Published:Updated:

லாக் டெளன் காலத்தில் அதிகம் மிஸ் செய்யப்பட்ட பிரியாணி! #SurveyResult

SurveyResult
SurveyResult

பலரால், அதிகம் விரும்பி உண்ணப்படும் பிரியாணியை லாக் டெளன் காலத்தில் மிஸ் செய்ததாக 55 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.

காலையில் எழுந்து சாப்பிடும் பெட் காபி முதல் தெருக்கடையில் வாங்கிச் சாப்பிடும் பானிப்பூரி வரை ஏராளமான விஷயங்களை மிஸ் செய்ய வைத்திருக்கிறது இந்த லாக் டௌன். அப்படி எதையெல்லாம் மிஸ் செய்தீர்கள் என்று கடந்த வாரம் பிரத்யேக சர்வே நடத்தியது விகடன்.

இதில் அலறி அடிக்கும் அலாரம், அலுவலகச் சூழல், பிரியாணி, சலூன் எனப் பலவற்றை மிஸ் செய்ததாக 54.1 சதவிகிதப் பெண்களும், 45.9 சதவிகித ஆண்களும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பலரால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பிரியாணியை மிஸ் செய்ததாக 55 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். விகடன் சர்வேயின் சுவாரஸ்ய முடிவுகள் இதோ.

SurveyResult
SurveyResult
அடுத்த கட்டுரைக்கு