அதே இட்லி - சட்னி, சாதம் - சாம்பார் - பொரியல் என்று சாப்பிட்டு சலித்துப்போனவர்கள், விதவிதமான ஹோட்டல்களுக்குச் சென்று வித்தியாசமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து ருசித்து மகிழ்வதுண்டு. அந்த வரிசையில் ‘அப்படி என்ன இந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் உணவுகளில் இருக்கிறது. விலை மலையை விட அதிகமாக இருக்கிறதே!’ என்று வியந்து பார்ப்பவர்களும் ஏராளம். ஆனால், அந்த ரெசிப்பி வகைகளை வீட்டிலிருந்தபடியே செய்து அசத்தலாம் என்று வித்தியாசமான ஸ்டார் ஹோட்டல் ரெசிப்பிகளை கொச்சி கிராண்ட் ஹயாத் ஹோட்டலின் தலைமை நிர்வாக செஃப் ஹெர்மென் க்ராஸ்பிச்லெர் மற்றும் நிர்வாக சோஸ் செஃப் செந்தில்குமார் நம்மோடு பகிர்ந்துகொண்டனர்.

தேவையானவை:

ஸ்விஸ் சார்ட் ரவியோலி - 150 கிராம்

பார்மீசன் ஷேவிங்ஸ் - 15 கிராம்

பைன் நட்ஸ் (Pinenuts) - 5 கிராம்

வெண்ணெய் - 10 கிராம்

கான்ஃபிட் பூண்டு - 5 கிராம்

சேஜ் தழைகள் - 2 கிராம்

உப்பு மற்றும் மிளகு - தேவையான அளவு

ஸ்விஸ் சார்ட் ரவியோலி செய்யத் தேவையானவை:

தண்ணீரில் வேகவைத்த ஸ்விஸ் சார்ட் (ஒரு வகையான கீரை) - 50 கிராம்

ரிகோட்டா சீஸ் - 10 கிராம்

பார்மீசன் சீஸ் - 10 கிராம்

பாஸ்தா கலவை மாவு - 50 கிராம்

உப்பு மற்றும் மிளகு - தேவையான அளவு

செய்முறை:

உப்பு, மிளகு, ரிகோட்டா மற்றும் பார்மீசன் சீஸோடு சுவிஸ் சார்ட்டை நன்கு கலந்து, சப்பாத்தி மாவு பதத்துக்குக் கொண்டுவர வேண்டும். இதை பாஸ்தா கலவை மாவினுள் நிரப்பி, சிறிய ரவியோலி அதாவது மெல்லிய கொழுக்கட்டை போன்று செய்தால் ரவியோலி தயார். சூடான பாத்திரத்தில் வெண்ணெய், கான்ஃபிட் பூண்டு மற்றும் சேஜ் தழைகள் சேர்த்து, எமல்ஷன் பதத்துக்குக் கொண்டுவர வேண்டும். அதனோடு ஏற்கெனவே தயார் செய்து வைத்த ரவியோலியை சேர்க்க வேண்டும். பார்மீசன் ஷேவிங்ஸ், பைன் நட்ஸ், உப்பு மற்றும் மிளகு சேர்த்து சூடாகப் பரிமாறலாம்.

எல்லா பொருள்களும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்.

வெண்ணெயில் சேர்க்கப்படும் உப்பு, வாசனைப் பொருட்கள், பிரிசர்வேட்டிவ் பொருள்களைப் பொறுத்து அதன் சுவையிலும் நிறத்திலும் மாற்றம் ஏற்படுகிறது.
.தோசை முதல் சிக்கன் பிரியாணி வரை... .
தேவையானவை

உருளைக்கிழங்கு நொக்கி - 150 கிராம்

கான்ஃபிட் பூண்டு - 10 கிராம்

பேசில் இலைகள் - 25 கிராம்

பார்மீசன் சீஸ் - 10 கிராம்

வெண்ணெய் - 10 கிராம்

எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆயில் - 10 மில்லி

தக்காளி - மிகவும் சிறிதளவு

தக்காளி சாஸ் - 40 மில்லி

செய்முறை:

நொக்கியை முதலில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். சூடான பாத்திரத்தில் கான்ஃபிட் பூண்டு, தக்காளி, பேசில் இலைகள் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து சீஸனிங்குக்கான கலவையைத் தயாரித்துக் கொள்ளவும். இந்தக் கலவையோடு வெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் மற்றும் வேகவைத்த நொக்கியைச் சேர்த்து நன்கு கலந்துவிடவும். பார்மீசன் சீஸ் தூவினால் உருளைக்கிழங்கு நொக்கி தயார்.

தக்காளியின் தாயகம் பெரு, மெக்ஸிகோவிலிருந்து அர்ஜெண்டினா வரையிலுள்ள பகுதியாகும்.

