு ஆசிய நாடுகளில் சோயா அதிக அளவு உணவாக உட்கொள்ளப்படுகிறது.

கார்ன் கிரிஸ்பி டிரை மஞ்சூரியன்

தேவையானவை:

  • சோள முத்துகள் - ஒரு கப்

  • நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப் (பச்சை மற்றும் சிவப்பு)

  • மஷ்ரூம் - ஒரு கப் (நறுக்கியது)

  • காலிஃப்ளவர், பேபி கார்ன் - தலா ஒரு கப் (நறுக்கியது)

  • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

  • கரைத்துக்கொள்ள:

  • கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - அரை கப்

  • மைதா மாவு - கால் கப்

  • மிளகு - அரை டீஸ்பூன் (பொடித்தது)

  • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

  • வினிகர் - ஒரு டீஸ்பூன்

  • உப்பு - முக்கால் டீஸ்பூன்

  • தண்ணீர் - கால் கப்

தாளிக்க:

  • இஞ்சி - ஒரு துண்டு (தோல் சீவி நறுக்கவும்)

  • பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

  • நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப்

  • சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

  • தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்

  • சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

  • உப்பு - அரை டீஸ்பூன்

அலங்கரிக்க:

  • நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு

மில்லெட் மேஜிக் விருந்து!

செய்முறை:

சோள முத்துகளை வேகவைத்துக் கொள்ளவும். கரைக்கக்கொடுத்துள்ளவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணெய்விட்டு காயவிடவும். நறுக்கிய குடமிளகாய், மஷ்ரூம், காலிஃப்ளவர், பேபி கார்ன் ஆகியவற்றைக் கரைத்த மாவு கலவையில் போட்டு நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். பிறகு எண்ணெயில் பொன்னிற மாகப் பொரித்தெடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தாள், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து தீயைக் குறைத்து சோள முத்துகளையும் சேர்த்துக் கிளறவும். பின்பு வெங்காயத்தாள் தூவி இறக்கிப் பரிமாறவும்.

10,000 ஆண்டுகளுக்கு முன் கிழக்கு மெக்ஸிகோவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருக்கிறது.

கம்பு கேரட் பான் கேக்

தேவையானவை:

  • உருளைக்கிழங்கு - 3

  • கேரட் - ஒன்று

  • பூண்டு - 4 பல் (துருவவும்)

  • முட்டை - ஒன்று

  • கம்பு மாவு - 4 டேபிள்ஸ்பூன்

  • கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்

  • மர்ஜோராம் - ஒரு டேபிள்ஸ்பூன் (டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும்)

  • நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப்

  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

மில்லெட் மேஜிக் விருந்து!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சுத்தமான டர்க்கி டவலைப் பரவலாக வைத்து, நடுவில் தேங்காய்த் துருவியை வைத்து உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை சீவவும். தேங்காய்த் துருவியை எடுத்துவிட்டு டவலை மூடி உருளைக்கிழங்கு, கேரட்டைப் பிழிந்து எடுக்கவும். பின்பு உருளைக்கிழங்கு, கேரட்டை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் பூண்டு, உப்பு, கம்பு மாவு, கார்ன்ஃப்ளார் சேர்த்துக் கலந்து முட்டையை அடித்து ஊற்றவும். பிறகு மர்ஜோராம் மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து அனைத்தையும் பிசைந்து, உள்ளங்கையில் பிடிக்கும் அளவுக்கு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு ஒவ்வோர் உருண்டையையும் எடுத்து வட்ட வடிவில் சற்று கனமாக ஒரே அளவாகத் தட்டி, எண்ணெயில்விட்டு பொரித்தெடுத்தால்.. கம்பு கேரட் பான் கேக் ரெடி.

கேரட் முதன்முதலாகப் பயிரிடப்பட்டது பெர்சியாவில். இதன் இலைகளும் விதைகளுமே அப்போது பயன்படுத்தப்பட்டன.

குதிரைவாலி பச்சைப்பயறு பெசரட்

தேவையானவை:

  • பச்சைப்பயறு - ஒரு கப்

  • குதிரைவாலி அரிசி - அரை கப்

  • பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 4

  • இஞ்சி (ஒரு இன்ச் துண்டுகள்) - 2 (தோல் சீவவும்)

  • சீரகம் - ஒரு டீஸ்பூன்

  • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

  • நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

  • உப்பு - அரை டீஸ்பூன்

  • எண்ணெய் - தேவையான அளவு

மில்லெட் மேஜிக் விருந்து!

செய்முறை:

பச்சைப்பயற்றையும் குதிரைவாலி அரிசியையும் முந்தின நாள் இரவே ஊறவைத்துக்கொள்ளவும். ஊறிய குதிரைவாலி அரிசி, பச்சைப்பயற்றை மிக்ஸியில் போட்டு அத்துடன் பச்சரிசி, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து மாவாக அரைத்துக்கொள்ளவும். மாவில் சீரகத்தைச் சேர்த்துக் கலந்துகொள்ளவும். தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஒரு வெங்காயத்தை இரண்டாக நறுக்கி அதைத் தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பின்பு மாவை கரண்டியில் எடுத்து பெசரட் தோசையாக வார்த்து, பொன்னிறமானதும் வெங்காயம், கொத்தமல்லித்தழை தூவி சுருட்டி எடுத்துப் பரிமாறவும். திருப்பி போட வேண்டிய அவசியம் இல்லை.

குதிரைவாலிக்கு `ஜப்பானிஸ் மில்லெட்’ என்ற பெயரும் உண்டு.

தினை கருப்பட்டி குளோப்

தேவையானவை:

  • தினை - கால் கப்

  • கிர்ணி விதை - ஒரு டீஸ்பூன்

  • எள் – அரை கப்

  • கருப்பட்டி – முக்கால் கப்

  • ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

  • நெய் – 3 டீஸ்பூன்

மில்லெட் மேஜிக் விருந்து!

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எள் சேர்த்து வறுத்தெடுக்கவும். பின்பு அதே வாணலியில் தினையைப் பொன்னிறமாக பச்சை வாசனை நீங்கும் வரை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியைச் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி, பின் மீண்டும் கொதிக்கவைத்து உருட்டு பதத்தில் பாகு காய்ச்சவும். (ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு, அதில் சிறிதளவு பாகைவிட்டு, உருட்டினால் உருட்ட வர வேண்டும். அதுதான் பாகுக்கு சரியான பதம்). பதம் வந்ததும் வறுத்த எள், தினை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். சற்று சூடாக இருக்கும்போதே கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு தினைக் கலவையை உருண்டைகளாக உருட்டவும். மேலே கிர்ணி விதை தூவவும். சுவையான தினை கருப்பட்டி குளோப் ரெடி.

குறிப்பு:

வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு எள் மிகவும் நல்லது. இதைக் கறுப்பு எள், வெள்ளை எள் இரண்டிலும் செய்யலாம்.

கி.மு 6,000 காலகட்டத்தில் சீனாவில் தினை பயிரிடப்பட்டிருப்பதாக அண்மைக்கால ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.