வெஜிடபிள் கார்விங் முறையில் கேரட், வெங்காயத்தாள் ஆகியவற்றைக் கொண்டு பூங்கொத்து செய்வது எப்படி என்று சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில், தக்காளியில் அழகான ரோஜாப்பூக்கள் செய்வது எப்படி என்று கற்றுத்தருகிறார் செஃப் உமாசங்கர் தனபால்.

தேவையானவை: தக்காளி மற்றும் பேரிங் கத்தி (Paring Knife)

குறிப்பு: பெங்களூரு தக்காளி, நாட்டுத் தக்காளி என ஏதாவது ஒன்றை கார்விங் செய்ய எடுத்துக் கொள்ளலாம்.

நாம் தேர்ந்தெடுக்கும் தக்காளி புதியதாகவும், அழுகல் இல்லாமலும் இருக்க வேண்டியது அவசியம்.

ஸ்டெப் 1:  ஒரு கையில் தக்காளியையும், மற்றொரு கையில் பேரிங் கத்தியையும் எடுத்துக்கொண்டு படத்தில் காட்டியுள்ளவாறு தக்காளி யின் மேற் பகுதியிலிருந்து வட்டமாக வெட்டத் தொடங்க வேண்டும்.

ஸ்டெப் 2: தக்காளியைச் சற்று அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு வட்டமாக வெட்டிக் கொண்டே வர வேண்டும். ஒரு வட்டம் முடிவடைய ஒரு செ. மீ இடைவெளி இருக்கும்போது, படத்தில் காட்டியுள்ளவாறு தக்காளியை லேசாகத் திருப்பிக்கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 3: தக்காளியின் மேற்புறப் பகுதியைச் சிறிய தட்டுபோல வட்ட வடிவில் வெட்டியதன் தொடர்ச்சி யாக, அப்படியே கத்தியைச் சற்று நகர்த்தி படத்தில் காட்டியுள்ளவாறு தக்காளியைச் சுற்றியுள்ள தோலை மெல்லியதாகவும், வட்டமாகவும் செதுக்கத் தொடங்க வேண்டும்.

ஸ்டெப் 4: தக்காளியின் தோலை மெல்லியதாகச் செதுக்குவதில் ஒரு சுற்று முடிந்தவுடன் அதன் தொடர்ச்சியாக அடுத்த சுற்றைச் செதுக்கத் தொடங்க வேண்டும். இப்படிச் செதுக்கும்போது தோலின் சுருள் இடையில் கட் ஆகாமல் தொடர்ச்சி யாக வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 5: தக்காளியின் மேற்பகுதியிலிருந்து வட்டமாகச் செதுக்கத் தொடங்கிய நாம் அதைச் சுற்றியுள்ள தோலை மெலிதாக, வட்டமாகப் படத்தில் காட்டியுள்ளவாறு செதுக்க வேண்டும். தக்காளியின் அடிப்பகுதி வரை செதுக்கிக்கொண்டே வந்து முடிக்க வேண்டும்.

ஸ்டெப் 6: தக்காளியின் தோலை முழுவதுமாகச் செதுக்கி எடுத்த பிறகு கிடைக்கும் தோல் இல்லாத தக்காளிப் பழமும், சுருள் வடிவில் நமக்குக் கிடைத் துள்ள தக்காளி தோலும் தனித்தனியே படத்தில் கட்டப்பட்டுள்ளன.

ஸ்டெப் 7: தக்காளியின் நுனிப்பகுதியிலிருந்து நாம் செதுக்கி எடுத்த தோலை படத்தில் கட்டியுள்ளவாறு ஒரு கூம்பு வடிவத்தில் அழகாகச் சுருட்ட வேண்டும்.

ஸ்டெப் 8: தோலைக் கூம்பு வடிவத்தில் கொஞ்ச கொஞ்சமாகச் சுருட்டிக் கொண்டே வரும்போது அதன் நடுப்பகுதி படத்தில் உள்ளவாறு ஓர் ஒழுங்கில் சரியாக இருக்க வேண்டும்.

ஸ்டெப் 9: கடைசிவரை உள்ள தோலைக் கூம்பு வடிவில் சுருட்டிக்கொண்டு, பிறகு அதைத் தோலின் தொடர்ச்சியாக இருக்கும் தக்காளியின் மேற்புறத்தி லிருந்து வெட்டிய தட்டு போன்ற பகுதியில் அப்படியே வைக்க வேண்டும்.

ஸ்டெப் 10: பாதி விரிந்தும், பாதி விரியாமலும் உள்ள ரோஜாப்பூவைப் போன்று இருக்கும் ஐந்து அல்லது ஆறு தக்காளிகளை இதுபோலவே செதுக்கி பூக்களாகச் செய்து, அதை உங்கள் டைனிங் டேபிளை அலங்கரிக்கலாம்!

பார்ப்பதற்கு பெங்களூரு சிவப்பு ரோஜாக்களைப் போன்றிருக்கும் இவை. உங்கள் லாக் டௌன் நாள்கள் வண்ண மயமாக மாற இந்த டொமேட்டோ ரோஸ் கார்விங்கைச் செய்து பழகுங்கள். அடுத்த இதழில் உங்களுக்காகக் காத்திருக்கிறது ‘லீக் பூச்செண்டு!’