தேவையானவை:

எலும்புள்ள ஆட்டிறைச்சி - 190 கிராம்

ரிசோட்டோ அரிசி - 40 கிராம்

வெள்ளை வைன் - 25 மில்லி

குங்குமப்பூ - ஒரு கிராம்

உருளைக்கிழங்கு - 20 கிராம்

கேரட் - 20 கிராம்

டர்னிப் - 20 கிராம்

பீட்ரூட் - 20 கிராம்

மஷ்ரூம் - 20 கிராம்

வெங்காயம் - 20 கிராம்

பூண்டு - 10 கிராம்

பார்மீசன் சீஸ் - 25 கிராம்

பிரெட் க்ரம்ப்ஸ் - 50 கிராம்

உப்பு - 5 கிராம்

மிளகு - 5 கிராம்

ஆலிவ் ஆயில் - 10 மில்லி

ரோஸ்மேரி - 10 கிராம்

வெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ரோஸ்மேரி மற்றும் சிறிதளவு உப்பு, மிளகு, பூண்டு சேர்த்து ஆட்டிறைச்சியை நன்கு ஊறவைக்க வேண்டும். இந்தக் கலவையை பார்மீசன் சீஸ் மற்றும் பிரெட் க்ரம்ப்ஸுடன் புரட்டிக்கொள்ளவும்.

சூடான பாத்திரத்தில், ரிசோட்டோ அரிசியை மிருதுவாக வறுத்தெடுத்து, அதனோடு வெள்ளை வைன் மற்றும் குங்குமப்பூ சேர்த்து திடமான பதம் வரும் வரையில் கலந்துவிட வேண்டும். இந்தக் கலவையோடு வெண்ணெய் மற்றும் பார்மீசன் சீஸ் சேர்த்துக்கொள்ளவும். காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கி, அவற்றை சிறிதளவு உப்பு, மிளகு மற்றும் பூண்டு ஆகியவற்றோடு கலந்து ஆயிலில் நன்கு வறுத்தெடுக்கவும்.

சூடான பாத்திரத்தில் வெண்ணெய் உருக்கி அதில் பிரெட் க்ரம்ப்ஸுடன் ஊறவைத்த ஆட்டிறைச்சியைச் சேர்த்துக் கலந்துவிடவும். இறைச்சி நன்கு வெந்தவுடன் அதோடு, தயாரித்து வைத்த ரிசோட்டோ அரிசி மற்றும் வறுத்த காய்கறிகளைச் சேர்த்துப் பரிமாறலாம்.

முட்டைக்கோஸ், புரொக்கோலி, முள்ளங்கி போன்று குறுக்குவெட்டு காய்கள் குடும்பத்தைச் சேர்ந்தது டர்னிப்.
.மேற்கு மாம்பலம் ‘மாமா தோசைக் கடை!’.
தேவையானவை:

கலவை மாவுக்கு:

மைதா - 500 கிராம்

ஃபரினா மாவு - 100 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

ரிகோட்டா கலவைக்குத் தேவையானவை:

அஸ்பாரகஸ் - 120 கிராம்

ரிகோட்டா சீஸ் - 60 கிராம்

கோட் சீஸ் - 60 கிராம்

பார்மீசன் சீஸ் - 60 கிராம்

உப்பு - 5 கிராம்

பாஸ்தா சாஸ் செய்யத் தேவையானவை:

பூண்டு - 10 கிராம்

வெண்ணெய் - 25 கிராம்

நறுக்கிய பேசில் இலைகள் - 10 கிராம்

சீஸ் சாஸ் - 50 கிராம்

பாஸ்தா செய்முறை:

பாஸ்தா ஷீட்டர் கருவியின் உதவியோடு மைதா மற்றும் ஃபரினா மாவை கலந்து, பாஸ்தா மாவு மற்றும் டார்தெல்லீனி (கொழுக்கட்டை போன்ற வடிவம்) செய்வதற்கு ஏற்ற மெல்லிய ஷீட்டை தயாரித்துக்கொள்ளவும். ரிகோட்டா கலவைக்குத் தேவையான பொருள்களை நன்கு கலந்து, அதனை பாஸ்தா ஷீட்டினுள் அடைத்து டார்தெல்லீனி செய்துகொள்ள வேண்டும். பாஸ்தா சாஸ் செய்வதற்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் நன்கு கலந்து சாஸ் பதத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

அஸ்பாரகஸ் ஃபாண்டியு (Fondue) செய்முறை:

சூடான தண்ணீரில் சிறிதளவு அஸ்பாரகஸை வேகவைத்து, மூன்று நிமிடத்திற்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனோடு சீஸ் சாஸ் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சூடான உப்புத் தண்ணீரில், ஏற்கெனவே தயாரித்துவைத்த டார்தெல்லீனியை போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து எடுக்கவும். இந்த டார்தெல்லீனியோடு ஏற்கெனவே தயாரித்துவைத்த பாஸ்தா சாஸ் சேர்த்து நன்கு கலந்து வேகவைக்கவும். அரைத்த அஸ்பாரகஸ் கலவையின்மேல் டார்தெல்லீனியை வைத்து அதன்மேல் பார்மீசன் சீஸ் தூவி சூடாகப் பரிமாறலாம்.

8,000 ஆண்டுகளுக்கு முன்பே உப்பைப் பதப்படுத்தும் பழக்கம் மக்களின் வழக்கமாக இருந்துள்ளது.